siddhas

Sunday, 5 April 2015

சக்கரை நோய்க்கு உணவே மருந்து மருந்தே உணவு உடற் பயிற்சியின் அவசியம்.


 நேற்று நாம் சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்தான நில வேம்பு பற்றி பார்த்தோம். எனது முகநூல் நண்பர் மோசஸ் அவர்கள் சக்கரை நோய்க்கு மேலும் சில எளிய மருந்துகளை பற்றி கூறினார். அவற்றை நாம் பார்ப்போம். 
அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். உணவே மருந்து, மருந்தே உணவு. இதுவே பண்டை தமிழர்களின் சிறப்பு. ஆனால் அதை இன்றைய தலைமுறை தமிழர்கள் உணராததில் எனக்கு வெறுப்பு. சரி. மோசஸ் கூறிய மருத்துவ குறிப்பை பார்ப்போம்.
நூக்கல் 2 எடுத்து மிக்சியில் அரைத்து அதில் 5 ஆவாரம் பூக்களை அரைமணிநேரம் ஊரவைத்து குடிக்க வேண்டும். 5 வெண்டைக்காய்களை எடுத்து துண்டு துண்டாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்.
சக்கரை இனிக்கிற சக்கரை என்பது மாறி சக்கரை கசக்கர சக்கரை என்று சொல்லும் அளவு சக்கரை வியாதி படாத பாடு படுத்துகிறது. சக்கரை வியாதிக்கு காரணம் வெறும் சக்கரை மட்டும் அல்ல. நமது முறையற்ற உணவு முறைகள். நேரம் கெட்ட நேரத்திற்க்கு உண்ணுதல், உறங்குதல் என்று பல, பல காரணங்கள். அதுவும் தமிழகம் சக்கரை வியாதியின் ராஜ தானியாக இருக்கிறது. இதற்க்கு காரணம் தமிழர்கள் நமது பாரம்பரிய உணவு முறையை மறந்து சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல் அயல் நாட்டு மோகத்தில் சிக்குண்டு உள்ளார்கள். ஒரு அரை ஸ்பூந் நெய் சேர்த்து கொண்டால் உடல் குண்டு ஆகி விடும் என்று பயப்படும் இன்றைய தலைமுறை. டொமினோஸ், பிஸா ஹட் போன்ற உணவகங்களில் தின்று, தின்று அதன் மூலம் உடல் பருமன் மட்டும் அல்லாமல் பல்வேறு அவதிகளுக்கு யுவதிகளும், யுவன்களும் ஆளாகிறார்கள்.
என்னடா இது. இந்த பெரிசு ஓவர்ரா அட்வைஸ் பண்றதேனு யூத்ங்க மைன்ட் வாய்ச்ல நினைப்பதை நான் catch பண்ணிட்டேன். நானும் யூத் தாங்க. என் வயசு 26 தான் ஆர்து. இதுக்கு முன் நானும் ரொம்ப குண்டா தான் இருந்தேன். பிசாவ பிசாசு மாதிரி சாப்டுவேன். ஆனால் ஒரு அரை ஸ்பூந் நெய் என் அம்மா தட்டில் விட வந்தால் ஏதோ விசத்தை விட வந்த மாதிரி அலறுவேன். அது எல்லாம் எவ்ளோ பெரிய முட்டாள் தனங்கள் என்பது எனக்கு இப்பொழுது புரிகிறது.
ஆறு அடி உயரம் உடைய நான். 2013 இல் 112 கிலோ எடை இருந்தேன். அப்பொழுது நான் நெய்யை ஒரு நோயாக நினைத்தேன். இன்று என்னுடைய எடை 80 கிலோ. இப்பொழுது தினமும் மத்திய சாப்பாட்டின் பொழுது ஒரு ஸ்பூந் நெய் தவறாமல் சேர்த்து கொள்கிறேன். நான் 112 கிலோ எடையில் இருந்த பொழுது என்ன சாப்பிட்டேனோ அதை விட இரண்டு மடங்கு அதிகமாகவே இப்பொழுது சாப்பிடுகிறேன். ஆனால் பீசா போல் உடல் ஆரோக்கியத்திற்கு பிசாசாக இருப்பவைகளை உண்ணாமல் சக்த்தான உணவுகளை உண்ணுகிறேன். அதற்க்கு தகுந்த வேலையை என் உடலுக்கு கொடுக்கிறேன். ஒரு நாளைக்கி இரண்டு மணி நேரம் உடற் பயிற்ச்சி. இரண்டு மணி நேரம் நடை பயிற்ச்சி.
என்னுடைய தொழில் டூர் கன்டக்ட் பண்றது. வருடத்தில் பாதி நாள் காசி ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு நிறைய பெரியவர்களை அழைத்து கொண்டு செல்வேன். அது போன்ற சமயங்களில் அதிகாலை மூணு மணிக்கு கயா போன்ற இடங்களுக்கு ஒரு 30, 40 பேரை அழைத்து கொண்டு வெளியில் கிளம்ப வேண்டி இருக்கும். திரும்பி வர இரவு 11, 12 ஏன் ஒரு மணி கூட ஆகும். அது போன்ற சமயங்களில் நான் அதற்க்கு ஒரு நாள் முன்பாக இரவு 10.30க்கு உடற் பயிற்ச்சி ஆரம்பித்து 12.30க்கு முடித்து 12 45க்குள் குளித்து ஏஸீயை on பண்ணி ட்ரெஸ் எல்லாம் ஜம்னு பண்ணி மூணு மணிக்கு அலாரம் வெய்த்து ஒரு மணிக்கு படுப்பேன். வெறும் 2 மணி நேர தூக்கம். காசியில் இருந்து கயாவிற்க்கு வேண்னில் செல்ல 5.30 லிருந்து 6 மணி நேரம் ஆகும். அந்த நேரத்தை நான் தூங்க பயன்படுத்தி கொள்வேன். காசியில் என்னுடைய க்ரூப். வாத்தியார் வீட்டில் உட்காந்து திதி கொடுத்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு அது முடிய மூன்று மணி நேரம் ஆகும். எனக்கு அப்பொழுது வேலை இல்லை. அந்த நேரத்தில் என்னுடைய கால்கள் காசி சந்துகளில் ஒரு 2 மணி நேரமாது நடக்கும்.
நிறைய ஓய்வு நேரம் இருப்பவர்கள் உடற் பயிற்சிக்கு என்று ஒரு டைம் டேபிள் போட்டு அதன்படி தினமும் செய்யலாம். காலை 9 மணிக்கு ஆஃபீஸ் சென்று மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்க்கு வருபவர்கள் என்றால் பிரச்சனை இல்லை. என் போல் பிஸ்நெஸ் ட்ரிப், ஆஃபீஸ் ட்ரிப் அடிக்கடி போபவர்களுக்கு உடற் பயிற்ச்சி செய்ய என்று தனியாக நேரத்தை ஒதுக்க முடியாது. கிடைக்கும் நேரத்தை உடற் பயிற்சிக்கு என்று பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
எனக்கு மிகவும் பிடித்த பர்சனாலட்டிகளில் நடிகர் அருண் விஜய் அவர்களும் ஒருவர். சமீபத்தில் வேந்தர் தொலைக்காட்சி லைவ் ப்ரோக்ராம்மில் அவர் இளைங்கர்களுக்கு ஃபிட் நஸ் சம்பந்தமாக நிறைய நல்ல, நல்ல ஆலோசனைகளை வழங்கினார். அப்பொழுது அவர். நான் அதிகாலை ஷூட்டிங் கிளம்பினால் வீட்டிற்க்கு வர இரவு 10 மணி ஆகி விடும். இரவு 10 30க்கு மேல் தான் உடற் பயிற்ச்சி செய்ய ஆரம்பிப்பேன் என்றார்.
அப்பொழுது என் மைன்ட் வாய்ஸ். இவர் நம்ப ஆளுடா என்று நினைத்தது.
சரி. நாம் நெய் சமாச்சாரத்துக்கு வருவோம். நெய்யில் நல்லதே இல்லையா. அளவுக்கு மீறினால் தாங்க அமிழ்தும் நஞ்சு. நெய்யில் எவ்ளோ நல்ல விசயங்கள் இருக்கிறது தெரியுமா.
அதை நாம் நாளை பார்ப்போம்.

1 comment:

  1. உங்களின் அம்மா நிலவேம்பு சூரணம் சாப்பிட்டு சர்க்கரை நோய் முழுவதும் குணமானது குறித்து மிக்க மகிழ்ச்சி. அவர்கள் ஒரு வேளை கஷாயம் செய்ய எத்தனை கிராம் நிலவேம்பு இலை சூரணம் பயன்படுத்தினார். ஒரு வேளை குடித்த கஷாயத்தின் மில்லி அளவு என்ன? ஒரு நாளைக்கு எத்தனை வேளை கஷாயம் குடித்தார். உணவு பத்தியம் ஏதும் இருந்தாரா? கஷாயத்துடன் ஆங்கீல மருந்துகளும் சேர்த்து சாப்பிட்டாரா ? கஷாயம் மட்டுமே 30 நாட்களும் குடித்து குணப்படுத்தி கொண்டாரா?

    தற்பொழுது தாங்கள் கூறியபடி வாரம் 2-3 முறை மட்டுமே கஷாயம் குடித்து வருகிறாரா? அல்லது கஷாயம் குடிப்பதை (குணமானதால்) முழுவதும் நிறுத்தி விட்டாரா?

    வைரஸ் காய்ச்சல் பரவிய பொழுது அரசு பரிந்துரை செய்த நிலவேம்பு குடிநீர் (கஷாயம்) சூரணம் நிலவேம்பு மூலிகையுடன் மேலும் 8 மூலிகைகள் கலந்த கலவை.

    இதில் தாங்கள் சர்க்கரை நோய் குணமாக பரிந்துரை செய்வது நிலவேம்பு இலை சூரணம் ஒன்று மட்டுமா? அல்லது அரசு பரிந்துரை செய்த 9 மூலிகைகள் கலந்த நிலவேம்பு குடிநீர் சூரணமா?

    எதை நாங்கள் பயன்படுத்துவது? தயவு செய்து மேற்படி எனது சந்தேகங்களுக்கு தாண்கள் பதில் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்

    தங்களின் பதில் கண்டு நாங்களும் நிலவேம்பு கஷாயம் குடித்து சர்க்கரை நோயிலிருந்து முழுவதும் குணமாக விரும்புகிறோம்.

    நன்றி. வணக்கம்.

    .




    ReplyDelete