siddhas

Thursday, 16 April 2015

நுறு சதவீதம் இயற்கையான, அதிக சக்துகளை உள் அடக்கிய உலகின் ஒரே அற்ப்புத உணவு.




Ganesa Moorthy Roja என்னும் எனது முகநுல் நண்பர். பட்டப்படிப்பு படித்து விவசாயம் செய்யும் இளைங்கர். இயற்க்கை வின்ஞானி நம்மாழ்வார் அவர்களையே தனது குலசாமியாக வணங்குபவர். அவர் சென்ற மார்ச் 11 அன்று சென்னை வந்து இருந்தார். அப்பொழுது அசோக் நகர் ஹாட் சிப்ஸ்சில் அவரை சந்தித்தேன். அது என்னுடைய வாழ்நாளில் ஒரு பொன் நாள் என்று சொல்லலாம். அவர். மிகுந்த மன வருத்ததுடன் சிலவற்றை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.


MNC கம்ப்பனிகள் கொடுக்கும் ரசாயன கலவைகள் அடங்கிய விதையை விவசாயிகள் நட்டால் தான். அரசாங்கம் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய மானியம் கிடைக்கும். நமது நாட்டில் விளையும் விளை பொருட்களின் விதையை விலை கொடுத்து. அந்த தானியங்கள் எதுவுமே விளையாத வெளி நாட்டு காரர்களிடம் நாம் வாங்க வேண்டும். இந்த கொடுமை வேறு எந்த நாட்டிலாவது நடக்குமா. அது விதை அல்ல. விஷம். 40, 50 லக்சம் செலவு செய்து இன்று ஒவ்வொருவரும் மருத்துவர் ஆகிறார்கள். அவர்களுக்கு வருமானத்தை அதிகம் ஏற்படுத்தி தர. உயிர் காக்கும் மருத்துவர்களை காக்கும் ஒரு நடவடிக்கையாக அரசாங்கம் செய்வதாக தான் நாம் இதை நினைக்க வேண்டும்.


பின் குறிப்பு- இது வஞ்சக புகழ்ச்சி அணி.

எந்த அரசாங்கம் வந்தாலும் இது மாற போவதில்லை. ஆனால்? எதுவும் என்றாவது ஒரு நாள் மாறும் என்னும் நம்பிக்கையில் நாம் ஆறுதல் அடைவதை தவிர வேறு வழியில்லை.

 கியூபா ஒரு கம்யூனிச நாடு என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். அந்த கம்யூனிச நாடு தான். நமது பாரம்பரிய சித்த  மருத்துவத்தை காத்து கொண்டு இருக்கிறது என்பது. உங்களில் எவ்வளவு பேருக்கு தெரியும்.  அது மட்டுமா. அங்கே . நுறு சதவீதம் இயற்க்கை முறையில் விவசாயம் நடக்கிறது. அணைத்து கல்லுரி மாணவர்களும். ஒரு நாளைக்கி இரண்டு மணி நேரம் விவசாயம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

 அமெரிக்கா உட்பட பல நாட்டாமை நாடுகள் கியூபா மீது பொருளாதார தடை விதித்தும். உலக அரங்கில் ஒரு வல்லரசாக மட்டும் அல்ல. நல்லரசாகவும் தலை நிமிர்ந்து கியூபா நிற்கிறது. அந்த பொருளாதார தடைகளால் கரன்சி விசயத்தில் பிரச்சனை வந்த பொழுது. பழைய பண்டம் மாற்றும் முறையை சில ஆண்டுகள் அவர்கள் கடை பிடித்தனர். பிரேசில் நாடு. கியூபாவிற்கு பெட்ரோல்லை கொடுத்து அதற்கு பதிலாக எதை  பெற்று கொள்கிறது தெரியுமா. சித்த  மருத்துவத்தை.


கேடி அரசாங்கம் கூன் பாண்டியர்களின் ஆதரவோடு நிலம் கையகபடுத்தும் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டது. ஆனால். அதை செயல்படுத்த முடியாது. அது வேறு விஷயம்.

 அரசியல் வாதிகள் பசித்தால் சோறு தின்பார்களா. இல்லை அமெரிக்க டாலர்களை தின்பார்களா.


அரசியல் வியாதிகளை நாம் மாற்றுவதும். அத்தகைய வியாதிகளை ஆதரிக்கும் கோடான கோடி மன நோயாளிகளை நாம் மாற்றுவதும் கஷ்ட்டம். ஆனால்? நாம் அதற்கு பதிலாக உணவு முறையை மாற்றி கொண்டால் பிரச்சனை இல்லை. ஒரு சதவீதம் கூட ரசாயன கலவை இல்லாத ஒரே உணவு உலகில் கேழ்வரகு மட்டுமே. ஏன்?





கேழ்வரகுக்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். இயற்க்கை , செயர்க்கை என்று எந்த உரமும் கேழ்வரகிற்கு போட முடியாது. அதனால் MNC கம்ப்பனிகளின் பாட்ஷா, படையப்பா எதுவுமே கேழ்வரகிடம் பலிக்காது. கேழ்வரகில் அடங்கியுள்ள Calcium. பாலில் உள்ளதை விட மூன்று மடங்கும். அரிசியில் உள்ளதை விட பத்து மடங்கும் அதிகம்.

கேழ்வரகில் 'மித்தியானைன் [Methionine] எனும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருப்பது இதன் கூடுதல் சிறப்புக்குக் காரணம். தனியாக இந்த 'மித்தியானைன்’ புரதம் குறித்த ஆய்வுகள் இப்போது கொடிகட்டிப் பறக்கின்றன. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பேணவும் இந்தப் புரதச் சத்து மிக அவசியம். இந்த 'மித்தியானைன்’ அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும் தான். ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட இந்த 'மித்தியானைன்’கொண்ட கேழ்வரகு பெரிதும் உதவும். அதற்காக நாளைக்கே கடைக்குச் சென்று, இந்த 'மித்தியானைன்’ கேப்சூல்ஸ் இருக்கிறதா என்று தேடாதீர்கள். தனியாக 'மித்தியானைன்’ புரதத்தை மட்டும் பிரித்துச் சாப்பிட்டால், ஒரு சில ஆபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு என்று சொல்கின்றன ஆய்வுகள். ஆதலால், மொத்தமாக 'மித்தியானைன்’ உள்ளடக்கிய கேழ்வரகை, கூழாக, அடையாக, தோசையாகச் சாப்பிட்டுப் பழகுங்கள்.

இப்பொழுது நான் தினமும் மத்தியம் கேழ்வரகு அடை தான் உண்கிறேன். இரவில் சப்பாத்தி. அரிசி உணவை பண்டிகை காலங்களில் மட்டுமே உண்கிறேன். நீங்களும்.  ஒரு வேளை கேழ்வரகை. கஞ்சி, கூழ், இட்லி, தோசை, அடை என்று ஏதேனும் ஒரு formமில் உண்ணலாம்.

 கேழ்வரகை விட ஓட்ஸ் மூன்று மடங்கு விலை அதிகம். கேழ்வரகிலோ. ஓட்ஸ்சை விட மூன்று மடங்கு சக்துகள் அதிகம். நமது நாட்டிலேயே. சக்தான தானியங்கள் விளையும் பொழுது. அதை விட சக்த்து குறைவாகவும், விலை அதிகமாகவும் உள்ள அன்னிய உணவு நமக்கு எதற்க்கு.

மூட்டு வலி முதல் ஆண்மை குறைவு வரை. அனைத்திற்கும் கேழ்வரகு உணவு. மிக சிறந்த மருந்து.

நாளை. புற்று நோய். Cancer நோய்க்கு உரிய தீர்வை பாப்போம்.

2 comments: