siddhas

Wednesday, 8 April 2015

Bp க்கு பை, பை சொல்வது எப்படி.




  

நீங்கள் எந்த மருத்துவரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். அவர் ஆங்கில மருத்துவரோ, சித்த மருத்துவரோ, ஆயுர்வேத மருத்துவரோ எந்த மருத்துவராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த மருத்துவர் BP யை கட்டுப்படுத்த கூறும்  அறிவுரைகள் இரண்டு. கோபத்தை கட்டுப்படுத்துங்கள், கவலை படாதீர்கள். 

 நாம் அனைவருமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். எவனாவது என்னால் கவலையே பட முடியவில்லையே என்று கவலை படுவானா.  கவலை எதனால் ஒரு மனிதனுக்கு வருகிறது. நாம் எரிச்சல் அடைய வேண்டும், கோபப்பட வேண்டும் என்பதற்காகவே சிலர் நம்மை வெறுப்பேற்றுவதை போல் பேசுகிறார்களே. அப்பொழுது எவ்வாறு? கோபப்படாமல் இருக்க முடியும். 


 ஒரு முறை புத்தர் ஒரு கிராமத்திற்க்கு சென்றார். அந்த ஊர் மக்களும் மற்றும் அவர்களின் தலைவனும் உலகில் எவ்வளவு கெட்ட வார்த்தைகள் உண்டோ, அத்தனையையும் பயன் படுத்தினர். புத்தரும் அவருடைய ஐந்து சீடர்களும் அதற்க்கு துளி கூட கோபப்படாமல் மலர்ந்த தாமரை போன்ற மந்திர புன்னகை செய்தார்கள். அந்த மந்திர புன்னகையில் சந்திர, சூரியர்களும்  நட்ஷத்திரங்களும் தெரிந்தன. 

 இவ்வளவு கேவலமாக பேசியும் எப்டிடா நீங்க யாரும் கோபமே படாமல் இருக்கீங்க. உங்களால கெட்ட வார்த்தைக்கு உண்டான மரியாதை போச்சேடா என்று ஊர் தலைவன் அலுத்து கொண்டான். அதற்க்கு புத்த பகவான் சிரித்தவாறே. நாங்கள் இந்த ஊரிர்க்கு அருகில் உள்ள கிராமத்திற்கு போனோம். அந்த ஊர் மக்கள் எங்களை நன்கு வரவேற்றார்கள். அவர்கள் நிறைய இனிப்பு கொடுத்தார்கள். எங்களுக்கு இவ்ளவு இனிப்பு வேண்டாம் என்று நாங்கள் கொஞ்சமாக எடுத்து கொண்டு மீதியை அவர்களுக்கே திருப்பி கொடுத்து விட்டோம். அப்பொழுது அந்த இனிப்புகள் யார்க்கு? சொந்தம். 

 ஊர் தலைவன்- யார் கொடுத்தார்களோ அவர்களுக்கே சொந்தம். 

 புத்தர்- அப்படியானால். நீங்கள் திட்டிய எந்த கெட்ட வார்த்தைகளையும் நாங்கள் வாங்கி கொள்ளவே இல்லை. 

 இப்பொழுது நாம் ஷாப்பிங் செய்ய மார்க்கெட் அல்லது ஒரு மாலிற்கு போகிறோம் என்றால் கண்ணில் படுவது அனைத்தையும் வாங்கி விடுவோமா. அதில் பல நமக்கு தேவை இல்லாததாக இருக்கும். கண்ணில் படும் அனைத்தையும் நமது கை வாங்காது. அவ்வாறு இருக்க நமது காதுகளில் விழும் அனைத்து வார்த்தைகளையும் நமது மனம் எதற்க்காக வாங்க வேண்டும். இதை உணர்ந்தால் நீங்கள் சந்தோசம். ம்ஹ்ம். அதுக்கும் மேல. ஆனந்தம். ம்ஹ்ம். அதுக்கும் மேல. பேரானந்த நிலையில் இருப்பீர்கள். 

  நாம் கோபப்படும் சூழ்நிலை வந்தால்? நமக்கு வரும் கோபத்தை உடனே வெளி காட்டினால் கூட பிரச்சனை இல்லை. ஆனால் அதை அடி மனத்தில் அடக்கி வெய்த்தால் அதன் மூலம் உடலில் Preasure ஏறும். கோபப்பட்டாலும் உடலுக்கு கெடுதல். அதை அடக்கினால் அதை விட கெடுதல். வேறு என்ன? தான் செய்வது. மனம் ஒரு குரங்கு அல்லவா. குரங்கு குல்லா கதை போல். மனத்தை நாம் வேறு ஏதேனும் ஒன்றில் திசை திருப்ப வேண்டும். நமக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை பற்றி நினைக்கலாம். இயற்கையை ரசிக்கலாம், நல்ல நூலை வாசிக்கலாம், ஏதேனும் ஒன்றை பற்றி சிந்திக்கலாம்.  வேறு வழியே இல்லை. நாம் கோபத்தை முகத்திலும், குரலிலும் காட்டினால் தான் வேலை ஆகும் என்னும் சூழ்நிலை வந்தால் ஸிநிமா நடிகரை போல் கோபப்படுவதை போல் நடிக்க வேண்டும். நாம் பதில் அடி கொடுக்கும் சூழ்நிலை வந்தால் கூட. அன்பே சிவம் படத்தில் கமல் எவ்வாறு சிரித்தவாறே மாதவனுக்கு பதில் அடி கொடுப்பாரோ. அந்த ஸ்டைல்லில் கொடுக்க வேண்டும். 

அடக்கு, அடக்கு என்றால் மனம் வீறு கொண்டு எழும் என்கிறார் வேதாத்திரி மஹரிஷி. இந்த உபதேசம் நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்காக மஹரிஷி சொன்னது. உண்மை ஞானிகளுக்கு இது பொருந்தாது. மனத்தில் நமக்கு தீய எண்ணங்களோ, தேவையில்லாத கவலையோ வந்தால் அதை அடக்க வேண்டும் என்று நாம் முயற்சிப்போம். அப்பொழுது. நம்மையே அறியாமல் நாம் அதையே திரும்ப, திரும்ப நினைப்போம். அது ஆபத்து அல்லவா. அது போன்ற எண்ணங்கள் நம்மை அறியாமலேயே வரும் பொழுது. அதை நல்ல பயனுள்ள ஏதேனும் ஒன்றை சிந்தித்தோ, செய்தோ திசை திருப்புங்கள். 

 உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு மஹான். ராகவேந்திரர், ஷீரடி பாபா போன்ற ஞானிகளின் படங்கள் முன் அமர்ந்து அவர்களது கண்களையே சில நிமிடங்கள் பார்க்கலாம். உங்களுக்கு பிடித்த நூல்களை படிக்கலாம். இவ்வாறு மனத்தை திசை திருப்ப பல வழிகள் இருக்கிறது. 

 கோபத்தை பயத்தின் ஆண் பால் என்று சொல்கிறார் ஓஷோ. தண்ணி, நீர். இரண்டு வார்த்தைக்கும். அர்த்தம் ஒன்று தானே. அதே போல் தான். கவலையும், பயமும். உங்களுக்கு BP வருவதற்கான முக்கிய, மூல காரணமே கவலை தான். BP வந்ததை நினைத்து நீங்கள் மேலும் கவலைப்பட்டால் அதன் மூலம் நீங்கள் என்ன தான் அதற்குரிய மருத்துவம் எடுத்து கொண்டாலும், உங்களுக்கு அது கூடுமே ஒழிய குறையாது. 


 சுக்கி சிவம் அவர்கள். எப்போதும் சந்தோசம் என்னும் நூலில் ஒரு சுவையான, அருமையான சம்பவத்தை குறிப்பிடுகிறார். 

 சோவியத் நாட்டில் வாழ்ந்த மிகப்பெரிய மனோ தத்துவ மேதை பாவ்லாவ் என்பவர். அவர் ஒரு பூனையை பிடித்து வெய்த்து ஆராய்ச்சி செய்தார். பூனைக்கு வயிறார உணவு கொடுத்து விட்டு. அந்த உணவு அதனுடைய வயிற்றில் எவ்வாறு ஜீரணிக்கப்படுகிறது என்பதை பற்றிய ஆராய்ச்சியை அவர் மேற்கொண்டார். பூனையை Xray கருவி மூலம் பரிசோதித்த பொழுது உணவு உள்ளே போனதும் செரிமானத்திற்கு தேவையான அமில வகைகள், சாறுகள். அதன் குடலில் உருவாகி பெருகுவதை பார்த்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் வளர்க்கும் முரட்டு நாய் ஒன்று அறையிலிருந்து வெளியே வந்து. பூனை மீது பாய பார்த்தது. பாவ்லாவ் அந்த நாயை தடுத்து. அதை அறைக்குள் பூட்டினார். அதன் பிறகு என்ன? ஆயிற்று தெரியுமா. 

அந்த பயத்தின் பாதிப்பால். ஜீரண வேலைகள் பூனையின் உடலில் அப்படியே நின்று போனது. அதன் குடலில் ஜீரணத்திற்க்கு தேவையான அமிலங்களும், சாறுகளும் ஆறு மணி நேரம் கழித்து தான் மீண்டும் சுரக்க ஆரம்பித்தது. அதற்க்குள் அதன் வயிற்றில் உள்ள உணவு. செரிக்க படாமல் கட்டியாகி, கொடிய நஞ்சாகவே மாறி விட்டது. 

 பாவ்லாவ் பூனையின் உடலில் ஜீரணம் எவ்வாறு ஆகிறது என்பதற்க்கு செய்த சோதனைக்கு பைரவர் புண்ணியத்தில் கிடைத்த ரிஸல்ட். 

 மனித உடல். கவலை, அச்சம், கோபம் முதலியவற்றால் என்ன, என்ன பாதிப்புகள் அடைகிறது. 

  நீங்கள் கவலைப்படுவதால் உங்கள் பிரச்சனைகள் தீரும் என்றால் தாராளமாக கவலை படுங்கள். கவலைப்படுவதால் பிரச்சனைகள் தீர போவதில்லை. பின்னர் எதற்க்காக? நீங்கள் கவலைப்பட வேண்டும். 
பிரச்சனைகளுக்கு கவலைப்படாமல் அதை எவ்வாறு தீர்ப்பது என்று தீர்க்கமாக, ஆழமாக சிந்திக்க வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தால் அதை ஏற்று கொள்ளுங்கள். பிரச்சனை எங்கு தான் இல்லை. மூச்சு திணற, திணற 30 பக்கத்துக்கு நான் ஒரு போஸ்ட் போடறேன். நீங்களும் அதை பொறுமையா படிக்கறீங்க இல்ல. நான் கூட ஒரு பிரச்சனை தான். 

 நமது கண்களில் படுவதையெல்லாம் நமது கைகள் வாங்காத பொழுது. நமது காதுகளில் விழுவதை நமது மனம் ஏன்? வாங்க வேண்டும். உங்களுக்கு கோபம், கவலை வரும் பொழுது இந்த மந்திரத்தை உங்கள் மனதிற்க்குள் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லுங்கள். 

நாளை Bp யை குணப்படுத்தும் மூலிகைகளை பற்றி பார்ப்போம்.  

1 comment: