siddhas

Wednesday, 21 January 2015

மஹா பெரியவாள் என் வாழ்வில் செய்த மஹா அற்புதம்


காஞ்சி மஹா பெரியவாள் சத்தமே இல்லாது பல அற்புதங்கள், அதிசயங்கள் ஆகியவற்றை செய்து இருக்கிறார். தனது சக்தியை அவர் எப்பொழுது வெளிப்படுத்த வேண்டுமோ அப்பொழுது வெளி படுத்துவார். உதாரணத்திற்கு ஒரு புகழ் பெற்ற துறவி ஒருவர் இவர் பாத யாத்திரை செய்யும் பொழுது எதிரில் காரில் வந்தார். காரிலிருந்து இறங்கி பெரியவாள் முன் கையை சுத்தி என்ன, என்னலாமோ செய்தார். பெரியவாள் பின்னால் இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். பெரியவாள் அதை பார்த்து. நீ என்ன பண்றனு கேட்டார். இல்லை. என் மந்திர சக்தியால் உங்களுக்கு ஒரு மாலை வர வெய்த்து அதை போடலாம்னு பார்த்தேன். பெரியவாள் ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தவாறே. உன் மந்திர சக்தி என் முன்னால் எடுபடாது என்றாராம். பின்னர் அந்த துறவி பெரியவாளிடம் ஆசி வாங்கி அவர் காரில் ஏற பெரியவாள் தனது பயணத்தை தொடர்ந்தார்.
இதே போல் அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்ற ஒருவர் பெரியவாளை சந்தித்து என்னால் வானில் பறவை போல் பறக்க முடியும், நடுக்கடலில் நடக்க முடியும், நெருப்பினில் என்னால் குளிக்கவும் முடியும். நினைத்த உருவத்தை என்னால் எடுக்கவும் முடியும். நான் வேனால் இப்பவே ஒரு குரங்காய் மாறி காட்டட்டுமா அப்டினு பெரியவாளை பார்த்து அந்த நபர் கேட்டாராம். பெரியவாள் நீ அதுக்குதான் லாய்க்கி என்று சொல்லி உள்ளே சென்று விட்டாராம். பின்னர் அந்த நபர் தனது தவறை உணர்ந்து பெரியவளிடம் மன்னிப்பு கேட்க்க நினைத்தார். முதலில் அந்த நபரை பெரியவாள் அனுமதிக்கவில்லை. ஒருநாள் முழுக்க அவர் வெளியிலேயே காத்து இருக்க அதன்பிறகு மனமிறங்கி அவரை பெரியவாள் பார்க்க அனுமதித்தார்.
எட்டு சித்திகளால் சித்தம் கலங்கிய அந்த சாதககரிடம் பெரியவாள் அறிவுரை கூறினார். இந்த சித்திகள் என்ன சர்வ சாதாரணமாக கிடைத்து விடுமா. உன்னால் எதுவெல்லாம் முடியுமோ அது என்னாலும் முடியும். ஆனால்? இந்த சக்திகள் எல்லாம் கிடைத்து விட்டால் நீ கடவுளாக ஆகி விட முடியுமா? ஐம்புலன்கள், மற்றும் உன் மனம் ஆகிய ஆறுக்கும் நீ அடிமையகாமல் அதை உனக்கு அடிமையாக்கி, கட்டு படுத்தியதால் தான் உனக்கு இந்த எட்டு கிடைத்து உள்ளது. ஆனால் இப்பொழுது நீ இந்த எட்டு சக்திகளுக்கு அடிமையாக இருக்கிறாய். ஆணவத்தால் இறைவனை கை தொழவே மறந்து விட்டாய். அந்த கடவுள் மனது வெய்த்தால் ஏன். நான் நினைத்தாலே உனது சக்திகளை ஒரு நொடியில் பறிக்க முடியும். பரிணாம வளர்ச்சியில் நாம் குரங்கிலிருந்து மனிதன் ஆனோம். ஆனால் நீ மீண்டும் குரங்காக ஆக முயற்ச்சி செய்கிறாய். இது அறிவுள்ள ஒருவன் செய்யும் செயலா என்று நபரை கேட்க்க அந்த நபர் தனது தவறுகளை உணர்ந்தவராய். ஆணவம் முழுவதும் அழிந்தவராய் பெரியவாளின் மலர் அடியை பணிந்தார். 

 பெரியவாள் என் வாழ்வில் செய்த ஒரு அற்புதம் என்னவென்றால் நான் ஒரு வயது குழந்தையாக இருந்த பொழுது பெயர் கண்டறிய முடியாத ஒரு நோய் எனக்கு வந்து என் உடல் முழுவதும் டார்க் ப்ளூ ஆகிவிட்டது. பல மருத்துவர்களிடம் காட்டி இறுதியாக பார்தத மருத்துவர் உறுதியாக நான் இன்னும் அதிக பக்சம் 4, 5 மணி நேரங்களில் இறந்து விடுவேன் என்று சொல்ல பெரியவாளை தவிர நமது மகனை வேறு யாராலும் காக்க முடியாது என்று முடிவு செய்த என் தந்தை. என்னை அழைத்து கொண்டு  நேராக காஞ்சி வந்தார்.
அவர் நடந்து வரும் பொழுது அவர் பாதத்தின் அடியில் என்னை வெய்த்து. அவர் பாதம் பணிந்து. எட்டு வருடம் தவமாய், தவமிருந்து பெற்ற மகன் இவன். நீங்கள் தான் இவனை காக்க வேண்டும் என்றார். அவர் ஒரு கர்க்கன்டை மந்திரித்து என் வாயில் போட அடுத்த நிமிடமே என் உடலில் உள்ள நீல நிறம் கொஞ்சம், கொஞ்சமாக மறைய ஆரம்பித்து ஐந்தே நிமிடங்களில் நான் பழைய தோற்றத்திற்கு வந்தேன்.

 மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட திருசூலம் கோவிலை புணரமைக்கும் பாக்கியம் என் தாத்தா y குப்புசாமி அய்யருக்கு கிடைத்தது. அவர் அந்த கோவிலின் ட்ரஸ்டீயாக இருந்த சமயத்தில் ஒவ்வொரு பிரதோஷத்தின் பொழுதும் கோவில் பிரசாதத்தை பெரியவாளிடம் கொடுத்து ஆசி பெறுவார். இவ்வாறு வாழ் நாள் முழுவதும் செய்தார்.

 ஹர, ஹர சங்கர. ஜெய, ஜெய சங்கர.

1 comment: