13] ஞானியர் கோவில்கள்
முன்பொரு காலத்தில் இயற்கை சீற்றத்தினால் மழையும், புயலும் மாங்காடு பகுதி முழுவதையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. அந்த சமயத்தில் காள ஹச்த்தியிலிருந்து ஒரு சித்தர் இங்கு வந்தார். பூமிக்கு அடியில் 108 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து. தனது தவத்திற்கு இடையூறு வர கூடாது என்று உடலை பாம்பு புற்றால் மூடி கடும் தவம் செய்யலானார். பின்னர் இப்பகுதி அமைதியான இடமாக ஆனது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆன்மிகப் பெரியவர்கள் ஆராய்ந்த போது அங்கே மிகவும் பெரியதாக ஒரு லிங்க வடிவில் ஒரு கல் தென்பட்டுள்ளது. இங்கே தான் ஸ்ரீ சர்ப சித்தர் ஜீவ சமாதி அடைந்து உள்ளார். அந்த கல் பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்தும் பூதக்கல் என்றும் தெரியவந்துள்ளது. அந்த லிங்கத்தின் மீது இடது புறத்தில் பிறை வடிவமும், வலது புறத்தில் சூரியன் வடிவமும், லிங்கத்தின் மத்தியில் யோகச் சக்கரமும், பிரணவ மந்திரம் பொறிக்கப்பட்டு உள்ளது. பஞ்ச பூதங்களை குறிக்கும் விதமாக ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு அந்த லிங்கத்தின் மீது உள்ளது. இங்கே சமாதியாகியுள்ள இந்த சித்தர் வடக்கு நோக்கி சமாதி அடைந்து உள்ளார். இவரது காலம் அறுதியிட்டு கூறமுடியாத அளவுக்கு மிகவும் பழமையானதாகும். சர்ப சித்தர் ஜீவசமாதியாகி, பூதக்கல் உருவாகி 1200 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆதிகாலத்தில் இந்த பூதக்கல்லைப் பார்த்து மக்கள் அச்சமுற்று அப்பகுதி வழியே செல்வதை தவிர்த்துள்ளனர். இதனால் அப்பகுதி புதர் மண்டி காடு போல மாறி, பூதக்கல்லைச் சுற்றி புற்று உருவாகியிருந்துள்ளது. அதன் அருகே செல்பவர்களுக்கு சர்ப்பங்கள்(பாம்புகள்) சீறும் ஓசை கேட்கவே பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்வதைத் தவிர்த்துள்ளனர். காலப்போக்கில் அப்பகுதியில் பூதக்கல் இருப்பதையே மக்கள் மறந்து விட்ட நிலையில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் ஒரு ரியல் எஸ்டேட் கம்பனி இந்த பூத கல் அருகே ப்லாட் போட அதை வாங்கியவர்களில் ரவி சந்திரன்னும் ஒருவர். சித்தர் அடிகளார் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் கனவில் வந்த சர்ப சித்தர், அசரரீயாக சில தகவல்களைக் கூறி, தான் ஜீவ சமாதி அடைந்துள்ள இடத்தையும், அடையாளத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சித்தர் அடிகளார் பல்வேறு கடுமையான சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும் இடையே சித்தரின் அருளால் ஜீவசமாதி அமைந்திருக்கும் பகுதியை சுத்தம் செய்து, பூஜைகள் செய்து வழிபட்டு வரலானார். அப்பொழுது அதற்க்கு எதிராக சில குண்டர்கள் இடையூறு செய்ய முயற்ச்சி செய்ய. இந்த சித்தரின் பேராற்றல் முன் அது எதுவுமே எடுபடாமல் போனது. பின்னர் படிப்படியாக சர்ப சித்தருக்கு கோவிலும் கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் இவரது லிங்கம் இடப்புறம் மற்றும் வலப்புறமாக சாய்வது சிறப்பு. இங்கு சென்று வந்தால் நல்ல மாற்றங்களும் திருப்பங்களும் வரும் . முக்கியமாக ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்த சித்தர்ரை தரிசிப்பது. மிக, மிக நன்று. இவருக்கு ஒரு வேஷ்டி. அல்லது மாலை, இரண்டும் முடியவில்லையா. பக்தியுடன் இரு கரங்களையும் கூப்பி வணங்கினாலே போதும். பொதுவாக வியாழன் அன்று சித்தர்கள் தரிசனம் மிக நன்று. பௌர்ணமி மிக, மிக நன்று. வியாழன் அன்று வரும் பௌர்ணமியாக இருந்தால் அன்று நாம் செய்யும் சித்தர் தரிசனம். அதுவும் இது போன்றதொரு சித்தரை நாம் தரிசனம் செய்து அதனால் கிடைக்கும் பலன் பற்றி விவரிக்க உலகில் உள்ள எந்த மொழியிலும் வார்த்தை இல்லை. அடியேனுக்கு அத்தகைய பெரும் பேரு இந்த மாதம் நவெம்பர் 6 இல் கிடைத்தது. அதுவும் திட்டமிட்டு அவ்வாறு செல்லாமல் தற்செயலாக எனக்கு இந்த பெரும் பேர் கிட்டியது.
தொடர்ந்து 15 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி தினத்தில் திருவிளக்கு பூஜையும், மகா சிவராத்திரி தினத்தன்று ஆறு கால பூஜையும், பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை தினங்களில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பரிகார பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இதில் மகாசிவராத்திரி அன்று நிறைவு பூஜையின் போது, பக்தர்களே நேரடியாக தங்களின் திருக்கரங்களால் சர்ப சித்தர் உறைந்திருக்கும் ஜீவ பீடமான பூதக்கல்லிற்கு அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசியைப் பெற்றுச் செல்கின்றனர். சித்தர் அடிகளார் திரு. ஜி.டி. ரவிச்சந்திரன் , சகல கிரக பீடை விலகவும், கல்வி, குழந்தைப் பேறு, திருமணம் கைகூட, சர்ப (நாக) தோஷம் விலக, நோய் குணமடைதல், திருஷ்டி, பித்ருக்கள் சாபம், சித்தர்கள், முனிவர்கள் சாபம் நீங்கவும், குடும்ப ஒற்றுமை, கணவன் மனைவி பிணக்கு நீங்கி நல்வாழ்வு வாழவும் இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலனளிப்பதாக இங்கு வந்து பயனடைந்த பக்தர்கள் கூறுவதை நாம் கேட்கலாம். பல்வேறு அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், முக்கிய அதிகாரிகள், திரை நட்சத்திரங்கள் இங்கு வந்து வேண்டி, அவர்களின் பிரார்த்தனை பலித்துள்ளதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். நேரில் சென்று தரிசிப்பவர்களுக்கு அது உண்மைதான் என உணரமுடிகிறது. நல்ல ஆன்மிக அதிர்வுகளை உணரலாம். சர்ப சித்தர் குடிகொண்டுள்ள பூதக்கல் பல்வேறு சூட்சும ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தொடர்ந்து இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அந்த ரகசிய சூட்சும அனுபவங்கள் கிடைத்துள்ளன. குரு கடாட்சம் பெற்றவர்களுக்கும், இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் சதா தவ நிலையில் இருக்கும் சர்ப சித்தரின் சகல அனுக்கிரகமும், தெய்வீக அனுபவங்களும் கிடைத்துள்ளன. ஸ்ரீசர்ப சித்தர் யாரிடமும் நன்கொடை, யாசகம் பெறாமல் சித்தரின் அருளாசியுடன் சர்ப சித்தர் ஜீவ பீடத்தை பராமரித்து, பூஜைகளும், நிகழ்ச்சிகளும், விழாக்களும், பவுர்ணமி அன்று அன்னதானமும் வழங்கி, இறைப்பணியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார் சித்தர் அடிகளார் திரு. ஜி.டி. ரவிச்சந்திரன். இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், மன அமைதி பெறவும், பிரச்சனைகள் தீரவும், நல்ல அதிர்வுகள் மூலம் நமக்கெல்லாம் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் சர்ப சித்தர். ஆன்ம பலத்தை அளிக்கவல்ல அதிர்வலைகள் நிரம்பிய சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தை தரிசனம் செய்து சித்தர்களின் அருளாசியை பெறுங்கள். தொடர்புக்கு: சித்தர் அடிகளார் திரு.ஜி.டி.ரவிச்சந்திரன், சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், கோவிந்தராஜ்
நகர், மாங்காடு. கைப்பேசி எண்.9789826263.
இது மாங்காடு அம்மன் கோவிலில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிந்த ராஜபுரத்தில் உள்ளது. பஸ் வசதி மாங்காடு கோவிலில் இருந்து இல்லை. ஆட்டோ வசதி உள்ளது.
சென்ற அக்டோபர் மாதம் 15 அன்று. இந்த பாரத தேசத்தில் உள்ள அனைத்து ஞானிகளின் சமாதிகளையும் அதிலும் குறிப்பாக உயிர்நிலை கோவில்களான ஜீவ சமாதிகளை தரிசிக்க வேண்டும் என்பது எனது நான்கு வருட ஆசை என்று சொல்லி சென்னையில் எனக்கு தெரிந்த ஒரு பத்து சித்தர் பீடங்கள் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு சென்னையில் உள்ள என் பட்டியலில் இல்லாத ஞானியர் கோவில்கள் உங்களுக்கு ஏதேனும் தெரியுமானால் அதை எனக்கு தெரியப்படுத்துங்கள் என்று சித்தர் அறிவியல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டேன்.
அந்த பதிவில் comment மூலம் சர்ப்ப சித்தர் பற்றி எனக்கு தெரியப்படுத்திய திரு boopathy Sreedharan அவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment