siddhas

Monday, 4 May 2015

ஆஸ்மா, வீசிங், சைனஸ் முதலான சுவாச நோய்களுக்கு யோகா, மூலிகைகள்.



ஆஸ்மா, வீசிங், சைனஸ்  என்று சுவாசம் சம்பந்தமாக வரும்  எந்த  நோயுமே  இந்த உலகில் சரி செய்ய முடியாத விஷயம் இல்லை. அதற்க்கு  உதாரணமாக எனது தம்பியையே கூறலாம். மேலே இருப்பது  எனது தம்பியின் புகைப்படம்  தான்.


 16 வருடங்களுக்கு முன்.  பிறக்கும் பொழுதே இவனுடன் ஐந்து சத்ருக்கள் உடன் பிறந்தார்கள். அவை. ஆஸ்மா, வீசிங், சைனஸ்,  டிங்கு, எலும்புருக்கி நோய் எனப்படும்  TB . டிங்குவை உடனடியாக மருத்துவம் மூலம்  சரி செய்ய முடிந்தது. அனால்.  மீதி  நாலு   சத்ருக்களையும் அவ்வாறு அழிக்க  முடியவில்லை. ஆஸ்மா, வீசிங், சைனஸ். இந்த மூன்றில்  ஏதேனும் ஒன்று வந்தாலே. அது எவ்வளவு வேதனை. மூன்றும் ஒன்றாக. அதுவும் பச்சிளம் குழந்தைக்கு.  குறிப்பாக.  எலும்புருக்கி நோயால். வாழ்நாள் முழுக்க  எலும்பும், தோலுமாக பலவீனமாக  அவன் இருப்பானே என்று மிகுந்த கவலையில் ஆழ்ந்தேன்.


முதல் 12 வருடங்கள். நானும் எனது பெற்றோரும். தூங்கிய  இரவுகளை விட.  தூங்காத இரவுகளே அதிகம்.   நான்கு வருடங்களுக்கு முன். வெற்றி கரமாக எனது தம்பி அந்த நான்கு சத்ருக்களையும் கொன்று விட்டான். எவ்வாறு  .


தினமும்  தூதுவளை, துளசி. அவனது உணவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இடம் பிடித்தது. மற்றும். அவனது எலும்புருக்கி நோயை குணப்படுத்தும்,  எலும்பை  பலபடுத்தும் உணவுகள் அவனுக்கு கொடுக்கபட்டது. எலும்புருக்கி நோய்க்கு உண்டான உணவுகள், மூலிகைகள் குறித்து நாளை பாப்போம்.


நான் ஆதம்பாக்கத்தில் உள்ள. வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாழும் கலைமன்றத்தில்  மாணவனாக. சேர்ந்தேன். அங்கு. மற்றும் எனது தந்தையின் நண்பர்  கார்த்திக். போன்றோர்களிடம். யோகாசனங்களை கற்று கொண்டு. அவற்றில் எவை, எவை. சுவாச பிரச்சனைக்கான சிறந்த யோகாசனங்கள் என்பதை தேர்வு செய்து. அவற்றை எனது தம்பிக்கு சொல்லி கொடுத்தேன். அணைத்து. யோகாசனங்களுமே. சுவாசத்திற்கு நல்லது. அதில் முக்கியமாக. Breathing  exercise  எனப்படும் பிராணாயாம பயிற்ச்சி. அது நான் யோகா வகுபிற்க்கு செல்வதற்கு முன்பே. வீட்டில் கற்று தரப்பட்ட ஒன்று தான். ஆனால்?  எனது தம்பிக்கு இருந்த பிரச்சனைகளுக்கு.  பிராணாயாமம் மட்டும் பத்தாது. அதனால். அவனுடைய சுவாசம் சம்பந்தமான அணைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் மூன்று முக்கிய யோகாசனங்களை  அவனுக்கு கற்று தந்தேன்.


அவை.

  வஜ்ராசனம்.



 சுப்த வஜ்ராசனம்.



 ஹலாசனம்.




இவை மூன்றின் பலன்களையும் வெகு விரைவில் யூ  டியூப்பில் வீடியோக்களாக  வெளியிடுகிறேன். முழுமையான பலனை பெற. அருகில் உள்ள நல்ல யோகா ஆசிரியரை அணுகி நீங்கள் பயிற்ச்சி எடுத்து கொள்ளுதலே சிறந்தது.  எனது வீடியோ. ஒரு  மாதிரி. அவ்வளவே. ஏற்கனவே மாரைடைப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து இரண்டு வீடியோக்கள் அப்லோட் செய்து இருக்கிறேன். எழுத்து மூலம் சொல்லும் தகவல்களை. காணொளி வாயிலாக சொன்னால். தமிழ் படிக்க தெரியாதவர்களும் பயன் பெறுவார்கள் என்றாலும். எனக்கு. பேசுதலை விட. எழுதுவதில் ஆர்வம் அதிகம். பேச்சு பணியோடு வழக்கம் போல் எழுத்து பணியும் தொடரும்.


 நான் மேலே குறிப்பிட்ட மூன்று யோகாசனங்களில்.  சுப்த வஜ்ராசனம் எனப்படும் யோகா. சுவாச பிரச்சனை மட்டும் அல்ல. எலும்புகளை நன்கு பலப்படுத்துதல். அதில் உள்ள கோளாறுகளை சரி செய்தல். முதலியவற்றை செய்யும்.   வஜ்ராசனம் மட்டும்.  நீங்கள் கற்று கொள்ளாமல் இப்பொழுதே கூட புகைபடத்தில் இருப்பதை பார்த்து  முயற்ச்சி செய்யலாம். ஆனால்? சுப்த வஜ்ராசனம், ஹலாசனம் இரண்டையும். ஒரு நல்ல ஆசானிடம் பயிற்ச்சி எடுக்காமல் முயற்ச்சி செய்தால். உங்களுக்கு ஒழுங்காக உள்ள  எலும்பு கூட உடைந்து விடும். காரணம். இந்த இரண்டு ஆசனங்களையும் செய்வதற்கு. உடலில்  Flexibility தேவை. நீங்கள் முறையான நடன பயிற்ச்சி எடுத்து இருந்தால் கவலை இல்லை.


பிறக்கும் பொழுதே. எலும்புருக்கி நோயுடன் பிறந்த என் தம்பி. இன்று. 16 வயதினில். 6 அடிக்கும் மேல் உயரம். 15 இஞ்சில் ஆர்ம்ஸ். அகன்ற மார்பு. அவன் உயரத்திற்கு ஏற்ற எடை என்று. ராஜகுமாரன் போல் இருக்கிறான். கராத்தே, சிலம்பம் இரண்டு பயிற்சிகளும் முறைப்படி கற்று இருக்கிறான்.


 அவன் ஒழுங்காக ஒத்துழைத்ததால் தான்.  என்னால் அவனுக்கு யோகா பயிற்ச்சி. அதுவும். அப்பொழுது அவன் உடல் இருந்த நிலைக்கு கடினமான யோகா பயிற்ச்சி கொடுக்க முடிந்தது. அவனுடைய விடா முயற்ச்சி, தன்னம்பிக்கை,  மருந்து மாத்திரைகளால் தீர்க்கவே முடியாத  நோய்களை. மனம் என்னும் மந்திர சக்தி கொண்டு. அந்த சக்தியை உடல் என்னும் எந்திரத்தில் செலுத்தி. எவ்வாறேனும். தீர்க்க முடியாத நோய்களை தீர்த்து கட்ட வேண்டும் என்று அவனுக்கு இருந்த அந்த வெறியே. இன்று நிரந்தர தீர்வை கொடுத்து இருக்கிறது.


சுவாசம் சம்பந்தமான கோளாறு  இருப்பவர்கள் தினமும் துளசி நீர் அருந்த வேண்டும். பெருமாள் கோவிலில் ஒரு உத்தரிணி, இரண்டு உத்தரிணி அல்ல. எட்டு மணி நேரம் தாமிர பாத்திரத்தில். துளசியை நன்கு  ஊர வெய்த்து. 1, 2 டம்பளர் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் குடிக்க வேண்டும். மற்றும்  தூதுவளையை தினமும் சேர்த்து கொள்ளவும். அதோடு  சரகர் சொன்ன 10 மூலிகைகள். 2/5/2015  செய்த பதிவை பார்க்கவும்.


 இவற்றை செய்தால். சுவாசம் சம்பந்தமான அணைத்து கோளாறுகளும் நிச்சயம் நீங்கும்.


 நாளை எலும்பு உருக்கி நோய்க்கான தீர்வை பார்க்கலாம்.


          

2 comments: