siddhas

Thursday 7 May 2015

மைக்கோவிர்க்கு எமனாகும் வினிகர். காச நோய், நிமோனியா, மார்பு சளி முதலான பல் பிணிகளுக்கு தீர்வு .



இன்று TB.  எலும்புருக்கி நோய்க்கான தீர்வை பாப்போம்.

எலும்புருக்கி நோய் மைக்கோ பாக்டீரியா என்பதால் ஏற்படுவது. அலோபதி மருத்துவத்தில் இதை குனபடுத்த ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். சிலருக்கு அதற்க்கு மேலும் ஆகலாம்.  மைக்கோ பாக்டீரியாவிர்க்கு  எமனாக வினிகர் உள்ளது. அதனால் நோய் உள்ளவர்கள். தினமும் உணவில் வினிகர் சேர்த்து கொள்ள வேண்டும். இதை தவிர்த்து

பூண்டு, வாழைபழம், சீதா பழம், ஆரஞ்ச், அன்னாசி, வால் நட், புதினா, கரும் மிளகு, முருங்கக்காய், கிரீன் டீ  ஆகிய பத்து  உணவு பொருட்கள் எலும்புருக்கி நோய்க்கு நிவாரணமாக உள்ளது.

மற்றும்.

வைட்டமின் டி என்பது உணவில் காணப்படும் ஒரு ஊட்டச்சத்து மட்டுமன்று, அது நம் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோனும் கூட. உலகளவில் சுமார் 1 பில்லியன். அதாவது 10 கோடி  மக்கள், அவர்களின் இரத்தத்தில் மிகக் குறைந்த அளவில் வைட்டமின் டி-யைக் கொண்டிருப்பதாகவும், இந்த குறைபாடு அனைத்து வயதினரிடையேயும்,  பரவலாகக் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின் டி என்பது, கொழுப்புச் சத்தில் கரையக்கூடிய வைட்டமின் வகையைச் சார்ந்தது. இந்த கலப்பானது உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் போன்றவற்றை மேம்படுத்தக் கூடியதாகும். மனிதர்களைப் பொறுத்தவரை, இந்த வைட்டமின் வகையில் வைட்டமின் டி3 மற்றும் வைட்டமின் டி2 ஆகியவை மிக முக்கியக் கூறுகளாகும். போதுமான சூரிய ஒளி உடலுக்கு கிடைக்குமானால், கொலஸ்ட்ராலில் இருந்து வைட்டமின் டி-யை உடல் ஒருங்கிணைத்துக் கொள்ளும். இதன் காரணமாக, வைட்டமின் டி ‘சூரிய ஒளி வைட்டமின்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

நோய் தடுப்பு வைட்டமின் டி, உடலில் அபரிமிதமாக இருந்தால், அது எலும்புருக்கி நோய் மட்டுமல்ல.  புற்றுநோய், இதயம் மற்றும் இரத்த நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய், காசநோய், நிமோனியா, முடி உதிர்தல் மற்றும் மன அழுத்தம், ஈறு நோய்  போன்ற நோய்களை தடுக்கக் கூடியதாகும்.

வைட்டமின் டி. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, ஜலதோஷம்,  மற்றும் நிமோனியா காய்ச்சல் போன்றவற்றிற்கு எதிரான பாதுகாப்புக் கவசத்தை வழங்கக்கூடியதாகும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய ஆரோக்கியமான குழந்தைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானதானக உள்ள வைட்டமின் டி, குறைமாத பிரசவம் நிகழும் அபாயங்களையும் குறைக்க வல்லதாகும்.

மேலும், வைட்டமின் டி- யை சரியான அளவில் உட்கொண்டு வந்தால், கீழே தவறி விழுவது, எலும்பு முறிவுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் முதலாம் வகை சர்க்கரை நோய், போன்றவற்றால் ஏற்படும் காயங்களினால் உண்டாகக்கூடிய அபாயங்களை குறைக்கும். மேலும் உடலில் உண்டாகும் புண்களை விரைவில் ஆற்றக் கூடிய சக்தியும் கொண்டது வைட்டமின் டி.

 மேலே குறிப்பிட்ட 10 உணவுகளும் நமக்கு வைட்டமின்  சக்த்தை  அதிகம் தந்து. நம்மை பல்வேறு நோய்களிலிருந்து காக்கும்.

 நாளை.   இந்த வெய்யிலில் உடல் மட்டும் சூடாவது இல்லை. அதனால் மனமும் சூடாகிரது.

 உடல், மன சூட்டை  தணிக்க வழிகளை நாம் நாளை பாப்போம்.

No comments:

Post a Comment