siddhas

Wednesday, 21 January 2015

மனிதர்கள் மேம்பட வாழ்ந்த புனிதர்


1


15] ஞானியர் கோவில்கள்


சித்தர்கள் எனப்படுபவர்கள். குறிப்பிட்ட இனத்திற்கோ, மொழிக்கோ, மதத்திற்கோ உரியவர்கள் அல்ல. அவர்கள். சூரியன், நிலவு போல் பஞ்ச பூதங்கள் போல் அனைவருக்கும் பொதுவானவர்கள். 

கபீர் தாஸ், குணங்குடி மஸ்தான் சாகிபு, சதக்கத்துல்லாஹ் அப்பா, உமறுப் புலவர், சேகனாப் புலவர், தக்கலை ஷெய்கு பீர் முகமது சாகிபு, ஹஸ்ரத் தஸ்தகீர் சாகிப் பாபா, மெஹர் பாபா என்று இஸ்லாம் மார்க்கத்தில் பல சித்தர்கள், ஞானிகள். வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவ்ர் தான் திரு மோதி பாபா.

இவரது முழுப்பெயர் ஞானி காஜா குதுப் சையத் குலாம் தஸ்தகீர் மோதி பாபா. மோதிபாபா ஒமனில் இருந்து நாகப்பட்டினம் வந்தார். பிறகு சென்னையில் சமாதி ஆனார். 1959 இல் இவர் உருவத்தில் இருந்து அருவம் ஆனார். இந்த மாமனிதர் மனித குல மேம்பாட்டுக்காக தன்னாலான அனைத்தையும் செய்த புனிதர்.

இவர் சமாதி எக்மோர் பாந்திபன் சாலையில் கமிஸ்னர் ஆஃபீஸ்க்கு எதிரில் உள்ளது.

ஞானிகள் தேடல் தொடரும்.

தீரா குறை தீர்க்கும் சித்த புருஷி








14] ஞானியர் கோவில்கள்

நகரங்களில் சில இடங்களில் ஒரு தெரு ஒரு கிலோ மீட்டர். அதற்கும் மேல் கூட நீளமாக இருக்கும். அதை போல் தான் சென்னை பீச் ரயில் நிலையம் அருகில் உள்ள தம்பு செட்டி தெரு. பீச் ரயில் நிலையத்தில் இருந்து நீங்கள் இறங்கி வந்து. இடது பக்கம் உள்ள தம்பு செட்டி தெருவில் சென்றால் அங்கே புகழ்பெற்ற காளிகாம்பாள் கோவில் இருக்கிறது. அது பாரிஸ் [ பூக்கடை] போகும் வழி. வலது பக்கம் உள்ள தம்பு செட்டி தெருவில் போனால். அது ராயபுரம் செல்லும் வழி. அந்த தெருவின் எண்ட் எதுவோ அங்கே இடது பக்கம் அமர்ந்து இருக்கும் இந்த பெண் சித்தர் பெயர் தான் ராஜ ராஜேஸ்வரி அம்மா. தன்னை நம்பி வந்தோர் குறைகளை தீர்த்த கருணா மூர்த்தி. அதே சமயம். தீயவர்கள் யாரேனும் இவரை நெருங்க முயற்ச்சி செய்தால் அவர்களை மலை பாம்பு வாசலில் வரவேற்கும். அதை பார்த்து அலறியடித்து கொண்டு வந்தவர்கள் ஓடுவார்கள். சுயம்பு சித்தர் பீடத்தை எனக்கு தெரியப்படுத்திய அதே ராஜன் அய்யா தான் இவரை பற்றியும் தெரியப்படுத்தினார். இவரும், இவரது துணைவியாரும் பலநாட்கள் இந்த பெண் சித்தர்ரோடு வாழ்ந்து இருக்கிறார்கள். காளிபாம்பாளை தரிசனம் செய்ய செல்பவர்கள். அப்படியே இந்த சித்த புருஷியையும் ஒரு முறை தரிசனம் செய்யுங்கள். இவர் ஜீவ சமாதி. நடைபாதையில் எளிமையாக இருக்கிறது. 

சர்வமும் தரும் சர்ப்ப சித்தர்




13] ஞானியர் கோவில்கள் 


முன்பொரு காலத்தில் இயற்கை சீற்றத்தினால் மழையும், புயலும் மாங்காடு பகுதி முழுவதையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. அந்த சமயத்தில் காள ஹச்த்தியிலிருந்து ஒரு சித்தர் இங்கு வந்தார். பூமிக்கு அடியில் 108 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து. தனது தவத்திற்கு இடையூறு வர கூடாது என்று உடலை பாம்பு புற்றால் மூடி கடும் தவம் செய்யலானார். பின்னர் இப்பகுதி அமைதியான இடமாக ஆனது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆன்மிகப் பெரியவர்கள் ஆராய்ந்த போது அங்கே மிகவும் பெரியதாக ஒரு லிங்க வடிவில் ஒரு கல் தென்பட்டுள்ளது. இங்கே தான் ஸ்ரீ சர்ப சித்தர் ஜீவ சமாதி அடைந்து உள்ளார். அந்த கல் பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்தும் பூதக்கல் என்றும் தெரியவந்துள்ளது. அந்த லிங்கத்தின் மீது இடது புறத்தில் பிறை வடிவமும், வலது புறத்தில் சூரியன் வடிவமும், லிங்கத்தின் மத்தியில் யோகச் சக்கரமும், பிரணவ மந்திரம் பொறிக்கப்பட்டு உள்ளது. பஞ்ச பூதங்களை குறிக்கும் விதமாக ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு அந்த லிங்கத்தின் மீது உள்ளது. இங்கே சமாதியாகியுள்ள இந்த சித்தர் வடக்கு நோக்கி சமாதி அடைந்து உள்ளார். இவரது காலம் அறுதியிட்டு கூறமுடியாத அளவுக்கு மிகவும் பழமையானதாகும். சர்ப சித்தர் ஜீவசமாதியாகி, பூதக்கல் உருவாகி 1200 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 


ஆதிகாலத்தில் இந்த பூதக்கல்லைப் பார்த்து மக்கள் அச்சமுற்று அப்பகுதி வழியே செல்வதை தவிர்த்துள்ளனர். இதனால் அப்பகுதி புதர் மண்டி காடு போல மாறி, பூதக்கல்லைச் சுற்றி புற்று உருவாகியிருந்துள்ளது. அதன் அருகே செல்பவர்களுக்கு சர்ப்பங்கள்(பாம்புகள்) சீறும் ஓசை கேட்கவே பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்வதைத் தவிர்த்துள்ளனர். காலப்போக்கில் அப்பகுதியில் பூதக்கல் இருப்பதையே மக்கள் மறந்து விட்ட நிலையில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் ஒரு ரியல் எஸ்டேட் கம்பனி இந்த பூத கல் அருகே ப்லாட் போட அதை வாங்கியவர்களில் ரவி சந்திரன்னும் ஒருவர். சித்தர் அடிகளார் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் கனவில் வந்த சர்ப சித்தர், அசரரீயாக சில தகவல்களைக் கூறி, தான் ஜீவ சமாதி அடைந்துள்ள இடத்தையும், அடையாளத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சித்தர் அடிகளார் பல்வேறு கடுமையான சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும் இடையே சித்தரின் அருளால் ஜீவசமாதி அமைந்திருக்கும் பகுதியை சுத்தம் செய்து, பூஜைகள் செய்து வழிபட்டு வரலானார். அப்பொழுது அதற்க்கு எதிராக சில குண்டர்கள் இடையூறு செய்ய முயற்ச்சி செய்ய. இந்த சித்தரின் பேராற்றல் முன் அது எதுவுமே எடுபடாமல் போனது. பின்னர் படிப்படியாக சர்ப சித்தருக்கு கோவிலும் கட்டப்பட்டுள்ளது. 



ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் இவரது லிங்கம் இடப்புறம் மற்றும் வலப்புறமாக சாய்வது சிறப்பு. இங்கு சென்று வந்தால் நல்ல மாற்றங்களும் திருப்பங்களும் வரும் . முக்கியமாக ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்த சித்தர்ரை தரிசிப்பது. மிக, மிக நன்று. இவருக்கு ஒரு வேஷ்டி. அல்லது மாலை, இரண்டும் முடியவில்லையா. பக்தியுடன் இரு கரங்களையும் கூப்பி வணங்கினாலே போதும். பொதுவாக வியாழன் அன்று சித்தர்கள் தரிசனம் மிக நன்று. பௌர்ணமி மிக, மிக நன்று. வியாழன் அன்று வரும் பௌர்ணமியாக இருந்தால் அன்று நாம் செய்யும் சித்தர் தரிசனம். அதுவும் இது போன்றதொரு சித்தரை நாம் தரிசனம் செய்து அதனால் கிடைக்கும் பலன் பற்றி விவரிக்க உலகில் உள்ள எந்த மொழியிலும் வார்த்தை இல்லை. அடியேனுக்கு அத்தகைய பெரும் பேரு இந்த மாதம் நவெம்பர் 6 இல் கிடைத்தது. அதுவும் திட்டமிட்டு அவ்வாறு செல்லாமல் தற்செயலாக எனக்கு இந்த பெரும் பேர் கிட்டியது. 



தொடர்ந்து 15 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி தினத்தில் திருவிளக்கு பூஜையும், மகா சிவராத்திரி தினத்தன்று ஆறு கால பூஜையும், பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை தினங்களில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பரிகார பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இதில் மகாசிவராத்திரி அன்று நிறைவு பூஜையின் போது, பக்தர்களே நேரடியாக தங்களின் திருக்கரங்களால் சர்ப சித்தர் உறைந்திருக்கும் ஜீவ பீடமான பூதக்கல்லிற்கு அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசியைப் பெற்றுச் செல்கின்றனர். சித்தர் அடிகளார் திரு. ஜி.டி. ரவிச்சந்திரன் , சகல கிரக பீடை விலகவும், கல்வி, குழந்தைப் பேறு, திருமணம் கைகூட, சர்ப (நாக) தோஷம் விலக, நோய் குணமடைதல், திருஷ்டி, பித்ருக்கள் சாபம், சித்தர்கள், முனிவர்கள் சாபம் நீங்கவும், குடும்ப ஒற்றுமை, கணவன் மனைவி பிணக்கு நீங்கி நல்வாழ்வு வாழவும் இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலனளிப்பதாக இங்கு வந்து பயனடைந்த பக்தர்கள் கூறுவதை நாம் கேட்கலாம். பல்வேறு அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், முக்கிய அதிகாரிகள், திரை நட்சத்திரங்கள் இங்கு வந்து வேண்டி, அவர்களின் பிரார்த்தனை பலித்துள்ளதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். நேரில் சென்று தரிசிப்பவர்களுக்கு அது உண்மைதான் என உணரமுடிகிறது. நல்ல ஆன்மிக அதிர்வுகளை உணரலாம். சர்ப சித்தர் குடிகொண்டுள்ள பூதக்கல் பல்வேறு சூட்சும ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தொடர்ந்து இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அந்த ரகசிய சூட்சும அனுபவங்கள் கிடைத்துள்ளன. குரு கடாட்சம் பெற்றவர்களுக்கும், இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் சதா தவ நிலையில் இருக்கும் சர்ப சித்தரின் சகல அனுக்கிரகமும், தெய்வீக அனுபவங்களும் கிடைத்துள்ளன. ஸ்ரீசர்ப சித்தர் யாரிடமும் நன்கொடை, யாசகம் பெறாமல் சித்தரின் அருளாசியுடன் சர்ப சித்தர் ஜீவ பீடத்தை பராமரித்து, பூஜைகளும், நிகழ்ச்சிகளும், விழாக்களும், பவுர்ணமி அன்று அன்னதானமும் வழங்கி, இறைப்பணியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார் சித்தர் அடிகளார் திரு. ஜி.டி. ரவிச்சந்திரன். இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், மன அமைதி பெறவும், பிரச்சனைகள் தீரவும், நல்ல அதிர்வுகள் மூலம் நமக்கெல்லாம் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் சர்ப சித்தர். ஆன்ம பலத்தை அளிக்கவல்ல அதிர்வலைகள் நிரம்பிய சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தை தரிசனம் செய்து சித்தர்களின் அருளாசியை பெறுங்கள். தொடர்புக்கு: சித்தர் அடிகளார் திரு.ஜி.டி.ரவிச்சந்திரன், சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், கோவிந்தராஜ்


நகர், மாங்காடு. கைப்பேசி எண்.9789826263.


இது மாங்காடு அம்மன் கோவிலில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிந்த ராஜபுரத்தில் உள்ளது. பஸ் வசதி மாங்காடு கோவிலில் இருந்து இல்லை. ஆட்டோ வசதி உள்ளது.



சென்ற அக்டோபர் மாதம் 15 அன்று. இந்த பாரத தேசத்தில் உள்ள அனைத்து ஞானிகளின் சமாதிகளையும் அதிலும் குறிப்பாக உயிர்நிலை கோவில்களான ஜீவ சமாதிகளை தரிசிக்க வேண்டும் என்பது எனது நான்கு வருட ஆசை என்று சொல்லி சென்னையில் எனக்கு தெரிந்த ஒரு பத்து சித்தர் பீடங்கள் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு சென்னையில் உள்ள என் பட்டியலில் இல்லாத ஞானியர் கோவில்கள் உங்களுக்கு ஏதேனும் தெரியுமானால் அதை எனக்கு தெரியப்படுத்துங்கள் என்று சித்தர் அறிவியல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டேன். 



அந்த பதிவில் comment மூலம் சர்ப்ப சித்தர் பற்றி எனக்கு தெரியப்படுத்திய திரு boopathy Sreedharan அவர்களுக்கு நன்றி.


Tuesday, 20 January 2015

விஞ்ஞான பார்வையில் காயத்திரி மந்திரம்



காயத்திரி மந்திரம் அதீத சக்தி வாய்ந்த உலகின் தலைசிறந்த மந்திரம் என்பது அடியேன் அறிந்ததே. அது விசுவாமித்திர மஹரிஷியால் உலக நன்மைக்காக அருளப்பட்டது. ஆனால்? இந்த  காயத்திரி மந்திரத்தை ஆய்வுக்கு எடுத்து கொண்டு மெய்ஞானத்தின் இந்த கூற்று விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டது அடியேன் இதுவரை அறியாத ஒன்று. இத்தகைய அறிய தகவலை எனக்கு தந்த உயர்திரு JK  SIVAN அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அதை வாருங்கள் நாம் பார்க்கலாம்.
 
காயத்திரி மந்திரம் மந்திரங்களில் தலை சிறந்ததாக கருதப்படுகிறது. எந்த மந்திரத்தை நாம் உபதேசம் பெறுவதாக இருந்தாலும் முதலில் காயத்திரி மந்திரத்தை உபதேசம் பெற வேண்டும் என்பது மந்திர சாஸ்த்திர மரபு. மந்திரேஷூ காயத்திரி. மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. இந்த காயத்திரி மந்திரத்தை நமக்கு தந்தவர் கௌஸிகர் [விசுவாமித்திரர்]  விஸ்வம் என்றால் உலகம்.  மித்திர என்றால் நண்பன். உலக நண்பன் என்பது தான் இவர் பெயரின் பொருள். உலகிற்க்கே பயன் தர கூடிய அனைவருக்கும் பொதுவான மந்திரத்தை இவர் தந்தார். ஆனால் அன்று குறிப்பிட்ட சிலரின் சதியாலும் இறை வாக்கில் இருந்து வந்த வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனிதன் தனது போக்கிலே எழுதிய ஸ்மிருதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாலும் இந்த மந்திரம் பலரை சென்றடையாமல் போனது. இந்த கலியுகத்தில் கடந்த யுகங்களில் நடக்காத பல நன்மைகள், புரட்சிகள் நடந்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான். இந்த காயத்திரி மந்திரம் இன்று பலதரப்பட்ட மக்களால் உச்சரிக்கப்படுகிறது.  
 
 இந்த காயத்திரி மந்திரம் உலகிலேயே சிறந்த மந்திரம் என்று, அன்று  மெய்ஞனிகள் சொன்னதை இன்று விஞ்ஞானிகளும் சொல்கிறார்கள்.  (டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச் சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின் முக்ய வேதங்களை அலசி அவற்றின் சக்தியை விஞ்ஞான பூர்வமாக வடிகட்டினபிறகு தான் இந்த முடிவுக்கு வந்தார்.
அப்படி என்ன கண்டுபிடித்தார்?
1. காயத்ரி மந்த்ரத்தை உச்சரிக்கும்போது 1,10,000 ஒலி அலைகள் ஒரு வினாடியில் வெளிவருகிறது.
2. காயத்ரி மந்த்ரத்தில் தான் மற்ற மந்த்ரங்களை விட உலகத்திலேயே சக்தி அதிகம்..
3. காயத்ரி மந்த்ரத்தின் சப்த அலைகள் ஆன்ம சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

4. ஜெர்மனியில் ஹாம்பர்க் சர்வகலாசாலை இதை ஆராய்ச்சி செய்து உயிர் வாழ உடலுக்கும்
மனதுக்கும் அது தெம்பு கொடுப்பதை அறிந்தது.
5. தென் அமெரிக்காவில் சுரினாம் என்கிற நாட்டில் தினமும் மாலை ரேடியோ பரமரிபோவில் பதினைந்து நிமிஷங்களுக்கு காயத்ரி மந்த்ரம் ரெண்டு வருஷத்துக்கும் மேலே ஒலிபரப்பப்படுகிறதாம். இதை பின்பற்றி ஹாலந்து நாட்டிலும் இந்த நல்ல பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம். 
 
அதன் அழகிய, ஒப்புமையிலாத உயர்ந்த அர்த்தம், சக்தி வாய்ந்த ஒலி, அன்றாட பாதுகாப்பாகவே அமைந்து விட்டதே. காயத்ரி மந்த்ரமிலாத பிரணவ சப்தம் மற்ற எந்த மந்திரத்திற்கும் மூலாதாரமாகவே உள்ளதே. உள்ளாம் கவர்ந்து, திறந்து, பரம்பொருளை நாடும் இந்த மந்திரம், உலகில் எவ்வுயிர்க்கும் பொருந்தும்.
 காயத்ரி மந்த்ரம். இது மனித குலத்திற்கு கிடைத்த விலையில்லா பரிசு. சுத்தமான இதயத்திலிருந்து வெளிவரும் இந்த மந்திரம் உலக அமைதியை காக்கிறது. அளவற்ற ஞானம் தருகிறது.
‘ஹே பரப்ரம்மமே உன்னிலிருந்து வெளிப்படும் அந்த ஞான ஒளி என்னிலிருக்கும் அஞ்ஞான இருளை விரட்டி ஞானப்ரகாசம் அருளவேண்டும்” காயத்ரி மந்த்ரம் சொல்பவனை விடுங்கள். அது எவன் காதில் விழுகிறதோ அவனே புனிதமாகிறான். ஆத்மாவிலிருந்து புறப்படும் பிரம்ம உபதேசம் அல்லவா அது.
காயத்ரி என்றால் என்ன? ”காய”” என்பது உயிரூட்டும் சக்தி. ”த்ரி” என்றால் அது செய்யும் மூன்று வேலை: அதாவது பாதுகாக்கிறது, புனிதப்படுத்துகிறது, பரமனிடம் கொண்டு சேர்க்கிறது. 
 
 
காயத்ரி மந்த்ரம் விடாமல் சொல்பவனைப் பார்த்த்தாலே அவனிடம் ஒரு தனி தேஜஸ், உள்ளே இருக்கும் ஓஜஸ் ஒளி வீசும். அதன் 24 அக்ஷர த்வனி அலாதி. சூக்ஷ்ம சரீர ஆத்மாவின் குரல் அது. காயத்ரி மந்த்ரத்தை பாட்டு போலவோ, ராகம் போட்டோ, ஆலபனத்தோடோ பக்க வாத்யத்தோடா பாடுவார்கள்? அதற்கென்று உச்சரிப்பு, ஒரு சாஸ்திர, வேத மந்திர உச்சாடன முறை இருக்கிறது. அர்த்தத்தை புரிந்துகொண்டு முழுமனத்தோடு  சொன்னால் தான் மெய்ஞான படியும் சரி. விஞ்ஞான ஆராய்ச்சி படியும் சரி பலன் கிடைக்கும். 

56 வருடங்கள் பேசா விருதம் இருந்த ஞானி






12] ஞானியர் கோவில்கள் 

இந்த சித்த புருசர். 1940இல் ஆரம்பித்து. 1996 வரை 56 வருடங்கள் பேசா விருதம் இருந்த ஞானி. இவர் ஜீவ சமாதி. அம்பத்தூர் Ot பஸ் ஸ்டாப் அருகில் இருக்கிறது. பல அதிசயங்கள், அற்புதங்களை சத்தமே இல்லாமல் பண்ண ஞானி. இவர் பெயராலேயே இவர் அதிஸ்டானம் உள்ள தெரு இருக்கிறது. மௌன சாமி மடம் தெரு. அந்த தெரு வாசிகளை மௌன சாமி சித்தர் பீடம் எங்கு இருக்குனு கேட்டு பாருங்க. அப்டி ஒன்னு இங்க இல்லவே இல்லை. இந்த தெரு பேர் தான் மௌன சாமி தெரு என்று சொல்வார்கள். பல இடங்களில் இன்று இவ்வாறு தான். அருகில் இருப்பவர்கள் அதன் அருமை, பெருமை உணராத தீர்த்த கறை பாவியாக இருக்கிறார்கள். அம்பத்தூர் Ot பஸ் ஸ்டாப்பில் இருந்து இது நடக்கும் தூரம் தான். அந்த தெருவில் காதி கடை இருக்கிறது. அதற்க்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று கேளுங்கள். அந்த காதி கடைக்கு முன்பே இந்த சித்தர் பீடம் இருக்கிறது. பெரிய கறுப்பு கேட். அதில் வெள்ளை தாமரை Design இருக்கும். வெளியில் பார்க்க வீடு போல் தான் இருக்கும், உண்மையில் அங்கு ஒரு வீடும் இருக்கிறது. அந்த வீட்டின் பின் அந்த சித்தர்ரின் அருள் சுரக்கும் பீடம் இருக்கிறது. அந்த வீட்டு உரிமையாளர் தான். இந்த சித்தர் பீடத்தை பராமரித்து கொண்டிருக்கிறார்.

Timing. Morning 6 to Night 7.30

சுகம் தரும் சுயம்பு சித்தர்




11] ஞானியர் கோவில்கள் 

என் தந்தையினுடைய நண்பர் திரு ராஜன் அவர்களை சென்ற மாதம் அக்டோபர் 29இல் சந்தித்தேன். அதற்க்கு ஒரு நாள் முன் தான். திருவொற்றியூரில் உள்ள வீர ராகவ சித்தரை தரிசனம் செய்தேன். ராஜன் அய்யா அவர்கள் சித்தர்கள் தேடலில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர் ஆதலால். என் தந்தை அவரிடம் எனது சித்தர்கள் அதிஸ்டானம் குறித்த தேடல் பற்றி சொன்னார். அவர் என்னிடம். இதுவரை நீ எந்த, எந்த சித்தர்கள் கோவில்களை தரிசித்து இருக்கிறாய் என்று கேட்டார். விபூதி பாபாவில் ஆரம்பித்து வீர ராகவ சித்தர் வரை. அடியேன் தரிசித்த சித்தர் ஆலயங்களை அவரிடம் சொன்னேன். மேலும் அவரிடம். உங்களுக்கு தெரிந்த சித்தர்கள் ஆலயங்கள் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர். google தேடலில் கூட கிடைக்காத சில சித்தர்கள் கோவில்கள் பற்றி சொன்னார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்றால். அத்திபட்டு புதுநகரில் உள்ள சுயம்பு சித்தர் பீடம். இன்று மீண்டும் அவரை சந்தித்து. அது சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரித்தேன். சென்னை பாண்டி பஜார்ரில் உள்ள ரத்னா ஃபேன் ஹௌஸ் AC டிபார்ட்‌மென்ட்டில். ஒரு இளைங்கனுக்கு உரிய மிடுக்கோடு அமர்ந்து சுறு, சுருப்பாக வேலை செய்து கொண்டிருந்தார். 70திலும் இளமை. 20லும் முதுமை. இரண்டு உதாரணங்களையும் பார்த்து இருக்கிறேன். முதுமை என்பது வயதில் இல்லை. மனத்தில் இருக்கிறது. அந்த 70 வயது இளைங்கரை சந்தித்து விட்டு அங்கிருந்து. சென்னை ஸென்ட்ரல் சென்றேன். 

சென்னை ஸென்ட்ரல்லில் இருந்து கும்முடிப்பூண்டி வரை செல்லும் ரயிலில் ஏறினால் எண்ணூர்க்கு அடுத்து அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் வரும். இன்டீரியர் நார்த் சென்னையில் ரயில் பயணம் செய்தது இன்று தான். அங்கு ட்ரைன் ஸர்விஸ் வெறி, வெறி புவர். எக்மோர்ரில் ஒன்பது மணிக்கு நீங்கள் ரயில் ஏறினால். 9 12க்குள் திநகர் வந்துடுவீங்க. பத்து கிலோ மீட்டர்க்கு அதிக பக்சம் வெறும் 12 நிமிடம் ஆகும். ஆனால் இன்டீரியர் நார்த் சென்னையிலோ. ஸென்ட்ரல்லில் இருந்து. பேஸிந் ப்ரிட்ஜ்க்கு ரயில் வரவே 10 நிமிடங்கள். அங்கு, அங்கு சிக்னல் கிடைக்கவில்லை என்று ரயிலை வேறு அப்பப்ப நிப்பாட்டிடறாங்க. இன்று எண்ணூரில் இருந்து அத்திபட்டு புதுநகர்க்கு இடையில். 35 நிமிடங்கள் ரயிலை நிறுத்தி விட்டார்கள். ட்ராக் வேலை வேறு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. டிராப்பிக் ஜாம் எவ்ளவோ மேல் எனும் அளவு இன்று நொந்து நூடில்ஸ் ஆய்ட்டேன். அந்த கவலை, சோர்வு, டென்சன் எல்லாம் சித்தர் கோவிலை தரிசிக்கும் வரை தான். தரிசித்த பின். அவை எல்லாம் எங்கே போனது என்று தேடி பார்த்தேன். இதுவரை கிடைக்கவில்லை. 

இந்த சித்தர் பீடம் இதுவரை அடியேன் பார்த்ததை போல் அல்லாமல் சற்று ஸம்திங் ஸ்பெஸல். இது எத்தினை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது யாருக்கும் தெரியவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த சித்தர் ஆலயம் இருக்கிறது. அங்கு அடியேன் முதலில் கண்டது யாரை தெரியுமா. வாரியாரை. வாரியார் போட்டோவா. இல்லை,. திரு உருவ சிலையா என்று நீங்கள் நினைத்தால் இரண்டுமே இல்லை. நிஜ வாரியாரை. உங்களில் பலருக்கு இவர் தெரிந்தவர் தான். வாரியாரை வீடியோ, போட்டோ, ஸிநிமாவில் கூட பார்த்து இருக்கிறோம். ஆனால் நேரில் பார்க்க முடியவில்லையே. அவர் வாழ்ந்த காலத்தில் நாம் இல்லாமல் போய் விட்டோமே என்று எங்கும் என்னை போல் ஒருவராக நீங்கள் இருந்தால். உங்கள் மனக்குறை நிச்சயம் அவரை பார்தத அந்த நொடியே தீர்ந்து விடும். 


வாரியார் போன்றே அச்சு, அசல் இருக்கும் திரு வேணுகோபாலன் அவர்கள். வாரியாரின் மருமான் மற்றும் சீடர். உண்மையான வாரியார் வாரிசு. வாரியார் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு பலமுறை வரும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. அவரை நேரில் பார்க்க முடியவில்லை என்னும் குறை அவர் போலவே உள்ள இவரை பார்த்ததில் தீர்ந்தது. 

இந்த சுயம்பு சித்தர் பீடம் பற்றி இதை முதலில் எனக்கு தெரியப்படுத்திய திரு ராஜன் அவர்கள் மற்றும் வேணுகோபாலன் அய்யா. இருவரும் கூறிய தகவல்களை சுருக்கமாக பார்ப்போம்.

தூத்துக்குடியை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் செல்வராஜ் அவர்கள் பிறவிலேயே ஒரு நாஸ்திகர். அவர் தனது உப்பளம் இடத்தை பார்வையிட வந்த பொழுது. முற்பிறவி பயன் காரணமாக ஒரு சித்தர் வலிய வந்து இவரை சந்தித்தார். சதீஷ் வாழ்வில் அடுத்து நடக்க போகும் சில நிகழ்வுகளை சொன்னார். ஆனால் செல்வராஜ் அவர்கள் எனக்கு சாமி, சாமியார் ரெண்டுமே பிடிக்காது என்று சொல்லி அவ்விடம் விட்டு நகர்ந்தார். நீயே என்னை தேடி வருவாய் என்று சொல்லி அந்த சித்தர் சென்றார். பின்னர் அந்த சித்தர் சொன்ன அனைத்தும் செல்வராஜ் வாழ்வில் நடந்தது. அவருக்கு ஆச்சர்யம், பயம் இரண்டும் வந்தது. பின்னர். செல்வராஜ் அந்த சித்தர்ரை பல இடங்களில் தேடி அவர் கிடைக்கவில்லை. அந்த நிலையில் அவரின் சீடர் ஒருவர் மூலம் அவர் ஜீவ சமாதி அடைய போவதும், அவர் அடையும் இடம் பற்றியும் தகவல் வர. அந்த இடம் விரைந்து சென்றார். அவர் மலர் அடிகளில் பணிந்து மன்னிப்பு கேட்டார். அந்த சித்தர். முற்பிறவி பயன் காரணமாக இப்பிறவியில் நீ செய்ய வேண்டிய தொண்டுகள் பல இருக்கிறது என்று சொல்லி இந்த சுயம்பு சித்தர் பீடம் பற்றி தெரியப்படுத்தி பின் சமாதி அடைந்தார். அந்த சித்தர் தான் சாக்கு சித்தர்.

பின் செல்வராஜ் அவர்கள் அத்திபட்டு புதுநகர் வந்தார். ஒரு பாம்பு இந்த சுயம்பு சித்தர் இருக்கும் இடத்தை காட்டியது. அந்த பாம்பு பூமியில் ஒரு இடத்தில் ஓங்கி மூன்று முறை அடித்து பின் நகர்ந்தது. அவ்விடத்தில் தோண்ட. தண்டம், கமண்டலம், பாதுகை என்று அந்த சுயம்பு சித்தர் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்தது. மற்றும் அந்த சித்தர் சுயம்பு சித்தர் கல்லாக வெளிப்பட்டார். பின்னர் செல்வராஜ் அவர்கள் அங்கு கோவில் எழுப்பினார். இவை நடந்தது 30 வருடங்களுக்கு முன். இந்த சித்தர் நான்கு யுகங்களை கண்டவர். இங்கு உள்ள பொருட்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதால் அறநிலைய துறை வசம் இப்பொழுது இவ்விடம் உள்ளது.

இந்த சித்தர் பீடம் போகர், கோரக்கர் போல் மிக பழமையான சித்தர் பீடம். மிக அதீத சக்தி வாய்ந்த ரிஷி மற்றும் சித்தர் இவர். இதை அடியேன் சொல்வதை விட நீங்களே நேரில் சென்று அதிர்வலையோடு உணர்ந்து பாருங்கள். 116 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் திருவேற்காட்டை சேர்ந்த அய்யப்ப சுவாமிகள் இவ்விடம் நேரம் கிடைக்கும் பொழுது வந்து தியானம், பூஜை செய்து விட்டு செல்வார்.

எவ்வாறு செல்வது- ரயில் மூலம் என்றால் சென்ட்ரலில் இருந்து கும்முடிப்பூண்டி செல்லும் ட்ரைன்னில் எண்ணூர்க்கு அடுத்து வரும் அத்திபட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் இறங்குங்கள். அத்திபட்டு புதுநகர், அத்திபட்டு என்று இரண்டு ஸ்டேசன் இருக்கு. நீங்கள் இறங்க வேண்டியது அத்திபட்டு புதுநகர். இறங்கியவுடன் முத்தாலம்மன் கோவில் எவ்வாறு செல்வது என்று கேளுங்கள். இந்த அம்மனும் சுயம்பு. நீங்கள் சுயம்பு சித்தர் பீடம் என்று கேட்டீர்கள் என்றால் வழி சொல்பவர்கள் குழம்பி கேட்கும் உங்களை அதை விட குழப்பி விடுவார்கள். பைக், காரில் செல்பவர்களும் அவ்வாறே கேளுங்கள். வாகனங்களில் செல்பவர்கள் எண்ணூர் வரை சென்று அங்கு புதுநகர் முத்தாலம்மன் கோவில் செல்ல வழி கேளுங்கள். பஸ் எண்ணூர் அனல் மின் நிலையம் வரை தான் செல்லும்.

இது சற்று தொலைவில். ஊருக்கு ஒதுக்குப்புறமான, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருப்பதால் செல்லும் முன் சம்பந்தபபட்டவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு. இந்த நேரத்திற்கு வருகிறோம் என்று தகவல் கொடுத்து செல்வது சிறந்தது.

அவ்விடத்தில் இப்பொழுது இருக்கும் வேணுகோபாலன், வாட்ச்மேன் முனுசாமி இருவர் என்னையும் தருகிறேன். வேணுகோபாலன் அவர்கள் ஆன்மீகம் சம்பந்தமாக பேசுவது, எழுதுவதில் கொஞ்சும் பிஸீயானவர். சில நேரம் அங்கு இருப்பார், சில நேரம் இருக்க மாட்டார். முனுசாமி. அந்த ஊர் வாசி. 24 மணி நேரமும் அவர் அங்கு தான் இருப்பார் என்பதால். அவரை முதலில் தொடர்பு கொள்ளுதல் நன்று.

Venugopalan Sir- 8056071031
Munusamy- 9943460643


அந்து என்கிற அந்தோணி.







10] ஞானியர் கோவில்கள்


தர்மம் மிகு சென்னையில் பல அருளாளர்கள் தோன்றியுள்ளனர். ராமலிங்க வள்ளலார், கரபாத்திர சிவபிரகாச சுவாமிகள், வண்ணை சாது நாராயண தேசிகர், சாது ரத்தின சற்குரு, சூளை வீரசுப்‌பையா சுவாமிகள், குயப்பேட்டை சச்சிதானந்த சுவாமிகள் வரிசையில் அந்து குரு சுவாமிகள் அவர்களும் சென்னையிலேயே தோன்றி, சமாதி அடைந்தவர்.

பெரம்பூர் அகரம் பகுதியில் இந்த ஞான சிகரம் உதித்தார். இவருக்கு அந்து நாதர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம். இவரது பெற்றோர்கள். கடைசி வரை ஹிந்துக்கள்ளாகவே இருந்தாலும் மத வெறி பிடித்த மண்டுக்களாக இல்லை. பெரம்பூர் அந்தோணியார் கோவிலில் இவர் பெற்றோர்கள் வேண்டி இவர் பிறந்ததால் அந்தோணி என்கிற பெயரை வெய்த்தணர். எத்தகைய பறந்த மனப்பான்மை இருந்திருந்தால் அவ்வாறு பெயர் வெய்த்து இருப்பார்கள். பின் இவர் வளர்ந்ததும் நெற்றி நிறைய பட்டையிட்டு கொண்டு பள்ளி போவார். நெற்றி நிறைய பட்டை. பேரோ அந்தோணி. அவரை ஒரு அதிசய பிறவியாக பார்த்தனர். அந்தோணி என்னும் பெயரை சுருக்கி அந்து என்று அழைக்கலாயினர். அதுவே பின் நிலைத்தது. அவருக்கு பின் பிறந்த இருவரும் நன்றாக படிக்க. இவர் படிப்பில் நாட்டம் இல்லாதவராய், வெறும் ஞான நாட்டம் மட்டுமே உள்ளவராய் இருந்தார். பின்னர் வளர்ந்ததும். சிங்கப்பூர் தேயிலை தோட்டத்தில் மூன்று வருடங்கள் வேலை பார்த்தார். அது வெள்ளையர்கள் நமது நாட்டை ஆண்ட காலம். அங்கு அவர் உடல் நலன் கெட. பத்திரமாக அவரை இந்தியா அனுப்பி வெய்த்தனர். அவர் இந்தியா வந்த பிறகு உடல் நிலையில் நல்ல மாற்றம் அடைந்தது. மன நிலையில் அதை விட அதிக மாற்றம். அவருக்கு பித்து பிடித்து விட்டதாக அனைவரும் நினைத்தனர். உண்மையில் அது ஞான பித்து என்பதை அவர்கள் உணரவில்லை.
பின்னர் முற்றும் துறந்த துறவியாகி பல இடங்களில் சுற்றி திரிந்தார். பல அற்ப்புத சித்துக்களை செய்தார். இறுதியாக இவர் சீடர் தேசிகானந்தர் பெரம்பூரில் கட்டிய பிரசன்ன விநாயகர் கோவிலில் தங்கியிருந்து. பின்னர் அதே இடத்தில் இவர் இறைவனுடன் இரண்டற கலந்தார். பின் அரசாங்க அனுமதியோடு அவர் உடலை அதே கோவிலில் அடக்கம் செய்தனர். மணி என்ன என்று இவரிடம் எப்போது கேட்டாலும், இவர் வாயிலிருந்து வரும் பதில். மணி நாலு. இவர் இறைவனுடன் இரண்டற கலந்ததும் நாலு மணி.
இவர் அதிஸ்டானம் பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில். தினமும் இரவு ஏழு மணிக்கே மூடி விடுவார்கள்.

Address- Perambur Banthar Garden, Mathavaram Highway.