siddhas

Saturday 11 April 2015

அனைத்து வித தலை வலிகளையும் போக்க வழிகள் மற்றும் யோகா.




ஒருமுறை அக்பர் பீர்பாலிடம் கேட்டாராம். நமது நாட்டில் எந்த தொழில் செய்கிறவர்கள் அதிகம் என்று. பீர்பால் சற்றும் யோசிக்காமல். நமது நாட்டில் மருத்துவர்களே அதிகம் என்று சொன்னார். இந்த பதிலை அக்பர் எதிர்பார்க்கவில்லை. அக்பர் சற்று குரலை உயர்த்தி. பீர் பாலிடம். மருத்துவர் ஆவது என்ன சாதாரண விசயமா. நமது நாட்டில் விவசாயிகள் தான் அதிகம் என்பது எனக்கும் தெரியும். தெரிந்தால் பதில் சொல்லவும். இல்லையேல் பேசாமல் இருக்கவும். பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் ஒய் என்று அக்பர் பீர்பாலிடம் சொன்னார். பீர்பால். எனக்கு கொஞ்சும் அவகாசம் கொடுங்கள். நான் இதை புள்ளி விவரத்தோடு நிரூபித்து காட்டுகிறேன் என்றார். அக்பரும் அதை ஏற்று கொண்டார். சிறிது நாட்களில் அக்பரே அதை மறந்து விட்டார். 

ஒரு நாள். பீர்பால் கடும் வெய்யில் காலத்தில். உடலில் தடியான ஒரு போர்வையை போர்த்தி கொண்டு. குளிரில் நடுங்கியவாறே அரண்மனைக்கு வந்தார். இந்த வெய்யிலிலும் இவருக்கு உடல் இவ்வாறு குளிர்கிறது என்றால். அப்பொழுது உடல்நிலை எவ்வளவு மோசமாக இருக்க வேண்டும் என்று அக்பர் கவலைப்பட. அப்பொழுது. அவருக்கு எதனால் உடல்நிலை சரியில்லை என்பதை அறியாமலேயே பிரதான மந்திரி முதல், காவலாளி, அங்கே கூட்டி பெருக்கும் ஆள் வரை. அவர் உடல் நலமடைய ஆளுக்கு ஒரு யோசனை கூறினார்கள். இறுதியாக அக்பரும் அவர் தனக்கு தெரிந்த ஒரு கை வைத்தியத்தை சொல்ல. பீர்பால் சிரித்தவாறே. இந்த அரண்மனையில் மட்டும். உங்களையும் சேர்த்து. 149 வது மருத்துவர் என்று சொல்லியவாறே தனது போர்வையை விலக்கி சிரித்தார். அக்பரும். இவர் எதனால் இந்த நாடகம் ஆடினார் என்பதை புரிந்து ஒரு சிரிப்பு சிரித்தார். 

 பீர்பால், தெனாலி ராமன், மரியாதை ராமன், அப்பாஜி, முல்லா, ஈஸாப் கதைகள் என அனைத்திலுமே உண்மையோடு கற்பனையும் நிறைய கலந்து விட்டது. இது உண்மையிலேயே நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால். இந்த கதையில்  பீர்பால் கூறும் கருத்தை நாம் இன்னொரு கோணத்திலும் சிந்தித்து பார்க்கலாம். அன்று உணவே மருந்து, மருந்தே உணவு என்று இருந்தது. எந்த, எந்த வியாதிக்கு. எந்த, எந்த உணவு மருந்து என்பதை அறிந்த மருத்துவர்களாகவும் அன்று விவசாயிகள் இருந்தனர். அனைத்து மூலிகைகளையும் பயிரிடுவதும் விவசாயிகள் தானே. உலகின் முதல் மருத்துவர்கள் விவசாயிகள். 

 ஒற்றை தலைவலிக்கு bp, சுகர் போல் எளிதாக மருந்து சொல்லி விட முடியாது. ஒற்றை தலைவலி என்று இல்லை. தலை வலி வர பல காரணங்கள் இருக்கிறது. 

 தலை வலி என்பதே ஒரு பெரும் அவஸ்த்தை தான். தலை வலியும், திருகு வலியும் அவர், அவர்க்கு வந்தால் தான் தெரியும் என்று சொல்வார்கள். அதிலும் இந்த ஒற்றை தலை வலி இருக்கிறதே. மிக கொடிது

 நீங்கள் தலைவலிக்கு அமிர்தாஞ்சன் போன்ற ஆயுர் வேத மூலிகைகளால் செய்யப்படும் பாம் உபயோகித்தால் கூட பிரச்சனை இல்லை. உங்களுக்கு தலை வலி எதனால் வருகிறது. கவலையாலா, சைனஸ் போன்ற நோய்களாலா, அதிக சத்தத்தினாலா. மண்டை நிரம்புகளில் ஏதேனும் பிரச்சனையாலா. அடிக்கடி தலைவலியால் அவதிப்டுபவர்கள் எதனால் தலைவலி வருகிறது என்று தெரியாமலேயே. அதை நீங்கள் பரிசோதிக்காமலேயே மெடிக்கல் ஷாப்பில் தலை வலி போக ஏதாவது ஒரு மாத்திரை, ஆயுர்வேத, சித்த மருத்துவ தைலமாகவே இருக்கட்டும். உங்கள் தலை வலிக்கான காரணத்தை கண்டு பிடிக்காமல். நீங்கள் அதற்க்கு என்று பொத்தம் பொதுவாக ஒரு மருந்தை வாங்கி உபயோகித்தால். பின்னால அதுவே உங்களுக்கு பெரிய தலை வலியா பெய்டும். காரணம். தலை வலியில் பல வகைகள் இருக்கிறது. 

 அதனால். அடிக்கடி உங்களுக்கு தலை வலி வந்தால். ஒரு மாஸ்டர் செக் அப் செய்து கொண்டு. எதனால் தலைவலி வருகிறது என்பதற்கான காரணத்தை கண்டறிந்து. பின்னர் அதற்க்கு என்று பிரத்யேக சிகிச்சை எடுத்து கொள்வது நலம். 

 உங்களுக்கு அதிக கவலையால் தலை வலியோ, ஒற்றை தலை வலியோ வந்தால். அது குணம் அடைவது உங்கள் கையில் தான் இருக்கிறது. உங்களுக்கு எந்த இசையை, யாருடைய இசையை பிடிக்குமோ அவர்களுடைய இசையை யூ ட்யூப்பில் கேட்கலாம். நீங்கள் ப்ரௌஸிங்க் ஸென்டர் போய் கேட்பதாக இருந்தாலும். ஒரு மணி நேரத்திற்கு 15 இல் இருந்து 20 ரூபாய் தான் ஆகும். அதை தவிர இசைக்கு என்றே தமிழில் மட்டும் ஏழு, எட்டு தொலை காட்சிகள். 24 மணி நேரமும் சிரிக்க வெய்க்க என்று இரண்டு தொலை காட்சிகள். so dont worry. be happy. 

 இஞ்சி சாரில் தேன் கலந்து சாப்பிடுதல், சுக்கு காஃபீ மற்றும் கஷாயம். எலுமிச்சை பழத்தை இரு துண்டுகளாக வெட்டி. அதை அப்ப, அப்ப முகர்ந்து பார்த்தல். அனைத்து வகை தலை வலிகளுக்கும் நிவாரணம் பெற சிறந்த வழி. மூளைக்கும் அதில் உள்ள நிரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும். அதனால் தலைவலியால் அதிகம் அவதிப்டுபவர்கள் ரூம் ஸ்ப்ரே கூட லெமன் ரூம் ஸ்ப்ரே அடிப்பது நல்லது. 



 ஹலாசனம் என்கிற ஒருவகை யோகா.அது மூளை, மூளை நிரம்புகள், பலவித மன பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் ஒரு அற்புதமான யோகா. அனைத்து தலை வலிகளுக்கும் இது சிறந்தது. மூளைக்கு நல்ல fresh blood இதன் மூலம் கிடைக்கும். நினைவாற்றலை பண் மடங்கு அதிகரிக்கும். மூளையில் உள்ள பிட்யூட்ரி சுரப்பியை தூண்டி விடும் யோகா இது. திக்கு வாய் உள்ள சிலர் கூட இந்த யோகா செய்து. அதனால் பலன் பெற்றுள்ளனர். ஏதேனும் ஒரு நல்ல யோகா ஆசிரியரிடம் முறையான பயிற்ச்சி பெற்றே இதை செய்ய வேண்டும். 

 நாளை. தைராய்ட் வியாதியும் அதற்கான நிவாரணமும் பார்ப்போம். 

No comments:

Post a Comment