siddhas

Thursday, 9 April 2015

ரத்த அழுத்தம் போக்கும் மூலிகையும், தியானமும். அனைவருக்கும் ஏற்றது.



இதற்க்கு முன் ஆரோக்யம் சம்பந்தமாக நீயா, நானாவில் விவாதம் நடந்த பொழுது. ஒரு பெண்மணி பேசினார். என் வீட்டு காரருக்கு சுகர் இருக்கு. ஆனால் அவர் சந்தோசமா ஒரு கிலோ பாதாம் அல்வாவ சாப்ட்டால் கூட அவரை அது ஒன்னும் பண்ணாது. [இது சிரிக்க மட்டும்] விஷம் என்று தெரிந்தே ஒருவன் பயப்படமால் சிரித்து கொண்டே சாப்பிட்டால். அவன் சாகாமல் இருப்பானா. bp என்பது சக்கரை வியாதி போல் அல்ல. தினமும் கோங்ரா சட்னியை ஆந்திரா ஸ்டைல்லில் சாப்பிட்ட பலர் bp இல்லாமலே பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார்கள். bp க்கு 90 சதவீத காரணம். நமது மனக்கவலையும், கோபமுமே. உப்பும், காரமும் 10 சதவீதமே. ஆனாலும். உணவில். அளவோடு உப்பு, காரம் சேர்த்து கொள்வது நல்லது. 

பூமராங் என்று அக்கலாதில் ஒரு வகை ஆயுதம் இருந்ததாம். அதை கொண்டு நாம் எதிரியை தாக்கினால். அது எதிரியை தாக்கி விட்டு. நமது கைக்கே மீண்டும் வரும். அதே போல். ஜெட்டி, பனியனில் ஆரம்பித்து. மூலிகை மருந்துகள் வரை. அனைத்தும் இங்கிருந்து வெளி நாடு போய். மீண்டும் நமக்கே திரும்ப வருகிறது. 

 ரத்த அழுத்தத்திற்கு நாம் அன்றாடம் உணவும்  முக்கிய உணவுகளே மருந்தாக இருக்கிறது. தினமும் வெள்ளை பூண்டும், வெள்ளை வெங்காயமும் சேர்த்து கொள்பவர்களுக்கு. bp வருவதற்கான வாய்ப்பு குறைவு. அவ்வாறு சேர்த்தும் bp வந்தால். அதற்க்கு காரணம் மன கவலை. 

  இது வெய்யில் காலம் வேறு. தினமும் வெள்ளை வெங்காயத்தை துண்டு, துண்டாக நறுக்கி. அதை கெட்டி தயிரில் போட்டு. தயிர் பச்சடி செய்து சாப்பிடுங்கள். உடல் சூடு, ரத்த அழுத்தம் இரண்டையும் குறைக்கும். வெள்ளை பூண்டை பச்சையாகவும் சாப்பிடலாம். அதை பசும் பாலில் போட்டு. சுண்ட காய்ச்சியும் சாப்பிடலாம். அதுவும் உடற் பயிற்ச்சி செய்பவர்களுக்கு. பூண்டு பால். ஒரு மிக சிறந்த ஊட்ட சக்த்து பானம். வாழை தண்டு, முள்ளங்கி ஆகியவையும் ரத்த அழுத்த்தை கட்டுப்படுத்த உதவும். நெல்லிக்காய் ரத்த அழுத்தத்திற்கு மிக, மிக சிறந்த மருந்து. இதை காலையில் மட்டும் தான் உண்ணவேண்டும். காலையில் நெல்லிக்கனி அமிர்தம். இரவில் நஞ்சு. 


 கற்பூறவல்லி என்னும் மூலிகை. நமது ரத்த அழுத்தத்தை சீராக வெய்க்கும். கற்பூறவல்லியை அப்படியே சாப்பிடலாம். தேனில் ஊர வெய்த்தும் சாப்பிடலாம். அடிக்கடி சளி தொல்லையால் அவதிப்டுபவர்களுக்கு கற்பூறவல்லி மிக சிறந்த நிவாரணி. ஒரு ஐந்து இலைகளை சாப்பிட்டால் போதும். பீட்ரூட்டும் ரத்த அழுத்தத்திற்க்கு நல்லது. ஆனால் பலருக்கு சக்கரை வியாதி வந்து. அதன் இலவச இணைப்பாக Bp வருவதால். பீட்ரூட் சரிப்பட்டு வராது. 

 மன அழுத்தத்தின் மறு வெளிப்பாடே ரத்த அழுத்தம். அதுவும். Bp அதிகம் உடையவர்களுக்கு படுத்தவுடன் தூக்கம் வராது. அதற்கான காரணம் என்ன தெரியுமா. 

 நீங்கள் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறீர்கள். மெயின் ரோட். வண்டி இறைச்சலுக்கு நடுவில் காதை கிழிக்கும் அளவு லௌட் ஸ்பீக்கர் இரைச்சல் வேறு. அந்த இடத்திலிருந்து உங்கள் வீட்டிற்கான தூரம். ஒரு மைல் என்று வெய்த்து கொள்வோம். நீங்கள் மூன்று நிமிடங்களில் அந்த இடத்திலிருந்து உங்கள் வீட்டிற்க்கு வந்து விடுகிறீர்கள். வீட்டிற்க்கு வந்தவுடன் எவ்ளவு அமைதியாக உணர்வீர்கள். நமது மனத்தை மூன்று பகுதிகளாக மனோ தத்துவ வல்லுநர்கள் பிரித்து உள்ளனர். 

 உள் மனம், வெளி மனம், ஆழ் மனம். வெளி மனம் என்பது கடல் அலை போல் ஒரே இரைச்சல். அதை குறிக்கும் விதமாக தான் அலைபாயும் மனம் என்றார்கள். உள் மனம் என்பது நடு கடல் போன்ற அமைதி. ஆழ் மனம். ஆழ் கடல் போன்றதொரு அமைதி. 

ஆழ் மன தியானத்தை நீங்கள் உறங்க போகும் முன் செய்தால். உங்களுக்கு தூக்கம் சீக்கிரம் வரும். ரத்த அழுத்த அளவை வெகு விரைவில் கட்டுக்கு கொண்டு வரும். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். சிறுவர் முதல் பெரியவர் வரை. இது வெறும் ஆழ் மனத்தை நீங்கள் நினைத்து செய்யும் தியானம் மட்டும் அல்ல. ஆழ் மன பயணம் என்றும் சொல்லலாம். 

 நீங்கள் உறங்கும் முன். உங்களது ஆழ் மனத்தை கற்ப்பனை செய்து கொள்ளுங்கள். முடிந்தால். அதனுள் நீங்கள் பயணம் செய்வதை போல் உணருங்கள். எவ்வளவு? நேரம் இந்த தியானம் செய்ய வேண்டும் நீங்கள் தியானம் செய்கிறீர்கள் என்பதையே மறந்து தூங்கும் வரை. படுத்தவுடன் தூக்கம் வர மூன்று, நான்கு மணி நேரம் மேல் ஆகிறவர்களுக்கு. இதை செய்தால். படுத்த அரை மணி, ஒரு மணியில் தூக்கம் வரும்.  ஒரு மணி நேரம் ஆகிறது என்றால். ஐந்து, பத்து நிமிடங்கள். படுத்த அடுத்த நிமிடமே தூங்கும் அளவு மன நலன் நன்றாக இருப்பவர்கள் இதை செய்தால். அவர்கள் உடலில், மனத்தில் உள்ள புத்துணர்ச்சி இன்னும் அதிகரிக்கவே செய்யும். கடிமான உடற் பயிற்சியின் மூலம். பலவீனமாக உள்ள ஒருவன் கூட பயில்வான் ஆவான் என்றால். இயற்கையாகவே பயில்வான் போன்ற உடல் அமைப்பு உள்ளவன் உடற் பயிற்ச்சி செய்தால். இந்த தியானமும் அதே போல் தான். சரி. ஆழ் நிலை தியானத்தை எவ்வாறு செய்வது. 

கீழே   உள்ள இந்த படத்தை பாருங்கள். 



 இது தான் உங்கள் ஆழ் மனத்தின் புகைப்படம். இதை மட்டுமே நீங்கள் கண்ணை மூடி கொண்டு நினைக்க வேண்டும் நிமிர்ந்து படுக்க வேண்டும். மூச்சை மென்மையாக இழுத்து மென்மையாக விட வேண்டும். 

 நாளை அல்சர் நோய்க்கு உரிய மூலிகைகளை பார்ப்போம். 

No comments:

Post a Comment