siddhas

Saturday, 2 May 2015

ஆச்மா நோய் தீர. சரகர் சொன்ன பத்து மூலிகைகள்.



புனித பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் சரகர், சுச்ருதா  போன்ற மருத்துவ ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் பாரத திருநாட்டின் பழமையான மருத்துவர்கள் மட்டும் அல்ல. ஒவ்வொரு இந்தியனும் பெருமை படும் படி. மனித சமுதாயதிற்கு  தொண்டு செய்த  அருமையான மருத்துவர்களும் கூட.

  சரகர் யார் என்பதை இன்று முதலில் பாப்போம். அதற்க்கு    முன். சரகர் ஆஸ்மா நோயை குணப்படுத்த கூரிய  மருத்துவ முறை பற்றி நாம் முதலில் பாப்போம்.
சரகர் சொன்ன ஆஸ்துமாவிற்கான பத்து மூலிகைகள்

பூலாங்கிழங்கு, புஷ்கரமூலம், புளிவஞ்சி, ஏலரிசி, பெருங்காயம், அகில், துளசி, கீழாநெல்லி, கீரைப்பாலை, காட்டுக் கோரை கிழங்கு. இந்த பத்தையும்  ஒன்றாக கலந்து தினமும் உண்டால். ஆஸ்மா வெகு விரைவில் குணம் ஆகும். ஆஸ்மாவிற்கு இதே போல் நிறைய மூலிகைகள், மருந்துகள் இருக்கிறது. அதை பார்பதற்க்கு  முன். சரகரின் வாழ்க்கை வரலாறு. அவர் மருத்துவ உலகிற்க்கு கூறிய  அறிவுரைகளை பாப்போம்.
. இவரது சரக சம்ஹிதை 120 அத்தியாயங்களைக் கொண்டது.

சரகர் ஆத்ரேய முனிவரின் சீடர். அக்னி வேஸர் எழுதிய நூலை செம்மை படுத்தி இவர் சரக சம்ஹீதை எழுதினார் என்று சொல்லப்படுகிறது. சரகர் ஆயுர்வேதத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமான ஒருவர். சரகர்

சரகரின் காலம்

கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகள் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த வாதத்தை மறுக்கும் அறிஞர்கள் சரகர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டு காலம் முன்னதாக வாழ்ந்தவர் என்று உறுதி படக் கூறுகிறார்கள். ஆத்ரேய மஹரிஷியின் காலத்தை பல நூற்றாண்டுகாலத்திற்கு முன்பேயே நிர்ணயிக்க வேண்டியிருப்பதால் சரகரின் காலமும் மிக மிக முற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் வாதம். ஆத்ரேயர் புராண கால முனிவர். அவர் காலத்தில் புத்தர் இல்லை. ஆனால் சரக சம்ஹிதாவில் ஹிந்து வேதங்களில் கூறப்பட்ட மருத்துவ முறைகள் கூறப்பட்டாலும் சில இடங்களில் புத்த மத சித்தாந்தங்களும் பேசப்படுகிறது. புத்தர் 2600 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இவர் காலத்தில் தான் சுஷ்ருதாவும் வாழ்ந்தார். சரகர் புத்தர் வாழ்ந்த காலத்துக்கும் 300 ஆண்டுகள் முற்பட்டவர். என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.இவர் நூலில் புத்த மத சித்தாங்களும் சில இடங்களில் சொல்லப்பட்டு இருப்பதால் அவர் புத்தருக்கு பின் வந்தவர். ஆத்ரேய முனிவரின் சீடர் என்பது கற்ப்பனை என்று ஆகி விடுகிறது.

சரகரது நூலில் புத்த மத சித்தாந்தங்கள் வந்ததற்க்கு சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் பின்னணி.

சரகரது சம்ஹீதையில் மூன்றில் ஒரு பங்கு கிடைக்காமல் போக இந்த குறைபாட்டை 4ம் நூற்றாண்டில் செரி செய்தவர் த்ருதபாலா என்கிற புத்த துறவி. இவர் பாடுபட்டு பல இடங்களிலிருந்து செய்திகளை சேகரித்து சரகசம்ஹிதையை பூர்த்தி செய்தார். அதற்கும் முன்னே கி.மு. 323 ஆண்டில் நாகார்ஜூனா எனும் புத்த துறவி திபெத்திய மொழியில் மொழி பெயர்த்தார். கி கா யீ மற்றும் டான் ஐயவோ ஆகிய இரு சீன தேசத்து புத்த துறவிகள் கி.பி. 472இந்த நூலை மொழிபெயர்த்தனர். அவ்வாறு செய்யும் பொழுது இவர்களில் யாரேனும் ஒருவரோ இல்லை அனைவருமே அவர்களது சொந்த சரக்கை கொஞ்சும் இதில் கலந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சரகர் தனது குருகுலத்தை நடத்தி வந்த விதம், மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் திறமை அவரது சம்ஹிதையிலிருந்து புரிகிறது. அவர் பட்டிமன்றம், விவாதங்கள் தர்க்கங்கள் மூலம் மருத்துவத்தை சொல்லி கொடுத்தார். க்ரூப் டிஸ்கஶந்ஸ் எனப்படும் இன்றைய முறையை சரகர் பின்பற்றியிருக்கிறார்.

சரகர் கண்டிப்பான ஆனால் அறிவு மிகுந்த ஆசிரியர். அவர் மருத்துவர்களை பற்றி சொன்னது.

“அறிவில்லா வைத்தியரிடம் சிகிச்சை பெறுவதை விட இறப்பது மேல்”
“நோயாளிகளை குணப்படுத்த நால்வர் சிறப்பாக அமைய வேண்டும். நால்வர்-மருத்துவர், மருந்துகள், உதவியாளர், நோயாளி” சரகர் கொடுத்த கல்வி பயிற்சி 7 வருடங்களுக்கு எட்டுவகை மருத்துவ முறைகள் கற்றுத்தரப்படும். அதன்பின் Hippocratesன் சத்ய பிரமாணம் போலவே (இந்த யுக டாக்டர்கள் எடுக்கும் சத்ய பிரமாணம்). சரகரும் ஒரு சத்திய பிரமாணத்தை எழுதியிருக்கிறார். எப்படி ஒரு மருத்துவர் பிரசவம் பார்க்க வேண்டும் என்று மட்டும் இவர் சொல்லாமல் பிரசவத்திற்கு பின் கவனிக்கவேண்டியவை பற்றியும் சொல்லி இருக்கிறார்.

மேலும் சரகர் மருத்துவ உலகிற்க்கு சொன்ன அறிவுரைகளை நாம் நாளை பார்ப்போம். அவை எக்காலத்திற்கும் பொருந்த கூடியவை. சரக சம்ஹிதாவில் ஒரு மரத்திற்க்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளார். அது எந்த? மரம்.

நாளை.  Heart Attack.  நமது முறையற்ற உணவு, கவலையின் பிரதி பலிப்பாக  இன்று இந்த நோய் அதிகம் அதிகரித்து உள்ளது. இது வராமல் தடுக்கவும், தீர்க்கவும் வழிகளை பற்றிய வீடியோ தனியாக வெளி ஆகும். அதை  தவிர்த்து. இந்த பதிவின் தொடர்ச்சி நாளை வெளி ஆகும்.


3 comments:

  1. good but where i will get it

    useful one

    ReplyDelete
  2. thanks. which thing u want.

    ReplyDelete
  3. அருமை.நம் நாட்டில் தான் எத்தனை வளமைகள்.நினைக்க பெருமையாக இருக்கிறது. உங்களது இந்த பதிவுகள் அனைத்தும் அருமை.நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete