10] ஞானியர் கோவில்கள்
தர்மம் மிகு சென்னையில் பல அருளாளர்கள் தோன்றியுள்ளனர். ராமலிங்க வள்ளலார், கரபாத்திர சிவபிரகாச சுவாமிகள், வண்ணை சாது நாராயண தேசிகர், சாது ரத்தின சற்குரு, சூளை வீரசுப்பையா சுவாமிகள், குயப்பேட்டை சச்சிதானந்த சுவாமிகள் வரிசையில் அந்து குரு சுவாமிகள் அவர்களும் சென்னையிலேயே தோன்றி, சமாதி அடைந்தவர்.
பெரம்பூர் அகரம் பகுதியில் இந்த ஞான சிகரம் உதித்தார். இவருக்கு அந்து நாதர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம். இவரது பெற்றோர்கள். கடைசி வரை ஹிந்துக்கள்ளாகவே இருந்தாலும் மத வெறி பிடித்த மண்டுக்களாக இல்லை. பெரம்பூர் அந்தோணியார் கோவிலில் இவர் பெற்றோர்கள் வேண்டி இவர் பிறந்ததால் அந்தோணி என்கிற பெயரை வெய்த்தணர். எத்தகைய பறந்த மனப்பான்மை இருந்திருந்தால் அவ்வாறு பெயர் வெய்த்து இருப்பார்கள். பின் இவர் வளர்ந்ததும் நெற்றி நிறைய பட்டையிட்டு கொண்டு பள்ளி போவார். நெற்றி நிறைய பட்டை. பேரோ அந்தோணி. அவரை ஒரு அதிசய பிறவியாக பார்த்தனர். அந்தோணி என்னும் பெயரை சுருக்கி அந்து என்று அழைக்கலாயினர். அதுவே பின் நிலைத்தது. அவருக்கு பின் பிறந்த இருவரும் நன்றாக படிக்க. இவர் படிப்பில் நாட்டம் இல்லாதவராய், வெறும் ஞான நாட்டம் மட்டுமே உள்ளவராய் இருந்தார். பின்னர் வளர்ந்ததும். சிங்கப்பூர் தேயிலை தோட்டத்தில் மூன்று வருடங்கள் வேலை பார்த்தார். அது வெள்ளையர்கள் நமது நாட்டை ஆண்ட காலம். அங்கு அவர் உடல் நலன் கெட. பத்திரமாக அவரை இந்தியா அனுப்பி வெய்த்தனர். அவர் இந்தியா வந்த பிறகு உடல் நிலையில் நல்ல மாற்றம் அடைந்தது. மன நிலையில் அதை விட அதிக மாற்றம். அவருக்கு பித்து பிடித்து விட்டதாக அனைவரும் நினைத்தனர். உண்மையில் அது ஞான பித்து என்பதை அவர்கள் உணரவில்லை.
பின்னர் முற்றும் துறந்த துறவியாகி பல இடங்களில் சுற்றி திரிந்தார். பல அற்ப்புத சித்துக்களை செய்தார். இறுதியாக இவர் சீடர் தேசிகானந்தர் பெரம்பூரில் கட்டிய பிரசன்ன விநாயகர் கோவிலில் தங்கியிருந்து. பின்னர் அதே இடத்தில் இவர் இறைவனுடன் இரண்டற கலந்தார். பின் அரசாங்க அனுமதியோடு அவர் உடலை அதே கோவிலில் அடக்கம் செய்தனர். மணி என்ன என்று இவரிடம் எப்போது கேட்டாலும், இவர் வாயிலிருந்து வரும் பதில். மணி நாலு. இவர் இறைவனுடன் இரண்டற கலந்ததும் நாலு மணி.
இவர் அதிஸ்டானம் பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில். தினமும் இரவு ஏழு மணிக்கே மூடி விடுவார்கள்.
Address- Perambur Banthar Garden, Mathavaram Highway.
வண்ணை சாது நாராயண தேசிகர், சாது ரத்தின சற்குரு....ivargalin jeeva samadhi enge irukku nu sollunga pls
ReplyDelete