சிக்ஸ் பாக். இன்றைய பல இளைங்கர்களின் கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. உடல் இளைக்க. உடற் பயிற்ச்சி செய்பவர்கள் ஒருபுறம் என்றால். நல்ல ஆரோக்யமான உடல் இருந்தாலும். சிக்ஸ் பாக் வர வேண்டும் என்பதற்காக. உடற் பயிற்ச்சி செய்பவர்கள் இன்னொரு புறம். பிரியாணி. மற்றும் கொழுப்பு சக்த்து உள்ள உணவுகளை எடுத்து கொண்டால். சிக்ஸ் பாக்கிற்கு என்று exercise பண்ணாலும் Six Pack வராது. சிக்ஸ் பாக் வந்த பிறகு. பிரியாணி தின்னால். வந்த சிக்ஸ் பாக் பெய்டும். ஆனால். கட்டட வேலை, ரோடு போடும் வேலை, விவசாயிகள் இவர்கள் எல்லாம். நிறைய கொழுப்பு சக்த்து உள்ள உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். அவர்கள் சிக்ஸ் பாக்கிற்கு என்று தனியாக உணவுகளை எடுத்து கொள்வதில்லை. ஜிம்மிற்க்கு போவதில்லை. ஆனாலும். ஜிம்மிற்கு போய் சிக்ஸ் பாக் வர வெய்க்கும் நம்மை விட. அவர்களுக்கு. சிக்ஸ் பாக் ஜம் என்று நன்றாக இருக்கிறது. அதற்க்கு காரணம். நமக்கு உடற் பயிற்ச்சி என்பது. நாம் வேலை செய்யும் நேரம் போக. நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஒரு பகுதி. ஆனால்? அவர்களுக்கு. அவர்கள் ஒரு நாளைக்கி. 8 மணி நேரம், 10 மணி நேரம் செய்யும் வேலையே உடற் பயிற்ச்சி தான்.
நாம். நுரையீரல் பிரச்சனைக்கான தீர்வை பார்க்கும் முன். உங்களிடம் ஒரு சுவாரஸ்யமான கதையை முதலில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கதை. சென்ற பிப்ரவரி மாதம். தினமணியில் நான் படித்தது. இது எந்த? அளவு உண்மை.
கன்பூஷியஸ். ஏறக்குறைய 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அப்பொழுது அத்தகைய தொழில் நுட்பங்கள் இருந்து இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால்?. ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய கதை.
சீன தேசத்து ஞானிகளில் முதன்மையானவர் கன்பூஷியஸ். இவருக்கு பல சீடர்கள். அதில் ஒருவர் தான் சாங்- ஹோ - சாங்க். தமது குருவிடமிருந்து பல கலைகளை கற்றவர். இயற்பியல், எந்திரவியல் வல்லுநர்.
ஒருமுறை அறிங்கர் சாங் கிராம புறத்தில் உலாவ சென்றார். வழியில் ஒரு அழகான பழத்தோட்டம் கண்டு உள்ளே நுழைந்தார். Six Pack உடம்புடன் ஒரு இளைங்கர் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார். வாளி [ பக்கெட் ] ரொம்பியதும் தன்னீரை நிமிர்ந்து எடுக்காமல் குனிந்து, முதுகை வளைத்து எடுக்கும் அமைப்பில் அந்த விவசாயி வீட்டு கிணறு இருந்த்து. பாவம் இப்படி மாடாய் உழைத்தால் இவனது ஆரோக்யம் சீக்கிரமே கெட்டு விடுமே. இளமையிலேயே கூன் விழுந்து இவன் கிழவன் போல் ஆகி விடுவானே என்று சாங் வருந்தினார்.
பின்னர் அந்த இளைங்கனை சந்தித்து, இந்த கிணற்றின் இரண்டு பக்கமும் தூண் போல் அமைத்து நடுவில் ஒரு கம்பியை பொருத்தி, அதில் ஒரு கொக்கியை பொருத்தி அதில் இதே பக்கெட்டை தொங்க விட்டு நீ நீரை இறைத்தால் உனக்கு சிரமம் தெரியாது என்று விளக்கினார். அதோடு மறுநாள் அவரே அதை செய்தும் கொடுத்தார்.
அந்த விவசாயிக்கு இது புதுசு. எவ்வாறு இதில் தண்ணீர் இறைப்பது என்று தெரியாமல் குழம்பினார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இது கூட ஒரு அறிவியல் விந்தை அல்லவா. சாங் அதில் எவ்வாறு தண்ணீர் இறைப்பது என்று செய்து காட்டினார். பின்னர் அந்த விவசாயி மிகுந்த மகிழ்வுடன் தண்ணீர் இறைக்கலானார். இது உண்மையில் நல்ல விசயம் தான். இதோடு சாங் நிறுத்தி இருக்கலாம். இதன் பின்னர் அவர் செய்த சில அறிவியல் விந்தைகள், அந்த விவசாயிக்கு ஆபத்தாக முடிந்தது.
மறுநாள் மாலை சாங் அந்த தோட்டத்திற்கு வந்தார். விவசாயி அவரை வணங்கி வரவேற்று அமர செய்தார். விவசாயி தண்ணீர் இறைக்கும் சிரமமும், நேரமும் முன்பை விட குறைந்தது. ஆனாலும் சில குறைகள் இருப்பது சாங்கின் அறிவியல் கண்ணிற்க்கு தெரிந்தது. ஒவ்வொரு முறையும் அவர் பக்கெட்டை கிணறுக்குள் இறக்கி, தண்ணீர் எடுத்ததும் கயிற்றிலிருந்து பக்கெட்டை கழட்டி எல்லா செடிகளுக்கும் தண்ணீர் விட்டு மறுபடியும் மாட்டி, மறுபடியும் கழட்டி, மறுபடியும் மாட்டி, மறுபடியும் கழட்டி, மறுபடியும் மாட்டி, கழட்டி, மாட்டி, கழட்டி, மாட்டி. இவ்வாறு கழட்டி, மாட்டும் வேலை மற்றும் நீர் விடுவதற்கு என்று கிணற்ரிற்க்கும், தோட்டத்திற்கும் இடையில் நடக்கும் வேலைக்கு முற்றுப்புள்ளி வெய்க்க வேண்டும் என்று சாங் நினைத்தார். அந்த விவசாயியை மண்வெட்டியை கொண்டு வர சொன்னார்.
கிணற்றின் அடியில் இருந்து தோட்டம் வரை செல்லும் ஒரு கால்வாய் அவர் அமைத்தார். அதன் பின் அந்த விவசாயி நின்ற இடத்தில் இருந்தே நீரை இறைத்து, அந்த கால்வாயில் ஊற்றினார். அவருக்கு நடக்கும் வேலையும் இல்லாமல் போனது, கழட்டி மாட்டும் வேலையும் இல்லாமல் போனது. ஒரு வருடம் கழித்து.
இதற்க்கு முன் இல்லாத அளவு அமோக விளைச்சல், லாபம். அதற்க்கு நன்றி செலுத்தும் விதமாக பெரும் தொகையுடன் சாங் ஆசிரமத்திற்கு விவசாயி அவரது மனைவி இருவரும் வந்தனர். துறவியை வணங்கினர். பக்தனுடைய இந்த காணிக்கையை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று சாங் முன் பணத்தை நீட்ட. அவர் அதை வாங்கி கொள்ள வில்லை. பணமும், துரும்பும் உண்மை துறவிக்கு ஒன்று தான். அந்த பணத்தில் ஒரு சிறு பகுதியை செலவழித்தால் தோட்டத்தில் ஒரு குழாய் வெய்த்து அதன் மூலம் நீர் இறைக்கும் வேலையும் செய்யாமல் அந்த உழைப்பு, அதற்கான நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்று சொல்ல உடனே ஒரு பைப் connection கொடுக்கப்பட்டது.
முதலில் அந்த விவசாயிக்கு குனியும் வேலை போனது, பின்னர் நடக்கும் வேலை போனது. இப்போ பைப் connection மூலம் நீரை இறைக்கும் வேலையும், அதை கால்வாயில் ஊற்றும் வேலையும் போனது. தோட்டத்தை பெருக்குவது விவசாயி மனைவியின் வேலை. [நல்ல வேளை. சாங் வேக்கம் க்லீநர் கண்டுபிடிக்கவில்லை] சில வருடங்கள் கழித்து.
பல ஊர்களுக்கு சுற்று பயணம் செய்த சாங் தனது மடத்திற்க்கு திரும்பினார். இரண்டு நாட்கள் கழித்து அந்த விவசாயியின் தோட்டத்திற்க்கு சென்றார். அங்கு அவர் கண்ட காட்சிகள் அவரை திகைப்படைய செய்தது. நாம் வேறு இடத்திற்க்கு மாறி வந்து விட்டோமா என்று குழம்பினார். நடக்கும் பாதைகளில் கூட செடிகள் தாறு மாறாக வளர்ந்து இருந்தது. புதர்கள், முட் செடிகள், அழுகிய நிலையில் கிளைகளில் தொங்கும் பழங்கள். அப்பொழுது யாரோ இரும்பும் சத்தம் கேட்டது. பார்த்தால் சும்மா six pack உடலுடன் சிறுத்தை மாதிரி இருந்த விவசாயி உடல் பலம் சிறுத்து, உடம்பு மிக பெருத்து, தொந்தியும், தொப்பையுமாக கயிற்று கட்டிலில் படுத்து இருந்தார். அருகில் விவசாயியின் மனைவி. விவசாயியின் அந்த நிலமையை கண்ட சாங் மனம் அதனால் மேலும் வருத்தம் அடைந்தது.
சாங்கை பார்த்ததும் விவசாயி எழுந்து கை கூப்பினார். விவசாயியின் மனைவி சாங்கை முறைத்து ஒரு பார்வை பார்த்தாள். அவள் பார்வையிலேயே நம் மீது இவளுக்கு ஏதோ கோபம் என்பது அவருக்கு புரிந்தது. ஆனால்? கோபத்திற்கான காரணம் புரியாதவராய் சாங்கை பார்த்து. உனக்கு எதனால் இந்த நிலமை. நீ வேறு ஏதேனும் கடின வேலை செய்ததால் உனக்கு இந்த மாதிரி ஆய்டுத்தா. சொல். அந்த உழைப்பையும் குறைக்க நான் எதாவது உபாயம் செய்கிறேன் என்று சொல்ல, அருகில் இருந்த விவசாயியின் மனைவி அய்யா, உபாயம்ங்கர பேர்ல நீங்க இதுவரை செய்த அபாயங்கள் எல்லாம் போதும். இவர் கடினமாக உழைத்ததால் இப்படி ஆகவில்லை. உழைப்பதை நிறுத்தியதால் தான் இவ்வாறு ஆனார் என்று சொல்ல, அப்பொழுது தான் சாங்கிற்க்கு அவள் கோபத்திற்கான காரணம் புரிந்தது. அவள் மேலும் பேசலானாள்.
இதற்க்கு முன் இவர் உடம்பிலிருந்து வெள்ளமாக வேர்வை வரும் அளவு உழைத்தார். அதில் இவர் உள் உடம்பு நல்லா சுத்தம் ஆச்சு, பாத்தி கட்டி நல்லா ஃபுல் மீல்ஸ் சாப்ட்ட மனுசன். படுத்த உடனேயே தூங்கிய என் புருசன். இப்போ இவர் உடம்பு வேர்ப்பதில்லை, சரியாக சாப்பிடுவதில்லை, போன வருடம் சாப்பிட்ட சாப்பாட்டில் கால் பங்கு கூட இந்த வருடம் இவர் சாப்பிடவில்லை. அப்டி கம்மியா சாப்ட்டே அஜீரண கோளாறு, தூக்கம் வராமல் தவிப்பு, இது எல்லாம் சேர்ந்து தான் இன்று இவரை இந்த நிலைக்கு ஆக்கியது என்று அவள் சொல்லி முடித்ததும். சாங் அப்டியே அமைதி ஆனார். சாங் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாமல் தனக்கு ஞானம் புகட்டிய அந்த ஞான பெண்ணை தனது குருவாக ஏற்று கொண்டார்.
மூன்று மாதம் கழித்து. விவசாயி பழைய தெம்புடன் உழைக்கலானார். கிணறு இருந்தது, கிணற்றின் இரண்டு பக்கமும் தூண் இருந்தது, இரண்டு தூண்களுக்கு நடுவில் கம்பி, கம்பியில் கொக்கி, கொக்கியில் வாளி, கீழே கால்வாய் எல்லாம் இருந்தது. ஆனால் குழாய்யை காணோம்.
மனிதனுடைய உடல் உழைப்பு, நேரம் முதலியவற்றை குறைக்க எந்திரங்கள் தேவை தான். ஆனால் உயிர் அற்ற எந்திரங்களையே ஒரு மனிதன் முழுமையாக சார்ந்து இருந்தால், உயிர் உள்ள மனித எந்திரம் ரிப்பேர் ஆய்டும். சும்மாவா சொன்னார் திருமூலர். மனமே மந்திரம், உடலே எந்திரம். அன்று உணவே மருந்து. இன்று மருந்தே உணவாக இருக்கு. அன்று நம்முடைய அன்றாட வேலைகளே உடற் பயிற்சியாக இருந்தது. இன்று உடலுக்கு என்று தனியாக பயிற்ச்சி தேவைப்படுகிறது. கடின வேலைகள் செய்வதை விட, தலை முதல் தோள், மார்பு, கை, வயிறு, இடுப்பு, கால் என்று உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்க்கு என்று பிரத்யேகமாக பயிற்சிகள் செய்வது சிறந்தது தான். தினமும் ஒரு அரை மணி நேரமாது உடற் பயிற்ச்சி செய்யுங்கள். நோயின்றி வாழுங்கள். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்.
நாளை. நுரையீரல் நோய்க்கு உரிய தீர்வை பார்ப்போம்.
No comments:
Post a Comment