siddhas

Saturday, 11 April 2015

சாதனை தமிழன் தங்க மகன்



17/11/2013 அன்று இவர் செய்த சாதனை. இந்திய வரலாற்றில். பொன் எழுத்துக்களாலோ, வைர எழுத்துக்களாலோ பொறிக்க பட வேண்டியது அல்ல. உலகில் உள்ள ரத்தினங்களிலேயே விலை உயர்ந்த மாணிக்கம். ம்ஹ்ம். அதுக்கும் மேல. ஏதாவது உயர்ந்த ரத்தினம் உலகில் இருந்தால் கூட. அது. இவர் செய்த சாதனைக்கு ஈடு ஆக முடியாது. இவர் யார்? இவர் செய்த சாதனை தான் என்ன? 

தமிழகத்தை ஒப்பிடும் பொழுது. ஹரியானா, பஞ்சாப், ஜார்க்கன்ட் போன்ற மாநிலங்களில். இயற்கையாகவே கட்டான உடல் அமைப்புடன் இருப்பவர்கள் அதிகம். அவ்வாறு இருக்க. தமிழை தாய் மொழியாக கொண்ட. சென்னை தாம்பரத்தை பூர்விகமாக கொண்ட ராஜேந்திரன் மணி அவர்கள். 17/11/2013 அன்று.  ஹங்கேரி மண்ணில் உலக ஆண் அழகன் பட்டம் பெற்றார். 



 ஐஸ்வர்யா ராய்.  உலக அழகி. அது எல்லாருக்கும் தெரியும். ஆனால்? இவர். இந்தியாவை சேர்ந்த முதல் ஆண் அழகன். [Mister Universe] இது எவ்வளவு? தமிழர்களுக்கு தெரியும். 

 அபினவ் பிந்த்ரா. 2008 இல் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று. தனி நபர் பிரிவில். இந்தியாவிற்கு முதல் உலக கோப்பை தங்கம் வாங்கி கொடுத்தாரே. அதை விட பெரிய சாதனை ராஜேந்திரன் அவர்கள் செய்தது. குடும்ப பின்னணி இல்லை, செல்வ வளம் இல்லை, அரசாங்கத்தின் சப்போர்ட் இல்லை, நல்ல ஸ்பான்சர் இல்லை. இவ்வளவு இல்லைகள், தொல்லைகள் இருந்தும். எல்லையில்லா இவரது உடல் ஆற்றலோடு மன ஆற்றலும் சேர்ந்து. அதன் பயனாக இவருக்கு கிடைத்த மணி மகுடமே. உலக ஆண் அழகன் பட்டம். 

 2008இல் ஒலிம்பிக் தங்கம் வென்ற அபினவ்வால். 2012இல் வெண்கலம் கூட வாங்க முடியவில்லை. காரணம். 2012இல் அபினவ்வை விட திறமையான பலர் களத்தில் இறங்கினர். 

 குறவர் இன மக்களுக்கு குறி பார்த்து தாக்குதல் என்பது அவர்கள் மரபணுவிலேயே ஊரி போன விசயம். இந்திய அளவில் உள்ள குறவர் இன மக்களை ஒன்று திரட்டி. அவர்களுக்கு என்றே. துப்பாக்கி சுடும் போட்டியை நடத்தி. அதில் முதல் இடம் வரும் ஆண் மற்றும் பெண்ணை உலக கோப்பை போட்டிக்கு. நமது அரசாங்கம். நாம் குடியரசு நாடாக ஆன 1950இல் இருந்து. இன்று வரை தொடர்ந்து தேர்வு செய்து இருந்தால். சுடுதலில் மட்டும் இந்தியா குறைந்த பக்சம் ஒரு 30 தங்கங்கள் ஒலிம்பிக்கில் வென்று இருக்கும். எனக்கு 12 வருடங்களுக்கு முன். 14 வயதில் வந்த சிந்தனை. ஏன்? நமது நாட்டில் எந்த அரசியல் வாதிக்கும், விளையாட்டு துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கும் வந்து தொலைக்கவில்லை.

 குற்றாலீஸ்வரன் முதல் சாந்தி வரை பல திறமையான வீர, வீராங்கனைகளின் திறமைகள் அங்கீகரிக்கப்படாததால். பல வெள்ளிகளை, தங்கங்களை  நமது நாடு உலக கோப்பையில் இழந்து உள்ளது. இவர்கள். பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை, ஆதிக்க ஜாதியில் பிறக்கவில்லை. அதை தவிர இவர்கள் வேறு என்ன? தவறு செய்தார்கள். 

  ப்ரூஸ்லீ வாழ்ந்த பொழுது. அவரை விட சிறந்த வீரர்கள் கூட இருந்தார்களாம். ஆனால் ப்ரூஸ்லீ என்னும் பெயர் மட்டும். இன்றும் உலக வரலாற்றில் நிலைத்து இருக்க ஒரே காரணம். அவர் ஸிநிமாவில் நடித்ததால் தான். ராஜேந்திரன் மணி உலக ஆண் அழகன் பட்டம் பெற்றதை பற்றி. பிரபல தமிழ், ஆங்கில, ஹிந்தி பத்திரிகைகளில் செய்திகள் வந்தும். ND டீவீ போன்ற பிரபல செய்தி தொலைக்காட்சிகள். இவரது இந்த சாதனையை ஒளி பரப்பியும். அதை படித்த, பார்த்த பலருக்கு அது மறந்து விட்டது. VPM [Very Poor Memory] எனப்படும் வியாதி இந்தியர்களின். குறிப்பாக தமிழர்களின் தேசிய வியாதி. விக்ரம் நடிக்க வராமல். உண்மையிலேயே ஆண் அழகன் பட்டம் வென்று இருந்தால்?


No comments:

Post a Comment