மற்ற தெய்வங்களை நாம் வழிபடும் பொழுது கடைபிடிக்க வேண்டிய எந்த ஆச்சார, அனுஷ்டானங்களையும் பிள்ளையார் வழிபாட்டில் நாம் கடைபிடிக்க வேண்டியதில்லை. ஒரு மஞ்சள் உருண்டையை பிடித்து வெய்த்தாலே அதில் விநாயகர் எழுந்தருளி விடுவார். ஆலமரம், அரச மரம், சாலையோரம் என காணும் இடங்களில் எல்லாம் காட்சி அளிப்பவர் விநாயகர்.
மொத்தம் 32 விநாயகர் வடிவங்களும், அந்த, அந்த விநாயகருக்கு என்று தனி, தனியாக மந்திரங்களும், வழிபாட்டு முறைகளும் உண்டு. 32 விநாயகர்களில் உக்கிரமான விநாயகர் வடிவங்களும் உண்டு. அவற்றில் ஒரு வடிவம் தான் உச்சிஷ்ட்ட கணபதி. முறைப்படி ஒரு குருவிடம் தீட்சை பெற்று இதற்க்கு என்று உரிய விருதங்களை கடைபிடித்து உச்சிஷ்ட்ட கணபதி மந்திர உச்சாடனம் செய்பவர்களுக்கு எண்ணிய காரியம் எளிதில் ஈடேறும், காரிய சித்தி, சமுதாயத்தில் ஒரு மிக பெரிய அந்தஸ்த்து என்று பல கிடைக்கும். அதே சமயம் உச்சிஷ்ட்ட கணபதி மந்திரத்தை உரு ஏற்றுதல் அவ்வளவு எளிதல்ல. ஆனால்?
உச்சிஷ்ட்ட கணபதி கோவிலுக்கு சென்று நாம் வழிபட கடுமையான ஆச்சாரங்களையோ, விருதங்களையோ கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. உபாசனை, மந்திர உரு ஏற்றுதல் போன்றவற்றிற்கு தான் அதை செய்ய வேண்டும். இந்த உச்சிஷ்ட்ட கணபதி கோவில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது. உலகிலேயே பெரிய விநாயகர் கோவில், உச்சிஷ்ட்ட கணபதிக்கு என்று இருக்கும் ஒரே கோவில், 1000 ஆண்டுகள் பழமையான கோவில் என்று பல்வேறு சிறப்புக்களை இந்த ஸ்தலம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment