siddhas

Friday, 30 January 2015

தேவி துர்கையே, ஜெய தேவி துர்கையே



துர்க்கை வழிபாட்டில் நவதுர்க்கை வழிபாடு பிரசித்தமானது. நவ துர்க்கைகளையும் வெவ்வேறு வடிவங்களில், பெயர்களில், குறிப்பிடுகிறார்கள்.

1]சைலபுத்ரி  
2]பிரம்மசாரிணி  
3]சந்திரகாந்தா 
4]கூஷ்மாண்டா 
5] ஸ்கந்தமாதா  
6] காத்யாயனி  
7]காளராத்திரி 
8]மஹாகௌரி 
9] சித்திதாத்ரி,

 என்ற நவ வடிவங்களாகவும் 

1]வனதுர்கை 
2]சூலினி துர்கை  
3]ஜாதவேதோ துர்கை 
4]சாந்தி துர்கை  
5]சபரி துர்கை  
6] ஜ்வாலா துர்கை 
7] லவண துர்கை  
8] தீப துர்கை  
9] ஆசுரி துர்கை 

 என்று மற்றொரு வகை நவ வடிவங்களாகவும், நவதுர்கா தேவியர் அறியப்படுகிறார்கள். 

 
நவ துர்கைகளும் ஒன்றிணைந்த மஹா துர்கையாக பட்டீஸ்வரத்திலே எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ துர்கை காட்சியளிக்கிறாள். அதே போல் நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேவி துர்க்கை எட்டு கரங்களுடன், எட்டு அடி உயரத்தில், ரத, கஜ, துரக பதாதிகள் சூழ, ராஜ கம்பீரத்துடன் காட்சியளிக்கிறாள். தொடர்ந்து 9 வெள்ளி அல்லது ஞாயிறு மாலையிலே, மாலை சூடி. பூமாலை முடிந்தால் சூடலாம், இல்லை பாமாலை சூடலாம். வழிபாடு செய்தால் நமது துன்பங்கள் அனைத்தும் துர்க்கை அருளால் தூள், தூளாக ஆகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. உண்மையும் கூட. 

 சுமார் 55 வருடங்களுக்கு முன். குளக்கரையில்   ஒரு கல்லிலே,  மக்கள் துணி தோய்த்து கொண்டிருந்தார்கள். 


 

அப்பொழுது அந்த இடத்திற்கு ஒரு மிக பெரிய ஞானி வந்தார். அதை கண்டு அதிர்ந்தார். இது துணி தோய்க்கும் கல் அல்ல, அர்த்தநாரீஸ்வர லிங்கம். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, அதீத சக்தி உடைய மூர்த்தம் இவர். 

 ஒரு காலத்தில் இந்த நங்கைநல்லூர் தர்பை காடாக இருந்தது. பிருங்கி முனிவர் முதலான பல முனிவர்கள் வழிபட்ட பதி இது. இவருக்கு உடனடியாக ஒரு ஆலயத்தை எழுப்புங்கள். அதன் பின் நங்கை வாழ் மக்கள் இல்லங்களில் மங்கை மஹா லக்ஷ்மி நிரந்தர வாசம் செய்வாள் என்றார். அந்த ஞானி தான் மஹா பெரியவர். 


 அவரின் ஆணையை ஏற்று 1965 இல் இந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் 

 மத்தளம் கொட்டிட
 மணி சங்கு முழங்கிட
 மணி வீணை இசைத்திட 



 கும்பாபிஷேகம் செய்யப்பட்டு எழுப்பப்பட்டது.  அர்த்தநாரீஸ்வரர் இங்கு எழுந்தருளிய பின் முப்பத்தி முர்கோடி தேவர்கள் முதல் அனைத்து தெய்வங்களும் வாசம் செய்யும் பதியாக நங்கநல்லூர் விளங்குகிறது. 1970 இல் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் அதன் பின்னர் குருவாயூரப்பன் கோவில், வரசித்தி விநாயகர் கோவில், ஹயக்ரீவர் கோவில், தேவி கருமாரி அம்மன் கோவில், 32 அடி ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் கோவில், இரண்டு ஷீரடி பாபா கோவில்கள் என்று, இன்று நங்கநல்லூர்ரில் திரும்பிய பக்கம் எங்கும் கோவில்கள். 

 இன்று நங்கநல்லூர்ரில் மக்கள் வாழ்க்கை தரம் நன்கு ஏறி இருக்கிறது. அதை விட, க்ரௌன்ட் விலை இன்னும் நன்றாகவே ஏறி இருக்கிறது. 

No comments:

Post a Comment