11] ஞானியர் கோவில்கள்
என் தந்தையினுடைய நண்பர் திரு ராஜன் அவர்களை சென்ற மாதம் அக்டோபர் 29இல் சந்தித்தேன். அதற்க்கு ஒரு நாள் முன் தான். திருவொற்றியூரில் உள்ள வீர ராகவ சித்தரை தரிசனம் செய்தேன். ராஜன் அய்யா அவர்கள் சித்தர்கள் தேடலில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர் ஆதலால். என் தந்தை அவரிடம் எனது சித்தர்கள் அதிஸ்டானம் குறித்த தேடல் பற்றி சொன்னார். அவர் என்னிடம். இதுவரை நீ எந்த, எந்த சித்தர்கள் கோவில்களை தரிசித்து இருக்கிறாய் என்று கேட்டார். விபூதி பாபாவில் ஆரம்பித்து வீர ராகவ சித்தர் வரை. அடியேன் தரிசித்த சித்தர் ஆலயங்களை அவரிடம் சொன்னேன். மேலும் அவரிடம். உங்களுக்கு தெரிந்த சித்தர்கள் ஆலயங்கள் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர். google தேடலில் கூட கிடைக்காத சில சித்தர்கள் கோவில்கள் பற்றி சொன்னார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்றால். அத்திபட்டு புதுநகரில் உள்ள சுயம்பு சித்தர் பீடம். இன்று மீண்டும் அவரை சந்தித்து. அது சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரித்தேன். சென்னை பாண்டி பஜார்ரில் உள்ள ரத்னா ஃபேன் ஹௌஸ் AC டிபார்ட்மென்ட்டில். ஒரு இளைங்கனுக்கு உரிய மிடுக்கோடு அமர்ந்து சுறு, சுருப்பாக வேலை செய்து கொண்டிருந்தார். 70திலும் இளமை. 20லும் முதுமை. இரண்டு உதாரணங்களையும் பார்த்து இருக்கிறேன். முதுமை என்பது வயதில் இல்லை. மனத்தில் இருக்கிறது. அந்த 70 வயது இளைங்கரை சந்தித்து விட்டு அங்கிருந்து. சென்னை ஸென்ட்ரல் சென்றேன்.
சென்னை ஸென்ட்ரல்லில் இருந்து கும்முடிப்பூண்டி வரை செல்லும் ரயிலில் ஏறினால் எண்ணூர்க்கு அடுத்து அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் வரும். இன்டீரியர் நார்த் சென்னையில் ரயில் பயணம் செய்தது இன்று தான். அங்கு ட்ரைன் ஸர்விஸ் வெறி, வெறி புவர். எக்மோர்ரில் ஒன்பது மணிக்கு நீங்கள் ரயில் ஏறினால். 9 12க்குள் திநகர் வந்துடுவீங்க. பத்து கிலோ மீட்டர்க்கு அதிக பக்சம் வெறும் 12 நிமிடம் ஆகும். ஆனால் இன்டீரியர் நார்த் சென்னையிலோ. ஸென்ட்ரல்லில் இருந்து. பேஸிந் ப்ரிட்ஜ்க்கு ரயில் வரவே 10 நிமிடங்கள். அங்கு, அங்கு சிக்னல் கிடைக்கவில்லை என்று ரயிலை வேறு அப்பப்ப நிப்பாட்டிடறாங்க. இன்று எண்ணூரில் இருந்து அத்திபட்டு புதுநகர்க்கு இடையில். 35 நிமிடங்கள் ரயிலை நிறுத்தி விட்டார்கள். ட்ராக் வேலை வேறு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. டிராப்பிக் ஜாம் எவ்ளவோ மேல் எனும் அளவு இன்று நொந்து நூடில்ஸ் ஆய்ட்டேன். அந்த கவலை, சோர்வு, டென்சன் எல்லாம் சித்தர் கோவிலை தரிசிக்கும் வரை தான். தரிசித்த பின். அவை எல்லாம் எங்கே போனது என்று தேடி பார்த்தேன். இதுவரை கிடைக்கவில்லை.
இந்த சித்தர் பீடம் இதுவரை அடியேன் பார்த்ததை போல் அல்லாமல் சற்று ஸம்திங் ஸ்பெஸல். இது எத்தினை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது யாருக்கும் தெரியவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த சித்தர் ஆலயம் இருக்கிறது. அங்கு அடியேன் முதலில் கண்டது யாரை தெரியுமா. வாரியாரை. வாரியார் போட்டோவா. இல்லை,. திரு உருவ சிலையா என்று நீங்கள் நினைத்தால் இரண்டுமே இல்லை. நிஜ வாரியாரை. உங்களில் பலருக்கு இவர் தெரிந்தவர் தான். வாரியாரை வீடியோ, போட்டோ, ஸிநிமாவில் கூட பார்த்து இருக்கிறோம். ஆனால் நேரில் பார்க்க முடியவில்லையே. அவர் வாழ்ந்த காலத்தில் நாம் இல்லாமல் போய் விட்டோமே என்று எங்கும் என்னை போல் ஒருவராக நீங்கள் இருந்தால். உங்கள் மனக்குறை நிச்சயம் அவரை பார்தத அந்த நொடியே தீர்ந்து விடும்.
வாரியார் போன்றே அச்சு, அசல் இருக்கும் திரு வேணுகோபாலன் அவர்கள். வாரியாரின் மருமான் மற்றும் சீடர். உண்மையான வாரியார் வாரிசு. வாரியார் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு பலமுறை வரும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. அவரை நேரில் பார்க்க முடியவில்லை என்னும் குறை அவர் போலவே உள்ள இவரை பார்த்ததில் தீர்ந்தது.
இந்த சுயம்பு சித்தர் பீடம் பற்றி இதை முதலில் எனக்கு தெரியப்படுத்திய திரு ராஜன் அவர்கள் மற்றும் வேணுகோபாலன் அய்யா. இருவரும் கூறிய தகவல்களை சுருக்கமாக பார்ப்போம்.
தூத்துக்குடியை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் செல்வராஜ் அவர்கள் பிறவிலேயே ஒரு நாஸ்திகர். அவர் தனது உப்பளம் இடத்தை பார்வையிட வந்த பொழுது. முற்பிறவி பயன் காரணமாக ஒரு சித்தர் வலிய வந்து இவரை சந்தித்தார். சதீஷ் வாழ்வில் அடுத்து நடக்க போகும் சில நிகழ்வுகளை சொன்னார். ஆனால் செல்வராஜ் அவர்கள் எனக்கு சாமி, சாமியார் ரெண்டுமே பிடிக்காது என்று சொல்லி அவ்விடம் விட்டு நகர்ந்தார். நீயே என்னை தேடி வருவாய் என்று சொல்லி அந்த சித்தர் சென்றார். பின்னர் அந்த சித்தர் சொன்ன அனைத்தும் செல்வராஜ் வாழ்வில் நடந்தது. அவருக்கு ஆச்சர்யம், பயம் இரண்டும் வந்தது. பின்னர். செல்வராஜ் அந்த சித்தர்ரை பல இடங்களில் தேடி அவர் கிடைக்கவில்லை. அந்த நிலையில் அவரின் சீடர் ஒருவர் மூலம் அவர் ஜீவ சமாதி அடைய போவதும், அவர் அடையும் இடம் பற்றியும் தகவல் வர. அந்த இடம் விரைந்து சென்றார். அவர் மலர் அடிகளில் பணிந்து மன்னிப்பு கேட்டார். அந்த சித்தர். முற்பிறவி பயன் காரணமாக இப்பிறவியில் நீ செய்ய வேண்டிய தொண்டுகள் பல இருக்கிறது என்று சொல்லி இந்த சுயம்பு சித்தர் பீடம் பற்றி தெரியப்படுத்தி பின் சமாதி அடைந்தார். அந்த சித்தர் தான் சாக்கு சித்தர்.
பின் செல்வராஜ் அவர்கள் அத்திபட்டு புதுநகர் வந்தார். ஒரு பாம்பு இந்த சுயம்பு சித்தர் இருக்கும் இடத்தை காட்டியது. அந்த பாம்பு பூமியில் ஒரு இடத்தில் ஓங்கி மூன்று முறை அடித்து பின் நகர்ந்தது. அவ்விடத்தில் தோண்ட. தண்டம், கமண்டலம், பாதுகை என்று அந்த சுயம்பு சித்தர் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்தது. மற்றும் அந்த சித்தர் சுயம்பு சித்தர் கல்லாக வெளிப்பட்டார். பின்னர் செல்வராஜ் அவர்கள் அங்கு கோவில் எழுப்பினார். இவை நடந்தது 30 வருடங்களுக்கு முன். இந்த சித்தர் நான்கு யுகங்களை கண்டவர். இங்கு உள்ள பொருட்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதால் அறநிலைய துறை வசம் இப்பொழுது இவ்விடம் உள்ளது.
இந்த சித்தர் பீடம் போகர், கோரக்கர் போல் மிக பழமையான சித்தர் பீடம். மிக அதீத சக்தி வாய்ந்த ரிஷி மற்றும் சித்தர் இவர். இதை அடியேன் சொல்வதை விட நீங்களே நேரில் சென்று அதிர்வலையோடு உணர்ந்து பாருங்கள். 116 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் திருவேற்காட்டை சேர்ந்த அய்யப்ப சுவாமிகள் இவ்விடம் நேரம் கிடைக்கும் பொழுது வந்து தியானம், பூஜை செய்து விட்டு செல்வார்.
எவ்வாறு செல்வது- ரயில் மூலம் என்றால் சென்ட்ரலில் இருந்து கும்முடிப்பூண்டி செல்லும் ட்ரைன்னில் எண்ணூர்க்கு அடுத்து வரும் அத்திபட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் இறங்குங்கள். அத்திபட்டு புதுநகர், அத்திபட்டு என்று இரண்டு ஸ்டேசன் இருக்கு. நீங்கள் இறங்க வேண்டியது அத்திபட்டு புதுநகர். இறங்கியவுடன் முத்தாலம்மன் கோவில் எவ்வாறு செல்வது என்று கேளுங்கள். இந்த அம்மனும் சுயம்பு. நீங்கள் சுயம்பு சித்தர் பீடம் என்று கேட்டீர்கள் என்றால் வழி சொல்பவர்கள் குழம்பி கேட்கும் உங்களை அதை விட குழப்பி விடுவார்கள். பைக், காரில் செல்பவர்களும் அவ்வாறே கேளுங்கள். வாகனங்களில் செல்பவர்கள் எண்ணூர் வரை சென்று அங்கு புதுநகர் முத்தாலம்மன் கோவில் செல்ல வழி கேளுங்கள். பஸ் எண்ணூர் அனல் மின் நிலையம் வரை தான் செல்லும்.
இது சற்று தொலைவில். ஊருக்கு ஒதுக்குப்புறமான, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருப்பதால் செல்லும் முன் சம்பந்தபபட்டவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு. இந்த நேரத்திற்கு வருகிறோம் என்று தகவல் கொடுத்து செல்வது சிறந்தது.
அவ்விடத்தில் இப்பொழுது இருக்கும் வேணுகோபாலன், வாட்ச்மேன் முனுசாமி இருவர் என்னையும் தருகிறேன். வேணுகோபாலன் அவர்கள் ஆன்மீகம் சம்பந்தமாக பேசுவது, எழுதுவதில் கொஞ்சும் பிஸீயானவர். சில நேரம் அங்கு இருப்பார், சில நேரம் இருக்க மாட்டார். முனுசாமி. அந்த ஊர் வாசி. 24 மணி நேரமும் அவர் அங்கு தான் இருப்பார் என்பதால். அவரை முதலில் தொடர்பு கொள்ளுதல் நன்று.
Venugopalan Sir- 8056071031
Munusamy- 9943460643
No comments:
Post a Comment