siddhas

Thursday, 22 January 2015

மனதிற்க்குள் பூஜை .




16] ஞானியர் கோவில்கள்

மிக பழமையான, புராதன மற்றும் சரித்திர சிறப்புகள் உடைய, கைலைக்கு இணையான மயிலை பதியில் உள்ள, சித்தர்கள் கோவில்களை நாம் பார்க்க போகிறோம். 

 அமைதியின் சின்னமாக புறா கூறப்படுவது போல், ஞானத்தின் சின்னமாக மயில்  கூறப்படுகிறது. 

 சரஸ்வதி படங்களில்  மயில்

இல்லாமல் இருக்காது. 

 ஞான பண்டித்தனான முருக பெருமானின் வாகனமும் மயில், 

 

சாரதியாக  வந்து அர்ஜூனனுக்கு ட்ரைவிங்க் ஃபோர்ஸ் ஆக இருந்து ஞானம் ஊட்டிய கண்ணன்  தலையில்  மயில் தோகை சூடினார். 

 அதனால் தான் என்னவோ. மயில் இறகை புத்தகத்தில் வெய்த்தால் படிப்பு வரும் என்னும் நம்பிக்கை அன்று இருந்து இருக்கிறது. ஞானாம்பிகையாகிய அம்பிகை மயிலையிலே மயில் உருவில் ஈசனை வழிபட்டாள். 

 ஒரு கலைங்கருக்கு மிக பெரிய அளவில் ஞானம் புகழ் இருக்க வேண்டுமென்றால். அவர் ஜாதகத்தில் சுக்ரன் வலுவாக இருக்க வேண்டும். 

   செத்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை சுக்க்ராச்சாரியார் பல வருடங்கள் தவமிருந்து  சிவனிடமிருந்து பெற்றார். 

 
அதன் பிறகு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த யுத்தங்களின் பொழுது சுக்க்ராச்சாரியார் இறந்த அசுரர்களை எல்லாம் சஞ்சீவினி மந்திரம் மூலம்  உயிர்ப்பித்தார். அதனால் கலக்கம் அடைந்த தேவர்கள் தேவ குருவாகிய பிரகஸ்பதியிடம் முறையிட, தேவ குரு தனது மகனை சுக்க்ராச்சாரியாரின் குரு குலத்தில் போய் சீடனாக சேர்ந்து, அவர் மனத்தில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்து அந்த மந்திரத்தை கற்று வருமாறு அனுப்பினார். பிரகஸ்பதியின் மகனும் அவ்வாறே தந்திரமாக அந்த மந்திரத்தை சுக்க்ராச்சாரியாரிடம் இருந்து கற்று தேவ லோகம் திரும்பினார். இது ஒரு பெரிய கதை. இதை இன்னொரு நாள் பார்ப்போம். 

 மயிலை சுக்க்ராச்சாரியார் வழிபட்ட ஸ்தலம். அதனால் தான் என்னவோ, இயல், இசை, நாடகம் என்று முத்துறையை சேர்ந்த பல வித்தகர்களின் வேடாந்தாகலாக மயிலை பதி  இருக்கிறது. 

 மயிலையும் சுக்கிர ஷேத்திரம் தான். கஞ்சணூர், மயிலை இரண்டு ஸ்தலங்களிலுமே அம்பாள் பெயர் கற்ப்பகாம்பாள். 

 
ஞான சம்பந்தர், ஏழு வயதில் பாம்பு கடித்து இறந்த பூம்பாவையை ஐந்து வருடங்கள் கழித்து 12 வயது பெண்ணாக உயிர்பித்த அதிசயத்தை சுக்ரன் வழிபட்ட இந்த ஸ்தலத்தில் செய்துள்ளார். சிவநேசன் செட்டியார் என்னும் சிவன் அடியார் தனது மகளை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று அவளது மிக சிறு வயதிலேயே முடிவு செய்கிறார். ஆனால் அவளோ. பாம்பு கடித்து இறந்து விடுகிறாள். பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து சம்பந்தர் மயிலை வரும் பொழுது கையிலே ஹஸ்த்தி குடத்தோடு சம்பந்தரை சந்தித்து, குடம், குடமாக அழுகிறார். சம்பந்தர். மட்டிட்ட புன்னையும் என்று தொடங்கும் பூம்பாவை பதிகம் பாட குடம் உடைந்து சாம்பலிற்க்கு நாடி, நிரம்பு, சதை, எலும்பு, ரத்தம், புத்தி அனைத்தும் கிடைக்கிறது. 

 அதன் பின்னர் சிவநேசன் தனது பல வருட ஆசையை சம்பந்தரிடம் சொல்கிறார். சம்பந்தரோ, இவளுக்கு நான் மறுபிறவி கொடுத்ததால், நான் இவள் தந்தை ஆகிறேன். அதனால் இவளை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி மறுத்து விடுகிறார். 

 இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மயிலையில் அவதரித்தவர் தான் வாயிலார் நாயனார். 

 
இவர் மனதிலேயே சிவனுக்கு சோடச உபச்சாரம் எனப்படும் 16 வித உபசாரங்கள் செய்து, பல நூறு மலர்களால் ஈசனை அர்ச்சித்து, பால், தேன், பன்னீர் முதல் பல அபிஷேகங்கள் செய்து  63 நாயன்மார்களில் ஒருவராக ஆனவர். இவர் சந்நிதியை நாம் மயிலையில் தரிசிக்கலாம். இதே போல் காஞ்சியில் அவதரித்த பூசலார் நாயினார், ஈசனுக்கு மனதினில் கோவில் கட்டினார். 

 உண்மையான, ஆத்மார்த்தமான, ஆழமான பக்தியையே கடவுள் விரும்புவார். அதோடு செல்வமும் சேர்ந்தால் சிறந்தது தான். ஆனால் ஆத்ம உணர்வு இல்லாத வெறும் பகட்டு மட்டுமே உடைய பக்தியை இறைவன் ஏற்பதில்லை. ஆனால் செல்வம் இல்லாத ஆத்மார்த்தமான பக்தி. இறைவனால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்க படுகிறது. 

  வாயிலார் நாயனார் திருவடிகளே சரணம். 

   ஞான தேடல் தொடரும். u

No comments:

Post a Comment