siddhas

Saturday, 4 April 2015

சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து




 440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம்.

என் தாய்க்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும். அதான். அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின் , எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள், லக்ஷங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே. இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா. இருக்கிறது. என் அம்மாவிற்க்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி. 

 எங்களது ஒரு குடும்ப நண்பரின் ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை எனது தாயார் தினமும் சாப்பிட்டு வந்தாங்க. என் அம்மாவிற்க்கு மட்டும் அல்லாமல் எனது அத்தைகளும் நிலவேம்பு கஷாயம் குடித்ததன் பலனாக இன்று சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது. 

 நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம். 

 இதை எவ்வாறு பயன் படுத்துவது-  இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும் 

 இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம். 

 பின் குறிப்பு- உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும். சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள். 

 சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது. 

20 comments:

  1. The blogspot information on 'Sugar Control" is very much useful for those who are suffering from high sugar and undergoing insulin injection daily.

    ReplyDelete
  2. இதை தினசரி எத்தனைமுறை அல்லது காலையில் வெறும் வயிற்றில் மட்டும் குடிக்க வேண்டுமா?

    ReplyDelete
  3. ஒரு நாளைக்கு 1,3 முறை குடிக்கலாம். வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. good infor maion after one month the sugar level is under control we sholuld stop that kazhayam? or continue

    ReplyDelete
  5. சரி ஆனப்பின் விருப்பபட்டால் வாரத்திற்க்கு 1 அல்லது 2 முறை எடுத்து கொள்ளலாம். தினமும் எடுத்து கொண்டால் லோ சுகர் பிரச்சனை வந்து விடும். இது நோய் எதிர்ப்பு சக்தியை தரும். அனைத்து விச காய்ச்சலையும் குணப்படுத்தும் என்பதால் வாரம் 2, 3 முறை எடுத்து கொள்வதில் தவறில்லை.

    ReplyDelete
  6. 1. நில வேம்பென்பது பொடியா அல்லது வேர்/இலையா ??
    2. சாதா தண்ணீர் போதுமா அல்லது வென்னீரில் போடவேண்டுமா??
    3. ஊற வைக்கவேண்டுமா அல்லது போட்ட உடனே குடித்து விடலாமா??
    தயவு செய்து மேற்கண்ட சந்தேககங்களை விளக்கவும்.
    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி....

    ReplyDelete
  7. bro plz tell to control BP

    ReplyDelete
  8. 1. நில வேம்பென்பது பொடியா அல்லது வேர்/இலையா ??
    2. சாதா தண்ணீர் போதுமா அல்லது வென்னீரில் போடவேண்டுமா??
    3. ஊற வைக்கவேண்டுமா அல்லது போட்ட உடனே குடித்து விடலாமா??
    தயவு செய்து மேற்கண்ட சந்தேககங்களை விளக்கவும்.
    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. further address or phone where it is available

    ReplyDelete
    Replies
    1. நில வேம்பு ஒரு மூலிகை இலை. நாட்டு மருந்து கடைகளில் அதை பொடி செய்து சூரனமாக விற்ப்பார்கள்.

      அந்த நில வேம்பு பொடியை தண்ணீர்ரில் போட்டு நன்கு கொதிக்க வெய்த்து வடிகட்டாமல் குடிக்க வேண்டும்.

      Delete
  9. my e-mail rveaswar@yahoo.com or trv213@gmail.com pl reply

    ReplyDelete
  10. While consuming Nila vembu , english medicines and insulin that v r taking regularly can b continued or v shd stop it during these 30 days.

    ReplyDelete
  11. உங்களின் அம்மா நிலவேம்பு சூரணம் சாப்பிட்டு சர்க்கரை நோய் முழுவதும் குணமானது குறித்து மிக்க மகிழ்ச்சி. அவர்கள் ஒரு வேளை கஷாயம் செய்ய எத்தனை கிராம் நிலவேம்பு இலை சூரணம் பயன்படுத்தினார். ஒரு வேளை குடித்த கஷாயத்தின் மில்லி அளவு என்ன? ஒரு நாளைக்கு எத்தனை வேளை கஷாயம் குடித்தார். உணவு பத்தியம் ஏதும் இருந்தாரா? கஷாயத்துடன் ஆங்கீல மருந்துகளும் சேர்த்து சாப்பிட்டாரா ? கஷாயம் மட்டுமே 30 நாட்களும் குடித்து குணப்படுத்தி கொண்டாரா?

    தற்பொழுது தாங்கள் கூறியபடி வாரம் 2-3 முறை மட்டுமே கஷாயம் குடித்து வருகிறாரா? அல்லது கஷாயம் குடிப்பதை (குணமானதால்) முழுவதும் நிறுத்தி விட்டாரா?

    வைரஸ் காய்ச்சல் பரவிய பொழுது அரசு பரிந்துரை செய்த நிலவேம்பு குடிநீர் (கஷாயம்) சூரணம் நிலவேம்பு மூலிகையுடன் மேலும் 8 மூலிகைகள் கலந்த கலவை.

    இதில் தாங்கள் சர்க்கரை நோய் குணமாக பரிந்துரை செய்வது நிலவேம்பு இலை சூரணம் ஒன்று மட்டுமா? அல்லது அரசு பரிந்துரை செய்த 9 மூலிகைகள் கலந்த நிலவேம்பு குடிநீர் சூரணமா?

    எதை நாங்கள் பயன்படுத்துவது? தயவு செய்து மேற்படி எனது சந்தேகங்களுக்கு தாண்கள் பதில் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்

    தங்களின் பதில் கண்டு நாங்களும் நிலவேம்பு கஷாயம் குடித்து சர்க்கரை நோயிலிருந்து முழுவதும் குணமாக விரும்புகிறோம்.

    நன்றி. வணக்கம்.

    .




    ReplyDelete
  12. உங்களின் அம்மா நிலவேம்பு சூரணம் சாப்பிட்டு சர்க்கரை நோய் முழுவதும் குணமானது குறித்து மிக்க மகிழ்ச்சி. அவர்கள் ஒரு வேளை கஷாயம் செய்ய எத்தனை கிராம் நிலவேம்பு இலை சூரணம் பயன்படுத்தினார். ஒரு வேளை குடித்த கஷாயத்தின் மில்லி அளவு என்ன? ஒரு நாளைக்கு எத்தனை வேளை கஷாயம் குடித்தார். உணவு பத்தியம் ஏதும் இருந்தாரா? கஷாயத்துடன் ஆங்கீல மருந்துகளும் சேர்த்து சாப்பிட்டாரா ? கஷாயம் மட்டுமே 30 நாட்களும் குடித்து குணப்படுத்தி கொண்டாரா?

    தற்பொழுது தாங்கள் கூறியபடி வாரம் 2-3 முறை மட்டுமே கஷாயம் குடித்து வருகிறாரா? அல்லது கஷாயம் குடிப்பதை (குணமானதால்) முழுவதும் நிறுத்தி விட்டாரா?

    வைரஸ் காய்ச்சல் பரவிய பொழுது அரசு பரிந்துரை செய்த நிலவேம்பு குடிநீர் (கஷாயம்) சூரணம் நிலவேம்பு மூலிகையுடன் மேலும் 8 மூலிகைகள் கலந்த கலவை.

    இதில் தாங்கள் சர்க்கரை நோய் குணமாக பரிந்துரை செய்வது நிலவேம்பு இலை சூரணம் ஒன்று மட்டுமா? அல்லது அரசு பரிந்துரை செய்த 9 மூலிகைகள் கலந்த நிலவேம்பு குடிநீர் சூரணமா?

    எதை நாங்கள் பயன்படுத்துவது? தயவு செய்து மேற்படி எனது சந்தேகங்களுக்கு தாண்கள் பதில் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்

    தங்களின் பதில் கண்டு நாங்களும் நிலவேம்பு கஷாயம் குடித்து சர்க்கரை நோயிலிருந்து முழுவதும் குணமாக விரும்புகிறோம்.

    நன்றி. வணக்கம்.

    ReplyDelete
  13. நன்றி மக்களே! மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete