சந்திரன் கடகத்தில் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் பூச நட்சத்திரத்தில் இருந்து மகர ராசியில் இருக்கும் சூரியனை பார்க்கும் நாளே தைப்பூசம். சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம் தை மாதம். தைப்பூச நாள் சிவன், அம்பாள், முருகனுக்கு உகந்த நாளாகும். மேலும், ஆன்மிக ஜோதி வள்ளலார் அருட்பெருஞ் ஜோதியில் கலந்து மகா சமாதியான நாளும் இந்நாள்தான்.
சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்குகிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கிறோம். ஆகவே இந்த தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும். தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் குரு வழிபாடு செய்வதும் சிறப்பு.
முருக பெருமானின் ஆயிரக்கணக்கான நாமங்களில் முருகன், குமரன், குகன் ஆகிய மூன்று நாமங்களை மிகவும் சிறந்ததாக அருணகிரி நாதர் கூறுகிறார்.
முருகன், குமரன், குகன் என்று மொழி.
2] முருகனிடம் நேரடியாக உபதேசம் பெற்றவர்கள் மூவர். தெய்வங்களில் மஹாதேவன், முனிவர்களில் அகஸ்தியர், மனிதர்களில் அருணகிரிநாதர்.
3] முருகனின் ஸ்தலங்களில் அடியாக [கால்] விளங்குவது திருவிடைக்கழி, நடுவாக விளங்குவது திருப்பரங்குன்றம், முடியாக [ அனைத்திற்கும் தலையாய] விளங்குவது திருப்போரூர்.
4]முருகரின் தேவர் படை, சூரனின் அசுரர் படைக்கும் இடையில் நிலம், கடல், வானம் ஆகிய முப்படை தாக்குதல்களும் நடந்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அந்த முப்படை தாக்குதல் பற்றிய கந்தபுரான வர்ணனை தத்ரூபமாக இன்றைய முப்படை தாக்குதல் போலவே ஏற குறைய இருக்கிறது. கடல் வழி திருச்செந்தூரிலும், தரை வழி திருபபரங்குன்றத்திலும், ஆகாய வழி தாக்குதல் திருப்போரூரிலும் நடந்தது.
5] தரைக்கு எல்லை உண்டு, கடலுக்கும் எல்லை உண்டு, வானத்திற்கு எல்லையே இல்லை.
6] உருவாய், அருவாய், உளதாய், இலதாய்
மருவாய், மலராய், மணியாய், ஒளியாய்
கருவாய், உயிராய், கதியாய், விதியாய்
குருவாய், வருவாய் அருள்வாய் குகனே.
என்னும் இந்த கந்தர் அனுபுதி பாடலை பக்தியோடு ஆறுமுகனைநினைத்து, ஆறுமுறை சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.
No comments:
Post a Comment