siddhas

Tuesday, 20 January 2015

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்




7] ஞானியர் கோவில்கள்



சட்டி சித்தர்’ என்று அழைக்கப்பட்ட ஸ்ரீமௌனகுரு கண்ணப்ப சுவாமிகளை பற்றி இன்று நாம் பார்க்க போகிறோம்.


சட்டி சித்தரின் இயற்பெயர், ஊர் பற்றி எந்தத் தகவலும் இல்லை. தாங்கும் பாத்திரத்தின் வடிவத்தை ஏற்கும் தண்ணீரைப் போல, அந்த ரூப அடையாளங்கள் தற்காலிகமானது என்ற உண்மையை சுத்த ஆன்மாக்கள் சுவீகரித்துக் கொள்கின்றன. திருவொற்றியூர் கடற்கரையில் திசைகளையே ஆடையாகப் போர்த்திக்கொண்ட இந்த சித்தர், நிர்வாணமாகவே சென்னை முழுவதும் சுற்றியபடியே காவாங்கரை வந்திருக்கிறார். எப்போதும் அவர் கையில் ஒரு சட்டியை வைத்து இருப்பாராம், மணிமேகலையிடம் இருந்த அட்சய பாத்திரம்போல. அதில் தானம் வாங்கிய உணவை, தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் எடுத்து கொடுத்தபடியே இருப்பாராம். சட்டிசித்தர், கண்ணப்ப சுவாமி என்று அவரவர் விருப்பம்போல அழைக்கலாயினர். மௌன குரு என்றும் அழைக்கப்பட்டார் கண்ணப்ப சுவாமிகள்.


“சிறிய உண்மைகள், தெளிவான சொற்களைக் கொண்டுள்ளன. பேருண்மையோ சொற்களற்ற அமைதியைக் கொண்டிருக்கிறது” என்பார் தாகூர். அந்த பேருண்மையான மெய்யுணர்வு மௌனத்துக்கு, தமிழ் சித்தர்கள் வழங்கிய பெயர் தான் சும்மா. ‘சும்மாயிருப்பதே சுகம்.’ அப்படியே மௌனமாய் - சும்மாயிருந்த சுவாமிகள், பக்தர்கள் குறையென்று தன்னிடம் முறையிடும் போது மட்டும் பேசி வரம்போல வார்த்தைகளை வழங்கியிருக்கிறார்.
சித்தத் தன்மையில் இருப்போர் பேசும்போது, ஒருமையில் உரிமையோடு பேசுவார்கள். இவர் ஒருபடி மேலே போய், பக்தர்களை ‘நைனா’ என்றுதான் கூப்பிடுவாராம். சட்டி சித்தரின் சித்து லீலைகளின் பட்டியல் மிக நீண்டது.


நகை செய்ய தன்னிடம் கொடுத்த பணத்தை, வறுமையில் செலவு செய்து விட்ட ஒரு ஆசாரி, அதை திருப்பி தர முடியாமல் மானம் போய்விடுமே, என்று அஞ்சி தற்கொலைக்கு முடிவெடுத்து, கடைசியாக ஒருமுறை கண்ணப்ப சுவாமிகளை அழுதபடி பார்க்க வந்தபோது, “தப்புதான் நைனா... தப்புன்னு தெரிஞ்சி அழுதா, அது தப்பு இல்ல நைனா. இனி தப்பு இல்லாம பொழச்சுக்கோ நைனா” என்று சொல்லி கூழாங்கல் ஒன்றை அவரிடம் கொடுத்துள்ளார். அது தங்கமாக மாறியிருந்ததாம்.
இப்படி எண்ணற்ற லீலைகளைப் புரிந்த சுவாமிகளை . ஜாதி, மத பேதம் இன்றி பலர் பார்க்க வந்தனர். அவர் அனைவரையும் சமமாகவே நடத்தினார். . ஒரு கசப்பான உண்மை உலகில் ஆஸ்திகவாதிகளும், நாஸ்திகாவாதிகளும் ஒருவருக்கொருவர் மோதி கொண்டு உயிரை விடுவதில்லை. சில நாடுகளில் நாஸ்திகாவாதிகள் மரண தண்டனையின் மூலம் ஆஸ்திகவாதிகளால் கொல்லப்பட்டது, கொல்லப்படுவது இரண்டும் நடந்து, நடந்து கொண்டு இருக்கிறது.. கடவுளை உணராத அரவேக்காடுகள் தான் சார்ந்த மத நூலும், மதமும் மட்டும் இந்த உலகில் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். பிற மதத்தை சேர்ந்த ஒரு அப்பாவியை தனது மதத்தை சேர்ந்த ஒருவன் கொன்றால் கொன்னவனுக்கு கோல்ட் மெடல் தர வேண்டும் என்று சொல்வார்கள். சில மதவாதிகளின் தொல்லை இவருக்கு இருந்ததாம். எப்பொழுதுமே மித வாதிகளுக்கு மத வாதிகளின் தொல்லை இருக்கும். அவரை தீர்த்துக்கட்ட ஒரு க்ரூப் முயற்சித்த பொழுது சட்டியில் தலையும் மற்ற தன் உடல் பாகங்கள் துண்டுதுண்டாக சிதறிக் கிடக்கும்படி மாற்றிக் கிடக்கும் நவ கண்ட யோகம் கண்டு அலறி ஓடினார்களாம். ஏற்கனவே சென்ற  பாடகச்சேரி ஸ்வாமிகளை பற்றி பார்தத பொழுது அவர் பட்டம் என்கிற ஊரில் மாடு மேய்த்து கொண்டிருந்த பொழுது தனிமையில் நவ கண்ட யோகம் செய்தார். அதை பார்தத மாட்டின் உரிமையாளர் ஊரார்க்கு தெரியப்படுத்தினார் என்று பார்த்தோம் அல்லவா. நவ கண்டம் என்றால் என்ன?.


உடலில் உள்ள ஒன்பது துவாரங்கள் [ஓட்டைகள்] இரண்டு கண்கள், காதுகள், மூக்கு துவாரங்கள் மற்றும் நமது உடலில் உள்ள கழிவுகள் வெளியேற என்று முன்னும், பின்னும் இருக்கும் துவாரங்கள் 3.= 9. இந்த தியானம் செய்யும் பொழுது அவை தனி, தனியாக சிதறும். தியானம் முடித்ததும் மீண்டும் ஒன்று சேரும். இந்த ஒன்பது துவாரங்களை தான் அவ்வை பிராட்‌டி தனது விநாயகர் அகவலில் ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புல கதவை அடைப்பதும் காட்டி என்று குறிப்பிட்டு உள்ளார்.
1961ஆம் ஆண்டு இவர் ஊரார் அனைவரையும் அழைத்து ஒரு செய்தியை சொன்னார். அதை கேட்டு ஊர் மக்கள் அனைவரும் அதிர்ந்தனர். அவர் என்ன? சொன்னார். மற்றும் இவர் அதிஷ்டானத்தில் காஞ்சி பெரியவர் ஒரு மாற்றம் செய்தார். அது என்ன?.



No comments:

Post a Comment