siddhas

Tuesday, 20 January 2015

ஒருநாள் போதுமா

3] ஞானியர் கோவில்கள்

சென்னையில் சித்தர்கள் கோவில்கள் தேட, தேட கிடைத்து கொண்டே இருக்கிறது. முதலில் முக்கியமான சித்தர்கள் கோவில்கள் ஒரு 50 இருக்கிறது என்று சொன்னேன். இப்பொழுது 100 இற்கு மேல்.
சென்னை தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்று வடசென்னையின் ஒரு பகுதியாகவே கருதப்படும் திருவொற்றியூர் கடற்கரையில் சமாதி கொண்ட பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்துக்காரர்தான். அவர்கையில் இருந்த பேய்க் கரும்பின் கசப்பு திருவொற்றியூர் என்கிற இன்றைய சென்னையின் தலைமாட்டுக்கு அவர் வந்த பிறகுதான் இனித்தது. அவ்விடத்தையே தமது உடல் ரீதியான நடமாட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகப் புரிந்து கொண்டு அதையே தனது அடக்கத் தலமாகத் தேர்ந்து கொண்டுவிட்டார், பட்டினத்தார்.

இன்றிலிருந்து நாம் பட்டினத்தார் ஸ்வாமிகளை பற்றி தான் பார்க்க போகிறோம். சித்தர் அறிவியல் போல் அடியேன் இருக்கும் பக்கங்களில் இவரை அறியாதாற் யாரும் இல்லை. அவ்வாறு இருக்க இவரை பற்றி அடியேன் சொல்வது Ritchie தெருவில் பேட்டரி விற்ப்பதை போல். அடியேன் இவரை பற்றி சொல்லும் தகவல்களில் உங்களுக்கு ஏதேனும் ஒன்று தெரியாமல் இருக்கலாம். அதை விட முக்கியமாக. இவரை பற்றி முழுமையாக பதிவு செய்து முடித்த பின் அடியேன் சொல்ல மறந்த, விடுபட்ட, தெரியாதவற்றை அடியேனுக்கு பெரியோர்கள் சொல்வர். இவருடைய வரலாறு சற்று நீண்டது.

சென்ற வியாழன் இரவு அடியேன் இவர் ஆலயத்தில் நடந்த அபிஷேகத்தை கண்ணார கண்டு களித்தேன். அன்று அடியேன் இரண்டு, மூன்று ஞானியர் கோவில்களை தரிசித்து நிறைவாக இவரை பார்த்தேன். வேறு ஒரு இடத்தில் அரை மணி நேரம் எனக்கு தாமதம் ஆனது. ஒரு அரை மணி முன்போ, பின்போ அடியேன் பட்டினத்தார் ஞான ஆலயத்திற்கு வந்திருந்தால் எனக்கு கண் குளிர அதை பார்க்கும் பாக்கியமும். அதை பார்த்தவாறே காது குளிர தேவார, திருவாசக இசை கேட்கும் பாக்கியமும் அடியேனுக்கு கிடைக்காமல் போய் இருக்கும். மொத்தத்தில் அன்று என் சித்தம் தெளிந்து, ஆன்மா சுத்தம் ஆனதை உணர்ந்தேன்.

இளமை முதலே இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படுகின்றது. குபேரன் தான் இப்பூவுலகில் பட்டினத்தாராக அவதரித்தார் என்று திருவெண்காட்டுப் புராணம் கூறும். மண்ணுலகில் உள்ள பல சிவ ஸ்தலங்களை தரிசிக்க குபேரன் விரும்பினார். அதனால் காவேரி பூம்பட்டினத்தில், வணிகர் குலத்தில் பிறந்தார் பெற்றோர்கள் சிவநேசன்-ஞானகலாம்பை ஆவர். இவர்களின் தவப்பயனாய்ப் பிறந்தவரே பட்டினத்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர். திருவெங்காடு சென்று வேண்டி பெற்ற பிள்ளையாதலின் திருவெங்காடர் என பெயரிட்டனர். நாளை இந்த பிள்ளை பல கோடி சிவன் அடியார்கள் பேர் சொல்லும் ஒரு சித்தராக வர போகிறது என்பதை அன்று அவர்கள் அறியவில்லை. 

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட சோழ மன்னர்கள் தாங்கள் முடி சூட்டிக் கொள்ளும்போது, வணிகர்களிலேயே மிகப் பெரிய தனவந்தராக இருப்பவரைத் தான் மகுடத்தை எடுத்துக் கொடுக்கச் சொல்வார்கள். அவ்வாறு சோழ மன்னருக்கு மகுடம் எடுத்துக் கொடுத்தவர் தான் பட்டினத்தாரின் தந்தை. இவர் கடல் வழி வணிகத்தில் பெரும் பொருள் ஈட்டிய செல்வந்தர். இவர்களுக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தில்லையம்மை என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆசைக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால் ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை அந்த ஈசன் போக்கும் விதமாக பிறந்தவர் தான் திருவென்காடர்.

. செல்வ வீட்டுச் சீமான் என்பதால், குழந்தையிலேயே, திருவெண்காடருக்கு கழுத்திலும், கை, கால்களிலும் தங்க நகைகளைப் பூட்டி பெற்றோர் அழகுப் பார்த்தனர். குழந்தைப் படுக்கும் தொட்டிலுக்கும் நவமணிகள் பூட்டப்பட்டன. இவ்வாறு செல்வச் செழிப்போடு அந்த குழந்தை நன்கு வளர்ந்து வந்தது. இவ்வளவு நிறைகள் இருந்தும் ஒரே ஒரு குறை அக்குடும்பத்தில் இருந்தது. அது, திருவெண்காடர் சரியாக படிக்காமல், மற்ற சிறுவர்களோடு சேர்ந்துக் கொண்டு சுற்றியது தான். தன் குழந்தை படிக்காமல் இருப்பதைப் பார்த்து, எந்த தந்தை தான் நிம்மதியாக இருப்பார். தன் குழந்தை படிக்கவில்லையே என்று அந்த செல்வந்தர் மனம் வருந்தினார். எந்த தாய், தான் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை கணவனிடம் விட்டுக் கொடுப்பாள், அந்தத் தாயும், பிள்ளை படிக்கவில்லை என்று ஏன் வருந்துகிறீர்கள், அதான் பத்துத் தலைமுறைக்கு சொத்து இருக்கிறதே, என்று கணவரை ஆறுதல் படுத்தினார்.

திருவெண்காடருக்கு ஆறு வயதாகும்போது, அவரைப் பெற்ற தந்தை சிவநேசன் செட்டியார் காலம் ஆனார். இந்த சிறுவயதிலேயே தந்தை இறந்ததால், மகனை வளர்க்கும் பொறுப்பையும், வாணிபப் பொறுப்பையும் அந்த தாய் ஏற்க வேண்டியதாகி விட்டது. மகனை நல்ல முறையில் வளர்த்து விடலாம், ஆனால் வாணிபத்தை எப்படி வளர்ப்பது என்று அந்த தாய் மிகவும் கலங்கினாள். அப்போது வாணிபத்தை வளர்க்கும் பொறுப்பை திருவெண்காடரின் தாய் மாமா சிவசிதம்பரம் செட்டியார் ஏற்றுக் கொண்டார். அவரது மனைவி பெயர் சிவகாமி ஆச்சி. அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை, பெயர் சிவகலை. 10 வருடங்களுக்குப் பிறகு, திருவெண்காடரே கடைகளை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தார். இந்நிலையில், அவருடைய தாய் அவருக்கு சிவகலையை மணமுடிக்க எண்ணினார். ஆனால் அவருடைய மனமோ, வேறு ஒரு பெண்ணை எண்ணியது. இதை தான் தாயிடம் சொல்லும் அளவுக்கு அவருக்கு துணிவில்லை. மேலும் தந்தைக்குப் பிறகு தாயே தந்தையாக இருந்து வளர்த்தபடியால், தாயின் விருப்பத்திர்க்கு, தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, சிவகலையை மணந்தார். 5 ஆண்டுகளாக இல்லற வாழ்க்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த அவர்களுக்கு, எல்லாச் செல்வமும் அந்த ஈசன் வாரி வாரி வழங்கிக்கொண்டு இருந்தான், குழந்தை செல்வத்தை தவிர. என்னதான் செல்வங்கள் இருந்து, சுகபோக வழக்கையை வாழ்ந்தாலும், குழந்தை செல்வம் இல்லை என்றால், வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை. இதனால் அவர்கள் மிகவும் மனமுடிந்து வேதனை அடைந்தனர். பொதுவாக பிள்ளைச் செல்வம் இல்லாதவர்கள் கடைப்பிடிக்கும் வழிகள் இரண்டு. முதலில் மருத்துவ யாத்திரை செல்வார்கள்(அதாவது ஒவொவொரு மருத்துவமனையாக ஏறி இறங்குவது) இரண்டாவது புனித யாத்திரை செல்வார்கள்(கோவில் கோவிலாக இறைவனை வழிபட்டு வருவது). இதில் திருவெண்காடரும், சிவகலையும் இரண்டாவது வழியைப் பின்பற்றினார்கள். ஆம், சிவஸ்தலங்களுக்கு, யாத்திரை போனார்கள். ஆனால் பயன் தான் ஒன்றும் இல்லை.

சிவஸ்தலங்களுக்கு யாத்திரை சென்றும், கருணை காட்டாத இறைவனை நினைத்து உறங்கிய திருவெண்காடருக்கு, ஒரு கனவு வந்தது. அதில், அவர் வீட்டு திண்ணையில், ஒரு வயோதிக பிரமாணரும், அவர் மனைவியும் உட்கார்ந்து இருக்கிறார்கள். திருவெண்காடர் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், எங்கள் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கையில் குழந்தை இல்லை. குழந்தை எங்கே என்று திருவெண்காடர் கேட்டதற்கு, திருவிடைமருதூரில் இருக்கிறது என்று கூறி அவர்கள் மறைந்து விட்டார்கள். திருவெண்காடருக்கும் கனவு கலைந்தது.

இந்த கனவில் வந்த மாதிரி, திருவிடைமருதூர் வரை போயி பார்ப்போமே என்று எண்ணி, மறு நாள் தன் மனைவியை அழைத்துக் கொண்டு திருவிடைமருதூருக்கு சென்றார். அங்கே, அவர் கனவில் கண்ட மாதிரி, ஒரு வயதான பிரமாணரும், அவர் மனைவியும் இருந்தார்கள், பக்கத்தில் ஒரு தொட்டிலில் அழகே உருவான ஒரு குழந்தை படுத்திருந்தது. அவர்களிடம் திருவெண்காடர் சென்றபோது, அந்த பிராமணர், ஐயா, நீங்கள் தான் திருவெண்காடாரா!! எங்களுக்கு நீண்ட நாள் கழித்து, இந்த குழந்தை பிறந்தது. ஆனால் எங்கள் வறுமையின் காரணமாக, இந்த குழந்தையை எப்படி வளர்க்க போகிறோம் என்று நினைத்து கவலைப் பட்டுக்கொண்டிருந்த பொழுது, இந்த குழந்தையை திருவெண்காடாரிடம் கொடுத்தால், எடைக்கு எடை பொன் கிடைக்கும் என்று ஒருவர் கனவில் கூறினார். அதன்படி நாங்களும் உங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தோம் என்று கூறினார். திருவெண்காடருக்கு இப்போது எல்லாம் புரிந்தது. இறைவன் நடத்திய அதிசயத்தை நினைத்து நினைத்து மனம் பூரித்துப் போனார். உடனே, அவர்களையும் அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டுக்கு வந்து, அக்குழந்தையை எடைக்கு எடை பொன் கொடுத்து தத்தெடுத்துக் கொண்டார். பிறகு, அக்குழந்தைக்கு மருதவாணன் என்று பெயர் சூட்டி, தாங்கள் பெற்றெடுத்த குழந்தை போல் வளர்த்து வந்தார்கள். அந்த குழந்தை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. 

தான் பாடிய தமிழால் தீயின் நாக்குகள் பற்றிப் பிடிக்க முடியாத வாழை மட்டையையே பற்ற வைத்தவர் பட்டினத்தார்..

சில அரைவேக்காடுகள். அறைகுறையாக பட்டினத்தார் போன்ற சித்தர்களின் ஒன்றிரண்டு பாடல்களை படித்து விட்டு. சித்தர் பாடல்கள் பெண்களை இழிவு படுத்துவதாக பேசுகிறார்கள். 

மன்னனான பத்திரகிரியை ஏமாற்றி அவர் மனைவி ஏமாந்த பொழுது அவர் பாடிய ஒரு கருத்து பாடலை வெய்த்து அவர் சொன்னகருத்தை வெய்த்து சில பரதேசிகள் பட்டிமன்றங்கள் நடத்தி வயிறு வளர்க்கிறார்கள். பெண்களை பேய் என்று சொன்ன சித்தர்களும் பித்தர்களே என்று ஒரு பித்தர் ஸிநிமா பாடல் கூட எழுதி இருக்கிறார். பெண்ணால் ஏமார்ந்த பத்திரகிரி பரதேசியாக மாற இக்கருத்து அந்த நேரம் தேவைப்பட்டது.

ஆனால் பெண் தாயாக மாறும்போது அவள் பெருக்கல் அடையாளமாக அன்பைப் பெருக்குகிறாள் என்று கண்ணீர் மல்கப் பாடி, பெண்மைக்கு பெருமை சேர்த்தார். தன் தாய் இறந்து கிடந்தபோது உருசியாய் உணவளித்த உன் வாய்க்கு அரிசியோ நான் இடுவேன் ஆத்தா என்று அழுது கதறுகிறார்.. யார் தவறு செய்தாலும் அது தவறு தான். அதில் மாற்று கருத்து இல்லை. சித்தர் ஆகட்டும், சிவனே ஆகட்டும். ஆனால் அறைகுறையாக தெரிந்து வெய்த்து கொண்டு இது போன்ற ஞானிகளை தவறுதலாக விமர்சனம் செய்தால். அது அவ்வாறு செய்பவர்களுக்கு தான் பாவம்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மருதவானன் வளர்கிறார். உண்மையில் அது மருதவானன் அல்ல. அந்த அம்பல வானனே என்பதை திருவென்காடர் அறியவில்லை. வியாபாரத்தின் அனைத்து நுணுக்கங்களையும், ரகசியங்களையும் மருதவானருக்கு திருவென்காடர் சொல்லி கொடுக்கிறார். மருதவானராகிய சிவனும் ஒன்றுமே தெரியாதவன் போல் அனைத்தையும் கற்று கொள்கிறார். பின்னர் தனது மகன் மீது கொஞ்சும் நம்பிக்கை வந்ததும் கடல் கடந்து வியாபாரம் செய்ய அனுப்பினார். வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான்; திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலை சுவடி, வரட்டி, தவிடு. ஒரு பெரிய பிஸ்நெஸ் magnet. அவருக்கு அதை பார்த்ததும் எப்படி இருக்கும். தனது மகனை கன்னாபின்னாவென்று திட்டினார். எனது வியாபார ரத்தம் உனது உடலில் ஓடவில்லை. எனக்கு பிறந்த மகனாக இருந்து இருந்தால் இப்படி செய்து இருக்க மாட்டான் என்று எவ்வளவு திட்டி, தீர்க்க முடியுமோ திட்டி தீர்த்தார். வரட்டிகளை வெளியே எறிய வரட்டிக்குள் வைரக்கற்கள் சிதறின. தவிடெல்லாம் தங்கமாக மின்ன திகைத்துப்போன திருவெண்காடர் தம் மகனைப் பாராட்டத் தேடுகையில் அவரோ அதற்க்குள் மறைந்து விட்டார். அந்த ஓலைசுவடியில் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது.

பட்டினத்தார் என்று அழைக்கப்படும் பட்டினத்து சுவாமிகளின் வாழ்க்கைப் பாதையினை ஒரேயடியாக மாற்றிப் போட்ட அற்புத வார்த்தை இது. வணிகர் குலத்தில் பிறந்து பெரும் செல்வந்தராய் வாழ்ந்து வந்த இவரை இல்வாழ்வைத் துறந்த மெய்ஞ்ஞானியாய் மாறச்செய்த அபூர்வ சக்தி கொண்ட வார்த்தை இது. அப்படி இந்த வார்த்தையில் என்ன தான் கூறப்பட்டுள்ளது? இந்த வார்த்தையில் உள்ள சொற்களை மாற்றாமல் அப்படியே எடுத்துக்கொண்டால் கீழ்க்காணும் பொருள் கிடைக்கும்.
"காது அறுந்துபோன தையல் ஊசி கூட ஒருவரின் மரணத்தறுவாயில் அவருடன் வராது"
இது உண்மைதான். எவ்வளவு பெரிய செல்வந்தர் ஆனாலும் அவர் இறந்தபின்னர் எதையும் தன்னுடன் கொண்டுசெல்ல முடியாது என்பது ஊரறிந்த உண்மை தானே. ஆனால் இப்போது சிக்கல் அப்பொருளில் இல்லை, அந்த வார்த்தையில் உள்ளது. ஏனென்றால், உலகமே அறிந்த இந்த உண்மையினை சிவபக்தர் ஆன பட்டினத்தார் அறிந்திருக்க மாட்டாரா?. திரைகடல் தாண்டிச் சென்று பொருளீட்டி வந்த அவரது மகன் மனைவியிடம் கொடுத்துவிட்டுச் சென்ற பேழைக்குள் ஒரு பனைஓலை இருந்தது என்றும் அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்த இந்த வார்த்தையினை படித்த பின்னரே அவர் துறவியாக மாறினார் என்றும் கூறுகிறது பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு. நிச்சயம் அந்த ஓலையில் முன்னர் கண்ட வார்த்தை எழுதப்பட்டிருக்காது. 

ஏனென்றால், ஊரே அறிந்த ஒரு உண்மையினை பனைஒலையில் கண்டுதான் பட்டினத்தார் ஞானம் பெறவேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. அதுமட்டுமின்றி எத்தனையோ நல்ல பொருட்கள் இருக்க மரணத்தறுவாயில் ஒருவர் ஏன் காதறுந்த ஊசியை உடன் கொண்டுசெல்ல வேண்டும்?. "ஒருவனது வாழ்நாள் முடிந்துவிட்டால் அவன் தன்னுடன் ஒரு ஊசியைக் கூட எடுத்துச் செல்லமுடியாது" என்னும் செய்தியைத் தெரிவிப்பதுதான் வார்த்தையின் நோக்கம் என்றால் வெறுமனே "ஊசி" என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம். "காதற்ற ஊசி" என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பனைஓலையில் எழுதப்பட்டிருந்த உண்மையான வார்த்தை இதுவல்ல என்பது தெளிவாகிறது.

அப்படி என்றால் அந்தப் பனைஓலையில் உண்மையில் எழுதப்பட்டிருந்த வார்த்தை என்ன?. 

காதற்ற ஊசி" என்னும் சொல்லுக்கு "பயனில்லாத ஊசி" என்பதே பொருள் ஆகும். தையல் ஊசிக்கு "காது" முழுமையாக மூடி இருந்தால் தான் அதைப் பயன்படுத்தி எதையும் தைக்கமுடியும். ஊசியின் காது அறுந்துவிட்டால் அதைவைத்துக் கொண்டு எதையும் தைக்க முடியாது. இதுதான் தையல் ஊசியின் தத்துவம்.

சரி, மரணத்தறுவாயில் உள்ள ஒருவனுக்கும் தையல் ஊசிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. தையல் ஊசியைக் கொண்டு அவனை எதைத் தைக்கச் சொல்கிறார்?. மகனாக வந்து அந்தப் பனைஓலையை பட்டினத்தாருக்குக் கொடுத்துவிட்டுச் சென்றது இறைவன் அல்லவா?. எனவே அந்த வார்த்தைக்குள் மிகப்பெரிய தத்துவத்தை மறைத்து வைத்துள்ளார்.

தையல் ஊசியாகவே இருந்தாலும் அதைப் பக்குவப்படுத்தி பாதுகாத்து வைத்திருந்தால்தான் தேவையான நேரத்தில் உதவியாய் இருக்கும் என்பதே பொதுவான பொருள் ஆகும். ஆன்மிகப் பார்வையில் இது உணர்த்தும் பொருள் வேறாகும். நமது உடல் என்னும் காற்றடைத்த பையினைத் தைக்க உதவும் ஊசி தான் அறிவு ஆகும். உடல் வலிமையாக உள்ளபோதே அறிவைப் பக்குவப்படுத்தி பாதுகாத்து வைக்கவேண்டும். தீய எண்ணங்களால் அறிவைத் துருப்பிடிக்க விட்டுவிட்டால் உடலில் இருந்து உயிர் பிரியும் நேரத்தில் அறிவினால் ஒரு பயனும் இல்லை. அறிவு துருப்பிடிக்காமல் நல்ல நிலையில் இருந்தால் உயிர் பிரிவதை தள்ளிப் போடவும் முடியும். இந்தக் கருத்தைத் தான் எல்லா சித்தர்களும் வலியுறுத்துகின்றனர். இந்தக் கருத்தைத் தான் இறைவனும் பட்டினத்தாருக்கு உணர்த்த விரும்பினார்.

இதை உணர்ந்ததால் தான் பட்டினத்தாரும் இல்வாழ்வைத் துறந்தார். ஏனென்றால் இல்வாழ்வில் இருக்கும்வரை ஆசை, பந்தம், சொந்தம் என்று பல்வேறு இடையூறுகளால் அறிவு துருப்பிடிக்கும் என்று நினைத்தார். துறவு ஒன்றே அறிவைப் பக்குவப்படுத்த ஒரே வழி என்றும் அதை வாழ்வின் கடைசி காலத்தில் இல்லாமல் இளமையிலேயே செய்யவேண்டும் என்றும் துணிந்து துறவு மேற்கொண்டார். இறுதியில் அவர் தனது எண்ணத்தில் வெற்றியும் பெற்று இறைவனடி சேர்ந்தார் என்பது அவரது வாழ்க்கை வரலாறு.

நீங்கள் இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். பட்டினத்தாரை பற்றி நன்கு தெரிந்த பெரும் பேச்சாளர்கள் யாரேனையும் பேச அழைத்தால் அவர்கள் அதற்க்கு பணம் லகரங்களில் கேட்பார்கள். அவர்கள் கேட்பதை கொடுத்தால் மூன்று மணி நேரம் இடை விடாது பேசி பட்டினத்தாரின் வாழ்க்கையையே நமது கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள். அதை கேட்கும் நமக்கு பணம் சம்பாதிப்பதில் சற்று அலுப்பு வந்து விடும். நம்ப போறப்ப என்ன? சார். எடுத்துண்டு போக போறோம். காயமே இது பொய்யடா இது வெறும் காற்றடைத்த பையடா என்று அவர்கள் பேசுவதை நினைத்து நாம் சிந்திக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் அந்த குறிப்பிட்ட பேச்சாளரோ தனக்கு பேசப்பட்ட ஒண்டரை லக்ஷத்தில் ஒரு ரூபாய் குறையாமல் தனது கைக்கு வந்தால் தான் காதற்ற ஊசியும் வாராது கான் கடைவழிக்கே என்று பேசவே வருவார். இதே போல் இதற்கு முன் ஒரு பழைய பேச்சாளர் ஆதி சங்கர பகவத் பாதாள் அவர்கள் அருளிய பஜ கோவிந்தம் பாடலில் அர்த்தம் அனர்த்தம் என்கிற இந்த இரு வார்த்தைகளை வெய்த்து ஒண்டரை மணி நேரம் பேசினார். அர்த்தம் என்னும் சொல்லிர்க்கு பொருள் [Meaning] பொருள் [பணம்] இரண்டு அர்த்தம் உண்டு. அர்த்தம் அனர்த்தம் என்றால். பணத்தால் ஒரு பயனும் இல்லை. அது வேஸ்ட் என்று அர்த்தம். இந்த இரு வார்த்தையை வெய்த்து ஒண்டரை மணி நேரம் அவர் பேசியதும். அதை கேட்ட ஒரு பெரிய கோடீஸ்வரர் தனது சொத்தில் ஒரு பாதியை அந்த பேச்சாளரின் அறகட்டளைக்கு எழுதி வெய்க்க முன் வந்தார். ஆனால் அந்த பேச்சாளரோ பணம் விசயத்தில் செம கறார். அவர் ஒரு வார்த்தை சொன்னால் ஆயிரம் பேர் பணத்தை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுவார்கள். ஆனால் அவர் தனது பையிலிருந்து நையா பைசா எடுக்க மாட்டார். அடியேன் குறிப்பிட்ட ஒன்று, இரண்டு பேரை மட்டும் இங்கு சொல்லவில்லை. பொதுவாக இன்றைய ஆன்மீக பேச்சாளர்கள் பலர் இன்று இப்டி தான் இருக்கிறார்கள்.

அது போன்ற பேச்சாளர்களையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் குடும்பத்தை யார்? காப்பாற்றுவது. ஒரு பைக், கார் இப்டி வீட்டில் உள்ள ஏதேனும் ஒன்றை எடுத்து கொண்டு அடியேன் சென்னையில் உள்ள ஜீவ சமாதிகளை பார்க்க போகிறேன் என்றால் பைக், கார் வாங்குவதில் இருந்து ஆரம்பித்து. அதற்க்கு தினசரி போடும் பெட்ரோல், டீஸல் வரை. ட்ரைன், பஸ் டிக்கெட். ஞானியர் கோவில்களுக்கு போகும் பொழுது வாங்கும் மாலை, ஊதுபத்தி. எதுவுமே இலவசமாக எனக்கு கிடைக்காது. அடியேன் உழைத்தால் தான் கிடைக்கும். எனக்கு மட்டுமா. உலகில் உள்ள அனைவருக்குமே.

சரி. இப்போ நீ என்ன தான் சொல்ல வர. என்று என்னை நீங்கள் கேட்பது புரிகிறது. அடியேன் ரொம்ப Practical லா. இன்றைய நடைமுறைக்கு எது ஒத்து வருமோ அதை பேசுகிறேன். பட்டினத்தார் என்று எடுத்து கொண்டால். அவர் என்ன சாதாரண பிறவியா. குபேரனின் அவதாரம். சிவ சகா என்று அவரை சொல்வார்கள். வெறும் பக்தன் அல்ல குபேரன். அதையும் தாண்டி அவர் சிவனின் நண்பர். நெருங்கிய நண்பர். குபேரன் மனிதனாக பிறந்து பிரும்மச்சரியம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சன்யாசம் ஆகிய நான்கையும் கடை பிடித்து பல சிவன் ஸ்தலங்களை தரிசிக்க வேண்டும் என்பது குபேரன் விருப்பம். அதை நிறைவேற்றவே சிவன் அவரை பிறக்க வெய்த்தார். தகுந்த நேரம் வந்ததும் அதை அவருக்கு ஞாபக படுத்தினார். தான் யார் என்பதை உணர்ந்ததால் தான் பட்டினத்தார் துறவியானாரே ஒழிய வெறும் காதற்ற ஊசியும் வாராதுக்கான் கடைவழிக்கே. என்கிற அந்த வாசகத்தை படித்து துறவியானார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே போல் ஆதி சங்கர பகவத் பாதாள் யார்? சாட்சாத் அந்த சிவனின் அவதாரம் என்று சொல்லப்படுபவர். அர்த்தம் அனர்த்தம் என்று பாடிய அதே சங்கரர் தான் ஒரு ஏழையின் வறுமையை போக்க கணகதாரா ஸ்தோத்திரம் சொல்லி தங்க நெல்லிக்காய் மழை பொழிய வெய்த்தார்.

ஆக நாம் ஒன்றும் கடவுள் அவதாரம் அல்ல. நம்மால் பணம் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது. ஆனால்? அந்த பணத்தை நியாயமான வழியில், முறையில் சம்பாதிக்க வேண்டும். சட்டத்தை ஏமாற்ற கூடாது. அந்த தவறு கூட மன்னிக்கப்படும். ஆனால் ஒருவர் வயிற்றில் அடித்து நாம் உண்ணும் உணவு. ஏழைகளின் வயிற்றெரிச்சலில் நாம் வாழும் குளு, குளு வாழ்க்கை போன்றவற்றிற்கு மன்னிப்பே கிடையாது.

வாழுங்கள், நன்றாக. பிறரையும் அதே போல் வாழ வெய்த்து வாழுங்கள்.

பணம் பற்றி ராமகிருஷ்ண பரம ஹம்சர் சொல்வது- கப்பலை சுற்றி நாலாபக்கமும் சூழ்ந்துள்ள கடல் நீர் அளவு கூட உன்னிடம் பணம் இருக்கலாம். ஆனால்? உன்னை சுற்றி உள்ள பணம் உன் மனதினுள் புகாமல் நீ பார்த்து கொள்ள வேண்டும். உன்னுள் பணம். அதாவது பணத்திமிர் புகுந்தால் ஓட்டை கப்பல் மூழ்குவதை போல் உன் வாழ்க்கைமூழ்கி விடும். என்ன? அழகான விளக்கம் பாருங்கள்.

துறவறம் பூண்ட பின் பட்டினத்தார் வீடு, வீடாக துறவர தர்மப்படி பிட்சை எடுத்து உண்டு வந்தார். தனது சொந்த ஊரிலேயே.ஒரு சிறு கற்ப்பனை. நாளையே அம்பானி. பட்டினத்தார் போல் அனைத்தையும் துறந்து துறவி ஆகி விடுகிறார் என்று வெய்த்து கொள்வோம். அவராது துறவி ஆவதாது. முகேஷ் அம்பானியா, அனில் அம்பானியா. அப்டினுலாம் கேட்க கூடாது. No cross question. சும்மா ஒரு உவமைக்கு தான். அப்டி அம்பானி துறவி ஆகி வீடு, வீடாக பிட்சை எடுத்து சாப்பிடுகிறார். அதுவும் அவர் இதற்கு முன் எந்த தெருவில் கோடீஸ்வரனாக இருந்தாரோ அதே தெருவில் அவர் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் பார்க்க ஒரு தம்மாதுண்டு நாலு முழம் துண்டை கட்டி கொண்டு பிட்சை எடுத்தால். அவர் நண்பர்கள் அதிலும் குறிப்பாக உறவினர்கள் எல்லாம் என்ன? நினைப்பார்கள்.

பட்டினத்தார் பணக்காரர் என்றால் சாதாரண பணக்காரர் இல்லை. அன்று சேர, சோழ, பாண்டிய என்று மற்ற மன்னர்களுக்கு இருந்த செல்வங்களை விட இவருக்கு அதிகம் இருந்ததாம். அதாவது அன்றைய உலக பணக்காரர்களில் No 1 ஆக இருந்தவர். அத்தகைய ஒருவர். வீதிக்கு வந்து பிட்சை எடுத்தால். அவரை சுற்றி இருப்போரின் மனநிலை எண்னவாக இருக்கும். அவரின் அக்காவோ. ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம்னு கப்பலில் வியாபாரம் பண்ண குடும்பம் நமது குடும்பம். இவனால் இன்று மானம் கப்பல் ஏறுகிறது. எந்த தெருவில் அரசனாக இருந்தானோ, அதே தெருவில் இன்று ஆண்டியாக இருக்கிறான். நம்மால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. இப்படி ஒரு தம்பி நமக்கு இருப்பதற்கு இல்லாமல் இருப்பதே மேல் என்று தனது சொந்த தம்பியையே விஷம் வெய்த்து பட்டினத்தாரின் அக்கா கொல்ல துணிந்தாள். தனது தம்பியின் உயிரை விட குடும்ப கௌரவமே முக்கியம் என்று நினைத்து பிட்சை இடும் பொழுது அப்பத்தில் விஷம் கலந்து கொடுத்தாள். தனது தம்பி இன்னமும் ஒரு சாதாரண மனிதன் என்று நினைத்தாள். மூன்றாம் கண்ணாகிய ஞான கண். தனது தம்பிக்கு வந்திருப்பதை அவள் அறியவில்லை. பட்டினத்தார் அந்த அப்பத்தை வாங்கி விச அப்பம் வீட்டை பொசுக்கட்டும் என்று அதை வீட்டின் கூரை மீது வீசி எறிய. அக்காள் வீடு தீ பற்றி எறிந்தது. பின்னர் பட்டினத்தாரின் அக்கா தனது தவறை உணர்ந்து திருந்தினாள். அவ்வாறு பட்டினத்தார் செய்தது. தனது அக்காக்கு. இப்பொழுது நான் சாதாரண மனிதன் அல்ல. அந்த ஈசன் கட்டளைக்கு இனங்க இப்பொழுது நான் துறவியாகி இருக்கிறேன். உண்மையில் நான் வேறு, ஈசன் வேறு அல்ல என்பதை உணர்த்தி திருத்துவதற்காக தான்.

பின்னர் அவர் தாய் காலம் ஆனார். சன்யாசிகள் தனது தாய், தந்தை யாராக இருந்தாலும் அவர்களை எரிப்பதோ, புதைப்பதோ செய்ய கூடாது. அது சன்யாச தர்மம். எப்பொழுது ஒருவர் காவி உடை அணிகிறாரோ அப்பொழுதே அந்த நபருக்கும் அவர் குடும்பத்திற்கும் உள்ள தொடர்பு அறுந்து விடுகிறது. ஆனால்? தாய்க்கும் மகனுக்கும் உள்ள தொடர்பை சன்யாசத்தாலும் துண்டிக்க முடியாது. ஒருவர் சன்யாசம் வாங்கிய பின் அந்த சன்யாசியை சன்யாசியின் தந்தை பார்க்க வந்தால் தந்தை தான் சன்யாசியின் காலில் விழ வேண்டும். அவ்வாறு அவர் விழாவிட்டால் அது தவறு அல்ல. ஆனால் அந்த சன்யாசி தனது தந்தையின் காலில் விழ கூடாது. ஆனால் அதே சன்யாசியை அவர் தாய் பார்க்க வந்தால் அந்த சன்யாசி தான் தாய் காலில் விழ வேண்டுமாம். தாய்க்கு தனது கையால் கொள்ளி வெய்த்தாலும் அது சன்யாச தர்மத்தை மீறுவதாகும். அதே சமயம். தாய்மை என்பது இந்த துறவறம், தான் வழிபடும் தெய்வம் அனைத்தை காட்டிலும் உயர்வானது. தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்ய வேண்டும், சன்யாச தர்மத்தை மீறவும் கூடாது. என்ன செய்வது என்று யோசித்தார். சித்தர் வேறு, சிவம் வேறா. இறைவனால் முடியாத ஒன்று என்று ஏதேனும் உள்ளதா. தனது தபோ வலிமையால் வாழை மட்டைகளை தனது தாய் உடல் மீது வெய்த்து வாழை மட்டைகளை பற்றி எறிய செய்து தனது தாய்க்கு செய்ய வேண்டியதை செய்கிறார். ருசியாய் உணவு அளித்த உன் வாய்க்கு அரிசியோ நான் இடுவேன் ஆத்தா என்று தேம்பி, தேம்பி அழுகிறார். அதன் பின்னர் அவர் பல சிவன் கோவில்களுக்கு பயணிக்கிறார். நாமும் அவரோடு பயணிப்போம்.

நாளை. வரப்பும், வம்பு பெண்ணும். சக்ரவர்த்தி துறவியானது முதலியவற்றை பார்ப்போம்.

No comments:

Post a Comment