siddhas

Tuesday 20 January 2015

ஒரு நாள் நீதிபதி.




2] ஞானியர் கோவில்கள்



இவர் யார், எந்த ஊர். இவரை சார்ந்தவர்கள் எதுவும் தெரியவில்லை. இவர் அதிகம் பேச மாட்டார். எப்பொழுதாவது சில சொற்கள் பேசுவார். சென்னை ஐகோர்ட்டில் பங்கா இழுக்கும் பணியாளராக இருந்தார்.


அது என்ன பங்கா?


fan என்கிற ஒன்று வரும் முன் நீதிமன்றம், கவர்நர் மாளிகை போன்ற இடங்களில் துணியினாலான விசிறி தொங்கும் அந்த துணியோடு ஒரு பெரிய கயிறு கட்டப்பட்டு அந்த கயிரின் நுனியை ரூம்க்கு வெளியே உள்ள ஒருவன் பிடித்து ஆட்ட அந்த துணி விசிறி வேகமாக சுத்தும். சுருக்கமாக சொல்ல போனால் இது சற்று நவீனப்படுத்தப்பட்ட சாமரம். அந்த வேலையை செய்து கொண்டிருந்தவர் தான் இந்த அப்புடு சுவாமிகள் அவர்கள். ஒரு நாள் ஒரு வெள்ளை கார நீதிபதி ஐகோர்ட்டில் உள்ள சொலிஸிட்டர் ரூமிலிருந்து வெளியே வர அப்புடு சுவாமிகள் கண்ணை மூடி கொண்டு தியானத்தில் அமர [ஒரு குறிப்பிட்ட புத்தகத்தில் வக்கீல் என்று போட்டிருக்கிறது அது தவறான தகவல்] அப்புடு சுவாமிகள் தூங்குவதாக நினைத்து அந்த துறை முதலில் கோவப்பட்டார். பின்னர் அவர் கை அசையாமலே அந்த பங்கா மிக வேகமாக சுற்றுவதை நினைத்து ஆச்சரியப்பட்டார். அப்புடு சுவாமிகள் தியானம் கலையும் வரை அவர் காத்திருந்து பின்னர் இன்று ஒரு நாள் எனக்கு பதிலாக நீங்கள் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று அவரை மிகவும் மன்றாடி கேட்டு கொண்டார். அவர் வேண்டுகோளை ஏற்று அவர் ஒருநாள் நீதிபதியாகி பின்னர் சாமரம் வீசும் தனது பணியிலிருந்தும் ஓய்வு பெற்று துறவியானார்.
இவரை பற்றிய தகவல்கள் இவ்வளவே அடியேனுக்கு கிடைத்து உள்ளது. பெரும்பாலும் ஞானியர் கோவில்களை பராமரிப்போருக்கு அது குறித்து விரிவாக எதுவும் தெரிவதில்லை. புத்தகங்களும் அங்கே விற்க்க மாட்டேன் என்கிறார்கள். அப்புடு சுவாமிகள் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வு எந்த? வருடத்தில் நடந்தது. இவரை ஒருநாள் நீதிபதியாக ஆக்கிய அந்த நீதிபதி யார்? போன்ற விவரங்களை தேடி கொண்டிருக்கிறேன். இதுவரை கிடைக்கவில்லை.




நேற்று பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் அவர்கள் செய்த அதிசயங்கள், அற்புதங்கள் ஆகியவற்றை பார்த்தோம் அல்லவா. அவர் சென்னை வந்த பொழுது அவர் அழைப்பை ஏற்று அப்புடு சுவாமிகள் பாடகச்சேரி சுவாமிகள் இருப்பிடத்திற்கு வந்தார். இருவரும் உருவத்திலிருந்து அறுஉருவமாக ஆனதும் ஒரே இடத்தில் தான். நேற்று பாடகச்சேரி சுவாமிகளின் சீடர் அப்புடு சுவாமிகள் என்று அடியேன் குறிப்பிட்டேன். சித்தர், சிவம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் உடைய சாஹிப் என்னும் எனது நண்பர் பாடகச்சேரி சுவாமிகள் அவர்கள் அப்புடு ஸ்வாமிகளை நட்பு ரீதியாக அழைத்தார். இருவரும் நண்பர்கள் போல் தான் பழகினர். குரு, சிஷ்யனாக அல்ல என்றார். அந்த சாஹிப் அவர்கள் ஃபேஸ் புக்கில் இல்லை. அது அவருக்கு பிடிக்காத ஒன்று. அடியேன் செய்யும் பதிவுகளை அவருக்கு மெயில் செய்வேன். பெரும்பாலும் நாங்கள் நேரிலும், தொலைபேசியிலும் சித்தர்கள் சம்பந்தமாக ஒருவருக்கொருவர் கருத்துககளை பரிமாறி கொள்வோம்.




Address- Pattinathar Samathi Kovil Street this street is opposite to pattinathar kovil. Ct person Arumukam Ayya. - 9445796034
நாளை நாம் பார்க்க போகும் சித்தர். நாளை வரை எதையும் கேட்காமல் மௌனமாக இருங்கள்.
ஞான தேடல் தொடரும்.


No comments:

Post a Comment