siddhas

Saturday, 31 January 2015

நவ கோள் மகிழ்ந்து நம்மை வலம் செய்திடும்




மொத்தம் 21 வகை பிரதோஷங்கள் உண்டு. அவற்றையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

  1]தினசரி பிரதோஷம் :

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. பட்சப் பிரதோஷம் :
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்]  செய்வது உத்தமம் ஆகும்.
3. மாதப் பிரதோஷம் :
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை]  செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம் :
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம் :
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப் பிரதோஷம் :
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7.தீபப் பிரதோஷம் :
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர  கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு  ஈசன் ஈடு இணையில்லா  அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம் :
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர்,  சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.
10. உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11] சந்திரன் - மனோ காரகன்.... சந்திரன் பலம் இழந்து ஜாதகத்தில் இருக்க , அவருக்கு சந்திர தசை நடக்கும்போது - சிலருக்கு புத்தியே பேதலித்து விடுகிறது.  ந்திர தசை - சனி புக்தி   அல்லது சனி தசை - சந்திர புக்தி -  இரண்டும் - அவ்வளவு மோசமான நேரங்கள் . எந்த நேரமும் அடியவர்களுக்கு நல்ல நேரமே. நவ கோள்களும் நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல அடியார்க்கு மிகவே என்னும் சம்பந்த பிரான் வாக்கிற்கிணங்க நீங்கள் சோம வார விருதம், சோம வார பிரதோஷ விருதம் இரண்டையும் கடை பிடியுங்கள். அதன் பின் சனி உட்பட எந்த கோளாலும் உங்களை பிடிக்க முடியாது. கோளறு பதிகம் சொல்லி ஈசனை 9 முறை தினமும் வலம் செய்யுங்கள். பின்னர்  நவ கோள்  மகிழ்ந்து நம்மை வலம் செய்திடும்  உனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டும் என்று கேட்கும்.  நவ கோள் உட்பட அண்டத்தில் உள்ள யாவும் அரனின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்குபவையே. 


12. ஏகாட்சர பிரதோஷம் :
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின்னர்  ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
13. அர்த்தநாரி பிரதோஷம் :
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
14. திரிகரண பிரதோஷம் :
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
15. பிரம்மப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம்.  இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
16. அட்சரப் பிரதோஷம் :
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
17. கந்தப் பிரதோஷம் :
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
18. சட்ஜ பிரபா பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
19. அஷ்ட திக் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
20. நவக்கிரகப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
21. துத்தப் பிரதோஷம் :
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும். 


இதில் நீங்கள் ஏதேனும் ஒருவகை பிரதோஷ விருதம் கடை பிடித்தாலும், அனைத்து பிரதோஷ விருதங்களையும் கடைப்பிடித்தாலும் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று அதை சிந்தை மகிழ நீங்கள் கடைபிடித்தால் முந்தை வினைகள் அனைத்தும் நீங்கும். அஷ்ட லக்ஷ்மிகளும் உங்கள் இல்லத்தில் வாசம் செய்வார்கள். கஷ்டங்கள் யாவும் விலகும். அனைத்து தோஷங்களும் பிரதோஷ விருதத்தால் நீங்கும். ஆனால் ஒரே ஒரு தோஷம் மட்டும் அதனால் நமக்கு வரும். அது, சந்தோஷம் ஆகும். 

தென்னாடுடைய  சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

Friday, 30 January 2015

தேவி துர்கையே, ஜெய தேவி துர்கையே



துர்க்கை வழிபாட்டில் நவதுர்க்கை வழிபாடு பிரசித்தமானது. நவ துர்க்கைகளையும் வெவ்வேறு வடிவங்களில், பெயர்களில், குறிப்பிடுகிறார்கள்.

1]சைலபுத்ரி  
2]பிரம்மசாரிணி  
3]சந்திரகாந்தா 
4]கூஷ்மாண்டா 
5] ஸ்கந்தமாதா  
6] காத்யாயனி  
7]காளராத்திரி 
8]மஹாகௌரி 
9] சித்திதாத்ரி,

 என்ற நவ வடிவங்களாகவும் 

1]வனதுர்கை 
2]சூலினி துர்கை  
3]ஜாதவேதோ துர்கை 
4]சாந்தி துர்கை  
5]சபரி துர்கை  
6] ஜ்வாலா துர்கை 
7] லவண துர்கை  
8] தீப துர்கை  
9] ஆசுரி துர்கை 

 என்று மற்றொரு வகை நவ வடிவங்களாகவும், நவதுர்கா தேவியர் அறியப்படுகிறார்கள். 

 
நவ துர்கைகளும் ஒன்றிணைந்த மஹா துர்கையாக பட்டீஸ்வரத்திலே எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ துர்கை காட்சியளிக்கிறாள். அதே போல் நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேவி துர்க்கை எட்டு கரங்களுடன், எட்டு அடி உயரத்தில், ரத, கஜ, துரக பதாதிகள் சூழ, ராஜ கம்பீரத்துடன் காட்சியளிக்கிறாள். தொடர்ந்து 9 வெள்ளி அல்லது ஞாயிறு மாலையிலே, மாலை சூடி. பூமாலை முடிந்தால் சூடலாம், இல்லை பாமாலை சூடலாம். வழிபாடு செய்தால் நமது துன்பங்கள் அனைத்தும் துர்க்கை அருளால் தூள், தூளாக ஆகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. உண்மையும் கூட. 

 சுமார் 55 வருடங்களுக்கு முன். குளக்கரையில்   ஒரு கல்லிலே,  மக்கள் துணி தோய்த்து கொண்டிருந்தார்கள். 


 

அப்பொழுது அந்த இடத்திற்கு ஒரு மிக பெரிய ஞானி வந்தார். அதை கண்டு அதிர்ந்தார். இது துணி தோய்க்கும் கல் அல்ல, அர்த்தநாரீஸ்வர லிங்கம். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, அதீத சக்தி உடைய மூர்த்தம் இவர். 

 ஒரு காலத்தில் இந்த நங்கைநல்லூர் தர்பை காடாக இருந்தது. பிருங்கி முனிவர் முதலான பல முனிவர்கள் வழிபட்ட பதி இது. இவருக்கு உடனடியாக ஒரு ஆலயத்தை எழுப்புங்கள். அதன் பின் நங்கை வாழ் மக்கள் இல்லங்களில் மங்கை மஹா லக்ஷ்மி நிரந்தர வாசம் செய்வாள் என்றார். அந்த ஞானி தான் மஹா பெரியவர். 


 அவரின் ஆணையை ஏற்று 1965 இல் இந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் 

 மத்தளம் கொட்டிட
 மணி சங்கு முழங்கிட
 மணி வீணை இசைத்திட 



 கும்பாபிஷேகம் செய்யப்பட்டு எழுப்பப்பட்டது.  அர்த்தநாரீஸ்வரர் இங்கு எழுந்தருளிய பின் முப்பத்தி முர்கோடி தேவர்கள் முதல் அனைத்து தெய்வங்களும் வாசம் செய்யும் பதியாக நங்கநல்லூர் விளங்குகிறது. 1970 இல் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் அதன் பின்னர் குருவாயூரப்பன் கோவில், வரசித்தி விநாயகர் கோவில், ஹயக்ரீவர் கோவில், தேவி கருமாரி அம்மன் கோவில், 32 அடி ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் கோவில், இரண்டு ஷீரடி பாபா கோவில்கள் என்று, இன்று நங்கநல்லூர்ரில் திரும்பிய பக்கம் எங்கும் கோவில்கள். 

 இன்று நங்கநல்லூர்ரில் மக்கள் வாழ்க்கை தரம் நன்கு ஏறி இருக்கிறது. அதை விட, க்ரௌன்ட் விலை இன்னும் நன்றாகவே ஏறி இருக்கிறது. 

Wednesday, 28 January 2015

ஆலயம் என்றால் என்ன?


 ஒரு பழமொழி ஒன்று உண்டு. குதிரைக்கு தண்ணீர் தான் வெய்க்க முடியும். அதை குடிக்க வெய்க்க முடியாது. குடிக்கும் வேலையை குதிரை தான் செய்ய வேண்டும். 

   வெரும்ன கோவிலுக்கு போனோமா, சாமியை கும்பிட்டோமா. பிரசாதத்தை வாங்கினோமானு வந்துட கூடாது. சிவன், கோவிலாக இருந்தாலும், விஷ்ணு கோவிலாக இருந்தாலும், எந்த கோவிலாக வேண்டுமானாலும், எந்த மதத்து வழிபாட்டு ஸ்தலமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சிறிது நேரம் அமர்ந்து மனத்தை ஒருமுகபபடுத்த பழக வேண்டும். ஆலயங்கள் என்பது பல ஞானிகளின் காலடி பட்ட இடம். அதற்க்கே ஒரு தனி சக்தி உண்டு. கோவிலுக்கு நல்லவர்களும், கோர்ட்க்கு கெட்டவர்களும் அதிகம் வருவார்கள். நாம் ஆலயத்தில் அமர்ந்து மனத்தை ஒருமுகபபடுத்த முயற்சிக்கும் பொழுது, பலரின் நல்ல என்ன அலைகள் நமது மனதிலே ஊடுருவும். சிலர் நமக்கு எந்த கெடுதலும் செய்து இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களை பார்க்கும் பொழுது நம்மை அறியாமலேயே மனத்தில் வெறுப்பு வரும். காரணம், அந்த மனிதரின் என்ன அலைகள் உங்களை அவ்வாறு வெறுப்படைய  செய்கிறது. 

மிக பிரசித்தி பெற்ற சில ஆலயங்களுக்கு செல்லும் பொழுது நம்மை அறியாமலேயே மனம் சற்று அமைதி பெறும். அடுத்த சில நிமிடங்களில் விவேக் காமெடீ போல், புதிதாக வாங்கிய செருப்பில்  இருந்து ஆரம்பித்து, வீட்டில்  ஊசி போன பருப்பு வரை, பொறுப்பே இல்லாமல் நமது மனம் எதை, எதையோ நினைக்கிறது. மனம் ஒரு குரங்கு  என்பார்கள் சிலர், மனம் குதிரையை விட வேகமாக ஓட கூடியது என்பார்கள் சிலர். மனத்தை விட வேகமாக ஓட கூடிய ஒரு ராக்கேட்டை இதுவரை எந்த நாட்டு விஞ்ஞானியும் கண்டு பிடிக்கவில்லை. இனிமேலும் கண்டு பிடிக்க முடியாது. ஒலியின், ஒளியின் வேகத்தை விட மனோவேகம் அதீத வேகம் வாய்ந்தது. 

 மனம் ஒரு சிறந்த வேலைக்காரன். ஆனால்? மோசமான எஜமானன். நீங்கள் வண்டி ஒட்டும் பொழுது உங்கள் கட்டுப்பாட்டில் நீங்கள் ஒட்டும் வண்டி இருக்க வேண்டும். வண்டி கட்டுப்பாட்டில் நீங்கள் இருந்தால். மனத்தை போல் அதீத வேகத்தில் இயங்க கூடிய வாகனம் அகில உலகங்களில் எங்குமே இல்லை. அதை மனித சக்தியால் கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று. உங்கள் மனத்தை இறைவனோடு இரண்டற நீங்கள் கலந்தால் அடுத்த நொடியே உங்கள் மனம் இறைவன் கட்டுப்பாட்டில் வந்து விடும். உங்கள் மனத்தை கட்டுப்படுத்தும் சாரதி இறைவனே. 

 நீங்கள் ஆலயத்திற்குள் இருக்கும் பொழுது உங்களுக்கு தேவையற்ற எண்ணங்கள் வந்தால், நீங்க்ள் அந்த எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். தேவையில்லாத ஃபோந் கால் வந்தால் அதை அடர்ந் பண்ணாமலேயே கட் பண்ற மாதிரி, தேவையில்லாத எண்ணங்களை கட் பண்ணுங்க. உங்கள் மனத்தில் கடவுளின் உருவத்தை மட்டுமே நினையுங்கள். எந்த கடவுள் உங்களின் இஷ்ட தெய்வமோ அந்த கடவுளின் உருவத்தை உங்கள் மனக்கண் மூலம் கொண்டு வந்து தியானம் செய்யுங்கள்.  
ஆலயம் என்பது ஆனந்த பிரவாகம் சுரக்கும் இடம். அங்கு நீங்கள் மனத்தை ஒருமுகபபடுத்த முயன்றால் மற்ற இடங்களில் நீங்கள் தியானம் பழகுவதற்கும், ஆலயங்களில் தியானம் பழகுவதற்கும் உள்ள வித்யாசத்தை உணரலாம். அதிலும் முதன் முறையாக தியானம் பழகுபவர்கள் ஆலயத்தில் தியானிக்கும் பொழுது, உங்கள் ஆன்மா எளிதாக லயப்படும், வயப்படும், புரியாத பல ஆழ்மன சூட்சுமங்கள் புலப்படும். அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆத்மார்த்தமாக நீங்களாகவே உணர்ந்தால் தான் உண்டு.

நம்முடைய ஆன்மா லயப்படும் இடமே ஆலயம். அதிலும் பல நூறு ஆண்டுகளாக பூஜை நடக்கும், மிக புராதனமான ஆலயங்களில் நாம் அதிக, அதீத, தெய்வீக அதிர்வலையை உணரலாம். 



 ஓம். தத், சத். 

Tuesday, 27 January 2015

அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட இரண்டு லக்சம் வருடம் பழமையான சிவன் கோவில்




சிவ வழிபாடு மிகத் தொன்மை வாய்ந்தது. பண்டைக் காலத்தில் சிவ வழிபாடு உலகு எங்கிலும் பரவியிருந்தது. அனைத்து மக்களும் சிவ வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர். அமெரிக்காவில் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன்கோயில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது. யு.எஸ்.மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி ( U .S. Museum of Natural History ) என்ற அமைப்பைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்த மிகத் தொன்மையான சிவன் கோவிலைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது.
23-11-1937 – இல் நியூஸ் ரிவ்யூ ஆஃப் லண்டன் (News Review of London) என்ற நாளேட்டில் அச் சிவன் கோயிலைப் பற்றிய செய்தி வந்துள்ளது. அமெரிக்காவில் மக்கள் செல்ல முடியாத கொலாராடோ 
வில் உள்ள ஒரு மலை பகுதியில் “மறைந்து போன உலகம்” என்ற ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். அம் மலைப் பாறையின் மேல் ஏறக்குறைய அரை மைல் சதுரப் பரப்பில் பழைய சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நில மட்டத்திலிருந்து ஏறக்குறைய 9 ஆயிரம் அடிக்கு மேல் மலைப் பாறையில் அச்சிவன் கோயில் அமைந்துள்ளது என்பது அந்நாளேட்டில் வந்த செய்தியாகும். சிவவழிபாடு பரவியிருந்த நிலையையும் அதன் பழமையையும் இதனால் அறியலாம்.

அது மட்டும் அல்ல. புராணங்களில் பாதாள உலகம் என்று குறிப்பிடப்படுவது. அமெரிக்காவை தான். அமெரிக்காவில் உள்ள Horse Island, Ash Island. இரண்டும் பகீரத புராணத்தோடு தொடர்பு உடையது.

Monday, 26 January 2015

ஜீந்ஸ் துணியின் பிறப்பிடம் இந்தியா.



குடியரசு தின சிறப்பு பதிவு. 


  மும்பை டோங்க்ரே துறைமுகத்தில், சுரங்க தொழிலாளர்களின் தேவைக்காக போர்ச்சுகீசியர்கள் இந்த துணியை  16 ம் நூற்றாண்டில் விலை கொடுத்து வாங்கினர். அவர்களுக்கு அதை தயாரித்து கொடுத்தவர்கள் இந்தியர்கள். முதலில் நீல  ஜீந்ஸ்சே தயாரிக்கப்பட்டது. 

   இன்டிகோ நிறம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை கிரேக்கர்கள் இன்டிகான் என்றும், லத்தீன்னில்  இன்டிகாம் என்றும் அழைப்பார்கள். 

 இந்த ஆதாரம் எனக்கு வேதம் கண்ட விஞ்ஞானம் என்னும் புத்தகத்தில் இருந்து கிடைத்தது. இதன் ஆசிரியர் ப- முததுக்குமார சாமி. பதிப்பகம் பழனியப்பா ப்ரதர்ஸ். 

Thursday, 22 January 2015

மனதிற்க்குள் பூஜை .




16] ஞானியர் கோவில்கள்

மிக பழமையான, புராதன மற்றும் சரித்திர சிறப்புகள் உடைய, கைலைக்கு இணையான மயிலை பதியில் உள்ள, சித்தர்கள் கோவில்களை நாம் பார்க்க போகிறோம். 

 அமைதியின் சின்னமாக புறா கூறப்படுவது போல், ஞானத்தின் சின்னமாக மயில்  கூறப்படுகிறது. 

 சரஸ்வதி படங்களில்  மயில்

இல்லாமல் இருக்காது. 

 ஞான பண்டித்தனான முருக பெருமானின் வாகனமும் மயில், 

 

சாரதியாக  வந்து அர்ஜூனனுக்கு ட்ரைவிங்க் ஃபோர்ஸ் ஆக இருந்து ஞானம் ஊட்டிய கண்ணன்  தலையில்  மயில் தோகை சூடினார். 

 அதனால் தான் என்னவோ. மயில் இறகை புத்தகத்தில் வெய்த்தால் படிப்பு வரும் என்னும் நம்பிக்கை அன்று இருந்து இருக்கிறது. ஞானாம்பிகையாகிய அம்பிகை மயிலையிலே மயில் உருவில் ஈசனை வழிபட்டாள். 

 ஒரு கலைங்கருக்கு மிக பெரிய அளவில் ஞானம் புகழ் இருக்க வேண்டுமென்றால். அவர் ஜாதகத்தில் சுக்ரன் வலுவாக இருக்க வேண்டும். 

   செத்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை சுக்க்ராச்சாரியார் பல வருடங்கள் தவமிருந்து  சிவனிடமிருந்து பெற்றார். 

 
அதன் பிறகு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த யுத்தங்களின் பொழுது சுக்க்ராச்சாரியார் இறந்த அசுரர்களை எல்லாம் சஞ்சீவினி மந்திரம் மூலம்  உயிர்ப்பித்தார். அதனால் கலக்கம் அடைந்த தேவர்கள் தேவ குருவாகிய பிரகஸ்பதியிடம் முறையிட, தேவ குரு தனது மகனை சுக்க்ராச்சாரியாரின் குரு குலத்தில் போய் சீடனாக சேர்ந்து, அவர் மனத்தில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்து அந்த மந்திரத்தை கற்று வருமாறு அனுப்பினார். பிரகஸ்பதியின் மகனும் அவ்வாறே தந்திரமாக அந்த மந்திரத்தை சுக்க்ராச்சாரியாரிடம் இருந்து கற்று தேவ லோகம் திரும்பினார். இது ஒரு பெரிய கதை. இதை இன்னொரு நாள் பார்ப்போம். 

 மயிலை சுக்க்ராச்சாரியார் வழிபட்ட ஸ்தலம். அதனால் தான் என்னவோ, இயல், இசை, நாடகம் என்று முத்துறையை சேர்ந்த பல வித்தகர்களின் வேடாந்தாகலாக மயிலை பதி  இருக்கிறது. 

 மயிலையும் சுக்கிர ஷேத்திரம் தான். கஞ்சணூர், மயிலை இரண்டு ஸ்தலங்களிலுமே அம்பாள் பெயர் கற்ப்பகாம்பாள். 

 
ஞான சம்பந்தர், ஏழு வயதில் பாம்பு கடித்து இறந்த பூம்பாவையை ஐந்து வருடங்கள் கழித்து 12 வயது பெண்ணாக உயிர்பித்த அதிசயத்தை சுக்ரன் வழிபட்ட இந்த ஸ்தலத்தில் செய்துள்ளார். சிவநேசன் செட்டியார் என்னும் சிவன் அடியார் தனது மகளை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று அவளது மிக சிறு வயதிலேயே முடிவு செய்கிறார். ஆனால் அவளோ. பாம்பு கடித்து இறந்து விடுகிறாள். பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து சம்பந்தர் மயிலை வரும் பொழுது கையிலே ஹஸ்த்தி குடத்தோடு சம்பந்தரை சந்தித்து, குடம், குடமாக அழுகிறார். சம்பந்தர். மட்டிட்ட புன்னையும் என்று தொடங்கும் பூம்பாவை பதிகம் பாட குடம் உடைந்து சாம்பலிற்க்கு நாடி, நிரம்பு, சதை, எலும்பு, ரத்தம், புத்தி அனைத்தும் கிடைக்கிறது. 

 அதன் பின்னர் சிவநேசன் தனது பல வருட ஆசையை சம்பந்தரிடம் சொல்கிறார். சம்பந்தரோ, இவளுக்கு நான் மறுபிறவி கொடுத்ததால், நான் இவள் தந்தை ஆகிறேன். அதனால் இவளை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி மறுத்து விடுகிறார். 

 இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மயிலையில் அவதரித்தவர் தான் வாயிலார் நாயனார். 

 
இவர் மனதிலேயே சிவனுக்கு சோடச உபச்சாரம் எனப்படும் 16 வித உபசாரங்கள் செய்து, பல நூறு மலர்களால் ஈசனை அர்ச்சித்து, பால், தேன், பன்னீர் முதல் பல அபிஷேகங்கள் செய்து  63 நாயன்மார்களில் ஒருவராக ஆனவர். இவர் சந்நிதியை நாம் மயிலையில் தரிசிக்கலாம். இதே போல் காஞ்சியில் அவதரித்த பூசலார் நாயினார், ஈசனுக்கு மனதினில் கோவில் கட்டினார். 

 உண்மையான, ஆத்மார்த்தமான, ஆழமான பக்தியையே கடவுள் விரும்புவார். அதோடு செல்வமும் சேர்ந்தால் சிறந்தது தான். ஆனால் ஆத்ம உணர்வு இல்லாத வெறும் பகட்டு மட்டுமே உடைய பக்தியை இறைவன் ஏற்பதில்லை. ஆனால் செல்வம் இல்லாத ஆத்மார்த்தமான பக்தி. இறைவனால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்க படுகிறது. 

  வாயிலார் நாயனார் திருவடிகளே சரணம். 

   ஞான தேடல் தொடரும். u

Wednesday, 21 January 2015

மஹா பெரியவாள் என் வாழ்வில் செய்த மஹா அற்புதம்


காஞ்சி மஹா பெரியவாள் சத்தமே இல்லாது பல அற்புதங்கள், அதிசயங்கள் ஆகியவற்றை செய்து இருக்கிறார். தனது சக்தியை அவர் எப்பொழுது வெளிப்படுத்த வேண்டுமோ அப்பொழுது வெளி படுத்துவார். உதாரணத்திற்கு ஒரு புகழ் பெற்ற துறவி ஒருவர் இவர் பாத யாத்திரை செய்யும் பொழுது எதிரில் காரில் வந்தார். காரிலிருந்து இறங்கி பெரியவாள் முன் கையை சுத்தி என்ன, என்னலாமோ செய்தார். பெரியவாள் பின்னால் இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். பெரியவாள் அதை பார்த்து. நீ என்ன பண்றனு கேட்டார். இல்லை. என் மந்திர சக்தியால் உங்களுக்கு ஒரு மாலை வர வெய்த்து அதை போடலாம்னு பார்த்தேன். பெரியவாள் ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தவாறே. உன் மந்திர சக்தி என் முன்னால் எடுபடாது என்றாராம். பின்னர் அந்த துறவி பெரியவாளிடம் ஆசி வாங்கி அவர் காரில் ஏற பெரியவாள் தனது பயணத்தை தொடர்ந்தார்.
இதே போல் அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்ற ஒருவர் பெரியவாளை சந்தித்து என்னால் வானில் பறவை போல் பறக்க முடியும், நடுக்கடலில் நடக்க முடியும், நெருப்பினில் என்னால் குளிக்கவும் முடியும். நினைத்த உருவத்தை என்னால் எடுக்கவும் முடியும். நான் வேனால் இப்பவே ஒரு குரங்காய் மாறி காட்டட்டுமா அப்டினு பெரியவாளை பார்த்து அந்த நபர் கேட்டாராம். பெரியவாள் நீ அதுக்குதான் லாய்க்கி என்று சொல்லி உள்ளே சென்று விட்டாராம். பின்னர் அந்த நபர் தனது தவறை உணர்ந்து பெரியவளிடம் மன்னிப்பு கேட்க்க நினைத்தார். முதலில் அந்த நபரை பெரியவாள் அனுமதிக்கவில்லை. ஒருநாள் முழுக்க அவர் வெளியிலேயே காத்து இருக்க அதன்பிறகு மனமிறங்கி அவரை பெரியவாள் பார்க்க அனுமதித்தார்.
எட்டு சித்திகளால் சித்தம் கலங்கிய அந்த சாதககரிடம் பெரியவாள் அறிவுரை கூறினார். இந்த சித்திகள் என்ன சர்வ சாதாரணமாக கிடைத்து விடுமா. உன்னால் எதுவெல்லாம் முடியுமோ அது என்னாலும் முடியும். ஆனால்? இந்த சக்திகள் எல்லாம் கிடைத்து விட்டால் நீ கடவுளாக ஆகி விட முடியுமா? ஐம்புலன்கள், மற்றும் உன் மனம் ஆகிய ஆறுக்கும் நீ அடிமையகாமல் அதை உனக்கு அடிமையாக்கி, கட்டு படுத்தியதால் தான் உனக்கு இந்த எட்டு கிடைத்து உள்ளது. ஆனால் இப்பொழுது நீ இந்த எட்டு சக்திகளுக்கு அடிமையாக இருக்கிறாய். ஆணவத்தால் இறைவனை கை தொழவே மறந்து விட்டாய். அந்த கடவுள் மனது வெய்த்தால் ஏன். நான் நினைத்தாலே உனது சக்திகளை ஒரு நொடியில் பறிக்க முடியும். பரிணாம வளர்ச்சியில் நாம் குரங்கிலிருந்து மனிதன் ஆனோம். ஆனால் நீ மீண்டும் குரங்காக ஆக முயற்ச்சி செய்கிறாய். இது அறிவுள்ள ஒருவன் செய்யும் செயலா என்று நபரை கேட்க்க அந்த நபர் தனது தவறுகளை உணர்ந்தவராய். ஆணவம் முழுவதும் அழிந்தவராய் பெரியவாளின் மலர் அடியை பணிந்தார். 

 பெரியவாள் என் வாழ்வில் செய்த ஒரு அற்புதம் என்னவென்றால் நான் ஒரு வயது குழந்தையாக இருந்த பொழுது பெயர் கண்டறிய முடியாத ஒரு நோய் எனக்கு வந்து என் உடல் முழுவதும் டார்க் ப்ளூ ஆகிவிட்டது. பல மருத்துவர்களிடம் காட்டி இறுதியாக பார்தத மருத்துவர் உறுதியாக நான் இன்னும் அதிக பக்சம் 4, 5 மணி நேரங்களில் இறந்து விடுவேன் என்று சொல்ல பெரியவாளை தவிர நமது மகனை வேறு யாராலும் காக்க முடியாது என்று முடிவு செய்த என் தந்தை. என்னை அழைத்து கொண்டு  நேராக காஞ்சி வந்தார்.
அவர் நடந்து வரும் பொழுது அவர் பாதத்தின் அடியில் என்னை வெய்த்து. அவர் பாதம் பணிந்து. எட்டு வருடம் தவமாய், தவமிருந்து பெற்ற மகன் இவன். நீங்கள் தான் இவனை காக்க வேண்டும் என்றார். அவர் ஒரு கர்க்கன்டை மந்திரித்து என் வாயில் போட அடுத்த நிமிடமே என் உடலில் உள்ள நீல நிறம் கொஞ்சம், கொஞ்சமாக மறைய ஆரம்பித்து ஐந்தே நிமிடங்களில் நான் பழைய தோற்றத்திற்கு வந்தேன்.

 மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட திருசூலம் கோவிலை புணரமைக்கும் பாக்கியம் என் தாத்தா y குப்புசாமி அய்யருக்கு கிடைத்தது. அவர் அந்த கோவிலின் ட்ரஸ்டீயாக இருந்த சமயத்தில் ஒவ்வொரு பிரதோஷத்தின் பொழுதும் கோவில் பிரசாதத்தை பெரியவாளிடம் கொடுத்து ஆசி பெறுவார். இவ்வாறு வாழ் நாள் முழுவதும் செய்தார்.

 ஹர, ஹர சங்கர. ஜெய, ஜெய சங்கர.