siddhas

Tuesday 20 January 2015

ஈடு இணையில்லாத மதுரை சுவாமிகள்









9] ஞானியர் கோவில்கள்

ஒரு மார்க்கெட். அங்கு ஒரு ரௌடி மாமூல் கேட்டு கலாட்டா செய்து கொண்டிருக்கிரான்.. அதை ஒரு சிறுவன் பார்க்கிறான். அவன் நேராக தனது பாட்டியிடம் ஓடி போய் நான் சீக்கிரம் பெரியவன் ஆகனம்னால் என்ன பண்ணனம்னு கேப்பான். அவன் பாட்டி அந்த ஸைகல்ல மிதி. மிதித்தால் நீ பெரியவன் ஆய்டுவனு சொல்வாங்க. அவனும் உடனே ஸைகல் பெடல் மிதிப்பான். ஸைகல் பெடல் சுற்றுவதை க்லோஸ் அப்பில் காட்டுவார்கள். ஷார்ட் கட் பண்ணால் அந்த பையன் பெரியவனாகி அந்த ரௌடியை பந்தாடுவான். ஹீரொக்கள் பண்ணும் ஓவர் பில்ட் அப்களை கிண்டல் அடித்து எடுக்கப்பட்ட தமிழ் படத்தில் வரும் ஒரு மூன்று ஸீன்கள் இது.

சித்தர்களின் பெருமைகள், அதிஸ்டானங்கள் பற்றிய இந்த பதிவில் எதற்கு சினிமா என்று ஆன்மீக அன்பர்கள் நினைப்பது புரிகிறது. பெரம்பூரில் உள்ள ஞானிகள் கோவில்களை பார்ப்பதற்காக அடியேன் பெரம்பூர் சென்றேன். மதுரை சுவாமிகள் என்கிற ஒரு சித்தர் கோவிலின் விலாசத்தை தேடி கொண்டு இருந்தேன். அவர் ஆலயம். பெரம்பூர் வீநஸ் தியேடர் அருகில் என்பதை மட்டும் ஆன்மீக அரசு, தேன் கூடு போன்ற வெப்‌ஸைட்ஸ் மூலம் தெரிந்து கொண்டேன். வீநஸ் தியேடர் அருகில் ஒரு அம்மா பூ விற்று கொண்டிருந்தாங்க. அவுங்ககிட்ட மதுரை சாமி கோவிலிற்கு எப்படி போகணம்னு கேட்டேன். அவுங்க யூ டர்ந் பண்ணி மூணாவது லெஃப்ட் எடுத்து அப்டியே திரும்பி போகணம்னு சொன்னாங்க. அவ்வாறே ஆட்டோவை திருப்பி கொண்டு போக அப்பொழுது எதிரே ஒரு பெரியவர் கண்ணில் பட்டார். வயது ஒரு 65 வது இருக்கும். நெற்றி நிறைய விபூதி. அவரிடம் மதுரை சாமி சித்தர் கோவில் எப்படி போணும்னு கேட்டேன். அவரோ. நான் 40 வருடங்களாக இங்கு தான் இருக்கிறேன். அப்படி ஒரு சித்தர்ரை இங்கு கேள்வி பட்டதே இல்லை என்று சொன்னார். எனக்கு குழப்பமாக இருந்தது. அந்த பூ விக்கர அம்மா ஒருவேளை நம்ப பூ வாங்கணம்னுகர்த்துக்காக இல்லாத ஒரு இடத்திற்கு வழியை காட்டி விட்டாங்களோ என்று எனது அர்ப்ப மனித புத்தி நினைத்தது. மேலும் அங்கு ஒரு இரண்டு, மூன்று பேரிடம் கேட்டு யாருமே வழி சொல்லாது போக. சரி. இதே ஏரியாவில் நமது பட்டியலில் இருக்கும் மற்ற ஞானிகள் கோவில்களை பார்க்கலாம் என்று முடிவு செய்து வண்டியை திருப்பி வரும் வழியில் ஒரு டீ கடை வாசலில் மூன்று பேர் சீட்டு ஆடி கொண்டிருந்தனர்.அதில் ஒருவர் முரட்டு தனமான தோற்றம் உடையவராய் இருந்தார். ஆட்டோ ட்ரைவர் வண்டியை நிறுத்தி அந்த கூட்டத்திடம் அட்ரெஸ் கேட்டார்.

சிவ பழமாக உள்ள அந்த பெரியவருக்கே தெரியல. இந்த கூடடத்துகிட்ட போய் இவர் கேட்கறாரே. இதை தவிர வேறு க்ரூப்பே கிடைக்கலையா என்று என் மனத்தில் நினைத்து கொண்டிருக்கும் பொழுது. நீங்கள் போக வேண்டிய கரெக்ட்டான அட்ரெஸ் சொல்லுங்க என்று முரட்டு தனமான தோற்றம் உடைய அவர் ஆட்டோ ட்ரைவர்ரிடம் கேட்க்க. நாங்கள் போக வேண்டியதே அந்த அட்ரெஸ் தான் என்று ஆட்டோவில் இருந்தவாறே அடியேன் சொல்ல. அவர் ஆட்டோ கிட்ட வந்து என் முகத்தை சில நொடிகள் உற்று பார்த்தார். நீங்க எந்த ஏரியாலேந்து வரீங்கனு அவர் கேட்டார். நங்கநல்லூர் என்று அடியேன் பதில் சொல்ல. நங்கநல்லூர்ரில் இருந்து பெரம்பூர்க்கு. அதுவும் இந்த ஒரு சித்தர் கோவில் பார்ப்பதர்க்கா நீங்க ஆட்டோல வந்தீங்கனு அந்த நபர் கேட்டார். இதே போல் ஐந்து சித்தர்கள் கோவில்கள் இந்த ஏரியாவில் மட்டுமே பார்க்க வேண்டி உள்ளது என்று சொல்லி அவரிடம் பிரிண்ட் எடுத்த பேப்பரை காட்டினேன். என்னை பற்றியும், என் நோக்கத்தை பற்றியும் அவரிடம் சொன்னேன். அவர் உடனே நானும் எனது நண்பர்களும் ஆட்டோவில் வரலாமா என்று கேட்டார். நானும் மிக்க மகிழ்ச்சியுடன் தாராளமாக வரலாம் என்றேன். பின்னர் ஆட்டோ நேராக அந்த மதுரை சித்தரின் கோவிலுக்கு சென்றது.

அப்பொழுது அந்த சித்தர் உறையும் மூலஸ்தானம் பூட்டப்பட்டு இருந்தது. என்னுடன் வந்த மூன்றில் ஒருவர் சற்று வயதானவர். அவர் வீடும். அந்த சித்தரின் கோவிலுக்கு பின்புறம். சம்பந்தப்பட்ட நபரை வர வெய்த்து அதை திறக்க ஏற்ப்பாடு செய்தார். அப்பொழுது மணி ஏழு கூட ஆகவில்லை. நல்ல ஒரு அதிர்வலையை அங்கு என்னால் உணர முடிந்தது. அந்த ஞானியர் கோவிலில் பூஜை செய்யும் பெரியவருக்கு வயது 80. அவரிடம் இந்த மதுரை சுவாமிகள் வரலாற்றை சொல்லுங்கள் என்று அடியேன் கேட்க்க. எனக்கு எதுவும் தெரியாது என்று பல இடங்களில் கேட்ட அதே பதிலை அங்கும் கேட்டேன். அந்த சித்தர் பெருமான். உனக்கு என்ன. என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தானே. வீட்டிற்கு போ. தானாக தெரிந்து கொள்வாய் என்று எனது மனத்தின் கண் சொன்னதை போல் இருந்தது. அங்கிருந்து ஒரு எல்லையில்லா ஆனந்தத்துடன் நகிர்ந்தேன்.

இதில் தமிழ் படம் பற்றி எதற்காக குறிப்பிட்டு இருந்தேன் தெரியுமா. அந்த படத்தில் மார்க்கெட்டில் மாமூல் கேட்டு அடாவடி பண்ணும் கதாபாத்திரத்தில் நடித்த Austin மற்றும் அவரின் நண்பர்களால் தான் அடியேனால் மகத்துவம் மிகுந்த மதுரை சுவாமிகளின் உயிர்நிலை கோவிலை தரிசிக்க முடிந்தது. வெறும்ன அவர்கள் லெஃப்ட் எடுத்து, ரைட் போனு சொல்லாமல் கூடவே வந்து அவரை தரிசனம் செய்வதற்கும் ஏற்ப்பாடு செய்தார்கள். [எதையும் எதிர் பார்க்காமல்]

மதுரை சாமிகள் அதிஸ்டானத்தை தரிசித்தேன். ஆனால் அங்கு இருப்பவருக்கு எந்த தகவலும் இவர் சம்பந்தமாக தெரியவில்லை. அவர் வெளியில் உள்ள கல்வெட்டை காட்டி விட்டு நகர்ந்து விட்டார். பின்னர். அவர் சம்பந்தமாக யாரேனும் பதிவு செய்திருக்கிறார்களா என்று தேடிய பொழுது. தமிழ் விரும்பி என்கிற பெயரில் ஒருவர் இவர் சம்பந்தமாக ஒரு அற்புதமான பதிவு செய்துள்ளார். வாருங்கள் அதை பார்கலாம். 

பெரம்பூரில் இருக்கும் மதுரை சாமி சித்தர் சமாதியை பார்க்கத் திட்டமிட்டேன். செம்பியம், வீனஸ் தியேட்டர், 2வது குறுக்குத் தெருவின் வலது பக்கமுள்ள மதுரை சாமி மடத் தெருவில் சமாதி கோயில் இருப்பதை அறிந்து, அக்கோயில் பூசாரி வீட்டைக் கண்டடைந்து, அவர் வீட்டு வாசலில் நின்றேன். “வணக்கம் தம்பி. என் பேரு பாலு முதலியார். ‘பத்திரிக்கையிலிருந்து வருவாங்க. கோயிலைத் திறந்து காட்டுங்க. நாலு ஜனங்களுக்கு சாமி அருள் கிடைக்கட்டும்’னு ஒரு தம்பி வந்து சொன்னாரு. வாங்கப் போகலாம்” என்றபடி, கோயிலுக்கு அழைத்துச் சென்று திறக்கலானார். கோயில் வாசலில் இருந்த நாய் என்னைப் பார்த்து குரைக்கத் தொடங்கியது. அதுசரி... எனக்கு கோயிலைத் திறந்துக் காட்டச் சொல்லி யார் சொன்னது? நான் வருவது எனக்கே ஊர்ஜிதம் இல்லாத போது... பிறகு விசாரிக்கலாம் என்றது பத்திரிக்கை புத்தி.

மதுரையிலிருந்து வந்த சாமியார் என்பதால், இந்தச் சித்தரை மக்கள் ‘மதுரைசாமி’ என்றே பெயர் சூட்டி அழைக்கலாயினர். அப்போது இந்த ஊருக்கு செம்பியம் கிராமம் என்று பெயர். இப்போது கோயில் இருக்கும் இடம் ஏரிக்கரை. இங்கு ஏரிக்கரையில் சலவைத் தொழிலாளிகள் துணி துவைப்பர், இன்னொரு புறம் செங்கல் சூளை வேலை நடக்குமாம். மதுரை சாமி ஊருக்குள் சென்று வீடுவீடாக உணவை யாசகம் கேட்டு வாங்கி வந்த சாதங்களை மொத்தமாக கிளறி சலவைத் தொழிலாளிகளை கூப்பிட்டு வரிசையாய் உட்கார வைத்து உணவு பரிமாறுவாராம். ‘அக அழுக்கை அகற்றி ஆன்மாவை வெள்ளையாக்கு என குறியீடாய் சொல்லும் குடிமக்களே உண்பீர். உங்கள் பசியில் பகவான் இளைப்பாறுவார்’ என்றபடியே தனது அன்னதான கடமையை தினந்தோறும் செய்வாராம். சாமியின் மதிப்பை சட்டெனப் புரிந்துகொண்ட அந்த ஏழைகளால், மதுரை சாமியின் கீர்த்தி பரவத் தொடங்கியது. எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு ‘ஓம் நமச்சிவாயம்’தான். எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து சிவ திருநீறுதான் என்று சிவ மந்திரத்தை சொல்ல வைத்து அவர்கள் சொன்னதும் திருநீறு அளித்து அவர் நீக்கிய நோய்கள் ஏராளம். அவர் தீர்த்த பிரச்னைகள் தாராளம்.

ஒருநாள் எல்லோரையும் அழைத்து “என்னை சிவன் அழைக்கிறான். 6X6 குழி வெட்டுங்கள். நான் குழியில் உட்கார்ந்ததும் துணி வெளுக்க பயன்படுத்தும் சாலை என் மேல் கவிழ்த்து மண்ணை மூடிவிடுங்கள்” என்றாராம். அதனை உத்தரவாக ஏற்று செய்தார்களாம். அவர் ஜீவ சமாதி அடைந்தது ‘1901ஆம் வருடம், பிப்ரவரி தமிழ் சார்வரி - மாசி மீ - 8 மங்கள வாரம் காலை - அமாவாசை திதி, சதய நட்சத்திரம் கூடிய சுபதினத்தில்’ என்று கல்வெட்டு குறிப்பு சொல்கிறது.

“ஏரிக்கரையோரம் சூளை தொழில் செய்துவந்த மு.வேலு நாயக்கர் என்பவர், தனது சூளையிலிருந்து கல்கொடுத்து 1906ல் இந்தக் கோயிலைக் கட்டினாராம்” என்றார் பூசாரி பாலு. கொஞ்சம் அமைதியாய் என்னைப் பார்ப்பதும் பிறகு குலைப்பதுமாக இருந்தது அந்தக் கோயிலில் இருந்த நாய்.

“இது சக்தி வாய்ந்த சாமிங்க. ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் ஜனங்க வருவாங்க. லிங்கம் பிரதிஷ்டை செஞ்சிருக்கும் சாமி சமாதிக்கு பாலாபிஷேகம் பண்ணுவாங்க. ரொம்ப நாளா குழந்தை இல்லாதவங்களும் படிச்சு சரியான வேலையில்லாதவங்களும் வருவாங்க. இல்லாததை தர்றதில் இவருக்கு ஈடு இல்ல” என்று சித்தர் மதுரை சாமியின் பெருமை பேசினார் சித்தரின் பக்தை ஜோதி.

110 வருடம் பழமை வாய்ந்த சித்தரின் சமாதியில் தரிசனம் செய்வது பெரும் பேறு. விபூதி பூசி, ‘வஞ்ச நமன் வாதனைக்கும் வன் பிறவி வேதனைக்கும் அஞ்சி உனை அடைந்தேன். ஐயா! பராபரமே’ என்று தாயுமானவர் வேண்டியதையே நானும் வேண்டி கிளம்பினேன். விபூதி பூசிய என் முகம் பார்த்ததாலோ என்னவோ, அந்த நாய் குரைப்பதை விட்டுவிட்டு என் பின்னாலேயே வந்தது.

எனக்கு இந்த பைரவர்கள் மீது கொஞ்சம் பயம். திரும்பி திரும்பி பார்த்தபடியே வந்தேன். அனைவருக்கும் நன்றி சொல்லி, அடுத்த சித்தரைப் பார்க்கக் கிளம்பினேன். பாதி வழியில், ‘அடடா எனக்கு உதவ பூசாரியிடம் சொன்ன அந்த நபர் யார் என கேட்காமல் விட்டோமே என்ற எண்ணம் ஓடியது. பூசாரியும் ‘ஒரு தம்பி’ என்றுதான் சொன்னார்.

ஆக அவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அது, ‘யாரோ ஒரு தம்பி’யாக இருக்காது. எல்லாம் அறிந்த தம்பிரானோ?

இவர் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த என்று குறிப்பிட்டு உள்ளதை வெய்த்து பார்க்கும் பொழுது. நான்கு வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறார் என்பது தெரிகிறது. அடியேன். சில நாட்களுக்கு முன் இங்கு சென்ற போதும் பைரவர் என்னை வரவேற்றார். குலைத்து கொண்டே பின்னோக்கி நகர்ந்த பைரவரை இங்கு தான் கண்டேன். சரி இவர் சமாதிக்கு எவ்வாறு செல்வது.

பெரம்பூர் ஏரியா வாசிகள் யாரை கேட்டாலும் வீநஸ் தியேடர் எங்கு இருக்குனு சொல்லிடுவாங்க. வீநஸ் தியேடர் அருகே வந்து மதுரை சாமி மடம் எப்படி போணும்னு கேட்டால் யாரை கேட்டாலும் சொல்வார்கள். அதாவது. மதுரை சாமி மடம் தெரு. சுவாமிகள் பெயராலேயே தெரு இருக்க. அந்த தெரு வாசிகளிடம் மதுரை சித்தர் சமாதி எப்படி போக வேண்டும் என்று கேட்டால் எனக்கு கிடைத்த பதில்கள். அப்படி இங்கு எதுவும் இல்லவே இல்லை, கிடையவே கிடையாது, 40 வருடங்களாக இங்கு இருக்கற எனக்கு தெரியாதா.

அந்த தெரு வேறு சற்று பெரிய தெரு. இரண்டு, மூன்று வளைவுகள் வளைந்து போகும். சுலபமாக நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றால். முதலில் சித்தர் சமாதி என்று கேளுங்கள். அப்படி ஒன்னு இங்க இல்லவே இல்லை, கிடையவே கிடையாது என்று சொன்னால். இந்த தெருவில் ஒரு கோவில் இருக்குமே. சிவன் கோவில். அது எங்க என்று அதே நபரை கேட்டால் சொல்லி விடுவார். அந்த நபரிடம் பின் அந்த சிவன் கோவில் தான் சித்தர் சமாதி என்று நீங்கள் விளக்க முயற்சித்தால் 30 வருடமாக நான் இதே தெருவில் இருக்கேன், 40 வருடமாக இதே தெருவில் இருக்கேன். எனக்கு தெரியாதா என்பதை போன்ற பதில்கள் வரலாம். அங்கு முலஸ்தானம் பூட்டியே இருக்கும். யாரேனும் தரிசிக்க வந்தால் மட்டுமே திறப்பார்கள். மதுரை சாமி மடம் தெருவில் நுழைந்து லாஸ்ட் ரைட் எடுத்தால். ரைட்ல ஒரு டௌந் வரும். அங்கு இந்த சித்தர் அதிஸ்டானம் உள்ளது. 


No comments:

Post a Comment