siddhas

Wednesday, 28 January 2015

ஆலயம் என்றால் என்ன?


 ஒரு பழமொழி ஒன்று உண்டு. குதிரைக்கு தண்ணீர் தான் வெய்க்க முடியும். அதை குடிக்க வெய்க்க முடியாது. குடிக்கும் வேலையை குதிரை தான் செய்ய வேண்டும். 

   வெரும்ன கோவிலுக்கு போனோமா, சாமியை கும்பிட்டோமா. பிரசாதத்தை வாங்கினோமானு வந்துட கூடாது. சிவன், கோவிலாக இருந்தாலும், விஷ்ணு கோவிலாக இருந்தாலும், எந்த கோவிலாக வேண்டுமானாலும், எந்த மதத்து வழிபாட்டு ஸ்தலமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சிறிது நேரம் அமர்ந்து மனத்தை ஒருமுகபபடுத்த பழக வேண்டும். ஆலயங்கள் என்பது பல ஞானிகளின் காலடி பட்ட இடம். அதற்க்கே ஒரு தனி சக்தி உண்டு. கோவிலுக்கு நல்லவர்களும், கோர்ட்க்கு கெட்டவர்களும் அதிகம் வருவார்கள். நாம் ஆலயத்தில் அமர்ந்து மனத்தை ஒருமுகபபடுத்த முயற்சிக்கும் பொழுது, பலரின் நல்ல என்ன அலைகள் நமது மனதிலே ஊடுருவும். சிலர் நமக்கு எந்த கெடுதலும் செய்து இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களை பார்க்கும் பொழுது நம்மை அறியாமலேயே மனத்தில் வெறுப்பு வரும். காரணம், அந்த மனிதரின் என்ன அலைகள் உங்களை அவ்வாறு வெறுப்படைய  செய்கிறது. 

மிக பிரசித்தி பெற்ற சில ஆலயங்களுக்கு செல்லும் பொழுது நம்மை அறியாமலேயே மனம் சற்று அமைதி பெறும். அடுத்த சில நிமிடங்களில் விவேக் காமெடீ போல், புதிதாக வாங்கிய செருப்பில்  இருந்து ஆரம்பித்து, வீட்டில்  ஊசி போன பருப்பு வரை, பொறுப்பே இல்லாமல் நமது மனம் எதை, எதையோ நினைக்கிறது. மனம் ஒரு குரங்கு  என்பார்கள் சிலர், மனம் குதிரையை விட வேகமாக ஓட கூடியது என்பார்கள் சிலர். மனத்தை விட வேகமாக ஓட கூடிய ஒரு ராக்கேட்டை இதுவரை எந்த நாட்டு விஞ்ஞானியும் கண்டு பிடிக்கவில்லை. இனிமேலும் கண்டு பிடிக்க முடியாது. ஒலியின், ஒளியின் வேகத்தை விட மனோவேகம் அதீத வேகம் வாய்ந்தது. 

 மனம் ஒரு சிறந்த வேலைக்காரன். ஆனால்? மோசமான எஜமானன். நீங்கள் வண்டி ஒட்டும் பொழுது உங்கள் கட்டுப்பாட்டில் நீங்கள் ஒட்டும் வண்டி இருக்க வேண்டும். வண்டி கட்டுப்பாட்டில் நீங்கள் இருந்தால். மனத்தை போல் அதீத வேகத்தில் இயங்க கூடிய வாகனம் அகில உலகங்களில் எங்குமே இல்லை. அதை மனித சக்தியால் கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று. உங்கள் மனத்தை இறைவனோடு இரண்டற நீங்கள் கலந்தால் அடுத்த நொடியே உங்கள் மனம் இறைவன் கட்டுப்பாட்டில் வந்து விடும். உங்கள் மனத்தை கட்டுப்படுத்தும் சாரதி இறைவனே. 

 நீங்கள் ஆலயத்திற்குள் இருக்கும் பொழுது உங்களுக்கு தேவையற்ற எண்ணங்கள் வந்தால், நீங்க்ள் அந்த எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். தேவையில்லாத ஃபோந் கால் வந்தால் அதை அடர்ந் பண்ணாமலேயே கட் பண்ற மாதிரி, தேவையில்லாத எண்ணங்களை கட் பண்ணுங்க. உங்கள் மனத்தில் கடவுளின் உருவத்தை மட்டுமே நினையுங்கள். எந்த கடவுள் உங்களின் இஷ்ட தெய்வமோ அந்த கடவுளின் உருவத்தை உங்கள் மனக்கண் மூலம் கொண்டு வந்து தியானம் செய்யுங்கள்.  
ஆலயம் என்பது ஆனந்த பிரவாகம் சுரக்கும் இடம். அங்கு நீங்கள் மனத்தை ஒருமுகபபடுத்த முயன்றால் மற்ற இடங்களில் நீங்கள் தியானம் பழகுவதற்கும், ஆலயங்களில் தியானம் பழகுவதற்கும் உள்ள வித்யாசத்தை உணரலாம். அதிலும் முதன் முறையாக தியானம் பழகுபவர்கள் ஆலயத்தில் தியானிக்கும் பொழுது, உங்கள் ஆன்மா எளிதாக லயப்படும், வயப்படும், புரியாத பல ஆழ்மன சூட்சுமங்கள் புலப்படும். அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆத்மார்த்தமாக நீங்களாகவே உணர்ந்தால் தான் உண்டு.

நம்முடைய ஆன்மா லயப்படும் இடமே ஆலயம். அதிலும் பல நூறு ஆண்டுகளாக பூஜை நடக்கும், மிக புராதனமான ஆலயங்களில் நாம் அதிக, அதீத, தெய்வீக அதிர்வலையை உணரலாம். 



 ஓம். தத், சத். 

2 comments:

  1. Thanks for the details Prasad. very good article.

    ReplyDelete
  2. Thanks krishna prasad. Nice information interesting to read. .. Nice

    ReplyDelete