siddhas

Tuesday, 20 January 2015

கண்ணா. ஒன்பது லட்டு திங்க ஆசையா



6] ஞானியர் கோவில்கள்



பல ஆன்மீக blog களில் சென்னையில் உள்ள ஞானியர் சமாதிகள் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் சில பூட்‌டி இருக்கிறது. அவ்வாறு பூட்டப்பட்டு இருப்பவைகள் எப்பொழுது தரக்கப்படும் என்று அங்கு காவல் காப்பவர்களுக்கே தெரியவில்லை. சில. வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டும் தரப்பார்கள். அது போன்ற blog மூலம் தான் பல ஞானியர்கள் கோவில்களை பற்றி அடியேன் தெரிந்து கொண்டேன்.


அதில் ஒரு blog கில் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் சாமியார் தோட்டம் முதல் தெரு, சிவப்பிரகாச சுவாமிகள் மரகத அம்மன் உடனூரை ரவீஸ்வரர் கோவிலில் என்று போட்டு இருந்ததும். அடியேன் ஓ. திருவண்ணாமலையில் குகைநமசிவாயர், குரு நம சிவாயர் போல் என்று நினைத்தேன். குரு நம சிவாயர். குகை நம சிவாயரின் சீடர். குகை நம சிவாயர் திருவண்ணாமலையிலேயே சமாதி அடைந்து விட்டார். குரு நம சிவாயர் சிதம்பரத்தில் சமாதி அடைந்தார். கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் சாமியார் தோட்டம் முதல் தெரு, சிவப்பிரகாச சுவாமிகள் ரவீஸ்வரர் கோவிலுக்கு உள் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததால். அடியேனும் சிவப்பிரகாசம் என்னும் பெயரில் இரண்டு ஞானிகள் வாழ்ந்து இருக்கிறார்கள் போலும். அதில் ஒருவர் போகர் போல் கோவிலுக்கு உள்ளேயே சமாதி அடைந்து விட்டார் போலும் என்று நினைத்து வியாசர்பாடி சென்றேன்.



அங்கு முதலில் மரகத அம்மன் உடனூரை ரவீஸ்வரரை கண்டு தொழுதேன். பின்னர் அங்கு இருந்த அர்ச்கரிடம் என் சந்தேகத்தை கேட்டேன். அவர். இங்கு இருப்பது ஒரே ஒரு சிவ பிரகாசர் தான். அவர் உயிர்நிலை கோவில் சாமியர் தோட்டத்தில் இருக்கிறது என்றார். அடியேன் இப்பொழுது அங்கிருந்து தான் வருகிறேன். ஐந்து மணிக்கு மேல் அவர் ஆலயம் திறப்பார்கள். அப்பொழுது மீண்டும் அங்கு போக போகிறேன் என்று சொல்லி அந்த கோவிலின் தல வரலாறு கேட்டேன். அவர் எனக்கு சொல்லலானார்.
இந்த கோவில் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில். வியாசர் வழிபட்ட ஸ்தலம். அதனால் தான் இந்த ஊருக்கு வியாசர்பாடி என்னும் பெயர் வந்தது. இந்த ஸ்தலத்து சிவன் சூரியனால் பூஜிக்கப்பட்டவர். அதனால் தான் இந்த ஸ்தலத்து சிவனுக்கு ரவீச்வரன் என்னும் பெயர் வந்தது.சூரியனின் பல பெயர்களில் ரவியும் ஒன்று. வியாசர் முதலான ஞானிகள் வந்த பொழுது இது ஒரு அழகிய கிராமமாக இருந்தது. சென்ற நூற்றாண்டில் கூட. அந்த பசுமையை குறிக்கும் விதமாக அம்மனுக்கு மரகத அம்மன் என்னும் பெயர் வந்ததாம்.பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த கோவிலில் ஒரு மரகத அம்மன் இருந்ததாக கூட செவி வழி செய்தி உண்டு. தினமும். இன்றும் இந்த ஸ்தலத்து சிவனை சூரியன் உதிக்கும் பொழுது, உச்சி வேளையில், மற்றும் மாலையில் வழிபடுவதாக ஐதீகம். அதற்கு ஏற்றவாரே. மூன்று வேளையும் சூரிய ஒளி சிவ லிங்கத்தின் மீது மாலை போல் விழுமாறு. பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இன்று நிறைய கட்டிடங்கள் முளைத்து விட்டதால் முன்பு பட்ட அளவு இப்பொழுது சூரிய ஒளி சிவ லிங்கத்தின் மீது படவில்லையென்றாலும். சூரியன் சிவனுக்கு செய்யும் வழிபாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.



ஆலயம் என்றால் என்ன? ஆன்மா லயப்படும் இடமே ஆலயம். ஆகமவிதிகளின்படி கட்டப்பட்ட மிக பழமையான கோவில்களில் நமது ஆன்மா நிச்சயம் லயப்படும். இன்று எனக்கு லயப்பட்டது, வயப்பட்டது, மனத்தின் கண் பல புலப்பட்டது. அதே ஆனந்தத்துடன் அடியேன். சாமியார் தோப்பு முதல் தெருவின் தெரு முனையில் உள்ள பூக்கடையில் ஸ்வாமிகளுக்கு பூ வாங்கி கொண்டு அவர் உறையும் கோவிலுக்கு சென்றேன். அது சமாதிக்கோவில் என்று யாரேனும் சொன்னால் தான் தெரியும். உள் தோற்றம், வெளி தோற்றம் அனைத்தும் சிவன் கோவில் போன்றே இருக்கிறது. உள் நுழைந்ததும் ஸ்வாமிகளுக்கு பூஜை செய்யும் சுவாமிகள். இவர் ஜீவ சமாதி அடைந்தவர். இங்கு இதே போல் ஒன்பது ஞானிகளின் சமாதி இருக்கிறது என்றார். உடனே என் மனத்தில் கண்ணா. ஒன்பது லட்டு திங்க ஆசையா என்று நினைததாவாறே. இருங்க. நான் இன்னும் கொஞ்சும் பூ வாங்கிண்டு வரேன் என்று சொல்லி ஓடினேன்.



ஒரே ஒரு ஞானி அதிஸ்டானம் என்று நினைத்து போய் கடைசியில் ஒன்பது ஞானியர்கள் கோவில் என்றதும் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பல பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. சில பூட்டி இருக்கிறது. அவ்வாறு இருக்க. ஒரு ஞானியை தரிசிக்க போக ஒரே இடத்தில் ஒன்பது ஞானியர்களின் அதிஸ்டானம் என்று அங்கு பூஜை செய்பவர் சொன்னதும் எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அடியேன் இன்னும் மிகுதியாக மலர்கள் வாங்கி கொண்டு உள்ளே நுழைந்தேன். அதன் பிறகு அங்கு பூஜை செய்பவர் சொன்னார். 9 இல் 6 பேர் சமாதி தான் இப்பொழுது அங்கு இருப்பவர்களுக்கு தெரிகிறது.
பொதுவாக பெரும்பாலான ஞானிகள் சமாதிகளில் அங்கு இருப்பவர்களுக்கு எந்த தகவலும் தெரியாது. உண்மையிலேயே தெரியவில்லையா. இல்லை சொல்லுவதற்கு விருப்பம் இல்லையா என்று தெரியவில்லை. அங்கு இருப்பவர்களுக்கு தெரியாது, தெரிந்தாலும் ஏனோ சொல்ல மாட்டார்கள். புத்தகமும் அது பற்றி அங்கு கிடைக்காது. அவ்வாறு இருக்க. கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று புத்தகம். My Good Luck அங்கு கிடைத்தது. பட்டினத்தார் சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் போல் இவரது வரலாறும் சற்று நீண்டது. மிக சுவாரஸ்யமானது.



தூய மாதவம் செய்தது தொண்டை நன்னாடு என்று பெரிய புராணம் இயற்றிய சேக்கிழாராலும், தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என்று ஓளவ்வையாராலும் போற்றப்பட்ட தொண்டை நன்ணாட்டில் அவதரித்தவர் தான் கரபாத்திர சுவாமிகள். தொண்டை நன்னாடு. அன்று 24 கோட்டங்களாக இருந்தது அவை.



1. புழல் கோட்டம், 2. ஈக்காட்டுக் கோட்டம், 3. மணவிற் கோட்டம்,4. செங்காட்டுக் கோட்டம், 5. பையூர்க் கோட்டம், 6. எயில் கோட்டம், 7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம், 9.களத்தூர்க் கோட்டம், 10. செம்பூர்க் கோட்டம், 11. ஆம்பூர்க் கோட்டம், 12. வெண்குன்றக் கோட்டம், 13. பல்குன்றக் கோட்டம், 14.இளங்காட்டுக் கோட்டம், 15. காலியூர்க்கோட்டம், 16. செங்கரைக் கோட்டம், 17. பழுவூர்க் கோட்டம், 18. கடிகூர்க் கோட்டம், 19. செந்திருக்கைக் கோட்டம், 20. குன்றவர்த்தனக் கோட்டம், 21.வேங்கடக் கோட்டம், 22. சேத்தூர்க் கோட்டம், 23. வேலூர்க் கோட்டம், 24. புலியூர்க்கோட்டம்
என்பவையே அவை.



இக்கோட்டங்களில் சென்னையையும் அதைச் சூழ்ந்துள்ள ஊர்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கினவை புழல், புலியூர்,மணவில் என்னும் மூன்று கோட்டங்களாகும்.
சென்னை திருப்போரூரில் செங்கமலத்தமையாருக்கும், முத்து சாமி அய்யா அவர்களுக்கும் மகனாக அவதரித்தவர் தான் சிவப்பிரகாசர்.



விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்னும் முதுமொழிக்கு ஏற்ப்ப சுவாமிகள். 3, 4 வயதில் கூட விளையாட்டில் நாட்டம் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு மௌன நிலையில் மணிக்கணக்காக அமர்ந்து விடுவார். ஒரு குழந்தைக்கு இயற்கையாய் இருக்க வேண்டிய குறும்பு இல்லை, சுட்டி தனம் இல்லை, எந்த வித சேட்டையும் செய்வதில்லை. எப்பப்பாரு மௌனமாக, அமைதியாக எங்கோ சிந்தித்து கொண்டு இருந்தால். அந்த குழந்தையின் பெற்றோர்கள் என்ன? நினைப்பார்கள். குழந்தையின் மூளையில் ஏதோ குறைபாடு என்று நினைப்பார்கள். சுவாமிகளின் பெற்றோர்களும் அவ்வாறே நினைத்தார்கள். பயந்தார்கள். இது தெய்வீக குழந்தை என்பதை அவரது பெற்றோர்களாலும் சரி. உடன் பிறந்தவர்களாலும் சரி. புரிந்து கொள்ள முடியவில்லை. ரத்தின வேல், மாணிக்கம், சிவ ஞானம் ஆகிய மூவர் பிறக்க கடை குட்டியாக பிறந்தவர் தான் சிவப்பிரகாச சுவாமிகள்.



சிவப்பிரகாச சுவாமிகளுக்கு 16 வயது இருக்கும் பொழுது அவரின் தந்தை முத்துசாமி காலமானார். அப்பொழுது அவரின் வயது 60. அதன்பிறகு. இவர் தனது அண்ணன்களோடு சேர்ந்து வெற்றிலை ஏல வாணிகத்தை சற்று பெரிய அளவில் நடத்தினார். அந்த சமயத்தில் வேதாந்தம், சித்தாந்தம் ஆகியவற்றில் கரைக்கண்ட ரத்தின தேசிகரிடம் இவர் பல நூல்களை பயின்றார். அதில். இவர் மனத்தின் கண் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நூல் ரிபு கீதை. இவரது குரு பரிசாக அதை சிவபிரகாச ஸ்வாமிகளுக்கு கொடுத்தார். பகவத் கீதை தவிர்த்து மொத்தம் 26 கீதைகள் உள்ளன. அவை.
1. ரிபு கீதை, 2. பிட்சு கீதை, 3. பராசர கீதை, 4. போத்திய கீதை, 5. ஷடாஜ கீதை, 6. உதத்திய கீதை, 7. ராம கீதை, 8. தேவி கீதை, 9. ஹம்ச கீதை, 10. ஹரித கீதை, 11. சம்பக கீதை, 12. வாமதேவ கீதை, 13. சூரிய கீதை, 14. சிவ கீதை, 15. கபில கீதை, 16. மங்கி கீதை, 17. ரிஷப கீதை, 18. விருத்திர கீதை, 19. வசிஷ்ட கீதை, 20. உத்தவ கீதை, 21. பிரம்ம கீதை, 23. பாண்டவ கீதை, 24. உத்தர கீதை, 25. அவதூத கீதை, 26. வியாச கீதை.



ரிபு கீதை- காணும் அனைத்துமே பிரும்மம்; நாமனைத்தும் அதன் ஸ்வரூபமே. சிவரகசியத்தின் இதயத்தானமாக ரிபு கீதை விளங்குகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை முன்னர் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் திருக்கேதாரத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது எனக்கூறப்படுகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை 50 அத்தியாயங்களில் 2493 சுலோகங்களில் சொல்லப்படுள்ளது.



காணும் அனைத்துமே பிரும்மம்; நாமனைத்தும் அதன் ஸ்வரூபமே பேதத்திலுள்ள மோகத்தை விலக்கு என்று பிரும்ம புத்திரரான ரிபு அவரது சீடர் நிதாகருக்குஅருளியது ரிபு கீதை.
ஒருநாள் சுவாமிகள் சிவ பூஜை செய்ய பூஜை அறை போனார். ரொம்ப நேரம் ஆகியும் இவர் பூஜை அறையிலிருந்து வெளியே வரவில்லை. அவர் வழக்கமாக சாப்பிடும் நேரமும் தாண்டியது. நம்ப சாப்பிடலை என்றால் முதலில் கவலைப்படுவது யார்? நம்மை பெற்ற அம்மா. சுவாமிகளின் அம்மா. அப்டி என்ன என்னிக்கும் இல்லாமல் இவன் இன்று பூஜை செய்கிறான். இன்னும் சாப்பிடவில்லையே என்னும் கவலையோடு பூஜை அறையை திறந்தார். நீ முதலில் சாப்பிடு. அதன்பிறகு பூஜை செய்யலாம். என்று முதலில் மெதுவாக சொன்னார். பின் கத்தி சொன்னார். ரெண்டு, மூன்று பூஜை பாத்திரங்களை கீழே ஓங்கி போட்டு பெரிய சத்தத்தை ஏற்படுத்தினார். ம்ஹ்ம். அவர் துளி கூட அசையவில்லை. சந்தேகம் வந்து உடலை உலுக்கினார். பின் என் மகன் செத்துட்டான் என்று சொல்லி வீல் என்று சுவாமிகளின் தாயார் அலற. அந்த சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்தனர்.
என்னது. சிவப்பிரகாசம் செத்துட்டாரா.
நாளை பார்ப்போ
பேச்சு, மூச்சு இல்லாமல் அவர் இருந்ததும். அவரின் அம்மா செங்கமலத்தமையார் தனது மகன் பூஜை செய்ய்யும் பொழுது இறந்து விட்டதாக நினைத்து பயந்து கத்த. சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் முதலில் அங்கு வந்தனர். பின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாரும் அங்கு வந்து ஒன்னு கூடினார்கள். அதில் ஒருவர். சிவ பிரகாச சுவாமிகள் எந்த ரத்தின தேசிகருக்கு சீடரோ. அதே ரத்தின தேசிகருக்கு அவரும் சீடர். சம்பந்தப்பட்ட அந்த நபர் சிவ பிரகாச சுவாமிகள் பற்றி நன்கு அறிந்தவர். அவர் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை யூகித்து கொண்டார். உண்மையில் சுவாமிகள் இறக்கவில்லை. பூஜை செய்து கொண்டிருந்த பொழுது இவரது மனம் இருமை ஒழிந்து ஒருமை அடைந்து. அனைத்திற்கும் மூல கூரான சக்தி எதுவோ. எந்த சக்தி படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் செய்யும் தெய்வங்களையும், பல கோடி அண்டங்களை, உயிரினங்களை படைத்ததோ. அந்த பரபிரும்மத்தோடு இரண்டற கலக்கும் நிர்விகல்ப்ப சமாதிக்கு அவர் சென்று விட்டார். 

நிர்விகல்ப்ப சமாதி என்பது எட்டாவது நிலை. சாதாரண மனிதர்களால் எட்ட முடியாத நிலையும் கூட. அதற்க்கு மேல் குண்டலினி யோகத்தில் உயரிய நிலை எதுவும் இல்லை. பலர் இந்த நிர்விகல்ப்ப சமாதி நிலை அடைவதற்காக வீடு, வாசல் அனைத்தையும் துறந்து தவம் இருக்க. சுவாமிகளோ. ஒரு மனிதன் குடும்பத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றி கொண்டே. நேரம் கிடைக்கும் பொழுது பூஜை, தியானம் முதலியவற்றை செய்து நிர்விகல்ப்ப சமாதி நிலை அடைந்தார் என்றால் அது சாதாரண விசயம் இல்லை. இது எவ்வாறு சாத்தியம் ஆயிற்று? புறத்துறவியாய் இன்று இருக்கும் துறவிகள் அனைவரும் அகத்துறவிகளாக இருக்கிறார்களா என்பது டிரில்லியன் டாலர் கேள்வி. காவி உடை அணிந்தவர்கள் எல்லாம் சன்யாசியா. நல்ல குணம், தெய்வ பக்தி உடைய யார் வேண்டுமானாலும் சன்யாசி ஆகலாம் என்றால் நீங்களும் ஆகலாம், நானும் ஆகலாம். என்னை பொருத்தவரை ஒரு துறவி என்றால் குறைந்த பக்சம். நாம் அந்த துறவியை நாடி போகிறோம் என்றால். நாம் எதை நாடி செல்கிறோமோ அதை அவர் அறிந்தவராக இருக்க வேண்டும். தன்னுள் உள்ள பிரும்மதை உணர்ந்தவராய், பிறர் மனத்தில் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அறிந்தவராய். இருக்க வேண்டும். இது எதுவும் இல்லாது வெறும் காவி உடை மட்டும் அணிந்து எந்த தவறான செயல்களும் செய்யாது வாழ்வோரை. மாலை போட்ட அய்யப்ப சாமிகளை நாம் சாமி என்று சொல்வதை போல். இது போன்றவர்களை ஒரு மரியாதைக்கு சாமி என்று சொல்லலாமே ஒழிய. பெரிய ஞானி, மகான் என்றெல்லாம் அடியேனால் ஒப்பு கொள்ள முடியாது.

மனதளவில் கூட எந்த பெண்களையும் நினைத்து பார்க்காதவராய். நைஷ்ட்டிக பிரும்மாச்சாரியாக அவர் இருந்ததாலேயே வெறும் 19 வயதில் அவரால் அந்த பலரால் எட்டாத நிலையை எட்ட முடிந்தது. நிர்விகல்ப்ப சமாதி என்றால் அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு அது புரியாது. நிர்விகல்ப்ப சமாதி என்றால் என்ன? என்பதை பற்றி ஒரு கால் மணி நேரமாவது அவர் குடும்பத்தார்க்கு விளக்க வேண்டியதாக இருக்கும். அவ்வாறு விளக்கினாலும் அதை அவர்கள் புரிந்து கொள்வார்களா. நம்புவார்களா என்பது சந்தேகமே. அதனால் அவர் சாமர்த்தியமாக சிவ பிரகாசர் நாடியை புடித்து பார்ப்பது போல் பார்த்து. இவருக்கு இன்னும் சற்று நாடி துடிப்பு இருக்கிறது. ஒன்றும் பயப்படுவதற்கு இல்லை. நான் விபூதியை மந்திரித்து தருகிறேன். உங்கள் மகன் கண்ணை திறக்கும் வரை நீங்கள் இந்த விபூதியை உங்கள் மகன் தலை மீது சிறிது, சிறிதாக போட்டு கொண்டே இருங்கள் என்று சொல்லி அவர் அங்கிருந்து அகன்று விட்டார். பின்னர். ஒரு சில நிமிடங்கள் சிவ பிரகாச சுவாமிகளுக்கு விபூதி அபிஷேகம் அவர் தாயரால் நடக்க அதன் பின்னர் சுய நிலைக்கு வந்து கண்களை திறந்தார். போன உயிர் திரும்ப வந்ததை போல் இருந்தது. சிவ பிரகாசரின் அம்மாவிற்கு. எத்தனை வயது ஆனாலும் நமது தாய்க்கு. நாம் குழந்தை தானே.

அதன் பின்னர் சுவாமிகள். ஆழ்நிலை தியானம் செய்ய வீடு ஏற்ற இடம் அல்ல என்பதை உணர்ந்து. மெரினா கடற்கரையில் உள்ள ஒரு சவுக்கு தோப்பில் விடிய, விடிய நிர்விகல்ப்ப சமாதி நிலையில் திளைத்து, ஆனந்த வெள்ளத்தில் மிதந்த படி இருப்பார். 


இவ்வாறு கரபாத்திர சுவாமிகள் வாரத்தில் பாதி நாட்கள். கடற்கரையில் விடிய, விடிய ஆழ் நிலை தியானத்தில் இருக்கலானார். வியாபாரத்தில் இவருக்கு நாட்டம் குறைந்தது என்று சொல்வதை விட. அதில் அறவே விருப்பம் இல்லாமல் ஆனது. வீட்டில் உள்ளவர்கள் இவரின் இந்த திடீர் மாற்றம் கண்டு கவலை கொண்டனர். அந்த கவலைக்கான காரணம். இவர் வியாபாரம் ஒழுங்காக செய்யாமல் இருப்பதனால் அல்ல. ஒன்றிற்கு மூன்று அண்ணன்கள் அதை செய்ய இருக்கிறார்கள். எங்கே இவர் சாமியாரா பெய்டுவாரோனு வீட்டில் உள்ளவர்கள் பயந்தனர். பலவாறு அவர் மனத்தை திசை திருப்ப பார்த்தனர். ஆனால் அவர் தான் கொண்ட முடிவில் உறுதியாக இருந்தார். தனது குரு ரத்தின தேசிகரிடம் அவர் தான் துறவறம் பெற விரும்புவதாகவும். தனக்கு துறவர தீட்சை வேண்டுமென்றும் அவர் கேட்க. அதற்கு அவர் குரு. புறத்துறவை காட்டிலும் அகத்துறவே சிறந்தது. ஒரு உண்மையான அகத்துறவியாக உள்ள உனக்கு எதற்கு தனியாக துறவர தீட்ஷை என்று சொல்லி கொடுக்க மறுத்து விட்டார். அதற்கான காலம் பின்னால் வரும் என்று சொன்னார்.


அதன் பின்னர் தொடர்ந்து அவர் பழையபடி மும்முரமாக வியாபாரத்தில் ஈடுபட ஆனார். அதை விட அதிகமாக ஆழ்நிலை தியானம் புரிவதிலும் ஈடுபட்டார். விட்டக்குறை தொட்டகுறை என்று ஒரு பழமொழி உண்டு. ஒருவர் இப்பிறவியில் கற்ற கல்வி ஏழேழு பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும் என்கிற வள்ளுவ பெருமான் வாக்கிற்கிணங்க. இவர் இதற்கு முன் பல பிறவிகளில் செய்த சாதகத்தின் பயனாய் இப்பிறவியில் பல துறவிகள் பல வருடங்கள் காட்டில் பட்டினி கிடந்து தவம் செய்து பல ஞானிகள் அடைந்த நிர்விகல்ப்ப சமாதி நிலையை இவர் வியாபாரம் செய்து. நேரம் கிடைக்கும் பொழுது பூஜை செய்து மூன்று வேளை நன்றாக உண்டு இந்த நிலையை தானாக எந்த ஒரு குருவின் துணையும் இல்லாமல் அடைந்தார்.அதுவும் வெறும் 19 வயதில். ரத்தின தேசிகர் இவருக்கு மெய்கண்ட சாஸ்திரம், ரிபு கீதை போன்ற நூல்களை கற்று கொடுத்த குரு. அவர் இவருக்கு குண்டலினி யோகம் சொல்லி கொடுத்தவர் அல்ல.


ராமகிருஷ்ன பர்மஹம்சர் பல வருட கடும் தவத்திற்கு பிறகு, பல சாதகங்களுக்கு பிறகு இந்த நிர்விகல்ப்ப சமாதி நிலையை அடைந்தார். அவ்வாறு அடைந்த பிறகும் மணியை எடுத்து கொண்டு காளி கோவிலுக்கு பூஜை செய்ய வந்ததை பார்தத ஒரு துறவி. அந்த துறவி பரபிரும்ம வழிபாட்டை மட்டும் செய்பவர். அவர் ராமகிருஷ்ணரை பார்த்து. நிர்விகல்ப்ப சமாதி நிலையையே நீ அடைந்து விட்டாய். அதன் பின்னரும் எதற்கு இந்த காளியை கட்டி கொண்டு மாரடிக்கிறாய் என்று கேட்டாராம். அதற்கு பரமஹம்சர். நான் பர பிரும்மத்தோடு இரண்டற கலந்திருக்கும் அந்த நிலையில் எனக்கு இந்த காளி, மற்றும் எந்த விக்ரஹ ஆராதனையும் தேவை இலை தான். ஆனால் அதிலிருந்து இறங்கி வந்த பின் நான் காளி தேவியை மறந்தால் அதள பாதாளத்திற்கு சென்று விடுவேன் என்று சொன்னார். மேலும் சக்தி இல்லையேல் உலகில் எந்த சக்தியுமே இல்லை. பர பிரும்மம் முதற்கொண்டு. பரா பட்டாரியே பர பிரும்மம் என்று பரமஹம்சர் சொல்ல அதை கேட்டு அந்த துறவி நகைத்தார். சிவன் பர பிரும்மம், விஷ்ணு பர பிரும்மம், அம்மன் பர பிரும்மம் என்று அனைத்து தெய்வங்களையும் பரபிரும்மத்தோடு ஒப்பிட்டால். அதன் பின். உண்மையான பர பிரும்மத்திர்க்கு என்ன? மதிப்பு. நேற்று வரை நீ ஒரு சாதாரண காளி பக்தன், இன்றோ பிரும்மம் உணர்ந்த ஒரு சித்தன். பிரும்ம நிலையை நீ உணர்ந்து, அதை அனுபவித்த பிறகும் இவ்வாறு ஒரு சிறு தெய்வத்தை பர பிரும்மத்தோடு ஒப்பிட்டால் உனது இந்த உணர்தலில் ஏதோ குறை உண்டு என்று அந்த துறவி சொல்ல. பரமஹம்சர் மீண்டும் ஒருமுறை சிரித்து கொண்டே. ஒரே கடவுளை அறிந்தவர்கள் அவரவர் அனுபத்திற்கு ஏற்ப பலவாறு சொன்னாலும் உண்மை என்பது ஒன்று தான். அனைத்து சக்திகளும் தேவி ஆதி சக்தியிடமிருந்தே தோன்றியது என்பதே உண்மை. அதை இன்று நான் உணர்ந்தேன். நாளை நீங்களும் உணர்வீர்கள் என்று அந்த் துறவியிடம் ராமகிருஷ்ன பரம ஹம்சர் சொன்னார். அதே போல் அந்த துறவியும் வெகு விரைவில் அதை உணர்ந்து காளியிடமும், பரமஹம்சரிடமும் மன்னிப்பு கேட்டார்.


கரபாத்திர சுவாமிகளும் நிர்விகல்ப்ப சமாதி நிலையில் தேவி ஆதி சக்தியான பரா பட்டாரியை கண்டார். சிவ லிங்கம் எனப்படுவது பிரும்ம, விஷ்ணு, சிவ மற்றும் அனைத்து சக்திகளும் ஒன்று சேர்ந்த வடிவம். ஒரு காலத்தில் உலகம் முழுவதும் லிங்க வழிபாடு இருந்துள்ளது. பல அகழ்வாராய்ச்சி சான்றுக்ளால் தெரிய வருகிறது.


வருடங்கள் உருண்டோடின. சுவாமிகளின் குருவான ரத்தின தேசிகர் காலமானார். ஒருபுறம் வீட்டில். அவரது அண்ணன்கள் இருவரும் அவரை திட்டி கொண்டே இருந்தனர். [பாச திட்டல் தான்] தந்தை மறைவிற்கு பிறகு அனைவரும் திருப்போரூரில் இருந்து வட சென்னை பகுதிக்கு குடி வர மூத்த அண்ணன் மட்டும் திருப்போரூரிலேயே இருந்து விட்டார். அரங்கநாதம், வடிவேல் என்று கரபாத்திர சுவாமிகளுக்கு இரண்டு நண்பர்கள். சுவாமிகள் போலவே அவர்களும் ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்கள். அந்த இரு நண்பர்கள் தான் உன்னை கெடுத்து குட்டி சுவர் ஆக்கியது என்று கடிந்தது மட்டும் அல்லாமல். அவர்கள் முகத்திற்கு நேராகவே சுவாமிகளின் அண்ணன்கள் அவ்வாறு திட்ட. சுவாமிகள் இது தான் தான் துறவறம் மேற்கொள்வதற்கு சரியான தருணம் என்று முடிவு செய்து தனது தாயாரிடம் அனுமதி கேட்டார். எந்த தாய் இதற்கு அனுமதிப்பாள். முதல் நாள் அனுமதிக்கவில்லையென்றாலும் இரண்டாம் நாள் எப்படியோ அனுமதி வாங்கி விட்டார். தாய் ஒருவருக்கு இருக்கும் பொழுது அவர் அனுமதியின்றி சன்யாசம் வாங்கினால் அது செல்லாது. தாய்மைக்கு அவ்வளவு முக்கியத்துவம்.


தாயாரிடம் அனுமதி பெற்ற பின் அவர் நேரே சென்ற இடம் பட்டினத்தார் சாமிகள் ஆலயம். அங்கு தனது அனைத்து அடைகளையும் களைந்து கோமனத்தை உடுத்தி கொண்டார். சன்யாசி ஆனபின் அவர் திருப்போரூரில் உள்ள தனது பெரிய அண்ணியிடம் தான் முதல் பிட்சை எடுத்தார். வீட்டிற்குள் அழைத்தும் வர மறுத்தார். தன்னுடைய கரத்தையே பாத்திரமாக ஏந்தி அவர் பிட்சை எடுத்ததால் கரபாத்திர சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு வாழ் நாள் முழுவதும் அவ்வாறே உண்டார்.

கற்றாரை கற்றாரே அறிவர். ஒரு மிக பெரிய விஞ்ஞானி இருக்கிறார் என்றால் அவருக்கு இணையாக அறிவு உள்ள இன்னொரு விஞ்ஞானியால் தான் அவரை புரிந்து கொள்ள முடியும். அதே போல் ஒரு ஞானியை இன்னொரு ஞானியால் தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும். 

திருவண்ணாமலையில் ரமண மஹ ரிஷி தவம் புரிந்த பொழுது. அவரை முதலில் கண்டறிந்தவர் பழனி சுவாமிகள். அவர் தன்னுடைய வாழ்நாளை உழவாற பணிக்கு என்றே அர்பபணித்தவர். ரமணரை திருவண்ணாமலையில் உள்ள பாதாள லிங்கம் சந்நிதியில் முதலில் கண்டறிந்து முதல் உதவி செய்தவர். அதன் பின்னர் அவர் தவம் கலையும் வரை அவரை கண்ணும், கருத்துமாக பார்த்து கொண்டவர் சேஷாத்ரி சுவாமிகள். அதே போல் கரபாத்திர சுவாமிகள். திருவான்மியூரிலே பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள ஒரு வயலில் தவம் செய்த பொழுது. நம்புங்கள் மக்களே. அன்று சென்னை திருவான்மியூரில் வயல், வரப்பு எல்லாம் இருந்தது. அப்பொழுது கரபாத்திர சுவாமிகளின் தவத்திற்கு எந்த இடையூறும் வராதவாறு பக்கபலமாக இருந்து உதவியவர் பாம்பன் சுவாமிகள்.

அவ்வாறு சுவாமிகள் திருவான்மியூரில் தவத்தில் இருந்த பொழுது அவரை அடிக்கடி வந்து பார்த்தவர்கள். அவர் உடன் படித்த ரங்கநாதன், கோ வடிவேல், முருகேசன். அதை தவிர்த்து அரும்பாக்கம் சுவாமிகள் என்கிற முனியப்ப சுவாமிகள், ஸ்ரீநிவாசன், அவர் மனைவி தாயார் அம்மாள், டாக்டர் குப்புசாமி, டாக்டர் நஞ்சுன்ட ராவ் போன்றோர். இவரை அடிக்கடி வந்து பார்த்து தரிசித்து சென்றனர். ஒருநாள் இவரை காண ஸ்ரீநிவாசன், தாயார் அம்மாள் இருவரும் வந்திருந்த பொழுது அவர் வழக்கமாக தவம் செய்யும் இடத்தில் இல்லாமல் அங்கு உள்ள ஒரு வயலில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருக்க. அங்கு ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள் அவர் மீது கல்லையும், மண்ணையும் எறிந்து விளையாடி கொண்டிருந்தனர். அதை கண்டு பதறிய அத்தம்பதியினர் அந்த சிறுவர்களை விரட்டி விட்டு. அவரை திருவான்மியூரில் ஒரு பாதுகாப்பான இடத்தில் விட்டு, விட்டு வந்தனர். மறுநாள் அவரை அங்கு சென்று பார்த்தால் அவர் அங்கு இல்லை. திருவான்மியூர் சுடு காட்டில் அமர்ந்து அஹம் பிரூமாஸ்மி என்று கூறிய படி தவம் செய்து கொண்டிருந்தார். அவரை அவர்கள் அழைத்து கொண்டு மீண்டும் அதே இடத்தில் விட்டனர். அதற்கு மறு நாள் அவர் பழையபடி திருவான்மியூர் சுவாமிகள் மடத்திற்கு அருகிலேயே தனது தவத்தை தொடங்கலானார்.

காலங்கள் இவ்வாறு உருண்டோட அதன் பின் சுவாமிகளுடன் படித்த நண்பர்கள் மற்றும் அவர் அடியார்கள் கேட்டு கொண்டதற்கிணங்க. சென்னையில் உள்ள கேசவ பெருமாள் கோவிலில் இருக்கலானார். இன்றும் வைஷ்ணவர்களில் சிலர் பெருமாளை மட்டும் வழிபடுவார்கள். மழைக்கு கூட சிவன் கோவிலில் ஒதுங்க மாட்டார்கள். அதே போல் தான் வீர சைவ மரபை சேர்ந்த பலர் அக்காலத்தில் இருந்தனர். அவர்களில் இன்றும் சில வீர சைவ மரபை சேர்ந்தோர். திருவென்காட்டில் உள்ள சிவ பாதத்தில் தான் பிண்டம் போடுவார்கள். ஆனால் நிர்விகல்ப்ப சமாதி வரை சென்ற பிரும்ம ஞானிகளுக்கு. சைவம், வைஷ்ணவம் மட்டும் அல்ல. ராம், ரஹீம், கிருஷ்ணர், கிரிஸ்துவம் அனைத்தும் ஒன்றே. ராம கிருஷ்ண பரமஹம்சர் நிர்விகல்ப்ப சமாதி அடையும் வரை தீவிர ஹிந்துவாக இருந்தார். நிர்விகல்ப்ப சமாதி நிலை அடைந்த பின். ஒரே ஊறிர்க்கு பல வழிகளை போல் ஒரே கடவுளை அடைய பல மார்க்கங்கள். அதில் நீங்கள் எதை பின்பற்றினாலும் கடவுளை அடையலாம் என்றார். அதே போல் கரபாத்திர சுவாமிகளும் முதலில் சிவனை மட்டுமே தொழும் தீவிர சைவராக தான் இருந்தார். நிர்விகல்ப்ப சமாதி நிலை அடைந்த பின். அவருக்கு ஹரி, சிவன் இருவரும் வெவ்வேறாக தெரியாமல் ஒன்றாகவே தெரிந்தனர். பல நாட்கள் அவர் கேசவ பெருமாள் கோவிலில் தங்கி இருந்து பெருமாளை சேவித்தார். அங்கு கண்ணியப்ப சுவாமிகள் என்பவா ஸ்வாமிகளுக்கு தொண்டுகள் பல புரிந்தார்.

அந்த கோவிலில் சுவாமிகளால் புதிதாக சில குழுக்கள் அமைக்கப்பட்டது. நாள் ஆக, ஆக. அவரை காண கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. அது அவர் தவத்திற்கு இடையூறாக இருக்கவே சுவாமிகள் இன்றைய சென்னை வேப்பேரியில் உள்ள செங்கல்வராய தோட்டத்தில் வந்து இருக்கலானார். இத்தோட்டத்தில் தான் அருட் பிரகாச வள்ளலார் சில நாட்கள் தங்கி தவம் செய்தார்.

அந்த தோட்டத்தில் உள்ள வீட்டில் டாக்டர் ராஜ் பகதூர் என்பவர் இருந்து வந்தார். அவர் சுவாமிகலோடு உடன்படித்த கோ வடிவேல் அவர்களின் மாணவர். பல வேதாந்த, சித்தாந்த நூல்களை படித்தவர். சுவாமிகளின் பிரதான சீடர்களில் ஒருவரானார்.

அங்கு சுவாமிகள் பல நாட்கள் மௌன விருதத்தில் இருந்தார். தன்னை நாடி வந்தவர்களுக்கு அத்வைத நெறியை போதித்து. விருப்பம் உடையோர்க்கு பல வேதாந்த, சித்தாந்த நூல்களை மௌன விருதம் இல்லாத நாட்களில் போதித்தும் வந்தார். ஒருநாள் அவர் பொதிகை மலைக்கு சென்று மூன்று ஆண்டுகள் தவம் செய்ய போய் விட்டார். யாரிடமும் சொல்லாமல். அவரது அடியார்கள் அதனால் தவியாய் தவித்தனர்.
இந்தியாவில் துறவிகளை கண்டு தத்துவங்களின் சிறப்பை தெரிந்து கொள்ள அப்பொழுது சார்ட்டரிச் என்னும் அமெரிக்கர் 19ம் நூற்றாண்டில் இந்தியா வந்திருந்தார். பல துறவிகளை அவர் சந்தித்து நிறைவாக கரபாத்திரம் சிவ பிரகாச சுவாமிகளை சந்தித்தார். தத்துவ தொடர்புள்ள பல கேள்விகளை கேட்டு தனது அனைத்து சந்தேகங்களும் நீங்க பெற்றது மட்டும் அல்லாமல். சுவாமிகளின் சீடர்களில் ஒருவராகி. தியானம், தவம் அனைத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் ஆனார்.

சுவாமிகள் ஸ்தாபித்த மடங்கள்.

வியாசர் பாடியின் சிறப்பை. சென்ற nov 1. பதிவில் பார்த்தோம். இதுவரை கரபாத்திர சுவாமிகளை பற்றி 6 நாட்கள் தொடர்ச்சியாக வந்து இருக்கிறது. நடுவில் இரண்டு நாட்கள் வேலை பளு காரணமாக என்னால் பதிய முடியவில்லை.இதோடு ஏழாம் பதிவு. சென்னையில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வியாசர் பாடி ரவீஸ்வரர் கோவில் அருகில் ஒரு வேதாந்த குருகுலம் ஏற்படுத்த வேண்டும் என்பது. கரபாத்திர சுவாமிகளின் குருவாகிய ரத்தின தேசிகரின் எண்ணம். அதை நிறைவேற்றும் பொருட்டு. தமிழ், சமிஸ்கிருதம் இரண்டையும் பயில சுவாமிகள் வியாசர் பாடியில் குருகுலம் அமைத்தார். வடமொழி, தென்மொழி இரண்டையும் இரண்டு கண்களாக பாவித்தவர் சிவ பிரகாச சுவாமிகள்.

வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

குமர குருபரர்.

இவர் சூளை, வேப்பேரி, நிறைவாக வியாசர் பாடியில் மடம் ஸ்தாபித்தார்.

சில நாட்கள் செங்கல்வராய தோட்டத்திலும், சில நாட்கள் வியாசர் பாடியிலும் இருந்த சுவாமிகள் நிறைவாக வியாசர் பாடியிலேயே இருக்லானார். 1918 பிங்கல அண்டு, பங்குனி திங்கள் வியாழக்கிழமை அன்று. சுவாமிகள் வியாசர் பாடியில் ஜீவ சமாதி அடைந்தார். 


இவர் அதிஷ்டானம் உள்ள் இதே இடத்தில் இவரது ஒன்பது சீடர்க்ளின் அதிஸ்டானமும் இருக்கிறது. அதில் யதிராஜர் எனும் ஒரு வைஷ்ணவரின் அதிஸ்டானமும் இருக்கிறது. வெளியில் சங்கு, சக்கர முத்திரைகள் பொறிக்கப்பட்டு இருக்கிறது. அவரை பற்றிய விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை.

கரபாத்திர சுவாமிகளின் சிறப்பம்சங்கள். அவர் செய்த ஆன்மீக புரட்சிகள் பற்றி சொல்வது என்றால் சொல்லி கொண்டே போகலாம். தீண்டாமை உச்சத்தில் இருந்த சமயத்தில். ஹரிஜன பிரவேசத்தை முத்து ராம லிங்க தேவர் அவர்களின் துணையோடு காந்தி மதுரை மீனாக்ஷீ அம்மன் கோவிலில் செய்வதற்கு முன்னே. ஒரு தலீத் இளைங்கருக்கு தீட்ஷை கொடுத்து தன்னுடைய மடத்தில் தங்க வெய்த்தார். பிராம்னர்கள் சாப்பிடும் பந்தியில் தான் அந்த தலீத் இளைங்கரும் உன்பார். சமீபத்தில் பூரியை சேர்ந்த ஒரு போலி சாமியார் தலீத்கள் கோவிலுக்குள் நுழைய கூடாது என்று பேசியிருக்கிறான். கோவை ஆனைமலை தாலுக்காவில் உள்ள பூவலப்பருத்தி கிராமத்தில் இன்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் ஆதிக்க ஜாதியினர் உள்ள தெருக்களில் செருப்பு அணிந்து நடக்க அனுமதியில்லை. இது போல் தமிழகத்தில் மட்டும் 50 கிராமங்கள். இந்தியா முழுவதும் நம்புங்கள். செவ்வாய்யை தொடுவதில் அமெரிக்காவை இந்தியா வெல்லும் அளவு அறிவியலின் உச்சத்தில் இந்தியா இருக்கும் இந்த 2014லிலும் இந்தியா முழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தீண்டாமையின் பிடியில் இருக்கிறது. இந்த நிலையில். ஹிந்து மதத்தை நாங்கள் தான் காக்கிரோம். ஹிந்து மதத்திற்கு சேவை, இடியாப்பம் செய்கிறோம் என்று சொல்லும் ஒரு உன்னத அமைப்பு இவற்றிற்கு எல்லாம் எதிராக. அந்த பூரியை சேர்ந்த போலி சாமியாருக்கு எதிராக என்ன? செய்தது என்று தெரியவில்லை. ஹிந்துக்கள். ஹிந்துக்களின் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்குங்கள். என்கிற உன்னத வாசகத்தை. திரும்ப, திரும்ப அந்த அமைப்பு சொல்லி கொண்டிருக்கிறது. 1908 லேயே ஒரு தலீத் இளைங்கருக்கு கரபாத்திர சுவாமிகள் துறவர தீட்ஷை கொடுத்தது எவ்வளவு பெரிய புரட்சி.

இவர் பலரது நோய்களை தனது தபோ வலிமையால் போக்கி இருக்கிறார். இவர் போக்கிய உடல் பிணிகளை விட உள்ள பிணிகள் அதிகம். ஒருமுறை இவருக்கு ஆர்த்தி எடுக்கும் பொழுது ஒரு குறும்பு கார பையன் ஆர்த்தி எடுக்கும் கலசத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டான். அனைவரும் அந்த இடத்தை விட்டு நெடி தாங்காது ஓடினர். அந்த பொடியை துவிய் இளைங்கன் முதற்கொண்டு. சுவாமிகள் கண் இமைகளை துளி கூட ஆட்டாமல் அதே இடத்தில் நின்றார். பின்னர் அந்த சிறுவ்ன் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். சுவாமிகள் துறவியாகிய பின் பணத்தை ஒருமுறை கூட கையால் தொட்டதில்லை. எந்த சூழ்நிலையிலும் இவர் யார் மீதும் கோவம் கொண்டதில்லை. ஜாதி, மத பேதம், கோபம், ஆசை அற்றவராய். வேதங்கள் நான்கும் கற்றவராய். விளங்கிய ஒரு மிக பெரிய அத்வைத பிரும்ம ஞானி. ஆதி சங்கர் அவர்களுக்கு மிக பெரிய அளவில் விழா எடுத்தவர் இவர்.


karapathiram sivaprakasa swamikal Address- Samiyar Thottam 1st Street, Vyasar padi. Nearest Land Mark Ambedkar College.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.





2 comments:

  1. வணக்கம்.
    அருமையான தகவல் தொகுப்பு.
    பழனி சாமிகள்னு ஒரு இடத்துல சொல்லி இருக்கீங்க. அவரை பத்திய மேலும் ஏதும் தகவல் இருக்கா.

    ReplyDelete
  2. தங்களின் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி

    ReplyDelete