siddhas

Tuesday, 20 January 2015

விஞ்ஞான பார்வையில் காயத்திரி மந்திரம்



காயத்திரி மந்திரம் அதீத சக்தி வாய்ந்த உலகின் தலைசிறந்த மந்திரம் என்பது அடியேன் அறிந்ததே. அது விசுவாமித்திர மஹரிஷியால் உலக நன்மைக்காக அருளப்பட்டது. ஆனால்? இந்த  காயத்திரி மந்திரத்தை ஆய்வுக்கு எடுத்து கொண்டு மெய்ஞானத்தின் இந்த கூற்று விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டது அடியேன் இதுவரை அறியாத ஒன்று. இத்தகைய அறிய தகவலை எனக்கு தந்த உயர்திரு JK  SIVAN அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அதை வாருங்கள் நாம் பார்க்கலாம்.
 
காயத்திரி மந்திரம் மந்திரங்களில் தலை சிறந்ததாக கருதப்படுகிறது. எந்த மந்திரத்தை நாம் உபதேசம் பெறுவதாக இருந்தாலும் முதலில் காயத்திரி மந்திரத்தை உபதேசம் பெற வேண்டும் என்பது மந்திர சாஸ்த்திர மரபு. மந்திரேஷூ காயத்திரி. மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. இந்த காயத்திரி மந்திரத்தை நமக்கு தந்தவர் கௌஸிகர் [விசுவாமித்திரர்]  விஸ்வம் என்றால் உலகம்.  மித்திர என்றால் நண்பன். உலக நண்பன் என்பது தான் இவர் பெயரின் பொருள். உலகிற்க்கே பயன் தர கூடிய அனைவருக்கும் பொதுவான மந்திரத்தை இவர் தந்தார். ஆனால் அன்று குறிப்பிட்ட சிலரின் சதியாலும் இறை வாக்கில் இருந்து வந்த வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனிதன் தனது போக்கிலே எழுதிய ஸ்மிருதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாலும் இந்த மந்திரம் பலரை சென்றடையாமல் போனது. இந்த கலியுகத்தில் கடந்த யுகங்களில் நடக்காத பல நன்மைகள், புரட்சிகள் நடந்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான். இந்த காயத்திரி மந்திரம் இன்று பலதரப்பட்ட மக்களால் உச்சரிக்கப்படுகிறது.  
 
 இந்த காயத்திரி மந்திரம் உலகிலேயே சிறந்த மந்திரம் என்று, அன்று  மெய்ஞனிகள் சொன்னதை இன்று விஞ்ஞானிகளும் சொல்கிறார்கள்.  (டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச் சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின் முக்ய வேதங்களை அலசி அவற்றின் சக்தியை விஞ்ஞான பூர்வமாக வடிகட்டினபிறகு தான் இந்த முடிவுக்கு வந்தார்.
அப்படி என்ன கண்டுபிடித்தார்?
1. காயத்ரி மந்த்ரத்தை உச்சரிக்கும்போது 1,10,000 ஒலி அலைகள் ஒரு வினாடியில் வெளிவருகிறது.
2. காயத்ரி மந்த்ரத்தில் தான் மற்ற மந்த்ரங்களை விட உலகத்திலேயே சக்தி அதிகம்..
3. காயத்ரி மந்த்ரத்தின் சப்த அலைகள் ஆன்ம சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

4. ஜெர்மனியில் ஹாம்பர்க் சர்வகலாசாலை இதை ஆராய்ச்சி செய்து உயிர் வாழ உடலுக்கும்
மனதுக்கும் அது தெம்பு கொடுப்பதை அறிந்தது.
5. தென் அமெரிக்காவில் சுரினாம் என்கிற நாட்டில் தினமும் மாலை ரேடியோ பரமரிபோவில் பதினைந்து நிமிஷங்களுக்கு காயத்ரி மந்த்ரம் ரெண்டு வருஷத்துக்கும் மேலே ஒலிபரப்பப்படுகிறதாம். இதை பின்பற்றி ஹாலந்து நாட்டிலும் இந்த நல்ல பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம். 
 
அதன் அழகிய, ஒப்புமையிலாத உயர்ந்த அர்த்தம், சக்தி வாய்ந்த ஒலி, அன்றாட பாதுகாப்பாகவே அமைந்து விட்டதே. காயத்ரி மந்த்ரமிலாத பிரணவ சப்தம் மற்ற எந்த மந்திரத்திற்கும் மூலாதாரமாகவே உள்ளதே. உள்ளாம் கவர்ந்து, திறந்து, பரம்பொருளை நாடும் இந்த மந்திரம், உலகில் எவ்வுயிர்க்கும் பொருந்தும்.
 காயத்ரி மந்த்ரம். இது மனித குலத்திற்கு கிடைத்த விலையில்லா பரிசு. சுத்தமான இதயத்திலிருந்து வெளிவரும் இந்த மந்திரம் உலக அமைதியை காக்கிறது. அளவற்ற ஞானம் தருகிறது.
‘ஹே பரப்ரம்மமே உன்னிலிருந்து வெளிப்படும் அந்த ஞான ஒளி என்னிலிருக்கும் அஞ்ஞான இருளை விரட்டி ஞானப்ரகாசம் அருளவேண்டும்” காயத்ரி மந்த்ரம் சொல்பவனை விடுங்கள். அது எவன் காதில் விழுகிறதோ அவனே புனிதமாகிறான். ஆத்மாவிலிருந்து புறப்படும் பிரம்ம உபதேசம் அல்லவா அது.
காயத்ரி என்றால் என்ன? ”காய”” என்பது உயிரூட்டும் சக்தி. ”த்ரி” என்றால் அது செய்யும் மூன்று வேலை: அதாவது பாதுகாக்கிறது, புனிதப்படுத்துகிறது, பரமனிடம் கொண்டு சேர்க்கிறது. 
 
 
காயத்ரி மந்த்ரம் விடாமல் சொல்பவனைப் பார்த்த்தாலே அவனிடம் ஒரு தனி தேஜஸ், உள்ளே இருக்கும் ஓஜஸ் ஒளி வீசும். அதன் 24 அக்ஷர த்வனி அலாதி. சூக்ஷ்ம சரீர ஆத்மாவின் குரல் அது. காயத்ரி மந்த்ரத்தை பாட்டு போலவோ, ராகம் போட்டோ, ஆலபனத்தோடோ பக்க வாத்யத்தோடா பாடுவார்கள்? அதற்கென்று உச்சரிப்பு, ஒரு சாஸ்திர, வேத மந்திர உச்சாடன முறை இருக்கிறது. அர்த்தத்தை புரிந்துகொண்டு முழுமனத்தோடு  சொன்னால் தான் மெய்ஞான படியும் சரி. விஞ்ஞான ஆராய்ச்சி படியும் சரி பலன் கிடைக்கும். 

No comments:

Post a Comment