siddhas

Thursday, 21 May 2015

நம்மாழ்வார் அய்யா. அறிவியலுக்கு எதிரானவரா?


நான் எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன். மன்னிக்கவும். அவன் நண்பன் இல்லை வம்பன். அவனோடு பேசி கொண்டு இருந்தேன். அவன் 2 விசயங்கள் சொன்னான். முதல் விஷயம். இன்று பல இளைங்கர்கள். அதுவும் குறிப்பாக படித்த பல இளைங்கர்கள் விவசாயம் குறித்து பேசுவது என்பது ஒரு தேவை இல்லாத Fashion னாம். அடுத்து சொன்னான் பாருங்க ஒரு விஷயம். இயற்க்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா. சும்மா இயற்க்கை, இயற்க்கைனு. அறிவியல், நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றை எதிர்த்த ஒரு பழமை வாதியாம். அந்த படித்த முட்டாள்க்கு நான் என்ன ரிப்ளை கொடுத்தேன் தெரியுமா.
இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.






Wednesday, 13 May 2015

வாய் புண், வயிற்று புண் குணமாக



 உடல் சூடு, அளவுக்கு அதிகமான காரம், அளவுக்கு அதிகமான உணவு, அளவுக்கு அதிகமான பட்டினி. மற்றும். கோபம், ஆசை முதலிய பல உணர்வுகளை அடக்கி  வெய்த்து. அந்த அழுத்தத்தால்  ஏற்ப்படும் பாதிப்பு என்று. பல காரணங்களால்  வாய் புண்,  வயிற்று  புண் வரும்.

   நாம் கோபப்படுவதால் நமது உடல் நலன் பாதிப்பு அடைவதை விட. அதை அடக்குவதால் அதிகம் பாதிப்பு அடையும். அதற்க்காக. நமது கோபத்தை வெளிப்படுத்தி. பிறர் மனங்களை புண் படுத்துவதும் கூடாது. பின்ன. வேறு என்ன தான் செய்வது.

 ஓஷோ சொன்ன வழி  தான். உங்கள் ஆத்திரம் தீர. கை சோர்ந்து போகும் அளவு. தலகாணியை  குத்துங்கள். மற்றும் புலம்பல் தியானம் என்று ஒரு தியானம். உங்கள் மனதினில் உள்ள அணைத்து கவலைகளையும். தனியாக. அறையில் அமர்ந்து. கதவை சாத்தி  கொண்டு கத்தி  புலம்புங்கள். எவ்வளவு அழ  முடியுமோ. அழுது  விடுங்கள். அதன் பின். உங்கள் மனதை. பாறாங்கல்  போல். அழுத்தி கொண்டு இருந்த பாரம் இறங்கியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

 மின்சார எந்திரங்களை.  Hi, Lo  வோல்ட்டேஜ்ஜில் இருந்து Stabelizer காப்பதை போல். மனித எந்திரத்தை காக்கும் Stabelizer  தான். ஸ்படிக மாலை.

ஒரு இடத்தில்  அநீதி நடக்கிறது. அந்த அநீதியை தட்டி கேக்கும் தகுதி, அதிகாரம் நமக்கு இருக்கிறது. தண்டனை கொடுக்கும் அதிகாரம் இருக்கிறது  என்றால்.நாம் அதை செய்து தான் ஆக வேண்டும். ஆனால். அதை கூட கோபபடாமல் செய்யலாம்.

 வாய் புண்,  வயிற்று புண்ணிற்கு  உரிய இயற்க்கை நிவாரணங்கள்.

 வாய் புண் உள்ளவர்கள்  ஹனுமார்க்கு.  வெண்ணை காப்பு செய்வதை போல். தினமும் வாயில் வெண்ணை தடவி கொள்ளுங்கள்.  நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது. உறங்க போகும் பொழுது. தினமும் சுத்தமான தேங்காய் எண்ணையை. அது உங்கள் வீடு அருகே. எங்கே கிடைக்கும் என்று விசாரித்து. வாங்கி. அதை தினசரி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

 வெறும் வயிற்றில் தேங்காய் பால். தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வாருங்கள். அதற்க்குள்  குணமாகி விடும். அந்த 48 நாட்களிலும் குணமாகவில்லை என்றால். அது குணம் ஆகும் வரை. தேங்காய் பால். வெறும் வயிற்றில் குடிப்பதை நிருத்தாதீர்கள்.  மற்றும். மாதுளம் பழம். ஒரு நாளைக்கி 2 பழம்  கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும்.

 அதை தவிர்த்து.  மாதுளம் மணப்பாகு. இதை எவ்வாறு செய்வது.


மாதுளம் பழச்சாறு - 100 மி.லி.,
பனங்கற்கண்டு - 100 கிராம்,

Tuesday, 12 May 2015

உடல், உள்ளம் இரண்டின் சூட்டையும் தணிக்கும் ஸ்படிகம்




வணக்கம் நண்பர்களே. நடுவில் சில நாட்கள் தொழில் நிமித்தமாக. பயணம் செய்ய வேண்டி இருந்தது. அதனால்.  blog பதிவு செய்ய நேரம் கிடைக்காமல் போய்  விட்டது. வரும் வியாழ  கிழமையில் இருந்து. நான் தொடர்ந்து பத்து நாட்கள்.  ஆழ்நிலை தியானத்தில் அமர போகிறேன். அந்த பத்து  நாட்களும். யாரிடமும் ஒரு வார்த்தை பேச மாட்டேன். பேச்  புக், google  blogger எதையும் உபயோகபடுத்த மாட்டேன். அதன் பிறகு. நான் சென்னையில் இருக்கும் அணைத்து நாட்களிலும். சித்த  மருத்துவம் தொடர்பான பதிவுகள் தொடரும்.

 இன்று உடல் சூட்டை தணிக்கும் வழிகளை  பற்றி பார்ப்போம்.

  உடல் சூட்டை தணிக்க. என்ன, என்ன உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர், மோர் என்று உடலுக்கு குளிர்ச்சியை தரும் பட்டியல் நீளும். உடல், மனம் இரண்டையும் குளிர்ச்சியாக வெய்க்க உள்ள வழிமுறைகளில் மிக சிறந்த வழிமுறை என்னவென்றால் ஸ்படிக மாலை அணிவது.

 அன்று அறிவியல் ரீதியான காரணங்கள் சொன்னால் அதை எடுத்து கொள்ளும் பக்குவத்தில் மக்கள் இல்லை. இப்பொழுது ஓரளவு விழிப்புணர்வு வந்து உள்ளது. அது போல், அன்று இல்லாத கால கட்டங்களில். வேப்பிலை, துளசி, வில்வம், ஆல், அரசு, அத்தி, வன்னியில்  ஆரம்பித்து. பசுவின் கோமியம் சாணம் வரை.  அதீத மருத்துவ பயன்கள்  உடைய அனைத்திற்க்கும்  ஆன்மீக சாயம்  சித்தர்கள் பூசி விட்டார்கள். எளிமையாக அனைவருக்கும் புரியும் படி சொல்வதென்றால். கசப்பான மருந்துகளை தேனில் குழைத்து  கொடுப்பதை போல். அன்று சித்த  பெருமக்கள். அறிவியல் என்னும் மருந்தை ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அதில் ஒன்று தான் இந்த ஸ்படிக மாலை.


ஸ்படிகம் என்றால் என்ன?

  பல நுறு  வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள்.

 ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்.

1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில் அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும்.  ஸ்படிக மாலை. நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது.  உடல் சூட்டை  சீரான. சரியான அளவில் வெய்க்கும்.

 2] மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயே இருக்கிறது. மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான் அமைதியாக இருக்கும். ஸ்படிக மாலை. நமது மனதை. அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு  அழைத்து செல்லும். ரத்த  கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

 நமது உடல்  சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகதிர்க்கு  இணையாக. வேறு எதற்க்கும்  இல்லை.

 ஸ்படிக மாலை குறித்து கேட்கப்படும் கேள்விகள்.

 1]ஸ்படிக மாலை  அணிவதர்க்கு  என்று ஏதேனும் அடிப்படை  தகுதிகள் இருக்கிறதா?.
2] ஸ்படிக மாலை அணிவதற்க்கு . ஏதேனும் ஆச்சார. அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டுமா?
3] ஸ்படிக மாலை அணிவோர்கள். அசைவம் சாப்பிட கூடாதா.
4] ஸ்படிக மாலை பெண்கள் அணியலாமா?
5] ஸ்படிக மாலையில் எவ்வளவு? விதமான தரங்கள் உள்ளது
6] ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு கண்டறிவது.

 ஏற்கனவே. நான் மேலே குறிப்பிட்டதை போல். அன்று. மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்க்காக. சித்த  புருஷர்களும், ரிஷிகளும் அறிவியலை. ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அது போலவே ஸ்படிகம். பின்னால் வந்த. குறுக்கு புத்தி உடைய சில சாமானிய மக்கள். ஸ்படிக மாலை. இன்னார், இன்னார் அணியலாம். ஸ்படிக மாலை அணிய. இன்ன, இன்ன விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று. அவர்கள் இஷ்டத்திற்க்கு  மனதில் தோன்றியவைகளை எழுதி வெய்த்து விட்டு சென்று விட்டார்கள்.

 அறிவியல் ரீதியாக. ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

 காற்று, சூரியன், சந்திரன், நீர் என்று. இறைவனின் அணைத்து படைப்புகளும் அனைவருக்கும் பொதுவானது தானே. நீர் அனைவர்க்கும் பொதுவானது என்றால். நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகம் மட்டும் எவ்வாறு? ஹிந்துக்களுக்கு மட்டும். உரிய ஒன்றாக ஆகும். நாஸ்திகர்கள் உட்பட. இதை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

 தெய்வ  பக்த்தி  உள்ளவர்கள்.  108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வெய்த்து.  உங்களுக்கு பிடித்த இறைவனின்  பெயரை. கிடைக்கும் நேரத்திற்க்கு  தகுந்தார் போல். ஜெபம் செய்யலாம்.

 அதை தவிர்த்து. இறை நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் இருவருமே.  அதி காலையில் எழுந்து. மொட்டை மாடி போன்ற ஒப்பன் ச்பேச்சில். உங்கள் லட்சியம் என்னவோ. அதையே. திரும்ப, திரும்ப சொல்லி. மொட்டை மாடியில். ஜெபம் போல் ஸ்படிக மலையை வெய்த்து செய்யுங்கள்.

 நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட  வேண்டும்.  அமைதியான அதிகாலை வேளை  தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து.

 இதை நீங்கள் சும்மா. முயற்ச்சி  செய்து பாருங்க. உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தும். அது நிறைவேற கால தாமதம் ஆனால். இவ்வாறு செய்வது. அதன் கால தாமத்தை குறைக்கும். முக்கியமாக. இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.

 ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர. மீதி அணைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் குளிக்கும் பொழுது. கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.

  ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு? கண்டறிவது.

 ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து  விதமான Quality இருக்குங்க. ஸ்படிக மாலையில் நீங்க கை வெக்கறீங்கனா. வெச்சவுடன். நீங்க ஒரு வித குளிர்ச்சியை உணர்வீர்கள். உணர்ந்தால். அது நல்ல உயர் தரமானது.

 காதி, பூம்புகார் போன்ற கடைகளில் தரமான ஸ்படிக மாலை கிடைக்கும்.

 இதன் விலை?

 450 ரூபாயில் ஆரம்பித்து. 4800 ரூபாய் வரை. என்னுடைய தொழில். டூர். நான். மாதம் ஒருமுறையோ, இரு முறையோ. ஒரு 30, 40 பேரை அழைத்து  கொண்டு காசி செல்வேன். அப்பொழுது. காசியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள



 சாரநாத்தில். எனது நண்பர்கள். யார், யாருக்கு ஸ்படிக மாலை தேவை படுகிறதோ வாங்கி. வருவேன். 4800 ரூபாய் மதிப்பிலான ஸ்படிக மாலை. சாரநாத்தில் வெறும் 350 ரூபாய் மட்டுமே. அங்க. 1st, 2nd quality லாம்  கிடையாது.  Only One. அது No 1.

 நாளை. வயிற்று  புண், வாய் புண்ணிற்கு  உரிய நிவாரணத்தை பாப்போம்.



Thursday, 7 May 2015

மைக்கோவிர்க்கு எமனாகும் வினிகர். காச நோய், நிமோனியா, மார்பு சளி முதலான பல் பிணிகளுக்கு தீர்வு .



இன்று TB.  எலும்புருக்கி நோய்க்கான தீர்வை பாப்போம்.

எலும்புருக்கி நோய் மைக்கோ பாக்டீரியா என்பதால் ஏற்படுவது. அலோபதி மருத்துவத்தில் இதை குனபடுத்த ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். சிலருக்கு அதற்க்கு மேலும் ஆகலாம்.  மைக்கோ பாக்டீரியாவிர்க்கு  எமனாக வினிகர் உள்ளது. அதனால் நோய் உள்ளவர்கள். தினமும் உணவில் வினிகர் சேர்த்து கொள்ள வேண்டும். இதை தவிர்த்து

பூண்டு, வாழைபழம், சீதா பழம், ஆரஞ்ச், அன்னாசி, வால் நட், புதினா, கரும் மிளகு, முருங்கக்காய், கிரீன் டீ  ஆகிய பத்து  உணவு பொருட்கள் எலும்புருக்கி நோய்க்கு நிவாரணமாக உள்ளது.

மற்றும்.

வைட்டமின் டி என்பது உணவில் காணப்படும் ஒரு ஊட்டச்சத்து மட்டுமன்று, அது நம் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோனும் கூட. உலகளவில் சுமார் 1 பில்லியன். அதாவது 10 கோடி  மக்கள், அவர்களின் இரத்தத்தில் மிகக் குறைந்த அளவில் வைட்டமின் டி-யைக் கொண்டிருப்பதாகவும், இந்த குறைபாடு அனைத்து வயதினரிடையேயும்,  பரவலாகக் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின் டி என்பது, கொழுப்புச் சத்தில் கரையக்கூடிய வைட்டமின் வகையைச் சார்ந்தது. இந்த கலப்பானது உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் போன்றவற்றை மேம்படுத்தக் கூடியதாகும். மனிதர்களைப் பொறுத்தவரை, இந்த வைட்டமின் வகையில் வைட்டமின் டி3 மற்றும் வைட்டமின் டி2 ஆகியவை மிக முக்கியக் கூறுகளாகும். போதுமான சூரிய ஒளி உடலுக்கு கிடைக்குமானால், கொலஸ்ட்ராலில் இருந்து வைட்டமின் டி-யை உடல் ஒருங்கிணைத்துக் கொள்ளும். இதன் காரணமாக, வைட்டமின் டி ‘சூரிய ஒளி வைட்டமின்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

நோய் தடுப்பு வைட்டமின் டி, உடலில் அபரிமிதமாக இருந்தால், அது எலும்புருக்கி நோய் மட்டுமல்ல.  புற்றுநோய், இதயம் மற்றும் இரத்த நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய், காசநோய், நிமோனியா, முடி உதிர்தல் மற்றும் மன அழுத்தம், ஈறு நோய்  போன்ற நோய்களை தடுக்கக் கூடியதாகும்.

வைட்டமின் டி. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, ஜலதோஷம்,  மற்றும் நிமோனியா காய்ச்சல் போன்றவற்றிற்கு எதிரான பாதுகாப்புக் கவசத்தை வழங்கக்கூடியதாகும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய ஆரோக்கியமான குழந்தைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானதானக உள்ள வைட்டமின் டி, குறைமாத பிரசவம் நிகழும் அபாயங்களையும் குறைக்க வல்லதாகும்.

மேலும், வைட்டமின் டி- யை சரியான அளவில் உட்கொண்டு வந்தால், கீழே தவறி விழுவது, எலும்பு முறிவுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் முதலாம் வகை சர்க்கரை நோய், போன்றவற்றால் ஏற்படும் காயங்களினால் உண்டாகக்கூடிய அபாயங்களை குறைக்கும். மேலும் உடலில் உண்டாகும் புண்களை விரைவில் ஆற்றக் கூடிய சக்தியும் கொண்டது வைட்டமின் டி.

 மேலே குறிப்பிட்ட 10 உணவுகளும் நமக்கு வைட்டமின்  சக்த்தை  அதிகம் தந்து. நம்மை பல்வேறு நோய்களிலிருந்து காக்கும்.

 நாளை.   இந்த வெய்யிலில் உடல் மட்டும் சூடாவது இல்லை. அதனால் மனமும் சூடாகிரது.

 உடல், மன சூட்டை  தணிக்க வழிகளை நாம் நாளை பாப்போம்.

Monday, 4 May 2015

ஆஸ்மா, வீசிங், சைனஸ் முதலான சுவாச நோய்களுக்கு யோகா, மூலிகைகள்.



ஆஸ்மா, வீசிங், சைனஸ்  என்று சுவாசம் சம்பந்தமாக வரும்  எந்த  நோயுமே  இந்த உலகில் சரி செய்ய முடியாத விஷயம் இல்லை. அதற்க்கு  உதாரணமாக எனது தம்பியையே கூறலாம். மேலே இருப்பது  எனது தம்பியின் புகைப்படம்  தான்.


 16 வருடங்களுக்கு முன்.  பிறக்கும் பொழுதே இவனுடன் ஐந்து சத்ருக்கள் உடன் பிறந்தார்கள். அவை. ஆஸ்மா, வீசிங், சைனஸ்,  டிங்கு, எலும்புருக்கி நோய் எனப்படும்  TB . டிங்குவை உடனடியாக மருத்துவம் மூலம்  சரி செய்ய முடிந்தது. அனால்.  மீதி  நாலு   சத்ருக்களையும் அவ்வாறு அழிக்க  முடியவில்லை. ஆஸ்மா, வீசிங், சைனஸ். இந்த மூன்றில்  ஏதேனும் ஒன்று வந்தாலே. அது எவ்வளவு வேதனை. மூன்றும் ஒன்றாக. அதுவும் பச்சிளம் குழந்தைக்கு.  குறிப்பாக.  எலும்புருக்கி நோயால். வாழ்நாள் முழுக்க  எலும்பும், தோலுமாக பலவீனமாக  அவன் இருப்பானே என்று மிகுந்த கவலையில் ஆழ்ந்தேன்.


முதல் 12 வருடங்கள். நானும் எனது பெற்றோரும். தூங்கிய  இரவுகளை விட.  தூங்காத இரவுகளே அதிகம்.   நான்கு வருடங்களுக்கு முன். வெற்றி கரமாக எனது தம்பி அந்த நான்கு சத்ருக்களையும் கொன்று விட்டான். எவ்வாறு  .


தினமும்  தூதுவளை, துளசி. அவனது உணவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இடம் பிடித்தது. மற்றும். அவனது எலும்புருக்கி நோயை குணப்படுத்தும்,  எலும்பை  பலபடுத்தும் உணவுகள் அவனுக்கு கொடுக்கபட்டது. எலும்புருக்கி நோய்க்கு உண்டான உணவுகள், மூலிகைகள் குறித்து நாளை பாப்போம்.


நான் ஆதம்பாக்கத்தில் உள்ள. வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாழும் கலைமன்றத்தில்  மாணவனாக. சேர்ந்தேன். அங்கு. மற்றும் எனது தந்தையின் நண்பர்  கார்த்திக். போன்றோர்களிடம். யோகாசனங்களை கற்று கொண்டு. அவற்றில் எவை, எவை. சுவாச பிரச்சனைக்கான சிறந்த யோகாசனங்கள் என்பதை தேர்வு செய்து. அவற்றை எனது தம்பிக்கு சொல்லி கொடுத்தேன். அணைத்து. யோகாசனங்களுமே. சுவாசத்திற்கு நல்லது. அதில் முக்கியமாக. Breathing  exercise  எனப்படும் பிராணாயாம பயிற்ச்சி. அது நான் யோகா வகுபிற்க்கு செல்வதற்கு முன்பே. வீட்டில் கற்று தரப்பட்ட ஒன்று தான். ஆனால்?  எனது தம்பிக்கு இருந்த பிரச்சனைகளுக்கு.  பிராணாயாமம் மட்டும் பத்தாது. அதனால். அவனுடைய சுவாசம் சம்பந்தமான அணைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் மூன்று முக்கிய யோகாசனங்களை  அவனுக்கு கற்று தந்தேன்.


அவை.

  வஜ்ராசனம்.



 சுப்த வஜ்ராசனம்.



 ஹலாசனம்.




இவை மூன்றின் பலன்களையும் வெகு விரைவில் யூ  டியூப்பில் வீடியோக்களாக  வெளியிடுகிறேன். முழுமையான பலனை பெற. அருகில் உள்ள நல்ல யோகா ஆசிரியரை அணுகி நீங்கள் பயிற்ச்சி எடுத்து கொள்ளுதலே சிறந்தது.  எனது வீடியோ. ஒரு  மாதிரி. அவ்வளவே. ஏற்கனவே மாரைடைப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து இரண்டு வீடியோக்கள் அப்லோட் செய்து இருக்கிறேன். எழுத்து மூலம் சொல்லும் தகவல்களை. காணொளி வாயிலாக சொன்னால். தமிழ் படிக்க தெரியாதவர்களும் பயன் பெறுவார்கள் என்றாலும். எனக்கு. பேசுதலை விட. எழுதுவதில் ஆர்வம் அதிகம். பேச்சு பணியோடு வழக்கம் போல் எழுத்து பணியும் தொடரும்.


 நான் மேலே குறிப்பிட்ட மூன்று யோகாசனங்களில்.  சுப்த வஜ்ராசனம் எனப்படும் யோகா. சுவாச பிரச்சனை மட்டும் அல்ல. எலும்புகளை நன்கு பலப்படுத்துதல். அதில் உள்ள கோளாறுகளை சரி செய்தல். முதலியவற்றை செய்யும்.   வஜ்ராசனம் மட்டும்.  நீங்கள் கற்று கொள்ளாமல் இப்பொழுதே கூட புகைபடத்தில் இருப்பதை பார்த்து  முயற்ச்சி செய்யலாம். ஆனால்? சுப்த வஜ்ராசனம், ஹலாசனம் இரண்டையும். ஒரு நல்ல ஆசானிடம் பயிற்ச்சி எடுக்காமல் முயற்ச்சி செய்தால். உங்களுக்கு ஒழுங்காக உள்ள  எலும்பு கூட உடைந்து விடும். காரணம். இந்த இரண்டு ஆசனங்களையும் செய்வதற்கு. உடலில்  Flexibility தேவை. நீங்கள் முறையான நடன பயிற்ச்சி எடுத்து இருந்தால் கவலை இல்லை.


பிறக்கும் பொழுதே. எலும்புருக்கி நோயுடன் பிறந்த என் தம்பி. இன்று. 16 வயதினில். 6 அடிக்கும் மேல் உயரம். 15 இஞ்சில் ஆர்ம்ஸ். அகன்ற மார்பு. அவன் உயரத்திற்கு ஏற்ற எடை என்று. ராஜகுமாரன் போல் இருக்கிறான். கராத்தே, சிலம்பம் இரண்டு பயிற்சிகளும் முறைப்படி கற்று இருக்கிறான்.


 அவன் ஒழுங்காக ஒத்துழைத்ததால் தான்.  என்னால் அவனுக்கு யோகா பயிற்ச்சி. அதுவும். அப்பொழுது அவன் உடல் இருந்த நிலைக்கு கடினமான யோகா பயிற்ச்சி கொடுக்க முடிந்தது. அவனுடைய விடா முயற்ச்சி, தன்னம்பிக்கை,  மருந்து மாத்திரைகளால் தீர்க்கவே முடியாத  நோய்களை. மனம் என்னும் மந்திர சக்தி கொண்டு. அந்த சக்தியை உடல் என்னும் எந்திரத்தில் செலுத்தி. எவ்வாறேனும். தீர்க்க முடியாத நோய்களை தீர்த்து கட்ட வேண்டும் என்று அவனுக்கு இருந்த அந்த வெறியே. இன்று நிரந்தர தீர்வை கொடுத்து இருக்கிறது.


சுவாசம் சம்பந்தமான கோளாறு  இருப்பவர்கள் தினமும் துளசி நீர் அருந்த வேண்டும். பெருமாள் கோவிலில் ஒரு உத்தரிணி, இரண்டு உத்தரிணி அல்ல. எட்டு மணி நேரம் தாமிர பாத்திரத்தில். துளசியை நன்கு  ஊர வெய்த்து. 1, 2 டம்பளர் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் குடிக்க வேண்டும். மற்றும்  தூதுவளையை தினமும் சேர்த்து கொள்ளவும். அதோடு  சரகர் சொன்ன 10 மூலிகைகள். 2/5/2015  செய்த பதிவை பார்க்கவும்.


 இவற்றை செய்தால். சுவாசம் சம்பந்தமான அணைத்து கோளாறுகளும் நிச்சயம் நீங்கும்.


 நாளை எலும்பு உருக்கி நோய்க்கான தீர்வை பார்க்கலாம்.


          

Herbal Remedys and Technique, Exercise for Heart Attack.


Sunday, 3 May 2015

பல ரோகம் போக்கும் தங்க மரம்




ஒரு முக்கிய அறிவிப்பு.

இன்று இதைய நோய் சம்பந்தமான யூ  டியூப் வீடியோவை பார்த்து பல நண்பர்கள் பாராட்டினார்கள். ஆனாலும் பேச்சில் உள்ள அளவு எனக்கு எழுத்தில் திறமை இல்லை என்பது உண்மை தான். தமிழே எழுத படிக்க  தெரியாத பல இளைய தலை முறையினர் இருப்பதால். அவர்களும் பயன்   பெற வேண்டும் என்பதற்காகவே. இந்த யூ  டியூப்  சேவை. யூ  டியூப்  வீடியோவில். நான் எழுத்தில் சொல்லாத தகவல்கள் நிறைய வரும்.

 தமிழை படிப்பதை விட. தமிழ் வீடியோவை பார்ப்பது எளிது அல்லவா.

  ஆனாலும். எனக்கு பேச்சில் விட எழுத்தில் தான் அதிக ஆர்வம். வழக்கம் போல் என்னுடைய எழுத்து பனி தொடரும். கூடுதலாக பேச்சு  பணி. அவ்வளவே.

 நேற்றைய பதிவின் தொடர்ச்சியை பாப்போம்.

ஒரு மருத்துவன் நோயாளியை எவ்வாறு நடத்த வேண்டும் என்கின்ற கேள்விக்கு சரகர் கூறி இருக்கும் விடை
.
தம் புத்ர வத் உபாச்சறேத் -நோயாளிகளை உன் சொந்த பிள்ளைகளை போல் கவனி .
இதற்க்கு மேல் அடுத்த கட்டம் -மம பூத தயா பிரதி -நீ உன்னை எவ்வாறு நடத்துவாயோ அவ்வாறு உன்னிடம் வரும் அனைத்து ஜீவன்களையும் நடத்து.

இதை விட சிறந்த கருத்து எதுவுமே இல்லை ,என்னை நெகிழ செய்த கருத்து .கண்களில் நீர் பணிக்கும் .எண்ணி பாருங்கள் ,ஒரு மருத்துவர் அதிக வீர்யமுள்ள மருந்துகளை ,ஒரே பெயருள்ள வெவ்வேறு கம்பெனி மருந்துகளை ,இல்லை தேவயற்ற பரிசோதனைகளை ,இல்லை சந்தைக்கே வராத அல்லது சந்தையில் தடை செய்ய பட்ட ஒரு மருந்தை தன் குழந்தைக்கோ இல்லை தனக்கோ கொடுக்க முயல்வாரா? நிச்சயம் கிடையாது .நோயாளி என்பவன் வேறு யாரோ என்பதால் தான் இந்த அசிரதை அஜாக்கிரதை எல்லாம் .எத்தனை பெரிய தத்துவத்தை எளிமையாக ஒரு வரியில் அடக்கி விட்டார்கள் !!
இப்படி ஒவ்வொரு மருத்துவரும் எண்ணி மருத்துவம் செய்தால் உலகம் எத்தனை அற்புதமாக இருக்கும் .!!

சரக சம்ஹீதையில் கொன்ணை அத்யாயம்.

கொன்ணை மரம். இதன் ஆங்கில பெயர் Golden Shower Tree. Botanical Name [CASSIA FISTULA] இதன் மருத்துவ பயன்பாடுகள் பற்றி சரகர்.
சரகராலும், சுச்ரூதாவாலும் பல தோல் குஷ்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. சரகர் எவ்வாறு சர்ம நோய்களுக்கு இந்த மருந்து பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி, ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். தன்வந்திரி நிகண்டு, தோல் வியாதிகள், ஜுரம் இவற்றுக்கு மருந்தாக, கொன்னையை குறிப்பிடுகிறது. இதன் இலைகள் ஜூரத்தை குறைக்கவும், பூக்களும் விதைகளும் பித்தத்தையும், கபத்தையும் குறைக்கவும், பழக்கதுப்பு, பசியை உண்டாக்கும் என்றும் ப்ருஹத் நிகண்டு ரத்னாகரா தெரிவிக்கிறது.

சரகர் கொன்னை பழ கதுப்பை, 12 வகையான மருந்தாக தயாரிக்கும் விதத்தை கூறியிருக்கிறார்.

கொன்னை தோல் வியாதிகள், உடல்பருமன், கொலஸ்ட்ரால் குறைப்பு இவற்றுக்கு அருமருந்து, குஷ்டம், வெண் குஷ்டம், போன்ற சர்ம வியாதிகளுக்கு பயன்படும்.

கொன்னை மரப்பட்டை வலிகளை குறைக்கவும், தொற்றுநோய்கள் அண்டாமலும் தாக்கும்.

பாக்டீரியா தொற்றுகளை தடுக்கும் சக்தி உடையது. ஷயரோக கிருமியான மைக்கோபேக்டீரியம் டியூபர்க்ளோசிஸ் என்றதை அழிக்கும். விதைகளின் சாரம் சால்மோனெல்ல டைஃபி, இவற்றை அழிக்கும். பழக்கதுப்பு சிறப்பான கிருமி, நுண்ணுயிர் நாசினி.

வேர்ப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் பால், மூட்டு வலி, ஆர்த்தரைடீஸ், சோரியாஸிஸ்க்கும் நல்ல மருந்து.

தோலில் அரிப்பு, நமைச்சல் இவற்றை போக்கும்

இதயத்திற்கு நல்ல டானிக். நீரிழிவு, மூட்டு வலி மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம் இவற்றுக்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது.

கொன்னை மரப்பட்டை வைரஸ் கிருமிகளின் எதிரி. அதே போல் பழக்கதுப்பு பாக்டீரியாவை அழிக்கும். விதைகளின் பொடி அமீபா நுண்ணுயிர்களை அழிக்கும். எலிகளை வைத்து நடத்திய பரிசோதனைகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தவிர கொலஸ்ட்ராலை குறைக்கும் குணமும் உடையது கொன்னை. கொன்னை இலைகள் டயாபடீஸ் உள்ள எலிகளுக்கு கொடுத்த போது, சர்க்கரை அளவு குறைவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பழக்கதுப்பு, கொன்னையின் மற்ற பாகங்களை விட, சிறந்த கிருமி நாசினி, ஃபங்கஸ் எனப்படும் நுண்ணுயிர்களுக்கு கொன்னை மர வேர் எதிரி.
கொன்னை பழம் உலர வைத்தது பாதுகாப்பான மலமிளக்கி.

உபயோகம்

கொன்னை இலைகொழுந்திலிருந்து பிழிந்த சாற்றில் 150 மி.லி. எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கிருமி, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

இலையை அரைத்து படர்தாமரைக்கு பூசலாம்.

கொன்னை பூவுடன், பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் நீங்கும்

பூவை குடிநீரில் சேர்த்து குடிக்க வயிற்றுவலி, குடல் நோய்கள் நீங்கும்.

பூவை தேனில் ஊறவைத்து கொடுக்க காலை வெளிஏற வேண்டியவை ஒழுங்காக வெளிஏறும். . பாலுடன் பூவைக் கலந்து காய்ச்சி உண்ண உள் உறுப்புக்களை வலிமைப்படுத்தும். மெலிந்தவர்களுக்கு பலன் தரும்.

மரப்பட்டையின் கஷாயம் (60 மிலி), தேன் (5 மி.லி.) கலந்து ஒரு நாளைக்கு இருவேளை, 1-2 மாதங்கள் உட்கொண்டு வர கொலஸ்ட்ரால், அதிக உடல்பருமன் குறையும்.

மரப்பட்டை கூழ் 15 கிராம் அளவில், 1 மாதம் உண்டுவர மூட்டுவலி, வயிற்றுப் பூச்சிகள் நீங்கும

கொழுந்து இலைகளின் கூழுடன் 5-15 கிராம் மோருடன் 1 மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். இதே போல் பூவுடன், மோர் சேர்த்து உட்கொள்ள, வயிற்றுப்புண்கள் குணமாகும். இவ்வளவு பயன்களை தரும் கொன்னை மரம், ராஜமரம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவது ஆச்சரியமல்ல.

ஒரு மருத்துவன் நோயாளியை எவ்வாறு நடத்த வேண்டும் என்கின்ற கேள்விக்கு சரகர் கூறி இருக்கும் விடை
.
தம் புத்ர வத் உபாச்சறேத் -நோயாளிகளை உன் சொந்த பிள்ளைகளை போல் கவனி .
இதற்க்கு மேல் அடுத்த கட்டம் -மம பூத தயா பிரதி -நீ உன்னை எவ்வாறு நடத்துவாயோ அவ்வாறு உன்னிடம் வரும் அனைத்து ஜீவன்களையும் நடத்து.

இதை விட சிறந்த கருத்து எதுவுமே இல்லை ,என்னை நெகிழ செய்த கருத்து .கண்களில் நீர் பணிக்கும் .எண்ணி பாருங்கள் ,ஒரு மருத்துவர் அதிக வீர்யமுள்ள மருந்துகளை ,ஒரே பெயருள்ள வெவ்வேறு கம்பெனி மருந்துகளை ,இல்லை தேவயற்ற பரிசோதனைகளை ,இல்லை சந்தைக்கே வராத அல்லது சந்தையில் தடை செய்ய பட்ட ஒரு மருந்தை தன் குழந்தைக்கோ இல்லை தனக்கோ கொடுக்க முயல்வாரா? நிச்சயம் கிடையாது .நோயாளி என்பவன் வேறு யாரோ என்பதால் தான் இந்த அசிரதை அஜாக்கிரதை எல்லாம் .எத்தனை பெரிய தத்துவத்தை எளிமையாக ஒரு வரியில் அடக்கி விட்டார்கள் !!
இப்படி ஒவ்வொரு மருத்துவரும் எண்ணி மருத்துவம் செய்தால் உலகம் எத்தனை அற்புதமாக இருக்கும் .!!

சரக சம்ஹீதையில் கொன்ணை அத்யாயம்.

கொன்ணை மரம். இதன் ஆங்கில பெயர் Golden Shower Tree. Botanical Name [CASSIA FISTULA] இதன் மருத்துவ பயன்பாடுகள் பற்றி சரகர்.
சரகராலும், சுச்ரூதாவாலும் பல தோல் குஷ்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. சரகர் எவ்வாறு சர்ம நோய்களுக்கு இந்த மருந்து பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி, ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். தன்வந்திரி நிகண்டு, தோல் வியாதிகள், ஜுரம் இவற்றுக்கு மருந்தாக, கொன்னையை குறிப்பிடுகிறது. இதன் இலைகள் ஜூரத்தை குறைக்கவும், பூக்களும் விதைகளும் பித்தத்தையும், கபத்தையும் குறைக்கவும், பழக்கதுப்பு, பசியை உண்டாக்கும் என்றும் ப்ருஹத் நிகண்டு ரத்னாகரா தெரிவிக்கிறது.

சரகர் கொன்னை பழ கதுப்பை, 12 வகையான மருந்தாக தயாரிக்கும் விதத்தை கூறியிருக்கிறார்.

கொன்னை தோல் வியாதிகள், உடல்பருமன், கொலஸ்ட்ரால் குறைப்பு இவற்றுக்கு அருமருந்து, குஷ்டம், வெண் குஷ்டம், போன்ற சர்ம வியாதிகளுக்கு பயன்படும்.

கொன்னை மரப்பட்டை வலிகளை குறைக்கவும், தொற்றுநோய்கள் அண்டாமலும் தாக்கும்.

பாக்டீரியா தொற்றுகளை தடுக்கும் சக்தி உடையது. ஷயரோக கிருமியான மைக்கோபேக்டீரியம் டியூபர்க்ளோசிஸ் என்றதை அழிக்கும். விதைகளின் சாரம் சால்மோனெல்ல டைஃபி, இவற்றை அழிக்கும். பழக்கதுப்பு சிறப்பான கிருமி, நுண்ணுயிர் நாசினி.

வேர்ப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் பால், மூட்டு வலி, ஆர்த்தரைடீஸ், சோரியாஸிஸ்க்கும் நல்ல மருந்து.

தோலில் அரிப்பு, நமைச்சல் இவற்றை போக்கும்

இதயத்திற்கு நல்ல டானிக். நீரிழிவு, மூட்டு வலி மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம் இவற்றுக்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது.

கொன்னை மரப்பட்டை வைரஸ் கிருமிகளின் எதிரி. அதே போல் பழக்கதுப்பு பாக்டீரியாவை அழிக்கும். விதைகளின் பொடி அமீபா நுண்ணுயிர்களை அழிக்கும். எலிகளை வைத்து நடத்திய பரிசோதனைகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தவிர கொலஸ்ட்ராலை குறைக்கும் குணமும் உடையது கொன்னை. கொன்னை இலைகள் டயாபடீஸ் உள்ள எலிகளுக்கு கொடுத்த போது, சர்க்கரை அளவு குறைவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பழக்கதுப்பு, கொன்னையின் மற்ற பாகங்களை விட, சிறந்த கிருமி நாசினி, ஃபங்கஸ் எனப்படும் நுண்ணுயிர்களுக்கு கொன்னை மர வேர் எதிரி.
கொன்னை பழம் உலர வைத்தது பாதுகாப்பான மலமிளக்கி.

உபயோகம்

கொன்னை இலைகொழுந்திலிருந்து பிழிந்த சாற்றில் 150 மி.லி. எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கிருமி, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

இலையை அரைத்து படர்தாமரைக்கு பூசலாம்.

கொன்னை பூவுடன், பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் நீங்கும்

பூவை குடிநீரில் சேர்த்து குடிக்க வயிற்றுவலி, குடல் நோய்கள் நீங்கும்.

பூவை தேனில் ஊறவைத்து கொடுக்க காலை வெளிஏற வேண்டியவை ஒழுங்காக வெளிஏறும். . பாலுடன் பூவைக் கலந்து காய்ச்சி உண்ண உள் உறுப்புக்களை வலிமைப்படுத்தும். மெலிந்தவர்களுக்கு பலன் தரும்.

மரப்பட்டையின் கஷாயம் (60 மிலி), தேன் (5 மி.லி.) கலந்து ஒரு நாளைக்கு இருவேளை, 1-2 மாதங்கள் உட்கொண்டு வர கொலஸ்ட்ரால், அதிக உடல்பருமன் குறையும்.

மரப்பட்டை கூழ் 15 கிராம் அளவில், 1 மாதம் உண்டுவர மூட்டுவலி, வயிற்றுப் பூச்சிகள் நீங்கும

கொழுந்து இலைகளின் கூழுடன் 5-15 கிராம் மோருடன் 1 மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். இதே போல் பூவுடன், மோர் சேர்த்து உட்கொள்ள, வயிற்றுப்புண்கள் குணமாகும். இவ்வளவு பயன்களை தரும் கொன்னை மரம், ராஜமரம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவது ஆச்சரியமல்ல.

 அடியேனுக்கு தேவையான தகவல்களை தந்த. Swamis  Indology  Blog  உரிமையாளர் சுவாமிநாதன் மற்றும் அமானுஷ்யம் blog  உரிமையாளர் யோகி குரு முதலானோர்க்கு  நன்றி. எழுத்தாளார்  ஜெய மோகன் அவர்களின் நுல்  மூலம்  நான்  அதிகம் சரகர் அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன். அவரின் நுலே. என்னை சரக  சம்ஹிதா வாங்க தூண்டியது.

 நாளை ஆஸ்மா, வீஸிங்  முதளியவற்றிர்கான நிரந்தர தீர்வை பாப்போம்.

Saturday, 2 May 2015

ஆச்மா நோய் தீர. சரகர் சொன்ன பத்து மூலிகைகள்.



புனித பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் சரகர், சுச்ருதா  போன்ற மருத்துவ ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் பாரத திருநாட்டின் பழமையான மருத்துவர்கள் மட்டும் அல்ல. ஒவ்வொரு இந்தியனும் பெருமை படும் படி. மனித சமுதாயதிற்கு  தொண்டு செய்த  அருமையான மருத்துவர்களும் கூட.

  சரகர் யார் என்பதை இன்று முதலில் பாப்போம். அதற்க்கு    முன். சரகர் ஆஸ்மா நோயை குணப்படுத்த கூரிய  மருத்துவ முறை பற்றி நாம் முதலில் பாப்போம்.
சரகர் சொன்ன ஆஸ்துமாவிற்கான பத்து மூலிகைகள்

பூலாங்கிழங்கு, புஷ்கரமூலம், புளிவஞ்சி, ஏலரிசி, பெருங்காயம், அகில், துளசி, கீழாநெல்லி, கீரைப்பாலை, காட்டுக் கோரை கிழங்கு. இந்த பத்தையும்  ஒன்றாக கலந்து தினமும் உண்டால். ஆஸ்மா வெகு விரைவில் குணம் ஆகும். ஆஸ்மாவிற்கு இதே போல் நிறைய மூலிகைகள், மருந்துகள் இருக்கிறது. அதை பார்பதற்க்கு  முன். சரகரின் வாழ்க்கை வரலாறு. அவர் மருத்துவ உலகிற்க்கு கூறிய  அறிவுரைகளை பாப்போம்.
. இவரது சரக சம்ஹிதை 120 அத்தியாயங்களைக் கொண்டது.

சரகர் ஆத்ரேய முனிவரின் சீடர். அக்னி வேஸர் எழுதிய நூலை செம்மை படுத்தி இவர் சரக சம்ஹீதை எழுதினார் என்று சொல்லப்படுகிறது. சரகர் ஆயுர்வேதத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமான ஒருவர். சரகர்

சரகரின் காலம்

கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகள் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த வாதத்தை மறுக்கும் அறிஞர்கள் சரகர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டு காலம் முன்னதாக வாழ்ந்தவர் என்று உறுதி படக் கூறுகிறார்கள். ஆத்ரேய மஹரிஷியின் காலத்தை பல நூற்றாண்டுகாலத்திற்கு முன்பேயே நிர்ணயிக்க வேண்டியிருப்பதால் சரகரின் காலமும் மிக மிக முற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் வாதம். ஆத்ரேயர் புராண கால முனிவர். அவர் காலத்தில் புத்தர் இல்லை. ஆனால் சரக சம்ஹிதாவில் ஹிந்து வேதங்களில் கூறப்பட்ட மருத்துவ முறைகள் கூறப்பட்டாலும் சில இடங்களில் புத்த மத சித்தாந்தங்களும் பேசப்படுகிறது. புத்தர் 2600 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இவர் காலத்தில் தான் சுஷ்ருதாவும் வாழ்ந்தார். சரகர் புத்தர் வாழ்ந்த காலத்துக்கும் 300 ஆண்டுகள் முற்பட்டவர். என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.இவர் நூலில் புத்த மத சித்தாங்களும் சில இடங்களில் சொல்லப்பட்டு இருப்பதால் அவர் புத்தருக்கு பின் வந்தவர். ஆத்ரேய முனிவரின் சீடர் என்பது கற்ப்பனை என்று ஆகி விடுகிறது.

சரகரது நூலில் புத்த மத சித்தாந்தங்கள் வந்ததற்க்கு சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் பின்னணி.

சரகரது சம்ஹீதையில் மூன்றில் ஒரு பங்கு கிடைக்காமல் போக இந்த குறைபாட்டை 4ம் நூற்றாண்டில் செரி செய்தவர் த்ருதபாலா என்கிற புத்த துறவி. இவர் பாடுபட்டு பல இடங்களிலிருந்து செய்திகளை சேகரித்து சரகசம்ஹிதையை பூர்த்தி செய்தார். அதற்கும் முன்னே கி.மு. 323 ஆண்டில் நாகார்ஜூனா எனும் புத்த துறவி திபெத்திய மொழியில் மொழி பெயர்த்தார். கி கா யீ மற்றும் டான் ஐயவோ ஆகிய இரு சீன தேசத்து புத்த துறவிகள் கி.பி. 472இந்த நூலை மொழிபெயர்த்தனர். அவ்வாறு செய்யும் பொழுது இவர்களில் யாரேனும் ஒருவரோ இல்லை அனைவருமே அவர்களது சொந்த சரக்கை கொஞ்சும் இதில் கலந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சரகர் தனது குருகுலத்தை நடத்தி வந்த விதம், மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் திறமை அவரது சம்ஹிதையிலிருந்து புரிகிறது. அவர் பட்டிமன்றம், விவாதங்கள் தர்க்கங்கள் மூலம் மருத்துவத்தை சொல்லி கொடுத்தார். க்ரூப் டிஸ்கஶந்ஸ் எனப்படும் இன்றைய முறையை சரகர் பின்பற்றியிருக்கிறார்.

சரகர் கண்டிப்பான ஆனால் அறிவு மிகுந்த ஆசிரியர். அவர் மருத்துவர்களை பற்றி சொன்னது.

“அறிவில்லா வைத்தியரிடம் சிகிச்சை பெறுவதை விட இறப்பது மேல்”
“நோயாளிகளை குணப்படுத்த நால்வர் சிறப்பாக அமைய வேண்டும். நால்வர்-மருத்துவர், மருந்துகள், உதவியாளர், நோயாளி” சரகர் கொடுத்த கல்வி பயிற்சி 7 வருடங்களுக்கு எட்டுவகை மருத்துவ முறைகள் கற்றுத்தரப்படும். அதன்பின் Hippocratesன் சத்ய பிரமாணம் போலவே (இந்த யுக டாக்டர்கள் எடுக்கும் சத்ய பிரமாணம்). சரகரும் ஒரு சத்திய பிரமாணத்தை எழுதியிருக்கிறார். எப்படி ஒரு மருத்துவர் பிரசவம் பார்க்க வேண்டும் என்று மட்டும் இவர் சொல்லாமல் பிரசவத்திற்கு பின் கவனிக்கவேண்டியவை பற்றியும் சொல்லி இருக்கிறார்.

மேலும் சரகர் மருத்துவ உலகிற்க்கு சொன்ன அறிவுரைகளை நாம் நாளை பார்ப்போம். அவை எக்காலத்திற்கும் பொருந்த கூடியவை. சரக சம்ஹிதாவில் ஒரு மரத்திற்க்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளார். அது எந்த? மரம்.

நாளை.  Heart Attack.  நமது முறையற்ற உணவு, கவலையின் பிரதி பலிப்பாக  இன்று இந்த நோய் அதிகம் அதிகரித்து உள்ளது. இது வராமல் தடுக்கவும், தீர்க்கவும் வழிகளை பற்றிய வீடியோ தனியாக வெளி ஆகும். அதை  தவிர்த்து. இந்த பதிவின் தொடர்ச்சி நாளை வெளி ஆகும்.


Friday, 1 May 2015

உங்கள் பித்தம் எங்கள் பாக்கியம்





கரிசலாங்கண்ணி கீரை,  சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி  இவையெல்லாம் பித்தம் தணிக்கும்.

மாதுளம்பழம் தினமும் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, ஞாபக சக்தி எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்

  நாம் தினமும் உணவுகளில் இஞ்சிக்கு பிரதான இடம் கொடுக்க வேண்டும்.  சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்ரமன்யதிற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை  என்பது பழமொழி. மீன் காய்ந்தால் கருவாடு.   இஞ்சி காய்ந்தால் சுக்கு.

சுக்கும், பனை வெல்லமும் போட்டு காய்ச்சிய நீரை நித்தமும்  குடித்து வந்தால். பித்த கோளாறு மொத்தமாக தீரும்.

 எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, அவற்றோடு ஜீரகம், தேன்  நான்கையும் கலந்து தினமும் ஒரு வேளையோ, இரண்டு வேளையோ குடித்து  வரவும்.


இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட. அது வாத கோளாறையும் ஓரளவு சீர் செய்யும்.


இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

 பித்த பாதிப்பிர்க்கு இஞ்சிக்கு இணையாக மருந்து இந்த உலகில் இல்லை. பித்தத்தை சரி செய்ய நாம்  எந்த மருந்து, மூலிகையை, உணவு பொருளை   எடுத்து கொண்டாலும். அவற்றோடு இஞ்சி சேர்த்து கொண்டால் தான். அது  வேலை செய்யும். ஆனால்.  இஞ்சி சிங்கம் மாதிரி சிங்கிளா இருந்தே பித்தத்தை சரி செய்யும். இஞ்சியின் காரத்தை நாம் தாக்கு பிடிக்க தேன்  மட்டுமே தேவை படுகிறது.


கெட்ட  கொழுப்பிற்கு  இஞ்சி ரொம்ப...... கெட்டது.  இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி குறித்த. எனது யூ  டியூப்  வீடியோ ஒன்று. வெகு விரைவில் வெளி ஆகும்.


 வெகு நாள் முன் படித்த ஒரு டாக்டர் ஜோக். ஒரு சித்த  வைத்தியர் வீட்டு  வாசலில் உள்ள பலகை.

  உங்கள் பித்தம், எங்கள்  பாக்கியம்.

  பின் குறிப்பு-  நான் ஜோக்னு  சொன்னேன்கர்துக்காக  சிரிப்பே வராம கஷ்டப்பட்டு சிரிக்க  வேண்டாம். சிரிப்பு வந்தால் சிரிங்க.

 நாளை-  ஆஸ்மா, வீசிங் முதலான சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வு.