4] ஞானியர் கோவில்கள்
தங்கக்கை
பல ஞானிகளின் அதிஸ்டானங்களை அடியேன் தரிசித்து கொண்டு இருக்கிறேன். ஞானிகள் பூமியில் நமது பாதம் படும் பொழுது என்னுள் கால் வழியாக ஒரு சிறிய அளவு மின்சாரம் பாய்ந்து அது தலை வழியாக ஏறுவதை உணர முடியும். அத்தகைய அனுபவம் எந்த உண்மையான ஞானியின் அதிஷ்டானம் சென்றாலும் கிடைக்கும் . உயிர்நிலை கோவில் என்றால் சற்று அதிகமான தெய்வீக அதிர்வலையை உணர முடியும். அடியேன் பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள் போன்ற ஞானியர்களின் அதிஸ்டானம் சென்று எனக்கு அத்தகைய உணர்வு கிடைக்கிறது என்றால். அவர்களை பற்றி அடியேன் நிறைய படித்து. வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன். நன்றாக அந்த ஞானியரை அறிந்து அவர்கள் கோவில் போகும் பொழுது எனக்கு அத்தகைய அனுபவம் கிடைப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால்.? வேறு ஒரு ஞானியின் கோவிலுக்கு வழி கேட்க்க. என்னிடம் வழி சொல்பவர் அப்படியே இங்கு இருக்கும் இந்த சாமியையும் பார்த்துடுனு சொல்றாங்க. சரினு அடியேனும் அங்கு செல்ல. அங்கு அதீதமான ஒரு தெய்வீக அதிர்வலையை உணர்ந்தால். அத்தகைய அனுபவம் எனக்கு திருவொற்றியூர் வீர ராகவ சித்தர் உயிர்நிலை கோவிலில் கிடைத்தது. இவர் கோவில் எங்கு உள்ளது.
திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் உள்ள அதே தெரு. சுடுகாட்டை ஒட்டி இவர் கோவில் இருக்கிறது.
வட நாட்டில் நாம் பெரும்பாலான கோவில்களில் இறைவனை நமது கையாலேயே தொட்டு வணங்கலாம், அபிஷேகம் செய்யலாம், கட்டி பிடித்து முத்தம் கூட கொடுக்கலாம். ஆனால். தமிழகத்தில் மட்டுமில்லாது தென்னகத்திலும் அதை பல இடங்களில் செய்ய முடியாது. காரணம். முகலாயர் படையெடுப்பு போன்ற வரலாற்று ரீதியான காரணம் ஒருபக்கம் இருந்தாலும். ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை, மேரு பிரதிஷ்டை போன்றவை செய்தால் அங்கு நாம் கருவறைக்குள் போக முடியாது. பூஜை செய்பவரை தவிர. தமிழகத்தில் அவ்வாறு எந்திர பிரதிஷ்டை இல்லாத கோவில்கள் ரொம்ப, ரொம்ப கம்மி. வடக்கிலோ எந்திர பிரதிஷ்டை உள்ள கோவில்கள் ரொம்ப, ரொம்ப கம்மி.
உயிர்நிலை கோவில்கள் என்று எடுத்து கொண்டால் நாம் ஞானியரை தள்ளி நின்று வணங்குவதை விட. தொட்டு, அனைத்து வணங்கும் பொழுது இன்னும் அதிகப்படியான பலன், அதிர்வலையை உணர முடியும். அங்கு எந்திர பிரதிஷ்டை கிடையாது என்றாலும் பெரும்பாலான உயிர்நிலை கோவில்களில் நம்மை அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இங்கு நாம். தொட்டு, கட்டி அனைத்து வணங்க அனுமதிக்க படுகிறோம். நாமே பத்து அடி தள்ளி நின்றாலும் இங்கு சேவை புரியும் முருகன், மேகநாதன் நம்மை அவ்வாறு வணங்க சொல்கிறார்கள். காரணம். சுவாமிகள் தான் ஜீவ சமாதி அடையும் முன் அவ்வாறு அனைவரையும் வணங்க அனுமதிக்க வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளார்.
வீர ராகவ சித்தர் வரலாறு- இவர் இந்த தேதியில், இன்னார்க்கு மகனாக பிறந்தார் என்று எந்த குறிப்பும் இல்லை. இவர் வேலூரிலிருந்து வந்ததாக சிலர் சொல்கிறார்கள். இவர் சதாசிவ பிருமேந்திராள், குழந்தையாநந்த சுவாமிகள் போல் முற்றும் துறந்த ஞாநி, ஆடை முதற்கொண்டு. அஷ்டமா சித்திகளும் கைவரபெற்றவர். பலரது பிணிகளை இவர் தீர்த்து வெய்த்துள்ளார். உடல்பிணி மட்டும் அல்ல. பிறவி பிணியையும் சேர்த்தே. உயர்ந்தவன், தாழ்ந்தவன், வேண்டியவன், வேண்டாதாவன் என்கிற எந்த பேதமும் இல்லாத இறைவனை போல் தான் பிரும்ம ஞானிகளும். இவர் அக்றிணையில் கூட, உயிர் அற்ற பொருட்களில் கூட உயர்ந்தது, தாழ்ந்தது என்று பார்க்க மாட்டார். இவர் எந்த வாசனை திரவியத்தையும் உபயோகப்படுத்தமாட்டார். ஆனால் இவர் உடலிலிருந்து அத்தர், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களின் வாசனை வருமாம். இவர் பிறவி ஞாநி.
தங்கக்கை- சேஷாத்ரி சுவாமிகள் சிறு குழந்தையாக இருந்த பொழுது அவரின் தாயார் சேஷாத்ரி ஸ்வாமிகளை தூக்கி கொண்டு கடை வீதிக்கு சென்ற பொழுது. ஒருவர் கிருஷ்ணர் பொம்மை விற்று கொண்டிருந்தார். சேஷாத்ரி சுவாமிகள். தனது கையால் ஒரு கிருஷ்ணர் பொம்மையை எடுக்க. உடனே. அவரது தாயார் அந்த பொம்மையை அவருக்கு வாங்கி கொடுத்து விட்டார். அவர் தான் அன்று முதல் போனி. உடனே சில மணி துளிகளில் நூற்றுக்கணக்கான பொம்மைகள் விற்று தீர்ந்தன. அந்த பொம்மை வியாபாரி. சேஷாத்ரி சுவாமிகள் வீட்டை தேடி வந்து. சேஷாத்ரி சுவாமிகளின் தாயார் காலில் அந்த வியாபாரி விழுந்தாராம். உங்கள் மகன் ராசியால் தான். என்றும் இல்லாத அளவு எனக்கு இன்று வியாபாரம் ஆனது என்றார். அன்றிலிருந்து அவருக்கு தங்கக்கை என்று பெயர் வந்தது. திருவண்ணாமலை அவர் வந்த பொழுது. அங்கு உள்ள வியாபாரிகள். இன்று சுவாமிகள் நமது கல்லா பெட்டியில் கை வெய்க்க மாட்டாரா என்று ஏங்குவார்களாம். அவர் எந்த கடை கல்லா பெட்டியில் கை வெய்த்து அதை உருட்டி. சில்லறைகளை சிதற விடுகிறாரோ. அந்த கடையில் வியாபாரம் அன்று சக்கை போடும். அதே போல் திருவொற்றியூரில் இவர் வருகைக்காக பல வியாபாரிகள். தினமும் வழி மீது விழி வெய்த்து காத்து கொண்டிருப்பார்களாம்.
இவர் சித்ரா பௌர்ணமிக்கு ஒரு நாள் முன் 1963இல் சமாதி அடைந்தார். இவரை பற்றி திரு மேக நாதன் அவர்கள் என்னிடம் பேசிய பொழுது. எனக்கு இவர் பற்றி உண்மையிலேயே என்ன தெரியுமோ. அதை சொல்ல வேண்டும். சும்மா அவர் செய்யாததையெல்லாம் செய்தார். அதை பண்ணார், இதை பண்ணார் என்று கூறி மிகைப்படுத்தினால் அதை சுவாமிகள் விரும்பமாட்டார், மன்னிக்கவும் மாட்டார் என்று மிக வெளிப்படையாக பேசினார்.
அங்கு பிரபல நடிகர் நாகேஷ் குடும்பத்தை நான் சந்தித்தேன். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது அவர்கள் ஸ்வாமிகளை பார்க்க வந்து விடுவார்களாம்.
இப்பொழுது சுவாமிகளின் கோவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. பொருள் உதவி செய்ய முடிந்தவர்கள் செய்யலாம்.
CT Person Mekanathan- 9171960415
ஞான தேடல் தொடரும்.
I also visited . The above said persons never expected anything from any body. They were doing the service seriously.sincerely. Guru will bless them
ReplyDelete