siddhas

Wednesday, 15 April 2015

எலும்பு தேய்மானம். [Arthritis] க்கு தீர்வு.


இன்றைய பெண்மணிகள் 30, 35 வயதை தாண்டினாலே.  எலும்புகள் தேய ஆரம்பித்து விடுகிறது. எலும்பு தேய்மானம் இப்பொழுது ஆண்களிடையேயும் அதிகரித்து வருகிறது.   இன்றைய உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவையே அதற்க்கு   காரணம்.  கால்சியம் சக்துக்கள்  எந்த, எந்த உணவுகளில் அதிகம் இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். கீரை வகைகள், பால், கம்பு, சோளம் போன்ற தானிய வகைகள்,பப்பாளி  பழம், முள்ளங்கி போன்றவை  அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். தினமும் வெள்ளை மலை பூண்டை. ஒரு 30 இல் இருந்து 50 கிராம். பாலில் போட்டு. சுண்ட காய்த்து  குடித்தால். எலும்புகள் எந்த வயதிலும். அதன்  வலிமையை இழக்காது.  கண் கெட்டபின்  சூரிய நமஸ்காரம் என்பது போல் அல்லாமல். இதை  இன்றிலிருந்தே செய்யுங்கள். எலும்பு தேய்மானம் அடைந்தாலும். நீங்கள். அதற்கு  தகுந்த உணவுகளை எடுத்து கொண்டு. தேய்ந்த  எலும்புகளை  Replace  செய்வதற்கு  என்றே பிரத்யேகமாக சில யோகாசனங்கள் இருக்கிறது. ஒரு நல்ல யோகா  ஆசிரியரிடம். அவற்றை கற்று கொண்டால். பிரச்சனை  இல்லை.

 ஒரு நல்ல பைக், கார்  நாம் வாங்கி. அதை  உபயோகப்படுத்தாமலேயே  இருந்தால் என்ன ஆகும். மனித உடலும் ஒரு வண்டி  தான். தனக்கு தானே பெட்ரோல், டிசல் போட்டு. தன்னை தானே சர்வீஸ் செய்து கொள்ளும் எந்திரம்  மனித எந்திரம். வண்டியை நாம் ஓட்டும் பொழுது மட்டும் தான். நாம் அதற்கு பெட்ரோல், டிசல் அல்லது எரிவாயு என்று ஏதேனும் ஒரு தீனி கொடுப்போம். ஆனால்? மனித எந்திரம். வேலை செய்தாலும், எந்த வேலையும் செய்யாமல் புடிச்சி வெய்த்த  பிள்ளையார் மாதிரி 24 மணி நேரமும் ஒரே இடத்தில உட்கார்ந்து இருந்தாலும்.சாம்பார், ரசம், தயிர் என்று முன்று ரவுண்டு  புல் மீல்ஸ் சாபிட்டால் ஆரோக்கியம் என்ன ஆகும். நிங்கள் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால்  அதற்க்கு  தகுந்த வேலையை உடலுக்கு  கொடுக்காமல் விட்டால். அந்த உணவுகள் செரிக்கப்படாமல் கெட்ட  கொழுப்பாக மாறும். அதன்  மூலம். நமது உடலில் உள்ள திசுக்களும், எலும்புகளும் பலவீனமாக ஆகும். தினமும் யோகா அல்லது உடற் பயிற்ச்சி . முடிந்தால் இரண்டையுமே செய்யுங்கள். ஆரோக்யமாக வாழுங்கள்.  

 ஊனினை  உருக்கி உள்  ஒளி  பெருக்கி.

  மாணிக்க வாசகர்.

  இன்று நாம் உண்ணும் உணவு அனைத்துமே ரசாயனங்களின் கலவை. ஒரு சதவீதம் கூட  ரசாயன கலவை கலக்காத சக்த்தான  உணவு இருக்கிறதா. இருக்கிறது. அதை  நாம் நாளை பார்ப்போம் .

No comments:

Post a Comment