siddhas

Monday 20 April 2015

சகாயம். 700 கோடியில் ஒருவர்.




நேர்மை, துணிச்சல் இரண்டும் மிகுந்த மத்திய. மாநில அரசு அதிகாரிகள் ஒரு லக்சம் பேர் கூடவா  இந்தியாவில் இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் ஒரு ஆயிரம் பேர் கூடவா  இருக்க மாட்டார்கள்.  ஒரு அரசாங்க அதிகாரி. மிக நேர்மையாக பணியாற்றுகிறார் என்றால். அவர் வாங்கும் சம்பளத்திற்கு. நேர்மையாக வேலை செய்கிறார்.  அவ்வளவு தான். அந்த ஆயிரத்தில். சகாயம் என்கிற ஒருவரை மட்டும். ஏன்? தலையில் தூக்கி  வெய்த்து  கொண்டாட வேண்டும்.  என்று சிலர் கேட்கிறார்கள்.

  அதீத நேர்மை, அதீத துணிச்சல். இரண்டும் ஒருங்கே அமையபெற்ற அதிகாரிகள். இந்தியாவில். அதிக பக்ஷம் ஒரு ஆயிரம் பேர் இருப்பார்கள்.  ஆனால்?  சகாயம் அளவு நேர்மை, துணிச்சல் வாய்ந்த அதிகாரி.  அகில உலகங்களில் சல்லடை போட்டு தேடினாலும். எங்கும் கிடைக்க மாட்டார்கள். இவர் ஆயிரத்தில்  ஒருவரோ, லக்சதில் ஒருவரோ, ஏன் ? கோடியில் ஒருவரோ கூட  அல்ல . 700 கோடி உலக மக்கள் தொகையில். இவரை போல் இவர் மட்டுமே இருக்கிறார். இவர் 700 கோடியில் ஒருவர்.

அப்படி என்ன? அவர் செய்தார். லஞ்சம்  வாங்காமல் நேர்மையா இருந்தார், தப்பு செய்பவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார்,  தனது அதிகாரத்தை பயன் படுத்தி. அதிக பக்சம். எவ்வளவு மக்களுக்கு நன்மை செய்ய முடியுமோ. அதை  செய்தார். அவ்வளவு தானே. என்று நீங்கள் கேட்டால். இல்லை. உலகில் எந்த ஒரு அதிகாரியும் செய்யாததை, செய்ய துனியாததை  இவர் செய்தார்.  இதை  பற்றி ஏற்கனவே பலர்  முகனுல்  பக்கங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனாலும். மறதி  என்பது தமிழர்களின் தேசிய வியாதி. அதுவும் வெய்யில் காலங்களில்.  நம்மில் பலர் இதை  மறந்து விடுவார்கள் என்பதால். இப்பொழுது இதை  நியாபகபடுத்த வேண்டியது என் கடமை.

 காஞ்சிபுரத்தில் ஒரு பெரியவர். பெப்சி கூல் டிரிங் வாங்குகிறார்.  அதில் அழுக்குகள்  மிதப்பது அப்படியே அப்பட்டமாக தெரிகிறது, அப்பொழுது காஞ்சிபுரம் டி.ஆர்.ஓவாக இருந்த சகாயத்திடம். அந்த பாட்டிலோடு பெரியவர்  வந்தார். சகாயம் அவர்கள். உடனே களத்தில் குதித்தார். 7,8 கடைகளில், குடோன்களில் அவர் அதிகாரிகளுடன் ஆய்வில் இறங்குகிறார். உடன் இருக்கும் அதிகாரிகள் எல்லாம் பயந்து நடுங்குகின்றனர். சார். இது  ரொம்ப பெரிய........... இடம்.  என்று இழுத்தனர்.  சகாயம் அவர்கள்.  இது. எவ்ளோ பெரிய...........................  இடமாக  வேண்டுமானாலும் இருக்கட்டும்.  மக்களின் ஆரோக்யம் என்பது. அதை  விட ரொம்ப பெரிய..........................................     விஷயம் என்று சொன்னார். அணைத்து இடங்களில் செய்த ஆய்வுகளிலும். பெப்சி கூல்  டிரிங்கில் அழுக்கு இருப்பது  தெரிய வந்தது. முடிவில். அந்த கூல் டிரிங். லேப்பில் பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வெய்க்கப்பட்டது.   உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அழுக்கு படலங்கள், நச்சு பொருட்கள் இருப்பது  உறுதி செய்யபட்டது.  சகாயம் அவர்கள் உடனடியாக என்ன?  செய்தார் தெரியுமா.

 செங்கல்பட்டில் உள்ள தாசில்  தாருக்கு  போன் செய்து. எட்டு பூட்டுகளை  வாங்கி கொண்டு. சென்னை, திருச்சி நெடுஞ்சாலைக்கு வர சொன்னார். அவரும் எட்டு பூட்டுகளோடு சகாயம் சொன்ன இடத்திற்க்கு  வந்தார்.  எதற்காக? இந்த பூட்டு  என்று தாசில்  தார்  கேட்டார். வாங்க. சொல்றேன். என்று அவரை வண்டியில் அழைத்து கொண்டு. நேராக. திருமுல்லை வாயிலில் உள்ள பெப்சி கம்பெனிக்கு  போனார்.  அப்பொழுது கூட. தாசில்  தாரால். பெப்சி கம்பெனிக்கு  வேட்டு  வெய்க்க தான். இந்த எட்டு பூட்டுகள்  என்று.   கற்பணை  கூட  செய்து பார்க்க முடியவில்லை. நம்ப எதுக்காக. பெப்சி கம்பெனிக்கு  வந்து இருக்கோம் என்று தாசில்  தார்  கேட்டார்.   அவரிடம். சகாயம் அவர்கள். Flash Bag  சொன்னார்.  மேலும் லேப்  ரிப்போர்ட்டை. தாசில்தார் கையில் கொடுத்து.  இந்த காப்பியை. இதன்  மேனேஜர்ரிடம் கொடுத்து. உடனடியாக. இந்த இடத்தை விட்டு. அனைவரும் வெளியேறுமாறும். இந்த கம்பெனிக்கு  சீல் வெய்க்க போவதாகவும். சொல்லுங்கள் என்று  அவர் சொல்ல. அதை  கேட்ட தாசில்தார். பயத்தில் உறைந்து போய் விட்டார். சார்.  இது  ரொம்ப பெரிய இடம். எதுக்கும். கலெக்டர்  கிட்ட ஒரு வார்த்தை... என்று அவர் இழுக்க. சகாயம். அவரிடம் கேட்டால்.  வேண்டாம் என்று தான்  பதில் வரும். இதை  செய்வதற்கு. சட்டப்படி. துணை கலெக்டர்ரான எனக்கே அதிகாரம் உண்டு. நான் சொன்னதை  செய்யுங்கள். என்று அழுத்தமான குரலில் சொல்ல. தாசில்தார். பயந்து நடுங்கியவாறே உள்ளே போனார்.

 ஒரு மணி நேரம் கழித்து  தாசில்தார் வெளியே வந்தார். சார். அவுங்க. உள்துறை செயலாளர், தலைமை செயலாளர்னு  ஒருத்தர் விடாம. எல்லாருக்கும் போன் பண்ணிட்டாங்க. யார், யார் பேரலாமோ  சொல்லி. நாங்க. அவுங்க கிட்ட பேசிக்கறோம், இவுங்க கிட்ட பேசிக்கறோம்னு சொல்றாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார் என்று அவர் சொல்ல. சகாயம். நமது கையில் லேப்  ரிப்போர்ட் இருக்கு. இப்பொழுது. இவர்களாக வெளியில் வரவில்லை என்றால். அனைவரையும் கைது செய்து. பின்னர். இந்த கம்பெனிக்கு  சீல் வெய்போம்  என்று சொல்லுங்கள் என்று சகாயம் சொல்ல. அதை அப்படியே. அவர். அந்த கிளை மேலாளரிடம் சொல்ல. அடுத்த பதினைந்து நிமிடங்களில். அனைவரும் வெளியே வந்தனர்.  பின்னர் அந்த கம்பெனிக்கு  எட்டு பூட்டுகள்  போட்டு பூட்டப்பட்டது.

 இதை  பற்றி. ஒரே  ஒரு பத்திரிகை மட்டும் தான்  செய்தி வெளியிட்டது. கத்தி  கதிரேசன் ஸ்டைல்ல சொல்லனம்னால். லேகியம் விக்கவும், சமையல் குறிப்பு எழுதவும், சினிமா கிசு, கிசுக்கள்  எழுதவும் பத்திரிகைகளில் இடம் இருக்கு. ஆனால்  இதை  பத்தி நாலு வரி எழுத இடம் இல்லை. இதை  பற்றி துணிச்சலாக எழுதிய. தமிழ் நாட்டில் முதுகெலும்பு உடைய ஒரே பத்திரிகை. ஜூனியர் விகடன்.


 அப்பொழுது செல். நமது நாட்டிற்க்கு  வரவில்லை. பெப்சி கம்பெனிக்கு  எட்டு பூட்டு  போட்டபின். அலுவலகத்திற்கோ, வீட்டிற்கோ. செல்லாமல். அவர். அருகில் உள்ள கிராமங்களில் ஆய்வு செய்ய சென்றார். இரவு எட்டு மணிக்கு தான்  வீட்டிற்க்கு  வந்தார். அதற்குள் . வீட்டிற்கும், அலுவலகத்திற்கும். மாறி, மாறி பல போன் கால்கள். அவர் வீட்டிற்க்கு  வரும் பொழுது. அவரது மனைவியார்  வெளியே நின்று கொண்டிருந்தார்.  பல மிரட்டல் கால்கள் வந்ததை பற்றி சொன்னார். யாரை கேட்டு பெப்சி கம்பனிக்கு சீல் வெய்த்தீங்க. உங்களை சச்பெண்ட்  பண்ண போறோம். என்று கலெக்டர் சொல்ல. நான். இந்திய சட்ட, திட்டங்களை மீறி எதுவும் செய்யவில்லை. என் மீது நடவடிக்கை எடுப்பதாக  இருந்தால். தாராளமாக எடுக்கலாம். Iam Waiting என்று  போன்னை  வெய்த்தார்.

 இவர் அது  மட்டும் செய்யவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில். பெப்சி குளிர்பானம் விற்க்க  தடையும் விதித்தார். உலகில் வட  கொரியா போன்ற சில நாடுகள். பெப்சி, கோக் பானங்களை தடை செய்துள்ளது. இதை  கேரளா, அருணாச்சல் பிரதேஷ், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விற்பதில்லை. இப்பொழுது டெல்லியில். பள்ளி, கல்லூரிகளில் இதை  விற்க்க  தடை.  அது  எல்லாம் செய்தது அரசாங்கமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் இல்லை. ஆனால்?.உலகிலேயே.  பெப்சி  விற்க்க  தடை உத்தரவு பிறப்பித்த முதல். One  and  Only அதிகாரி  இவர் தான்.  பின்னர். அவர் அங்கிருந்து உடனடியாக.  transfer  செய்யப்பட்டதும். இரண்டே நாளில். அந்த எட்டு பூட்டுகள்  உடைக்கபட்டதும் வேறு விஷயம். ஆனால்?.

தன்னுடைய அதிகார வரம்பை தவறாக துஷ் பிரயோகம் செய்யும். பல அதிகாரிகளின் மத்தியில். எந்த அளவு தன்னுடைய அதிகாரத்தை பயன் படுத்தி. நல்லது செய்ய முடியுமோ செய்தார். இரண்டு நாட்களாது அவரால். பெப்சி கம்பெனியை தடை செய்ய முடிந்ததே. இவர். மாற்றலாகி போகும் ஒவ்வொரு ஊரிலும்.  அது  வரை  கிடைக்காமல் இருந்த. முதியோர் பென்ஷன், தியாகி பென்ஷன், மாற்று திறநாளிகளுக்கு அரசாங்கம் மூலம்  கிடைக்க வேண்டிய உதவி என அனைத்தும் கிடைத்தது. சென்னையில் 650 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை. இவர் மீட்டதில் ஆரம்பித்து. மதுரையில். பல ஆயிரம் கோடி மதிப்பில்.  நடந்த. கிரானைட்  முறைகேட்டை. அம்பலபடுத்தியது  வரை. இவர். செய்த சாதனைகள். கொஞ்சம், நஞ்சம் அல்ல. மேலோட்டமாக. இதை  கேட்பவர்களுக்கு. இவர் ஏதோ. தனது கடமையை ஒழுங்காக. செய்த ஒரு அதிகாரி என்று தோன்றலாம். ஆனால்?

 பலமுறை. இவர் தனது உயிரை பணையம் வெய்த்து தான். இத்தனை  விசயங்களை செய்ய முடிந்தது. ஒரே நாளில் இரண்டு முறை transfer  செய்யப்பட்டவர் இவர். MA, ML  படித்து. IAS  சும்  படித்தவர்.  சட்ட படிப்பு இவர் படித்ததால்  தான். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி.  ஆட்டையா  போடும்  பலரை இவரால் வேட்டை ஆட முடிந்தது. போர் கலைகள் கற்ற மற  தமிழனாக இவர் இருப்பதால். பத்து  பேர் ஆயுதங்களோடு வந்தாலும். இவரால் தனி ஒருவனாக. அவர்களை.  பந்தாட முடிந்தது.

 இப்பொழுது சொல்லுங்கள். இத்தகைய நேர்மை, துணிவு, வீரம், அறிவு என அனைத்தையும் உடைய. தமிழை தாய் மொழியாக கொண்ட இவர்.  நமது தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக ஆனால்  எப்படி இருக்கும். இவரை பற்றி தெரியாதவர்களும். நமது தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

 அடுத்து கிருஷ்ண கிரியில் 77 ஏக்கர் பரபளவு நிலத்தை. கோக்  கம்பெனிக்கு  தமிழக அரசாங்கம் வாடகைக்கு விட போகிறது. ஒரு ஏக்கருக்கான வாடகை 77 ருபாய் மட்டுமே.

77x 77= 5929 ரூபாய் மட்டுமே. இது  பன்னாட்டு நிறுவனத்திற்கான வாடகையா? இல்லை. Bachelor ரூமிர்கான வாடகையா.

  வெய்யில் அதிகம் இருப்பது  உண்மை தான். கோக், பெப்சி குடிப்பதற்கு  பதில். Fresh  Lemon  Juice  குடிக்கலாமே.

 மேலும் சகாயம் அவர்களை பற்றி சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சிந்திப்போம்.

6 comments:

  1. Politicians will only gulp our money along with our wealth and health

    ReplyDelete
  2. India is badly in need of bold officers like Mr Sahayam to take India on top of the World. Professionals must be respected. Officers with high integrity, honesty and courage to face all challenging issues with iron hand are to be respected, supported and protected by our society and constitution, failing which corruption can not be rooted out from our country.....Thanks sir

    ReplyDelete