siddhas

Sunday, 3 May 2015

பல ரோகம் போக்கும் தங்க மரம்




ஒரு முக்கிய அறிவிப்பு.

இன்று இதைய நோய் சம்பந்தமான யூ  டியூப் வீடியோவை பார்த்து பல நண்பர்கள் பாராட்டினார்கள். ஆனாலும் பேச்சில் உள்ள அளவு எனக்கு எழுத்தில் திறமை இல்லை என்பது உண்மை தான். தமிழே எழுத படிக்க  தெரியாத பல இளைய தலை முறையினர் இருப்பதால். அவர்களும் பயன்   பெற வேண்டும் என்பதற்காகவே. இந்த யூ  டியூப்  சேவை. யூ  டியூப்  வீடியோவில். நான் எழுத்தில் சொல்லாத தகவல்கள் நிறைய வரும்.

 தமிழை படிப்பதை விட. தமிழ் வீடியோவை பார்ப்பது எளிது அல்லவா.

  ஆனாலும். எனக்கு பேச்சில் விட எழுத்தில் தான் அதிக ஆர்வம். வழக்கம் போல் என்னுடைய எழுத்து பனி தொடரும். கூடுதலாக பேச்சு  பணி. அவ்வளவே.

 நேற்றைய பதிவின் தொடர்ச்சியை பாப்போம்.

ஒரு மருத்துவன் நோயாளியை எவ்வாறு நடத்த வேண்டும் என்கின்ற கேள்விக்கு சரகர் கூறி இருக்கும் விடை
.
தம் புத்ர வத் உபாச்சறேத் -நோயாளிகளை உன் சொந்த பிள்ளைகளை போல் கவனி .
இதற்க்கு மேல் அடுத்த கட்டம் -மம பூத தயா பிரதி -நீ உன்னை எவ்வாறு நடத்துவாயோ அவ்வாறு உன்னிடம் வரும் அனைத்து ஜீவன்களையும் நடத்து.

இதை விட சிறந்த கருத்து எதுவுமே இல்லை ,என்னை நெகிழ செய்த கருத்து .கண்களில் நீர் பணிக்கும் .எண்ணி பாருங்கள் ,ஒரு மருத்துவர் அதிக வீர்யமுள்ள மருந்துகளை ,ஒரே பெயருள்ள வெவ்வேறு கம்பெனி மருந்துகளை ,இல்லை தேவயற்ற பரிசோதனைகளை ,இல்லை சந்தைக்கே வராத அல்லது சந்தையில் தடை செய்ய பட்ட ஒரு மருந்தை தன் குழந்தைக்கோ இல்லை தனக்கோ கொடுக்க முயல்வாரா? நிச்சயம் கிடையாது .நோயாளி என்பவன் வேறு யாரோ என்பதால் தான் இந்த அசிரதை அஜாக்கிரதை எல்லாம் .எத்தனை பெரிய தத்துவத்தை எளிமையாக ஒரு வரியில் அடக்கி விட்டார்கள் !!
இப்படி ஒவ்வொரு மருத்துவரும் எண்ணி மருத்துவம் செய்தால் உலகம் எத்தனை அற்புதமாக இருக்கும் .!!

சரக சம்ஹீதையில் கொன்ணை அத்யாயம்.

கொன்ணை மரம். இதன் ஆங்கில பெயர் Golden Shower Tree. Botanical Name [CASSIA FISTULA] இதன் மருத்துவ பயன்பாடுகள் பற்றி சரகர்.
சரகராலும், சுச்ரூதாவாலும் பல தோல் குஷ்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. சரகர் எவ்வாறு சர்ம நோய்களுக்கு இந்த மருந்து பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி, ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். தன்வந்திரி நிகண்டு, தோல் வியாதிகள், ஜுரம் இவற்றுக்கு மருந்தாக, கொன்னையை குறிப்பிடுகிறது. இதன் இலைகள் ஜூரத்தை குறைக்கவும், பூக்களும் விதைகளும் பித்தத்தையும், கபத்தையும் குறைக்கவும், பழக்கதுப்பு, பசியை உண்டாக்கும் என்றும் ப்ருஹத் நிகண்டு ரத்னாகரா தெரிவிக்கிறது.

சரகர் கொன்னை பழ கதுப்பை, 12 வகையான மருந்தாக தயாரிக்கும் விதத்தை கூறியிருக்கிறார்.

கொன்னை தோல் வியாதிகள், உடல்பருமன், கொலஸ்ட்ரால் குறைப்பு இவற்றுக்கு அருமருந்து, குஷ்டம், வெண் குஷ்டம், போன்ற சர்ம வியாதிகளுக்கு பயன்படும்.

கொன்னை மரப்பட்டை வலிகளை குறைக்கவும், தொற்றுநோய்கள் அண்டாமலும் தாக்கும்.

பாக்டீரியா தொற்றுகளை தடுக்கும் சக்தி உடையது. ஷயரோக கிருமியான மைக்கோபேக்டீரியம் டியூபர்க்ளோசிஸ் என்றதை அழிக்கும். விதைகளின் சாரம் சால்மோனெல்ல டைஃபி, இவற்றை அழிக்கும். பழக்கதுப்பு சிறப்பான கிருமி, நுண்ணுயிர் நாசினி.

வேர்ப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் பால், மூட்டு வலி, ஆர்த்தரைடீஸ், சோரியாஸிஸ்க்கும் நல்ல மருந்து.

தோலில் அரிப்பு, நமைச்சல் இவற்றை போக்கும்

இதயத்திற்கு நல்ல டானிக். நீரிழிவு, மூட்டு வலி மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம் இவற்றுக்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது.

கொன்னை மரப்பட்டை வைரஸ் கிருமிகளின் எதிரி. அதே போல் பழக்கதுப்பு பாக்டீரியாவை அழிக்கும். விதைகளின் பொடி அமீபா நுண்ணுயிர்களை அழிக்கும். எலிகளை வைத்து நடத்திய பரிசோதனைகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தவிர கொலஸ்ட்ராலை குறைக்கும் குணமும் உடையது கொன்னை. கொன்னை இலைகள் டயாபடீஸ் உள்ள எலிகளுக்கு கொடுத்த போது, சர்க்கரை அளவு குறைவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பழக்கதுப்பு, கொன்னையின் மற்ற பாகங்களை விட, சிறந்த கிருமி நாசினி, ஃபங்கஸ் எனப்படும் நுண்ணுயிர்களுக்கு கொன்னை மர வேர் எதிரி.
கொன்னை பழம் உலர வைத்தது பாதுகாப்பான மலமிளக்கி.

உபயோகம்

கொன்னை இலைகொழுந்திலிருந்து பிழிந்த சாற்றில் 150 மி.லி. எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கிருமி, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

இலையை அரைத்து படர்தாமரைக்கு பூசலாம்.

கொன்னை பூவுடன், பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் நீங்கும்

பூவை குடிநீரில் சேர்த்து குடிக்க வயிற்றுவலி, குடல் நோய்கள் நீங்கும்.

பூவை தேனில் ஊறவைத்து கொடுக்க காலை வெளிஏற வேண்டியவை ஒழுங்காக வெளிஏறும். . பாலுடன் பூவைக் கலந்து காய்ச்சி உண்ண உள் உறுப்புக்களை வலிமைப்படுத்தும். மெலிந்தவர்களுக்கு பலன் தரும்.

மரப்பட்டையின் கஷாயம் (60 மிலி), தேன் (5 மி.லி.) கலந்து ஒரு நாளைக்கு இருவேளை, 1-2 மாதங்கள் உட்கொண்டு வர கொலஸ்ட்ரால், அதிக உடல்பருமன் குறையும்.

மரப்பட்டை கூழ் 15 கிராம் அளவில், 1 மாதம் உண்டுவர மூட்டுவலி, வயிற்றுப் பூச்சிகள் நீங்கும

கொழுந்து இலைகளின் கூழுடன் 5-15 கிராம் மோருடன் 1 மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். இதே போல் பூவுடன், மோர் சேர்த்து உட்கொள்ள, வயிற்றுப்புண்கள் குணமாகும். இவ்வளவு பயன்களை தரும் கொன்னை மரம், ராஜமரம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவது ஆச்சரியமல்ல.

ஒரு மருத்துவன் நோயாளியை எவ்வாறு நடத்த வேண்டும் என்கின்ற கேள்விக்கு சரகர் கூறி இருக்கும் விடை
.
தம் புத்ர வத் உபாச்சறேத் -நோயாளிகளை உன் சொந்த பிள்ளைகளை போல் கவனி .
இதற்க்கு மேல் அடுத்த கட்டம் -மம பூத தயா பிரதி -நீ உன்னை எவ்வாறு நடத்துவாயோ அவ்வாறு உன்னிடம் வரும் அனைத்து ஜீவன்களையும் நடத்து.

இதை விட சிறந்த கருத்து எதுவுமே இல்லை ,என்னை நெகிழ செய்த கருத்து .கண்களில் நீர் பணிக்கும் .எண்ணி பாருங்கள் ,ஒரு மருத்துவர் அதிக வீர்யமுள்ள மருந்துகளை ,ஒரே பெயருள்ள வெவ்வேறு கம்பெனி மருந்துகளை ,இல்லை தேவயற்ற பரிசோதனைகளை ,இல்லை சந்தைக்கே வராத அல்லது சந்தையில் தடை செய்ய பட்ட ஒரு மருந்தை தன் குழந்தைக்கோ இல்லை தனக்கோ கொடுக்க முயல்வாரா? நிச்சயம் கிடையாது .நோயாளி என்பவன் வேறு யாரோ என்பதால் தான் இந்த அசிரதை அஜாக்கிரதை எல்லாம் .எத்தனை பெரிய தத்துவத்தை எளிமையாக ஒரு வரியில் அடக்கி விட்டார்கள் !!
இப்படி ஒவ்வொரு மருத்துவரும் எண்ணி மருத்துவம் செய்தால் உலகம் எத்தனை அற்புதமாக இருக்கும் .!!

சரக சம்ஹீதையில் கொன்ணை அத்யாயம்.

கொன்ணை மரம். இதன் ஆங்கில பெயர் Golden Shower Tree. Botanical Name [CASSIA FISTULA] இதன் மருத்துவ பயன்பாடுகள் பற்றி சரகர்.
சரகராலும், சுச்ரூதாவாலும் பல தோல் குஷ்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. சரகர் எவ்வாறு சர்ம நோய்களுக்கு இந்த மருந்து பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி, ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். தன்வந்திரி நிகண்டு, தோல் வியாதிகள், ஜுரம் இவற்றுக்கு மருந்தாக, கொன்னையை குறிப்பிடுகிறது. இதன் இலைகள் ஜூரத்தை குறைக்கவும், பூக்களும் விதைகளும் பித்தத்தையும், கபத்தையும் குறைக்கவும், பழக்கதுப்பு, பசியை உண்டாக்கும் என்றும் ப்ருஹத் நிகண்டு ரத்னாகரா தெரிவிக்கிறது.

சரகர் கொன்னை பழ கதுப்பை, 12 வகையான மருந்தாக தயாரிக்கும் விதத்தை கூறியிருக்கிறார்.

கொன்னை தோல் வியாதிகள், உடல்பருமன், கொலஸ்ட்ரால் குறைப்பு இவற்றுக்கு அருமருந்து, குஷ்டம், வெண் குஷ்டம், போன்ற சர்ம வியாதிகளுக்கு பயன்படும்.

கொன்னை மரப்பட்டை வலிகளை குறைக்கவும், தொற்றுநோய்கள் அண்டாமலும் தாக்கும்.

பாக்டீரியா தொற்றுகளை தடுக்கும் சக்தி உடையது. ஷயரோக கிருமியான மைக்கோபேக்டீரியம் டியூபர்க்ளோசிஸ் என்றதை அழிக்கும். விதைகளின் சாரம் சால்மோனெல்ல டைஃபி, இவற்றை அழிக்கும். பழக்கதுப்பு சிறப்பான கிருமி, நுண்ணுயிர் நாசினி.

வேர்ப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் பால், மூட்டு வலி, ஆர்த்தரைடீஸ், சோரியாஸிஸ்க்கும் நல்ல மருந்து.

தோலில் அரிப்பு, நமைச்சல் இவற்றை போக்கும்

இதயத்திற்கு நல்ல டானிக். நீரிழிவு, மூட்டு வலி மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம் இவற்றுக்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது.

கொன்னை மரப்பட்டை வைரஸ் கிருமிகளின் எதிரி. அதே போல் பழக்கதுப்பு பாக்டீரியாவை அழிக்கும். விதைகளின் பொடி அமீபா நுண்ணுயிர்களை அழிக்கும். எலிகளை வைத்து நடத்திய பரிசோதனைகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தவிர கொலஸ்ட்ராலை குறைக்கும் குணமும் உடையது கொன்னை. கொன்னை இலைகள் டயாபடீஸ் உள்ள எலிகளுக்கு கொடுத்த போது, சர்க்கரை அளவு குறைவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பழக்கதுப்பு, கொன்னையின் மற்ற பாகங்களை விட, சிறந்த கிருமி நாசினி, ஃபங்கஸ் எனப்படும் நுண்ணுயிர்களுக்கு கொன்னை மர வேர் எதிரி.
கொன்னை பழம் உலர வைத்தது பாதுகாப்பான மலமிளக்கி.

உபயோகம்

கொன்னை இலைகொழுந்திலிருந்து பிழிந்த சாற்றில் 150 மி.லி. எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கிருமி, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

இலையை அரைத்து படர்தாமரைக்கு பூசலாம்.

கொன்னை பூவுடன், பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் நீங்கும்

பூவை குடிநீரில் சேர்த்து குடிக்க வயிற்றுவலி, குடல் நோய்கள் நீங்கும்.

பூவை தேனில் ஊறவைத்து கொடுக்க காலை வெளிஏற வேண்டியவை ஒழுங்காக வெளிஏறும். . பாலுடன் பூவைக் கலந்து காய்ச்சி உண்ண உள் உறுப்புக்களை வலிமைப்படுத்தும். மெலிந்தவர்களுக்கு பலன் தரும்.

மரப்பட்டையின் கஷாயம் (60 மிலி), தேன் (5 மி.லி.) கலந்து ஒரு நாளைக்கு இருவேளை, 1-2 மாதங்கள் உட்கொண்டு வர கொலஸ்ட்ரால், அதிக உடல்பருமன் குறையும்.

மரப்பட்டை கூழ் 15 கிராம் அளவில், 1 மாதம் உண்டுவர மூட்டுவலி, வயிற்றுப் பூச்சிகள் நீங்கும

கொழுந்து இலைகளின் கூழுடன் 5-15 கிராம் மோருடன் 1 மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். இதே போல் பூவுடன், மோர் சேர்த்து உட்கொள்ள, வயிற்றுப்புண்கள் குணமாகும். இவ்வளவு பயன்களை தரும் கொன்னை மரம், ராஜமரம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவது ஆச்சரியமல்ல.

 அடியேனுக்கு தேவையான தகவல்களை தந்த. Swamis  Indology  Blog  உரிமையாளர் சுவாமிநாதன் மற்றும் அமானுஷ்யம் blog  உரிமையாளர் யோகி குரு முதலானோர்க்கு  நன்றி. எழுத்தாளார்  ஜெய மோகன் அவர்களின் நுல்  மூலம்  நான்  அதிகம் சரகர் அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன். அவரின் நுலே. என்னை சரக  சம்ஹிதா வாங்க தூண்டியது.

 நாளை ஆஸ்மா, வீஸிங்  முதளியவற்றிர்கான நிரந்தர தீர்வை பாப்போம்.

Saturday, 2 May 2015

ஆச்மா நோய் தீர. சரகர் சொன்ன பத்து மூலிகைகள்.



புனித பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் சரகர், சுச்ருதா  போன்ற மருத்துவ ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் பாரத திருநாட்டின் பழமையான மருத்துவர்கள் மட்டும் அல்ல. ஒவ்வொரு இந்தியனும் பெருமை படும் படி. மனித சமுதாயதிற்கு  தொண்டு செய்த  அருமையான மருத்துவர்களும் கூட.

  சரகர் யார் என்பதை இன்று முதலில் பாப்போம். அதற்க்கு    முன். சரகர் ஆஸ்மா நோயை குணப்படுத்த கூரிய  மருத்துவ முறை பற்றி நாம் முதலில் பாப்போம்.
சரகர் சொன்ன ஆஸ்துமாவிற்கான பத்து மூலிகைகள்

பூலாங்கிழங்கு, புஷ்கரமூலம், புளிவஞ்சி, ஏலரிசி, பெருங்காயம், அகில், துளசி, கீழாநெல்லி, கீரைப்பாலை, காட்டுக் கோரை கிழங்கு. இந்த பத்தையும்  ஒன்றாக கலந்து தினமும் உண்டால். ஆஸ்மா வெகு விரைவில் குணம் ஆகும். ஆஸ்மாவிற்கு இதே போல் நிறைய மூலிகைகள், மருந்துகள் இருக்கிறது. அதை பார்பதற்க்கு  முன். சரகரின் வாழ்க்கை வரலாறு. அவர் மருத்துவ உலகிற்க்கு கூறிய  அறிவுரைகளை பாப்போம்.
. இவரது சரக சம்ஹிதை 120 அத்தியாயங்களைக் கொண்டது.

சரகர் ஆத்ரேய முனிவரின் சீடர். அக்னி வேஸர் எழுதிய நூலை செம்மை படுத்தி இவர் சரக சம்ஹீதை எழுதினார் என்று சொல்லப்படுகிறது. சரகர் ஆயுர்வேதத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமான ஒருவர். சரகர்

சரகரின் காலம்

கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகள் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த வாதத்தை மறுக்கும் அறிஞர்கள் சரகர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டு காலம் முன்னதாக வாழ்ந்தவர் என்று உறுதி படக் கூறுகிறார்கள். ஆத்ரேய மஹரிஷியின் காலத்தை பல நூற்றாண்டுகாலத்திற்கு முன்பேயே நிர்ணயிக்க வேண்டியிருப்பதால் சரகரின் காலமும் மிக மிக முற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் வாதம். ஆத்ரேயர் புராண கால முனிவர். அவர் காலத்தில் புத்தர் இல்லை. ஆனால் சரக சம்ஹிதாவில் ஹிந்து வேதங்களில் கூறப்பட்ட மருத்துவ முறைகள் கூறப்பட்டாலும் சில இடங்களில் புத்த மத சித்தாந்தங்களும் பேசப்படுகிறது. புத்தர் 2600 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இவர் காலத்தில் தான் சுஷ்ருதாவும் வாழ்ந்தார். சரகர் புத்தர் வாழ்ந்த காலத்துக்கும் 300 ஆண்டுகள் முற்பட்டவர். என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.இவர் நூலில் புத்த மத சித்தாங்களும் சில இடங்களில் சொல்லப்பட்டு இருப்பதால் அவர் புத்தருக்கு பின் வந்தவர். ஆத்ரேய முனிவரின் சீடர் என்பது கற்ப்பனை என்று ஆகி விடுகிறது.

சரகரது நூலில் புத்த மத சித்தாந்தங்கள் வந்ததற்க்கு சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் பின்னணி.

சரகரது சம்ஹீதையில் மூன்றில் ஒரு பங்கு கிடைக்காமல் போக இந்த குறைபாட்டை 4ம் நூற்றாண்டில் செரி செய்தவர் த்ருதபாலா என்கிற புத்த துறவி. இவர் பாடுபட்டு பல இடங்களிலிருந்து செய்திகளை சேகரித்து சரகசம்ஹிதையை பூர்த்தி செய்தார். அதற்கும் முன்னே கி.மு. 323 ஆண்டில் நாகார்ஜூனா எனும் புத்த துறவி திபெத்திய மொழியில் மொழி பெயர்த்தார். கி கா யீ மற்றும் டான் ஐயவோ ஆகிய இரு சீன தேசத்து புத்த துறவிகள் கி.பி. 472இந்த நூலை மொழிபெயர்த்தனர். அவ்வாறு செய்யும் பொழுது இவர்களில் யாரேனும் ஒருவரோ இல்லை அனைவருமே அவர்களது சொந்த சரக்கை கொஞ்சும் இதில் கலந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சரகர் தனது குருகுலத்தை நடத்தி வந்த விதம், மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் திறமை அவரது சம்ஹிதையிலிருந்து புரிகிறது. அவர் பட்டிமன்றம், விவாதங்கள் தர்க்கங்கள் மூலம் மருத்துவத்தை சொல்லி கொடுத்தார். க்ரூப் டிஸ்கஶந்ஸ் எனப்படும் இன்றைய முறையை சரகர் பின்பற்றியிருக்கிறார்.

சரகர் கண்டிப்பான ஆனால் அறிவு மிகுந்த ஆசிரியர். அவர் மருத்துவர்களை பற்றி சொன்னது.

“அறிவில்லா வைத்தியரிடம் சிகிச்சை பெறுவதை விட இறப்பது மேல்”
“நோயாளிகளை குணப்படுத்த நால்வர் சிறப்பாக அமைய வேண்டும். நால்வர்-மருத்துவர், மருந்துகள், உதவியாளர், நோயாளி” சரகர் கொடுத்த கல்வி பயிற்சி 7 வருடங்களுக்கு எட்டுவகை மருத்துவ முறைகள் கற்றுத்தரப்படும். அதன்பின் Hippocratesன் சத்ய பிரமாணம் போலவே (இந்த யுக டாக்டர்கள் எடுக்கும் சத்ய பிரமாணம்). சரகரும் ஒரு சத்திய பிரமாணத்தை எழுதியிருக்கிறார். எப்படி ஒரு மருத்துவர் பிரசவம் பார்க்க வேண்டும் என்று மட்டும் இவர் சொல்லாமல் பிரசவத்திற்கு பின் கவனிக்கவேண்டியவை பற்றியும் சொல்லி இருக்கிறார்.

மேலும் சரகர் மருத்துவ உலகிற்க்கு சொன்ன அறிவுரைகளை நாம் நாளை பார்ப்போம். அவை எக்காலத்திற்கும் பொருந்த கூடியவை. சரக சம்ஹிதாவில் ஒரு மரத்திற்க்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளார். அது எந்த? மரம்.

நாளை.  Heart Attack.  நமது முறையற்ற உணவு, கவலையின் பிரதி பலிப்பாக  இன்று இந்த நோய் அதிகம் அதிகரித்து உள்ளது. இது வராமல் தடுக்கவும், தீர்க்கவும் வழிகளை பற்றிய வீடியோ தனியாக வெளி ஆகும். அதை  தவிர்த்து. இந்த பதிவின் தொடர்ச்சி நாளை வெளி ஆகும்.


Friday, 1 May 2015

உங்கள் பித்தம் எங்கள் பாக்கியம்





கரிசலாங்கண்ணி கீரை,  சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி  இவையெல்லாம் பித்தம் தணிக்கும்.

மாதுளம்பழம் தினமும் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, ஞாபக சக்தி எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்

  நாம் தினமும் உணவுகளில் இஞ்சிக்கு பிரதான இடம் கொடுக்க வேண்டும்.  சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்ரமன்யதிற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை  என்பது பழமொழி. மீன் காய்ந்தால் கருவாடு.   இஞ்சி காய்ந்தால் சுக்கு.

சுக்கும், பனை வெல்லமும் போட்டு காய்ச்சிய நீரை நித்தமும்  குடித்து வந்தால். பித்த கோளாறு மொத்தமாக தீரும்.

 எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, அவற்றோடு ஜீரகம், தேன்  நான்கையும் கலந்து தினமும் ஒரு வேளையோ, இரண்டு வேளையோ குடித்து  வரவும்.


இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட. அது வாத கோளாறையும் ஓரளவு சீர் செய்யும்.


இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

 பித்த பாதிப்பிர்க்கு இஞ்சிக்கு இணையாக மருந்து இந்த உலகில் இல்லை. பித்தத்தை சரி செய்ய நாம்  எந்த மருந்து, மூலிகையை, உணவு பொருளை   எடுத்து கொண்டாலும். அவற்றோடு இஞ்சி சேர்த்து கொண்டால் தான். அது  வேலை செய்யும். ஆனால்.  இஞ்சி சிங்கம் மாதிரி சிங்கிளா இருந்தே பித்தத்தை சரி செய்யும். இஞ்சியின் காரத்தை நாம் தாக்கு பிடிக்க தேன்  மட்டுமே தேவை படுகிறது.


கெட்ட  கொழுப்பிற்கு  இஞ்சி ரொம்ப...... கெட்டது.  இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி குறித்த. எனது யூ  டியூப்  வீடியோ ஒன்று. வெகு விரைவில் வெளி ஆகும்.


 வெகு நாள் முன் படித்த ஒரு டாக்டர் ஜோக். ஒரு சித்த  வைத்தியர் வீட்டு  வாசலில் உள்ள பலகை.

  உங்கள் பித்தம், எங்கள்  பாக்கியம்.

  பின் குறிப்பு-  நான் ஜோக்னு  சொன்னேன்கர்துக்காக  சிரிப்பே வராம கஷ்டப்பட்டு சிரிக்க  வேண்டாம். சிரிப்பு வந்தால் சிரிங்க.

 நாளை-  ஆஸ்மா, வீசிங் முதலான சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வு.




Thursday, 30 April 2015

வாதம், பித்தம், கபம். மூன்றையும் சீராக வெய்க்க சீராண வழி





பிரண்டை.

வாதம், பித்தம், கபம். மூன்றையும்  சீரான அளவில் வெய்க்கும்.  இதை எவ்வாறு பயன்படுத்துவது.

  ஒரு தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி போன்ற சட்னிகளை செய்வதற்க்கு பயன்படுத்தும். மிளகாய், உப்பு, புளி, உளுத்தம் பருப்பு போன்றவை தான் இதற்க்கும்  பயன் படுத்த வேண்டும். பிரண்டையை சட்னியாக, தொகையலாக  பயன் படுத்தலாம்.  பொதுவாக இதை சமையலில் அதிகம் சேர்த்து கொள்ள மாட்டார்கள். சேர்த்தால் நல்லது.






  வாகை பூ-    ஆன்மீக சிறப்பு,  வரலாற்று சிறப்பு, அதீத மருத்துவ சிறப்பு வாய்ந்த பூ. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. "வெற்றி வாகை சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது. இது அதீத மருத்துவ குணம் உடையது. வாகை மர‌த்‌தி‌ன் ‌பி‌சி‌ன், மர‌ப் ப‌ட்டை, பூ, ‌விதை, இலை என அனை‌த்‌தி‌ற்கு‌ம் மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன. வாகை‌யி‌ல் புரத‌ச் ச‌த்து, கா‌ல்‌சிய‌ம், பா‌ஸ்பர‌ஸ், சோடிய‌ம், பொ‌ட்டா‌சிய‌ம், மெ‌‌க்‌னீ‌சிய‌ம் ஆ‌கிய ச‌த்து‌க்க‌ள் ‌நிறை‌ந்து காண‌ப்படு‌கி‌ன்றன.வாகை‌ப் பூவை சேக‌ரி‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி பா‌தியளவாக வ‌ற்‌றியது‌ம் வடிக‌ட்டி குடி‌த்து வர. வாதம், பித்தம், கபம் மூன்றும்  உடலில் சம நிலைக்கு வரும்.  விஷத்தை முறிக்கும் சக்தியும் இதற்க்கு  உண்டு.


Wednesday, 29 April 2015

80 வகை வாத நோய்களும். அவற்றை தீர்க்கும் மூலிகைகளும்.


மனிதனின் உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும்  இருக்க வேண்டும். ஆனால்?  சரியான அளவில் இருக்க வேண்டும். நமது உடலிலே நீரும்  இருக்கிறது,  நெருப்பும் இருக்கிறது. இனிப்பும்  இருக்கிறது, கசப்பும் இருக்கிறது. ஆனால் எல்லாம் சரியான அளவில் இருக்க வேண்டும். எதுவுமே கூடினாலும், குறைந்தாலும் பிரச்சனையே. வாதம் அதிகரித்தால் உடல் வலி. பித்தம் அதிகரித்தால், வாந்தி, மயக்கம், தூக்கமின்மை போன்ற நோய்கள். கபம் அதிகரித்தால் அடிக்கடி  சளி தொல்லை வரும்.

 ஆயுர்வேத மருத்துவர் மொஹமத் அலி அவர்கள்.


காலம் போன கடைசியில் வாதம் வந்து வாய்த்ததே என்பது கிராமத்துப் பழமொழி. ஆம் வயது முதிர்ந்து நாடி தளர்ந்து உடல் ஒடுங்கிய வேளை இது. இந்த நேரத்தில் வாதம் வேறு வந்து வாய்த்துவிட்டதே என்ற வேதனையின் பிரதிபலிப்பே இந்தப் பழமொழியாகும்.

உடலில் உண்டாகும் பிணிகள் 4448 என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதில் வாதம், என்பது 80 வகை என்று வரையறுத்துக் கூறப்பட் டுள்ளது. இவற்றின் குணங்களைத் துல்லியமாக விளக்குகிறது. யூகிமுனி வைத்திய காவியம் என்னும் சித்தர் நூல்.

வாதநோய் தாக்கும் இடங்களைப் பொறுத்து அது வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது. உதாரணமாக மூட்டுகளைத் தாக்கினால் மூட்டுவாதம் என்றும், முகத்தைத் தாக்கி முகம் கோணிக் கொண்டால் முக வாதம் என்றும், சர்வ அங்கங்களையும் தாக்கினால் சர்வாங்க வாதம் என்றும் பெயர்களைப் பெறுகிறது. இவ்வாறாக 80 வகை வாதங்களில் மனிதனை அதிகமாகத் தாக்குவது முடக்குவாதம், பக்கவாதம் எனும் இருவகை வாத நோய்களாகும். ஏனெனில் வாத நோய்களிலேயே மூட்டுகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி அவனைச் செயலற்றவனாக்கி விடுவதே முடக்குவாதம்.


நரம்புகள் பாதிக்கப்பட்டு உறுப்புகளை உணர்விழக்கச் செய்து மனிதனைச் செயலற்றவனாக்கி விடுகிறது பக்கவாதம்.


இந்த இருவித நோய்களுமே மனிதனை அணுவணுவாகச் சித்திரவதை செய்யும் நோய்களாகும்.

முடக்குவாத நோயும் நிவாரணமும்.

முடக்குவாதம் என்பது உஷ்ணம் மிகுதியாலோ கிருமித் தொற்றுகளாலோ உடலில் பிரிக்கப்பட வேண்டிய நீர். உடல் அங்கங்களின் மூட்டுகளில் தங்கி இணைப்புத் தசைகளை வீங்கச் செய்து மிகுந்த வலி தரும். தொடர்ந்து காய்ச்சல் அதனால் உடலை அசைக்க முடியாத தன்மையே முடக்கு வாதம். சுருங்கச் சொன்னால் மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி வைப்பதே முடக்கு வாதம்.

முடக்குவாத வியாதியின் ஆரம்பத்தில் சில சமயம் தொண்டை பாதிக்கப்படுகிறது. பின்பு எலும்பு சந்துகள் சிவந்து வீங்கி வலியுண்டாகிப் படிப்படியாக பெரிய மற்றும் சிறிய மூட்டுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அதனால் காய்ச்சல், வாந்தி, மயக்கம், உடம்புப் பெருக்கம் உண்டாகும். உட்கார்ந்தால் எழ முடியாது. அசைந்தால் உயிர் போவது போல் வலிக்கும். எந்த வேலையிலும் கவனம் செல்லாது. இந்த நோயைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இதயம் நோய் வாய்ப்படும். இதனால் இதய வால்வுகளிலும், உட்பகுதிகளிலும் அழற்சி உண்டாகும்.

முடக்குவாதம்.  நரம்புத் தளர்ச்சி, மனச் சஞ்சலம் ஆகியவைகளால் கூட வரவாய்ப்புள்ளது.

முடக்கு வாத நோய்க்கு  தீர்வு.

கொடி வேலி, மிளகரணை, நொச்சி இவைகளின் வேர்ப்பட்டையைக் சமமாக எடுத்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு  சிறிதளவு அளவு காலை, மாலை நீரில் கலந்து சாப்பிட்டுவர முடக்குவாதம் விலகும். இதை பச்சை தண்ணீரில் தான் கலக்க வேண்டும். வெந்நீர் உபயோகிக்க கூடாது.



100 கிராம் ஆமணக்குப் பருப்பை வெண்ணெய் போலரைத்துச் சிறிது, சிறிதாக 100 கிராம் நெய் விட்டுச் சிவக்க வதக்கி அதில் 600 மில்லி பால்விட்டுக் காய்ச்சி குழம்பு பதமானதும் 100 கிராம் சுக்குத் தூளைப் பொடித்துத் தூவிக் கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 5 கிராம் அளவு காலை, மாலை உண்டு வர முடக்கு வாதம், அதனால் ஏற்பட்ட இடுப்பு பிடிப்பு வலி  குணமாகும்.

பரங்கிப்பட்டை, கொடி வேலி வேர்ப்பட்டை சங்கன் வேர்ப்பட்டை, அமுக்கிலான் கிழங்கு ஆகிய நான்கிலும் வகைக்கு 100 கிராம் எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் இவைகள் வகைக்கு 15 கிராம் வீதம் சேர்த்துச் சூரணித்து வைத்துக்கொள்ளவும்.   கடுமையான முடக்கு வாதமாக இருந்தால் மகாவில் வாதி லேகியத்தை முறைப்படி உண்ண நோய் விலகும்.


 பக்கவாத நோய்க்கு தீர்வு

பொதுவாக பக்கவாத நோய் 40 முதல் 60 வயதுள்ளவர்களைத் தாக்குகிறது. அதிகமாக ஆண்களுக்கே இந்நோய் ஏற்படுகிறது எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பக்கவாத நோய் ஆணுக்கு வலதுபுறமும், பெண்ணுக்கு இடது புறமும் தாக்கினால் எளிதில் தீராது. அதோடு நாக்கும் பாதிக்கப்பட்டால் மருந்துக்கு வசப்படுவதில்லை. கால தாமதம் ஆகலாம். பக்க வாத நோய் தாக்கி நீண்ட நாளாகுதல், உடல் மெலிதல், நோய் தாக்கிய பகுதி சூம்பிப் போதல், உடல் வீங்குதல், நடுக்கம் ஏற்படல் ஆகிய இவை மருத்துவத்திற்குக் கட்டுப்படுவது கடினம். நீண்ட நாள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கலாம்.



பக்கவாத நோய் வாதமிகுதியால் வரும் நோய் எனவே வாதத்தை தன்நிலைப்படுத்த வேண்டும்.
பக்கவாத நோயாளிக்குத் தாக்கப்பட்ட உறுப்புகள் பயனற்றுப் போவதால் முதலில் தேங்கியுள்ள மலத்தைக் கழிச்சல் மருந்துகளைக் கொடுத்து மலச்சிக்கலைப் போக்கவேண்டும்.

அதற்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய் மூன்றையும், கொட்டைகளை நீக்கிச் சமமாக எடுத்து உலர வைத்து சூரணமாக எடுத்து சலித்து வைத்துக்கொண்டு பக்கவாத நோயாளிக்கு 1 முதல் 2  ஸ்பூன்  வரை இரவு சாப்பிடச் சொல்லலாம். இதையே திரிபலா சூரணம் என்பர். இதைப்போலவே நிலாவரைச் சூரணத்தையும் உபயோகிக்கலாம். இவை இரண்டும் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்.


முள் சங்கின் இலை, அதன் விதை, அதன் பட்டை இம்மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு காலை, மாலை, சாப்பிட்டு, சுடுநீர் அருந்தி வர, பாரிசவாதம் அதனால் கை கால்கள் உணர்வற்றுப்போன நிலை மாறும்.

மேலும் சித்திர மூலப்பட்டை, மாவிலிங்கப் பட்டை, கொன்றைப் பட்டை, முருங்கைப்பட்டை., சங்கன்பட்டை, வேப்பம் பட்டை, வெள்ளறுக்கு, சுக்கு, மிளகு,  பஞ்சலவணம் என்று சொல்லப் படுகின்ற இந்துப்பு, வளையலுப்பு, சோற்றுப்பு, கல்லுப்பு, கரியுப்பு முதலியவைகளைச் சமமாக எடுத்து இடித்துச் சூரணமாகச் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்தச் சூரணத்தில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் முதல் 2 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர, பக்கவாதம் குணமடையும்.


இவையன்றிப் பக்கவாத நோய்க்குச் சண்ட மாருத செந்தூரம், ஆறுமுகச் செந்தூரம், அயவீரச் செந்தூரம், கெந்தி மெழுகு, நந்தி மெழுகு, மகாவீர மெழுகு, வாதராட்சதன் போன்ற உயரிய மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஆனால் இவைகளைக் கை தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உண்ண வேண்டும். பக்கவாத நோயில் உள் மருந்துகளுடன் வெளிப்பூச்சுத் தைலங்களும், மற்றும் ஒத்தடம் போடுதல் போன்ற சிகிச்சைகளும் மிகவும் அவசியம். காரணம் உணர்விழந்த பகுதிகளைத் தேய்த்துச் சூடு உண்டாக்குவதன் மூலம் ரத்த ஓட்டம் உண்டாகி உணர்வு திரும்ப வாய்ப்புள்ளது.


அவ்வகையில் பச்சைச் சித்திர மூலவேர் 150 கிராம், ஊமத்தன் இலைச்சாறு 1 லிட்டர், ஓமம் 50 கிராம், நல்லெண்ணெய் ஒரு லிட்டர், கற்பூரம் 25 கிராம் இவைகளில் முதல் சொன்ன சித்திர நூல் வேலை சோற்றுக் கற்றாழையின் சாறு விட்டு நன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு மீதமுள்ள ஊமத்தை இலைச்சாறு, நல்லெண்ணெய் இவைகளை நன்றாகக் கலந்து வண்டல் மெழுகு பதமாகத் தங்கும்போது தேக்கி வைத்துக் கொண்டு பக்கவாத நோயில் பாதிக்கப்பட்ட இடத்தின்மீது தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். காலை, மாலை இப்படிச் செய்தால் போதும்.


இது தவிர பிண்டத் தைலம், வாத கேசரித் தைலம், மையத் தைலம் விஷமுஷ்டித் தைலம் உளுந்துத் தைலம் போன்ற தைலங்கள் கடையில் கிடைக்கின்றன. இவையும் பக்கவாத நோய்களுக்குப் பயன்படுத்தலாம்.
பக்கவாத நோயினால் சில நேரம் நாக்கு பாதிக்கப்பட்டுத் துவண்டுவிடும். அதற்கு அண்டத் தைலம் எனும் மருந்து அற்புதமாகப் பயன் தருகிறது.


மேற்பூச்சித் தைலங்களைப் பூசி மசாஜ் செய்த பின் கழற்சிக் கொழுந்து, வாதநாராயணன் உத்தாமணி இலை, முடக்கற்றான் இலை, நொச்சி இலை, தழுதாலை இலை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துப் பொடியாக நறுக்கி ஆமணக்கு எண்ணெயில் போட்டுச் சிறு மூட்டைகளாகக் கட்டிப் பாதிக்கப்பட்ட  இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.


பக்கவாதத்தால் செயலிழந்த உறுப்புகளுக்குச் சிகிச்சை முறைகளுடன் லேசான பயிற்சியும் அவசியம். பக்கவாத நோயாளிகளுக்கு இதய நோய், நீரிழிவு மற்றும் பால்வினை நோயிருந்தால் அதற்கான மருந்துகளையும் கொடுத்து நோயைக் குணப்படுத்த வேண்டும். பக்கவாத நோயாளிகளுக்கு அக, புற சிகிச்சைகளோடு உணவு முறைகளிலும் கவனம் செலுத்தினால் துரிதமாகக் குணமடைய வாய்ப்புள்ளது.
பொதுவாக வாதரோகம் அனைத்திற்குமே உள் மருந்துகளுடன் மேற்பூச்சு தைலங்களும் ஒத்தட முறைகளும் மேற்கொள்வது அவசியம். அவற்றோடு பத்தியமும்   மிக முக்கியம். மலச்சிக்கலை உண்டாக்காத உணவு முறை முக்கியம். சைவ உணவே சாலச் சிறந்தது.


வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவைகளைக் கலந்து பச்சடி செய்து உண்ணவேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும். அரிசி உணவைக் குறைத்து கோதுமை உட்கொள்ளலாம். புளிளை அறவே நீக்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார் வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.

 காலையில் 1 டம்ளர் பார்லித் தண்ணீர் குடிக்கலாம். இரவில் 2 பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய பாலையும், பூண்டையும் தேன் கலந்து சாப்பிடலாம். முடக்கு வாதத்திற்கென்றே இறைவன் படைத்த மூலிகை முடக்கற்றான். இதனை சூப்பாக செய்து வாரம் ஒரு முறை அருந்தி வரலாம்.


முன் சொன்னவாறு பொதுவாக வாதநோய்க்குப் புறமருந்து, அகமருந்து, உணவுப் பத்தியம் இவைகளுடன் உடற்பயிற்சியும் அவசியம். ஆதலால் கால்களுக்குப் பயிற்சி தரும் விதத்தில் மடக்கி நீட்ட முயலவேண்டும். ஆசனத்தில் திரிகோணாசனம் (முக்கோணநிலை) மிகவும் பயன்தரவல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியால் உயிர்காற்று உடலுக்கு அதிகம் கிடைப்பதால் நோய் விரைவில் குணமாகும்.



நோயாளிகளுக்குச் சிறுநீரகக் கோளாறு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உள்ளனவா எனப் பரிசோதித்து அதற்குத் தகுந்த வண்ணம் மருந்துகளைப் பிரயோகிக்க வேண்டும். மருந்துகளுடன் உடல் தேற்றி மருந்துகளையும் இணைத்தே மருத்துவம் மேற்கொள்ளவேண்டும். முடக்கு வாதத்திற்கு முதல் தரமான சிகிச்சை சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.

 இதன் தொடர்ச்சியை நாம் நாளை பாப்போம்.




Tuesday, 28 April 2015

நரம்பு தளர்ச்சிக்கு உணவு. காலை. கால் டாக்சி ஆக்குங்கள்.



தினமும் ஒரு கால் மணி நேரமாது உடற் பயிற்ச்சி  செய்ய வேண்டும். அரை மணி நேர நடை பயிற்ச்சி. மாலை வேளை. 1,2 கிலோ மீட்டர்  துரம் என்றால். காலை கால் டாக்சியாக உபயோகப்படுத்துங்கள். ஆணோ, பெண்ணோ. நடக்கும் பொழுது. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையோடு நடக்க வேண்டும். நெஞ்சை  நிமிர்த்தி எந்த அளவு நீங்கள் வேகமாக நடக்கிரீர்களோ. அந்த அளவு. உங்கள் உடலில் ரத்த  ஓட்டம் சீராகும். நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவதோடு வலு பெறும்.  Treadmill லில் நடு  ஹாலில் நடப்பவர்கள். அருகில் உள்ள கடைகள், நண்பர்கள், உறவினர்களை பார்பதற்க்கு. 2 வீலர், 4 வீலர் உபயோகிக்காமல்.   வேகமாக நடந்து செல்லலாம். அதற்காக Treadmill  தேவையே இல்லை. என்று நான் சொல்லவரவில்லை. நமது நடையின் வேகத்தை. Treadmill  பயிற்ச்சி  அதிகரிக்கும் இது நான் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை. முடிந்த அளவு நாம். வாகனத்தை பயன்படுத்துவதை குறைத்து காலை பயன்படுத்துவதை அதிகரித்தால். நமது உடல் நலன் மேம்படும். நரம்புகள் வலிமை  இழக்க. நமது மன நிலையும் ஒரு காரணம்.

 அதனால். வாரத்தில் ஒரு நாள் உங்களுக்கு பிடித்த இடத்திற்க்கு தனியாக சென்று. தனிமையிலே இனிமை காணலாம். இல்லை. பிடித்த நபர்களோடு. பிடித்த இடம் சென்றும் நீங்கள் இனிமை காணலாம்.  நகைச்சுவை, இசை. இந்த இரண்டும். ஒருவர் வாழ்வில் இல்லையென்றால். அந்த வாழ்வு நரகம்.  வாழ்க்கை என்னும் ரயில். அந்த இரண்டு தண்டவாளங்களின் மீது தான். பல கவலைகளை மறந்து, தடைகளை வென்று பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று. நகைச்சுவைக்கு என்றே. இரண்டு தொலைகாட்சிகள் தமிழில் உள்ளது. இசைக்கு என்று.  ஒரு 7,8 தொலைகாட்சிகள் இருக்கிறது. அதை தவிர. நாம் எந்த குறிப்பிட்ட பாடல், நகைச்சுவை காட்சியை பார்க்க விரும்புகிறோமோ. அதை யூ  ட்யூப்பில்  பார்க்கலாம். உங்கள் மனம். எப்பொழுது எல்லாம். கவலையில் இருக்கிறதோ. அப்பொழுது. உங்கள் மனதிற்க்கு. இசை, நகைச்சுவை என்னும் இரண்டு மருந்துகளை மறக்காமல் கொடுங்கள்.

  நரம்பு தளர்ச்சியை சரி செய்யும் உணவுகள்.


  சௌ சௌ, ஜூஸ்க்கு உபயோகபடுத்தபடும் கேரட், பீட் ரூட், ஜாதிக்காய், வாழை பூ, வாழை தண்டு,   பழங்களில்.  மாதுளை, மாம்பழம், பப்பாளி.


  மாதுளம் பழத்தின்  பூவை 300 கிராம் எடுத்து. அதை கையாலோ, மிக்சி மூலமாகவோ. சாறாக்கி. அதோடு 200 கிராம். நெய் கலந்து. அதை. தினமும் ஒரு ஸ்பூன்  சாப்பிட வேண்டும். இவ்வாறு ஒரு 48 நாட்கள் சாபிட்டு வந்தால், நரம்பு நன்கு வலுபெறும். 48 நாட்களுக்கு மேலும் சாப்பிடலாம். தப்பில்லை.

   நாளை. வாத நோய்களுக்கு உண்டான மருந்தை பாப்போம்.

Monday, 27 April 2015

நரம்பு தளர்ச்சி வர காரணம் மன தளர்ச்சியே. நரம்பு தளர்ச்சி தீர ஓஷோ சொன்ன வைத்தியம்.


இன்று நரம்பு  தளர்ச்சிக்கான  தீர்வை பார்க்க போகிறோம். முதலில் நரம்பு  தளர்ச்சி வருவதற்கான காரணங்கள்.

பல மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள்.  சரியான உடற் பயிர்ச்சி  செய்யாமல் இருந்தால். நரம்பு   தளர்ச்சி வரும். முக்கியமாக. . நாம் மனதில் சேர்த்து வெய்க்கும் கவலைகள். நம்முடைய நாடி, நரம்பு , சதை, எலும்பு, ரத்தம், புத்தி அனைத்தையும் பாதிக்கும்.

 எனது பள்ளி நண்பன் ஒருவன். நல்ல வசதியான குடும்பம். ஆனாலும். அவன் தன்னை விட உயர்ந்த இடத்தில இருப்பவர்களோடு. தன்னை ஒப்பிட்டு கொண்டே இருப்பான். அதனாலேயே. அவன் ஒருநாளும் நிம்மதியாக இருந்தது இல்லை. அவனை மாற்ற. இரண்டு, மூன்று  முறை  முயற்ச்சி  செய்து.  ம்ஹ்ம். இது தேறாது என்று தண்ணீ தெளித்து விட்டு விட்டேன். ஒருநாள் நானும் எனது நண்பர்களும் மாயாஜாலில் ஜாலியாக படம் பார்த்து விட்டு மகாபலிபுரம் வந்தோம். அங்கும் அவன் புலம்பலை ஆரம்பித்து விட்டான். என்னுடைய நண்பர்கள். ஏண்டாப்பா. இவனை நம்ப செட்ல சேர்த்து கொண்டோம் என்பதை போல். ஒருவருக்கொருவர் பார்வையாலேயே பேசி கொண்டனர்.

நான் உடனே. கார்த்திக்கை யாருன்னு நினைத்தீர்கள். [ [பெயர் மாற்றப்பட்டுள்ளது ]  சராசரி மனிசனால இந்த அளவு கவலைப்படவே முடியாது. நாடி, நரம்பு,  சதை, எலும்பு, ரத்தம், புத்தி. எல்லாத்துலையும். பண வெறி ஊறி போன ஒருத்தனால தான் இப்டி கவலைப்பட முடியும். என்று சொன்னவுடன்.  என் உடன் இருந்த 12 நண்பர்களும் கோரசாக சிரித்தார்கள். என் நண்பர்களில் ஒருவன். கார்த்திக்.  எனக்கு இப்பவே தெரிஞ்சி ஆகணும். உண்மையை சொல்லு. நீ நாலு வருசத்துக்கு மின்னாடி பாம்பேல என்ன பண்ணிண்டு இருந்த. என்று கேட்டான். ம். பாணி பூரி வித்துண்டு இருந்தான் என்று இன்னொருவன் சொன்னான். டேய். இப்ப தான். எந்திரன்  பார்த்துட்டு வரோம். இங்க என்னடா. நீங்க எல்லாரும் சேர்ந்து பாட்ஷா பார்ட் 2 எடுத்துண்டு இருக்கீங்க .

  இந்த சம்பவதிர்ற்கு பின் அவன். பிறர் முன்.  புலம்புவதை நிறுத்தி விட்டான். கொஞ்சமா? அவனை நாங்க ஒட்டினோம்.

 தனக்கு மேல் உள்ளவர்களை பார்த்து பொறாமை கொள்வது. தனக்கு கீழ் உள்ளவர்களை பார்த்து மகிழ்ச்சி கொள்வது. இரண்டுமே தவறு தான். இதை பற்றி ஓஷோ கூறுவதை கேளுங்கள்.

ஒப்பிடுதல்:

மக்கள் எப்போதும் தம்மைப் பிறருடன் ஒப்பிடுவது வழக்கம். இந்த ஒப்பீடுகளால்தான் அவர்கள் மகழ்ச்சியாகவோ, துக்கமாகவோ இருக்கிறார்கள். புகழ் பெற்ற  மகான் ஒருவரை நான் சந்தித்தேன். எனக்கும் அவருக்கும் இடையில் என்ன வேறுபாடு என்பதை அவர் சொன்னார். "துக்கப்படுகிறவர்களைப் பார்ப்பதில்தான் மகிழ்ச்சியின் மர்மமே இருக்கிறது. ஊனமானவனைப் பார்க்கும்போது, நீ ஊனமில்லாமல் இருப்பதற்காக மகிழ்வு தோன்றும். கண்ணற்றவனைப் பார்க்கும்போது, நீ அப்படி இல்லை என்பதில் மகிழ்ச்சி பிறக்கும். ஏழையைப் பார்த்தால் நாம் ஏழை இல்லை என்பதில் ஆனந்தம் தோன்றும்", என்றார் அவர்.

 மேலே உளறாமல் இருக்க, நான் அவரைக் குறுக்கிட்டுத் தடுக்க வேண்டி வந்தது.


"உங்களுக்கு ஒரு சிறிய விஷயம் புரியவில்லை. ஒப்பிட ஆரம்பித்தால் அதற்க்கு முடிவே இல்லை. பரிதாபத்திற்குரியவர்களோடு மட்டுமே ஒருவன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ள மாட்டான். தன்னை விட வலிமை படைத்தவனோடும், மதிப்பு மரியாதை கொண்டவனோடும் ஒப்பிட ஆரம்பிப்பான். அதனால், துக்கமே உண்டாகும். நீங்கள் ஆனந்த இரகசியத்தைச் சொல்லவில்லை. துக்கத்தின் இரகசியத்தையே சொல்கிறீர்கள்!" என்றேன்.


ஆனால், இப்படித்தான் காலம் காலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், வெவ்வேறு வார்த்தைகளில். ஆனால், அடிப்படை என்னவோ ஒன்றுதான். பல மத நுல்களும்  இதைத்தான் சொல்கின்றன. மக்கள் துக்கப்படுகிறவர்களைப் பார்த்து நிறைவடைகிறார்கள். தாம் அப்படித் துன்பப் படவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். இது ஒரு பக்கச் சார்புடையதாகத் தொடர்ந்து இருந்து வரக் கூடாது. பிறரோடு உங்களை ஒப்பிட ஆரம்பிக்கும்போது உங்களை விடத் தாழ்ந்தவர்களோடு மட்டுமல்லாமல்,உயர்ந்தவர்களோடும் ஒப்பிடவே தோன்றும். மிஞ்சுவது நீங்காத கவலைதான்.  ஒப்பிடுதலே சரியில்லை. நீங்கள் நீங்களேதான். வேறு யாரும் அல்ல. ஒப்பற்றவர் நீங்கள். மற்றவரும் அப்படியே. அதனால்தான், ஒப்பிடாதீர்கள்.ஒப்பிடுவது உலகத்தோடு உங்களை விலங்கு மாட்டி விடுவது. அது போட்டி பொறாமைகளை ஏற்படுத்திவிடுகிறது. அது தனியாக வருவதில்லை. துணையுடனே வருகிறது.ஒப்பிடுவதற்கு முடிவே இல்லை.ஆனால், நீங்கள் முடிந்துவிடுவீர்கள்!அதை ஏற்றுக் கொள்வது, வாழ்வின் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதாகும்.

   ஓஷோ சொன்ன இந்த ஆனந்த ரகசியத்தை நாம் வாழ்வில் பின்பற்ற ஆரம்பித்தால். நமக்கு  நரம்பு  தளர்ச்சியோ, Bp யோ வருமா.

  நமது கவலைக்கு இன்னொரு காரணம். மத்தவங்க  நம்பளை  பத்தி என்ன?நினைபாங்களோ  என்று. நமக்கு பிடித்த. சின்ன, சின்ன விசயங்களை கூட இன்பமயமாக அனுபவிக்காமல். அவற்றை. மனதிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்து விடுவது. இந்த உலகில் பலர். ஊர் என்ன சொல்லுமோ, உலகம் என்ன சொல்லுமோ என்று பயந்து, பயந்து தனக்கு பிடித்த மாதிரி வாழாமல். அடுத்தவர்களிடம் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்பதற்காக. போலி தனமாக வாழ்கிறார்கள்.



 இந்த உலகம் ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் அதில் நடிகர்கள் என்றார் ஷேக்ஸ்பியர். அவர் ஏதோ ஒரு Flow  ல  சொல்லிட்டார். அதை அப்படியே நம்ப பாலோ பண்ணனுமா என்ன.

 கையை வீசி நெஞ்சை நிமிர்த்தி. எந்த அளவு நாம் வேகமாக நடக்கிறோமோ. அந்த அளவு. உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. ஒருமுறை. எனக்கு தெரிந்த ஒருவர்.  நீ இவ்வளவு வேகமாக நடந்து வருவதை பார்த்தால். யாரோ ஒரு பத்து பேரை அடிக்க வருவதை போல் இருக்கிறது. கொஞ்சும் Casual லா நடையேன். எதற்க்கு இந்த 8,9 கிலோ மீட்டர் வேக நடை. இவ்வாறு நீ நடப்பது நன்றாக இல்லை. நான் அவரிடம் பொறுமையாக. உங்களுக்கு பிடித்த மாதிரி நடந்தால். அதனால் எனக்கு ஏதேனும் பரிசு கிடைக்க போவதில்லை. எந்த மாதிரி நான் நடந்தால் எனக்கு பிடிக்குமோ, அந்த மாதிரி தான். தெருவிலும் சரி. என் வாழ்விலும் சரி. நடப்பேன். எனது வாழ்க்கை. எனக்கு பிடித்த மாதிரி நான் வாழ வேண்டும். ஊர் உலகம் என்ன சொல்கிறது என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.

உங்களது உடல் ஆரோக்யத்தை, பிறரது உடலை,  மனத்தை காயபடுத்தாத   எந்த ஒரு விசயமும் தவறே இல்லை.


என்னுடைய நண்பன் ஒருவன். ஒருநாள். நான் அவன் வீட்டிற்க்கு எனது நண்பர்களோடு சென்று இருந்தேன். அன்று ஞாயிற்று கிழமை.  நாங்கள் அவனது ரூமிற்க்கு செல்லும் வரை. அவன் டிவியில் சோட்டா பீம். டோரீமான் என்று இரண்டு கார்ட்டூன்கள் மாறி, மாறி பார்த்து விடுமுறையை மகிழ்வாக கழித்து கொண்டிருந்தான். நாங்கள் அவனோடு பேசி கொண்டிருக்கும் பொழுது. அவனோட அம்மா. அவன் அறைக்குள் வந்தார். ஏழு கழுதை வயது ஆய்டுத்து. இன்னும் இவன் உட்கார்ந்து. ஒன்னாம் கிளாஸ்ல பார்த்துண்டு இருந்த. கார்ட்டூன்களை பார்த்துண்டு இருக்கான். நீங்க யாராவது. இன்னுமும் பொம்மை படம் பார்த்துண்டு இருக்கீங்களா என்று கேட்டார். நானும் நேரம் கிடைக்கும் பொழுது கார்ட்டூன் பாக்கற டம்மி பீசு தான் என்று மைண்ட் வாய்ஸ்ல நினைச்சேன். ஆனால் வாயை திறந்து சொல்லலை. எனது நண்பனோ. பொறுமையாக. நீ தினமும் மெகா சீரியல் பார்த்து அழுவதற்க்கு. நான் . கார்ட்டூன் பார்த்து சிரிப்பது ஒன்றும் தவறு இல்லை என்று. தன்னுடைய அம்மாவிற்க்கு. மென்மையான குரலில், மேன்மையாக பதில் சொல்ல. அவனது தாயார். மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

கார்டூனில் ஆரம்பித்து. பார்க்கில் ஊஞ்சல் ஆட வெக்கபடுவது வரை. பல பெரியவர்கள். ஊர், உலகத்திற்காக. தனக்குள் உள்ள அணைத்து ஆசைகளையும் குழி தோண்டி புதைக்கிறார்கள். குழந்தை தனத்தை கொல்கிறார்கள்.   நாம் வேலை செய்யும் அலுவலகத்தில். மாணவர்கள் என்றால். பள்ளி, கல்லூரியில். அங்கே உள்ள சட்ட, திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். அது தவறில்லை. ஆனால். உங்களுக்கு கிடைக்கும் ப்ரீ டைம்மில். உங்களுக்கு பிடித்த மாதிரி நீங்கள் வாழ்வதில் என்ன? தயக்கம். சில நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றால். காதல் காட்சிகள் உட்பட. அணைத்து காட்சிகளிலும்  விறைப்பாகவே இருப்பார்கள்.அதே போல் தான் சிலர். மனதை எப்போதும் விறைப்பாக, விழிகளை முறைப்பாக வெய்த்து உள்ளனர்.

 நீ யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ள நினைக்காதே. அவ்வாறு மாற்றி கொள்ள நினைத்தால். ஒவ்வொருவருக்காகவும். உன்னை நீ மாற்றி கொள்ள வேண்டியதாக இருக்கும்.



   கண்ணதாசன்.

எதையும்  டேக் இட் ஈசியாக எடுத்து கொள்ள பழகுங்கள். நாம் கவலைபடுவதால் நமது பிரச்சனைகள்  தீரும் என்றால் கவலைபடலாம். கவலைபடுவதால் நமது பிரச்சனைகள் தீர போவதில்லை. பின்னர் ஏன்? கவலைப்பட வேண்டும். குழப்பம், கவலை, கோபம் இந்த மூன்றும்  இல்லாத நேரங்களில் தான். நமது மனம் தெளிவாக இருக்கும். தெளிவாக இருக்கும் மனம் தான் சரியான முடிவை எடுக்கும். அதனால். முதலில் கவலையை தூர எறியுங்கள்.


 இதன் தொடர்ச்சியை நாம் நாளை பாப்போம்.