siddhas

Sunday, 5 April 2015

சக்கரை நோய்க்கு உணவே மருந்து மருந்தே உணவு உடற் பயிற்சியின் அவசியம்.


 நேற்று நாம் சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்தான நில வேம்பு பற்றி பார்த்தோம். எனது முகநூல் நண்பர் மோசஸ் அவர்கள் சக்கரை நோய்க்கு மேலும் சில எளிய மருந்துகளை பற்றி கூறினார். அவற்றை நாம் பார்ப்போம். 
அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். உணவே மருந்து, மருந்தே உணவு. இதுவே பண்டை தமிழர்களின் சிறப்பு. ஆனால் அதை இன்றைய தலைமுறை தமிழர்கள் உணராததில் எனக்கு வெறுப்பு. சரி. மோசஸ் கூறிய மருத்துவ குறிப்பை பார்ப்போம்.
நூக்கல் 2 எடுத்து மிக்சியில் அரைத்து அதில் 5 ஆவாரம் பூக்களை அரைமணிநேரம் ஊரவைத்து குடிக்க வேண்டும். 5 வெண்டைக்காய்களை எடுத்து துண்டு துண்டாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்.
சக்கரை இனிக்கிற சக்கரை என்பது மாறி சக்கரை கசக்கர சக்கரை என்று சொல்லும் அளவு சக்கரை வியாதி படாத பாடு படுத்துகிறது. சக்கரை வியாதிக்கு காரணம் வெறும் சக்கரை மட்டும் அல்ல. நமது முறையற்ற உணவு முறைகள். நேரம் கெட்ட நேரத்திற்க்கு உண்ணுதல், உறங்குதல் என்று பல, பல காரணங்கள். அதுவும் தமிழகம் சக்கரை வியாதியின் ராஜ தானியாக இருக்கிறது. இதற்க்கு காரணம் தமிழர்கள் நமது பாரம்பரிய உணவு முறையை மறந்து சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல் அயல் நாட்டு மோகத்தில் சிக்குண்டு உள்ளார்கள். ஒரு அரை ஸ்பூந் நெய் சேர்த்து கொண்டால் உடல் குண்டு ஆகி விடும் என்று பயப்படும் இன்றைய தலைமுறை. டொமினோஸ், பிஸா ஹட் போன்ற உணவகங்களில் தின்று, தின்று அதன் மூலம் உடல் பருமன் மட்டும் அல்லாமல் பல்வேறு அவதிகளுக்கு யுவதிகளும், யுவன்களும் ஆளாகிறார்கள்.
என்னடா இது. இந்த பெரிசு ஓவர்ரா அட்வைஸ் பண்றதேனு யூத்ங்க மைன்ட் வாய்ச்ல நினைப்பதை நான் catch பண்ணிட்டேன். நானும் யூத் தாங்க. என் வயசு 26 தான் ஆர்து. இதுக்கு முன் நானும் ரொம்ப குண்டா தான் இருந்தேன். பிசாவ பிசாசு மாதிரி சாப்டுவேன். ஆனால் ஒரு அரை ஸ்பூந் நெய் என் அம்மா தட்டில் விட வந்தால் ஏதோ விசத்தை விட வந்த மாதிரி அலறுவேன். அது எல்லாம் எவ்ளோ பெரிய முட்டாள் தனங்கள் என்பது எனக்கு இப்பொழுது புரிகிறது.
ஆறு அடி உயரம் உடைய நான். 2013 இல் 112 கிலோ எடை இருந்தேன். அப்பொழுது நான் நெய்யை ஒரு நோயாக நினைத்தேன். இன்று என்னுடைய எடை 80 கிலோ. இப்பொழுது தினமும் மத்திய சாப்பாட்டின் பொழுது ஒரு ஸ்பூந் நெய் தவறாமல் சேர்த்து கொள்கிறேன். நான் 112 கிலோ எடையில் இருந்த பொழுது என்ன சாப்பிட்டேனோ அதை விட இரண்டு மடங்கு அதிகமாகவே இப்பொழுது சாப்பிடுகிறேன். ஆனால் பீசா போல் உடல் ஆரோக்கியத்திற்கு பிசாசாக இருப்பவைகளை உண்ணாமல் சக்த்தான உணவுகளை உண்ணுகிறேன். அதற்க்கு தகுந்த வேலையை என் உடலுக்கு கொடுக்கிறேன். ஒரு நாளைக்கி இரண்டு மணி நேரம் உடற் பயிற்ச்சி. இரண்டு மணி நேரம் நடை பயிற்ச்சி.
என்னுடைய தொழில் டூர் கன்டக்ட் பண்றது. வருடத்தில் பாதி நாள் காசி ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு நிறைய பெரியவர்களை அழைத்து கொண்டு செல்வேன். அது போன்ற சமயங்களில் அதிகாலை மூணு மணிக்கு கயா போன்ற இடங்களுக்கு ஒரு 30, 40 பேரை அழைத்து கொண்டு வெளியில் கிளம்ப வேண்டி இருக்கும். திரும்பி வர இரவு 11, 12 ஏன் ஒரு மணி கூட ஆகும். அது போன்ற சமயங்களில் நான் அதற்க்கு ஒரு நாள் முன்பாக இரவு 10.30க்கு உடற் பயிற்ச்சி ஆரம்பித்து 12.30க்கு முடித்து 12 45க்குள் குளித்து ஏஸீயை on பண்ணி ட்ரெஸ் எல்லாம் ஜம்னு பண்ணி மூணு மணிக்கு அலாரம் வெய்த்து ஒரு மணிக்கு படுப்பேன். வெறும் 2 மணி நேர தூக்கம். காசியில் இருந்து கயாவிற்க்கு வேண்னில் செல்ல 5.30 லிருந்து 6 மணி நேரம் ஆகும். அந்த நேரத்தை நான் தூங்க பயன்படுத்தி கொள்வேன். காசியில் என்னுடைய க்ரூப். வாத்தியார் வீட்டில் உட்காந்து திதி கொடுத்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு அது முடிய மூன்று மணி நேரம் ஆகும். எனக்கு அப்பொழுது வேலை இல்லை. அந்த நேரத்தில் என்னுடைய கால்கள் காசி சந்துகளில் ஒரு 2 மணி நேரமாது நடக்கும்.
நிறைய ஓய்வு நேரம் இருப்பவர்கள் உடற் பயிற்சிக்கு என்று ஒரு டைம் டேபிள் போட்டு அதன்படி தினமும் செய்யலாம். காலை 9 மணிக்கு ஆஃபீஸ் சென்று மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்க்கு வருபவர்கள் என்றால் பிரச்சனை இல்லை. என் போல் பிஸ்நெஸ் ட்ரிப், ஆஃபீஸ் ட்ரிப் அடிக்கடி போபவர்களுக்கு உடற் பயிற்ச்சி செய்ய என்று தனியாக நேரத்தை ஒதுக்க முடியாது. கிடைக்கும் நேரத்தை உடற் பயிற்சிக்கு என்று பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
எனக்கு மிகவும் பிடித்த பர்சனாலட்டிகளில் நடிகர் அருண் விஜய் அவர்களும் ஒருவர். சமீபத்தில் வேந்தர் தொலைக்காட்சி லைவ் ப்ரோக்ராம்மில் அவர் இளைங்கர்களுக்கு ஃபிட் நஸ் சம்பந்தமாக நிறைய நல்ல, நல்ல ஆலோசனைகளை வழங்கினார். அப்பொழுது அவர். நான் அதிகாலை ஷூட்டிங் கிளம்பினால் வீட்டிற்க்கு வர இரவு 10 மணி ஆகி விடும். இரவு 10 30க்கு மேல் தான் உடற் பயிற்ச்சி செய்ய ஆரம்பிப்பேன் என்றார்.
அப்பொழுது என் மைன்ட் வாய்ஸ். இவர் நம்ப ஆளுடா என்று நினைத்தது.
சரி. நாம் நெய் சமாச்சாரத்துக்கு வருவோம். நெய்யில் நல்லதே இல்லையா. அளவுக்கு மீறினால் தாங்க அமிழ்தும் நஞ்சு. நெய்யில் எவ்ளோ நல்ல விசயங்கள் இருக்கிறது தெரியுமா.
அதை நாம் நாளை பார்ப்போம்.

Saturday, 4 April 2015

சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து




 440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம்.

என் தாய்க்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும். அதான். அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின் , எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள், லக்ஷங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே. இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா. இருக்கிறது. என் அம்மாவிற்க்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி. 

 எங்களது ஒரு குடும்ப நண்பரின் ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை எனது தாயார் தினமும் சாப்பிட்டு வந்தாங்க. என் அம்மாவிற்க்கு மட்டும் அல்லாமல் எனது அத்தைகளும் நிலவேம்பு கஷாயம் குடித்ததன் பலனாக இன்று சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது. 

 நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம். 

 இதை எவ்வாறு பயன் படுத்துவது-  இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும் 

 இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம். 

 பின் குறிப்பு- உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும். சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள். 

 சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது. 

Friday, 13 February 2015

அருளை அள்ளி வழங்கும் அரு மருந்து நாயகி




திருத்தேவன்குடி கற்கடகேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. நண்டு பூசித்த ஸ்தலம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 42வது தலம் ஆகும். உடல் நோய்கள் அதுவும் குறிப்பாக சர்ம நோய்களுக்கு மிக சிறந்த பரிகார ஸ்தலம். இங்கு அம்பாள் பெயரே அரு மருந்து நாயகி. சோழ மன்னர் ஒருவரின் நோய்யை இந்த ஸ்தலத்து ஈசனும் அம்பாளும் தீர்கக அவரால் எழுப்பப்பட்ட கோவில் இது. திருந்து தேவன் குடி, நன்டான் கோவில் என்று பல்வேறு பெயர்களில் இந்த ஸ்தலம் அழைக்கப்படுகிறது.



இந்த ஸ்தலத்து ஈசனுக்கு நல்லெண்ணையால் அபிஷேகம் செய்து அதை பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுப்பார்கள். அதை நாம் உடலில் பூசி கொண்டு சிறு துளி அதை உண்டால் தோல் வியாதிகள் குணமாகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. பழனி நவ பாசான முருகன் போலவே இந்த ஸ்தலத்து சிவ லிங்கத்திலும் பல வித மூலிகைகளின் சூட்சுமங்கள் அடங்கியுள்ளன. உடற்பிணி, மனப்பிணி நீக்கி, மன துயரங்கள் போக்கி, நாம் எண்ணியதை கற்கடகேஸ்வரரும்,  அரு மருந்து நாயகியும் அள்ளி தருகின்றனர். கடக ராசியினர் இந்த ஸ்தலத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு.  இந்த ஸ்தலம் கும்பகோணத்தில் இருந்து 15 கிலோ மீட்டரும், திருவிசைநல்லுரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது.



மருந்து வேண்டில் இவை மந்திரங்கள், இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள், இவை
திருந்து தேவன்குடித் தேவர் தேவு எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே.

   திருஞான சம்பந்தர். 

Thursday, 5 February 2015

நமச்சிவாய வாழ்க- இரண்டு கண்கள் போதுமா


இந்த கண் கொள்ளா காட்சியை  காண நாலாயிரம் கண் படைத்திலனே. அந்த நான்முகனே என்று பாட தோன்றுகிறது. நம்முடைய இரண்டு கண்கள் மட்டும் இதை காண போதுமா. எத்தினை ஆயிரம் கண்கள் இருந்தாலும் போராது.
நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! 5
வேகம் கொடுத்துஆண்ட வேந்தன் அடிவெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க. 
 
 தென்னாடுடைய சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 

Tuesday, 3 February 2015

உச்சம் தரும் உச்சிஷ்ட்ட கணபதி வழிபாடு.






மற்ற தெய்வங்களை நாம் வழிபடும் பொழுது கடைபிடிக்க வேண்டிய எந்த ஆச்சார, அனுஷ்டானங்களையும் பிள்ளையார் வழிபாட்டில் நாம் கடைபிடிக்க வேண்டியதில்லை. ஒரு மஞ்சள் உருண்டையை பிடித்து வெய்த்தாலே அதில் விநாயகர் எழுந்தருளி விடுவார். ஆலமரம், அரச மரம், சாலையோரம் என காணும் இடங்களில் எல்லாம் காட்சி அளிப்பவர் விநாயகர். 

 மொத்தம் 32 விநாயகர் வடிவங்களும், அந்த, அந்த விநாயகருக்கு என்று தனி, தனியாக மந்திரங்களும், வழிபாட்டு முறைகளும் உண்டு. 32 விநாயகர்களில் உக்கிரமான விநாயகர் வடிவங்களும் உண்டு. அவற்றில் ஒரு வடிவம் தான் உச்சிஷ்ட்ட கணபதி. முறைப்படி ஒரு குருவிடம் தீட்சை பெற்று இதற்க்கு என்று உரிய விருதங்களை கடைபிடித்து உச்சிஷ்ட்ட கணபதி மந்திர உச்சாடனம் செய்பவர்களுக்கு எண்ணிய காரியம் எளிதில் ஈடேறும், காரிய சித்தி, சமுதாயத்தில் ஒரு மிக பெரிய அந்தஸ்த்து என்று பல கிடைக்கும். அதே சமயம் உச்சிஷ்ட்ட கணபதி மந்திரத்தை உரு ஏற்றுதல் அவ்வளவு எளிதல்ல. ஆனால்? 

உச்சிஷ்ட்ட கணபதி கோவிலுக்கு சென்று நாம் வழிபட  கடுமையான ஆச்சாரங்களையோ, விருதங்களையோ கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. உபாசனை, மந்திர உரு ஏற்றுதல் போன்றவற்றிற்கு தான் அதை செய்ய வேண்டும். இந்த உச்சிஷ்ட்ட கணபதி கோவில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது. உலகிலேயே பெரிய விநாயகர் கோவில், உச்சிஷ்ட்ட கணபதிக்கு என்று இருக்கும் ஒரே கோவில், 1000 ஆண்டுகள் பழமையான கோவில் என்று பல்வேறு சிறப்புக்களை இந்த ஸ்தலம் பெற்றுள்ளது. 

குருவருளும், திருவருளும் தரும் தை பூச திருநாள்



சந்திரன் கடகத்தில் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் பூச நட்சத்திரத்தில் இருந்து மகர ராசியில் இருக்கும் சூரியனை  பார்க்கும் நாளே தைப்பூசம். சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம் தை மாதம். தைப்பூச நாள் சிவன், அம்பாள், முருகனுக்கு  உகந்த நாளாகும். மேலும், ஆன்மிக ஜோதி வள்ளலார் அருட்பெருஞ் ஜோதியில் கலந்து மகா சமாதியான நாளும் இந்நாள்தான். 

சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்குகிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கிறோம். ஆகவே இந்த தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும். தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் குரு வழிபாடு செய்வதும் சிறப்பு.


ஆஸ்ட்ரேலியா,மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் என்று பல்வேறு உலக நாடுகளில் இந்த தை பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் முருக பெருமானின் வழிபாடு நடக்கிறது.  வேலை வணங்குவதே வேலை என்று இந்நாளில் மட்டும் அல்லாது எந்நாளும் வழிபடும் அடியார்க்கு இந்நாள் மட்டும் அல்லாமல் எல்லா நாளும் இனிய நாளாகும். குருவருளும், திருவருளும் சேர்ந்து கிட்டும்.


முருக பெருமானின் ஆயிரக்கணக்கான நாமங்களில் முருகன், குமரன், குகன் ஆகிய மூன்று  நாமங்களை மிகவும் சிறந்ததாக அருணகிரி நாதர் கூறுகிறார்.

  முருகன், குமரன், குகன் என்று மொழி.

 2] முருகனிடம் நேரடியாக உபதேசம் பெற்றவர்கள் மூவர். தெய்வங்களில் மஹாதேவன், முனிவர்களில்  அகஸ்தியர், மனிதர்களில் அருணகிரிநாதர்.

3] முருகனின் ஸ்தலங்களில் அடியாக [கால்] விளங்குவது திருவிடைக்கழி, நடுவாக விளங்குவது  திருப்பரங்குன்றம், முடியாக [ அனைத்திற்கும் தலையாய] விளங்குவது திருப்போரூர்.


4]முருகரின் தேவர் படை, சூரனின் அசுரர் படைக்கும் இடையில்  நிலம், கடல், வானம் ஆகிய முப்படை தாக்குதல்களும் நடந்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அந்த முப்படை தாக்குதல் பற்றிய கந்தபுரான  வர்ணனை தத்ரூபமாக இன்றைய முப்படை தாக்குதல் போலவே ஏற குறைய இருக்கிறது. கடல் வழி  திருச்செந்தூரிலும், தரை வழி திருபபரங்குன்றத்திலும், ஆகாய வழி தாக்குதல் திருப்போரூரிலும்           நடந்தது. 

 5] தரைக்கு எல்லை உண்டு, கடலுக்கும் எல்லை உண்டு, வானத்திற்கு எல்லையே இல்லை. 

6]  உருவாய், அருவாய், உளதாய், இலதாய்
மருவாய், மலராய், மணியாய், ஒளியாய்
கருவாய், உயிராய், கதியாய், விதியாய்
 குருவாய், வருவாய் அருள்வாய் குகனே.

என்னும் இந்த கந்தர் அனுபுதி பாடலை பக்தியோடு ஆறுமுகனைநினைத்து, ஆறுமுறை  சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.

Sunday, 1 February 2015


இன்று நங்கநல்லூர் தேவி கருமாரி அம்மன் கோவிலில் காலை 9- 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் வைபவம். கும்பாபிஷேகத்தை நாம் காணுவதன் மூலம் அதே கோவிலை தொடர்ந்து 12 வருடங்கள் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். எந்த கோவில் கும்பாபிஷேகமாக இருந்தாலும் அதன் நிறைவு பகுதியில் கருடாழ்வார் கோபுரத்தை வட்டம் இடுவார். நமது கர்ம வினைகளை தொலைக்கும் எளிய வழிகளில் மிக சிறந்த ஒன்று. கும்பாபிஷேகத்தை காண்பது. பல்லாயிரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதும் ஒரு கும்பாபிஷேகத்தை காண்பதும் ஒன்று.