வணக்கம் நண்பர்களே. நடுவில் சில நாட்கள் தொழில் நிமித்தமாக. பயணம் செய்ய வேண்டி இருந்தது. அதனால். blog பதிவு செய்ய நேரம் கிடைக்காமல் போய் விட்டது. வரும் வியாழ கிழமையில் இருந்து. நான் தொடர்ந்து பத்து நாட்கள். ஆழ்நிலை தியானத்தில் அமர போகிறேன். அந்த பத்து நாட்களும். யாரிடமும் ஒரு வார்த்தை பேச மாட்டேன். பேச் புக், google blogger எதையும் உபயோகபடுத்த மாட்டேன். அதன் பிறகு. நான் சென்னையில் இருக்கும் அணைத்து நாட்களிலும். சித்த மருத்துவம் தொடர்பான பதிவுகள் தொடரும்.
இன்று உடல் சூட்டை தணிக்கும் வழிகளை பற்றி பார்ப்போம்.
உடல் சூட்டை தணிக்க. என்ன, என்ன உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர், மோர் என்று உடலுக்கு குளிர்ச்சியை தரும் பட்டியல் நீளும். உடல், மனம் இரண்டையும் குளிர்ச்சியாக வெய்க்க உள்ள வழிமுறைகளில் மிக சிறந்த வழிமுறை என்னவென்றால் ஸ்படிக மாலை அணிவது.
அன்று அறிவியல் ரீதியான காரணங்கள் சொன்னால் அதை எடுத்து கொள்ளும் பக்குவத்தில் மக்கள் இல்லை. இப்பொழுது ஓரளவு விழிப்புணர்வு வந்து உள்ளது. அது போல், அன்று இல்லாத கால கட்டங்களில். வேப்பிலை, துளசி, வில்வம், ஆல், அரசு, அத்தி, வன்னியில் ஆரம்பித்து. பசுவின் கோமியம் சாணம் வரை. அதீத மருத்துவ பயன்கள் உடைய அனைத்திற்க்கும் ஆன்மீக சாயம் சித்தர்கள் பூசி விட்டார்கள். எளிமையாக அனைவருக்கும் புரியும் படி சொல்வதென்றால். கசப்பான மருந்துகளை தேனில் குழைத்து கொடுப்பதை போல். அன்று சித்த பெருமக்கள். அறிவியல் என்னும் மருந்தை ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அதில் ஒன்று தான் இந்த ஸ்படிக மாலை.
ஸ்படிகம் என்றால் என்ன?
பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள்.
ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்.
1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில் அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும். ஸ்படிக மாலை. நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது. உடல் சூட்டை சீரான. சரியான அளவில் வெய்க்கும்.
2] மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயே இருக்கிறது. மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான் அமைதியாக இருக்கும். ஸ்படிக மாலை. நமது மனதை. அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும். ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.
நமது உடல் சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகதிர்க்கு இணையாக. வேறு எதற்க்கும் இல்லை.
ஸ்படிக மாலை குறித்து கேட்கப்படும் கேள்விகள்.
1]ஸ்படிக மாலை அணிவதர்க்கு என்று ஏதேனும் அடிப்படை தகுதிகள் இருக்கிறதா?.
2] ஸ்படிக மாலை அணிவதற்க்கு . ஏதேனும் ஆச்சார. அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டுமா?
3] ஸ்படிக மாலை அணிவோர்கள். அசைவம் சாப்பிட கூடாதா.
4] ஸ்படிக மாலை பெண்கள் அணியலாமா?
5] ஸ்படிக மாலையில் எவ்வளவு? விதமான தரங்கள் உள்ளது
6] ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு கண்டறிவது.
ஏற்கனவே. நான் மேலே குறிப்பிட்டதை போல். அன்று. மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்க்காக. சித்த புருஷர்களும், ரிஷிகளும் அறிவியலை. ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அது போலவே ஸ்படிகம். பின்னால் வந்த. குறுக்கு புத்தி உடைய சில சாமானிய மக்கள். ஸ்படிக மாலை. இன்னார், இன்னார் அணியலாம். ஸ்படிக மாலை அணிய. இன்ன, இன்ன விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று. அவர்கள் இஷ்டத்திற்க்கு மனதில் தோன்றியவைகளை எழுதி வெய்த்து விட்டு சென்று விட்டார்கள்.
அறிவியல் ரீதியாக. ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
காற்று, சூரியன், சந்திரன், நீர் என்று. இறைவனின் அணைத்து படைப்புகளும் அனைவருக்கும் பொதுவானது தானே. நீர் அனைவர்க்கும் பொதுவானது என்றால். நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகம் மட்டும் எவ்வாறு? ஹிந்துக்களுக்கு மட்டும். உரிய ஒன்றாக ஆகும். நாஸ்திகர்கள் உட்பட. இதை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
தெய்வ பக்த்தி உள்ளவர்கள். 108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வெய்த்து. உங்களுக்கு பிடித்த இறைவனின் பெயரை. கிடைக்கும் நேரத்திற்க்கு தகுந்தார் போல். ஜெபம் செய்யலாம்.
அதை தவிர்த்து. இறை நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் இருவருமே. அதி காலையில் எழுந்து. மொட்டை மாடி போன்ற ஒப்பன் ச்பேச்சில். உங்கள் லட்சியம் என்னவோ. அதையே. திரும்ப, திரும்ப சொல்லி. மொட்டை மாடியில். ஜெபம் போல் ஸ்படிக மலையை வெய்த்து செய்யுங்கள்.
நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட வேண்டும். அமைதியான அதிகாலை வேளை தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து.
இதை நீங்கள் சும்மா. முயற்ச்சி செய்து பாருங்க. உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தும். அது நிறைவேற கால தாமதம் ஆனால். இவ்வாறு செய்வது. அதன் கால தாமத்தை குறைக்கும். முக்கியமாக. இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.
ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர. மீதி அணைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் குளிக்கும் பொழுது. கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.
ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு? கண்டறிவது.
ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து விதமான Quality இருக்குங்க. ஸ்படிக மாலையில் நீங்க கை வெக்கறீங்கனா. வெச்சவுடன். நீங்க ஒரு வித குளிர்ச்சியை உணர்வீர்கள். உணர்ந்தால். அது நல்ல உயர் தரமானது.
காதி, பூம்புகார் போன்ற கடைகளில் தரமான ஸ்படிக மாலை கிடைக்கும்.
இதன் விலை?
450 ரூபாயில் ஆரம்பித்து. 4800 ரூபாய் வரை. என்னுடைய தொழில். டூர். நான். மாதம் ஒருமுறையோ, இரு முறையோ. ஒரு 30, 40 பேரை அழைத்து கொண்டு காசி செல்வேன். அப்பொழுது. காசியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
சாரநாத்தில். எனது நண்பர்கள். யார், யாருக்கு ஸ்படிக மாலை தேவை படுகிறதோ வாங்கி. வருவேன். 4800 ரூபாய் மதிப்பிலான ஸ்படிக மாலை. சாரநாத்தில் வெறும் 350 ரூபாய் மட்டுமே. அங்க. 1st, 2nd quality லாம் கிடையாது. Only One. அது No 1.
நாளை. வயிற்று புண், வாய் புண்ணிற்கு உரிய நிவாரணத்தை பாப்போம்.