siddhas

Monday, 6 April 2015

மண்ணின் மைந்தன்



இன்று. மண்ணாசை கொண்ட ஒரு மாமனிதரின் பிறந்த நாள். இவர் மண்ணை பிடிப்பதில் ஆசைப்படவில்லை. மண்ணை காப்பாத்தற்கு ஆசைப்பட்ட தமிழ் மண்ணின் மைந்தன். என்னை போன்ற லட்ச கணக்கான இளைங்கர்கள் கும்பிடும் குலசாமி. யார் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்குமே. இயற்க்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா. இவர் உண்மையில் மறையவில்லை. பல லட்சம் மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
இன்று மத்திய அரசாங்கம் மீத்தேன் திட்டத்தை கை விட்டு விட்டது. சூரியூர் கிராமத்தில் பெப்சி கம்பனி இழுத்து மூடப்பட்டு உள்ளது. இவற்றிற்க்கு எல்லாம் வித்திட்டவர் நம்மாழ்வார் அவர்கள். அவர் உடல் இந்த மண்ணை விட்டு மறையும் முன் தன்னை போன்ற ஆயிரக்கணக்கான நம்மாழ்வார்களை உருவாக்கி விட்டு மறைந்து உள்ளார். போபால் முதல் பிடி கத்தரிக்காய் வரை வரும் முன்னே எச்சரித்தவர் இவர்.
கத்தி திரைப்படத்தில் விஜய் சொல்லும் ஒவ்வொரு புள்ளி விவரமும் நம்மாழ்வார் அய்யா பல மேடைகளில் பேசியவை. உழவுக்கும் உண்டு வரலாறு போன்ற நூல்களில் எழுதியவை. இந்த திரைப்படம் இயற்க்கை விஞ்ஞானி நம்மாழ்வார்க்கு சமர்ப்பணம் என்று டைட்டில் காடில் போட்டு இருக்கலாம். எது எப்டியோ. அந்த திரைப்படம் ஓட்டு மொத்த சமுதாய ஊடகத்தையும் விவசாயம் பற்றி பேச வெய்த்தது மட்டும் அல்லாமல் மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவர்களையும் மீத்தேன் வாயு பற்றி சிந்திக்க வெய்த்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு என் உறவினர்களில் சிலர் பெப்சி, கோக் குடிப்பதை விட்டனர். அதை பாராட்டியே ஆக வேண்டும்.
அடுத்து. neutrino திட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மீத்தேன் போலவே இதுவும் ஊத்திக்க தான் போர்து. இதுல வேற நிலம் கையகப்படுத்தும் மசோதாவ நிறைவேற்றியே தீருவோம்னு கேடியும், வெங்காயமும் காமெடீ பண்ணிண்டு இருக்கு. இளைங்கர் சக்தி அதற்க்கு எதிராக இருக்கும் வரை உங்கள் ஆணவமும் சரி, ராணுவமே ஆனாலும் சரி. செல்லுபடி ஆகாது.
ஒவ்வொரு நெல்மணியும் நம்மாழ்வார் அய்யாவின் வரலாறு சொல்லும்.

No comments:

Post a Comment