siddhas

Tuesday, 20 January 2015

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு




8] ஞானியர் கோவில்கள்


தன்னோடு சேர்த்து கொள்ளும் அனைத்தையும் தானாகவே ஆக்கும் சக்தி அக்னிக்கு மட்டுமே உண்டு. அதே போல் தான் ஞானிகளின் ஞானாக்னியும். ஒரு நோயாளி. தனது நோய் ஒரு ஞானியின் அருளால் நீங்கபபட்டது மட்டும் அல்லாமல் அவரை போலவே ஒரு ஞானியாக ஆன கதை பார்ப்போம்.
1900 நவ் எழில் மதுரையில் ஒரு குழந்தை பிறந்தது. பிறந்த இரண்டாவது வயதிலேயே அந்த குழந்தைக்கு தொழு நோய். அனைவராலும் அந்த குழந்தை ஒதுக்கப்பட அது இறுதியாக சென்னைக்கு தனது 13 வது வயதில் வந்தது. சென்னையிலும் வாழ வழி தெரியவில்லை. பலரின் அருவெறுப்பான பார்வை. கடலில் குதித்து உயிரை விட துணிந்த பொழுது ஒரு பெரியவர் அந்த குழந்தையை தடுத்து புகழ்பெற்ற ஒரு ஞானியின் பெயரை சொல்லி அவரை சென்று சந்திக்க சொல்லி செலவிற்கு தேவையான பணத்தையும் கொடுத்து அனுப்பி வெய்த்தார். அந்த சிறுவன் முழு நம்பிக்கையுடன் உடனடியாக அந்த ஞாநி இருக்கும் இடம் நோக்கி பயணம் ஆனான். அந்த ஞாநி அவனது நோய்யை ஸ்பரிச தீட்சை மூலம் அதாவது தொட்டே நோய்யை குணப்படுத்தினார். அதன் பிறகு உனக்கு வேறு என்ன? வரம் வேண்டும் என்று கேட்டார். உங்களை போலவே பிறர் நோய்களை தீர்க்கும் வரம் வேண்டும் என்று அவன் கேட்க. தாம்பூல தீட்ஷையால் அவன் கேட்கும் வரத்தினை கொடுத்தார். அதாவது அந்த ஞாநி தனது வாயில் வெற்றிலையை போட்டு அதை அந்த சிறுவன் வாயில் துப்பினார். இதே போல் ஸ்ரீ தேவி காமாட்சி ஒரு பிறவி ஊமைக்கு தாம்பூல தீட்ஷை கொடுத்து அந்த சிறுவனை பெரிய கவியாகவும், காவியாகவும் மாற்றினார் அவரே கவி காளமேகம். சரி அந்த சிறுவனின் நோய்யை குணப்படுத்தியது மட்டுமல்லாமல் நோய் நீக்கும் சக்தியையும் தந்தது யார் தெரியுமா. சாட்ஷாத் ஷீரடி சாய் பாபாவே தான்.


அதன் பிறகு அந்த சிறுவன் ஞாநி ஆனார். மீண்டும் சென்னை வந்து விபூதியின் மூலமே ஆயிரக்கணக்கானோரின் நோய் நொடிகளை நொடி பொழுதில் குணப்படுத்தி இறைவன் திருவடியில் 1982 இல் கலந்தார். விபூதியின் மூலமே இவர் பிறர் பிணிகளை போக்கியதால் விபூதி பாபா என்று அழைக்கப்பட்டார்.



இவரது சீடர்களில் குறிப்பிடத்தக்கவர். மன்னிக்கவும் சீடி. சாய் மாதா சிவ பிருந்தா தேவி. உலகின் முதல் பெண் மிருதங்க வித்வான். தேவி அவர்கள் காஞ்சி மாமுனியிடம் தீட்ஷை பெற வந்தார். அப்பொழுது அவர் இந்த பிறவியில் உன்னுடைய குரு விபூதி பாபா அவர்கள் தான் என்று கூறி விபூதி பாபாவிடம் தேவியை அனுப்பி வெய்த்தார்.



அடியேன் ஒண்டரை வயது குழந்தையாக இருந்த பொழுது பெயர் தெரியாத ஒரு நோய்யால் பாதிக்கப்பட்டேன். உடல் முழுவதும் உஜாலா போல் நீலமாக ஆகி விட்டது. அன்றைய மருத்துவர்களால் அந்த நோய்யை கண்டறிய முடியவில்லை. ஒரு கர்க்கண்டை மந்திரித்து என் வாயில் போட்டு அதை குணப்படுத்தியவர் காஞ்சி மாமுனி. அதன்பிறகு. மூன்று வருடங்களுக்கு முன் என் காலில் இருந்து அடி எதுவும் படாமலயே தோல் உறிந்து ஸீள் வழிந்து கொண்டிருந்தது. விபூதி பாபா அவர்களின் அதிர்ஷ்டானத்திர்க்கு சென்று அவர் அருட் பிரசாதமான விபூதியை பூசி கொண்ட பின் மறுநாளே அந்த இடம் பட்டு போய் எனது நோய் நீங்கியது. விபூதி பாபா அவர்களின் சமாதியிலிருந்து விபூதி இன்றளவும் சிந்தி கொண்டே இருக்கிறது. தினமும் காலை அவர் கோவிலை திறக்கும் பொழுது கிருஷ்ணர் பாதம் போல் விபூதி பாதம் தரிசனம் செய்யலாம். நோய் நீங்க, வேலை கிடைக்க, கடன் தொல்லை தீர, நல்லறிவு என்று தன்னை நாடி, தேடி வருவோர்க்கு இவர் தனது அருளை வாரி வழங்க காத்து கொண்டிருக்கிறார்.


Address- Sri Sai Viboothi Baba Temple
No. 83, First Road, M.C. Nagar,
Chitlapakkam,
Chennai - 600 064
Tamilnadu, India
Contact Person
Shri Nagaraja Baba
Phone: +91 - 44 - 2223 2361
ஞான தேடல் தொடரும்.

No comments:

Post a Comment