siddhas

Thursday, 30 April 2015

வாதம், பித்தம், கபம். மூன்றையும் சீராக வெய்க்க சீராண வழி





பிரண்டை.

வாதம், பித்தம், கபம். மூன்றையும்  சீரான அளவில் வெய்க்கும்.  இதை எவ்வாறு பயன்படுத்துவது.

  ஒரு தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி போன்ற சட்னிகளை செய்வதற்க்கு பயன்படுத்தும். மிளகாய், உப்பு, புளி, உளுத்தம் பருப்பு போன்றவை தான் இதற்க்கும்  பயன் படுத்த வேண்டும். பிரண்டையை சட்னியாக, தொகையலாக  பயன் படுத்தலாம்.  பொதுவாக இதை சமையலில் அதிகம் சேர்த்து கொள்ள மாட்டார்கள். சேர்த்தால் நல்லது.






  வாகை பூ-    ஆன்மீக சிறப்பு,  வரலாற்று சிறப்பு, அதீத மருத்துவ சிறப்பு வாய்ந்த பூ. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. "வெற்றி வாகை சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது. இது அதீத மருத்துவ குணம் உடையது. வாகை மர‌த்‌தி‌ன் ‌பி‌சி‌ன், மர‌ப் ப‌ட்டை, பூ, ‌விதை, இலை என அனை‌த்‌தி‌ற்கு‌ம் மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன. வாகை‌யி‌ல் புரத‌ச் ச‌த்து, கா‌ல்‌சிய‌ம், பா‌ஸ்பர‌ஸ், சோடிய‌ம், பொ‌ட்டா‌சிய‌ம், மெ‌‌க்‌னீ‌சிய‌ம் ஆ‌கிய ச‌த்து‌க்க‌ள் ‌நிறை‌ந்து காண‌ப்படு‌கி‌ன்றன.வாகை‌ப் பூவை சேக‌ரி‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி பா‌தியளவாக வ‌ற்‌றியது‌ம் வடிக‌ட்டி குடி‌த்து வர. வாதம், பித்தம், கபம் மூன்றும்  உடலில் சம நிலைக்கு வரும்.  விஷத்தை முறிக்கும் சக்தியும் இதற்க்கு  உண்டு.


Wednesday, 29 April 2015

80 வகை வாத நோய்களும். அவற்றை தீர்க்கும் மூலிகைகளும்.


மனிதனின் உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும்  இருக்க வேண்டும். ஆனால்?  சரியான அளவில் இருக்க வேண்டும். நமது உடலிலே நீரும்  இருக்கிறது,  நெருப்பும் இருக்கிறது. இனிப்பும்  இருக்கிறது, கசப்பும் இருக்கிறது. ஆனால் எல்லாம் சரியான அளவில் இருக்க வேண்டும். எதுவுமே கூடினாலும், குறைந்தாலும் பிரச்சனையே. வாதம் அதிகரித்தால் உடல் வலி. பித்தம் அதிகரித்தால், வாந்தி, மயக்கம், தூக்கமின்மை போன்ற நோய்கள். கபம் அதிகரித்தால் அடிக்கடி  சளி தொல்லை வரும்.

 ஆயுர்வேத மருத்துவர் மொஹமத் அலி அவர்கள்.


காலம் போன கடைசியில் வாதம் வந்து வாய்த்ததே என்பது கிராமத்துப் பழமொழி. ஆம் வயது முதிர்ந்து நாடி தளர்ந்து உடல் ஒடுங்கிய வேளை இது. இந்த நேரத்தில் வாதம் வேறு வந்து வாய்த்துவிட்டதே என்ற வேதனையின் பிரதிபலிப்பே இந்தப் பழமொழியாகும்.

உடலில் உண்டாகும் பிணிகள் 4448 என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதில் வாதம், என்பது 80 வகை என்று வரையறுத்துக் கூறப்பட் டுள்ளது. இவற்றின் குணங்களைத் துல்லியமாக விளக்குகிறது. யூகிமுனி வைத்திய காவியம் என்னும் சித்தர் நூல்.

வாதநோய் தாக்கும் இடங்களைப் பொறுத்து அது வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது. உதாரணமாக மூட்டுகளைத் தாக்கினால் மூட்டுவாதம் என்றும், முகத்தைத் தாக்கி முகம் கோணிக் கொண்டால் முக வாதம் என்றும், சர்வ அங்கங்களையும் தாக்கினால் சர்வாங்க வாதம் என்றும் பெயர்களைப் பெறுகிறது. இவ்வாறாக 80 வகை வாதங்களில் மனிதனை அதிகமாகத் தாக்குவது முடக்குவாதம், பக்கவாதம் எனும் இருவகை வாத நோய்களாகும். ஏனெனில் வாத நோய்களிலேயே மூட்டுகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி அவனைச் செயலற்றவனாக்கி விடுவதே முடக்குவாதம்.


நரம்புகள் பாதிக்கப்பட்டு உறுப்புகளை உணர்விழக்கச் செய்து மனிதனைச் செயலற்றவனாக்கி விடுகிறது பக்கவாதம்.


இந்த இருவித நோய்களுமே மனிதனை அணுவணுவாகச் சித்திரவதை செய்யும் நோய்களாகும்.

முடக்குவாத நோயும் நிவாரணமும்.

முடக்குவாதம் என்பது உஷ்ணம் மிகுதியாலோ கிருமித் தொற்றுகளாலோ உடலில் பிரிக்கப்பட வேண்டிய நீர். உடல் அங்கங்களின் மூட்டுகளில் தங்கி இணைப்புத் தசைகளை வீங்கச் செய்து மிகுந்த வலி தரும். தொடர்ந்து காய்ச்சல் அதனால் உடலை அசைக்க முடியாத தன்மையே முடக்கு வாதம். சுருங்கச் சொன்னால் மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி வைப்பதே முடக்கு வாதம்.

முடக்குவாத வியாதியின் ஆரம்பத்தில் சில சமயம் தொண்டை பாதிக்கப்படுகிறது. பின்பு எலும்பு சந்துகள் சிவந்து வீங்கி வலியுண்டாகிப் படிப்படியாக பெரிய மற்றும் சிறிய மூட்டுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அதனால் காய்ச்சல், வாந்தி, மயக்கம், உடம்புப் பெருக்கம் உண்டாகும். உட்கார்ந்தால் எழ முடியாது. அசைந்தால் உயிர் போவது போல் வலிக்கும். எந்த வேலையிலும் கவனம் செல்லாது. இந்த நோயைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இதயம் நோய் வாய்ப்படும். இதனால் இதய வால்வுகளிலும், உட்பகுதிகளிலும் அழற்சி உண்டாகும்.

முடக்குவாதம்.  நரம்புத் தளர்ச்சி, மனச் சஞ்சலம் ஆகியவைகளால் கூட வரவாய்ப்புள்ளது.

முடக்கு வாத நோய்க்கு  தீர்வு.

கொடி வேலி, மிளகரணை, நொச்சி இவைகளின் வேர்ப்பட்டையைக் சமமாக எடுத்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு  சிறிதளவு அளவு காலை, மாலை நீரில் கலந்து சாப்பிட்டுவர முடக்குவாதம் விலகும். இதை பச்சை தண்ணீரில் தான் கலக்க வேண்டும். வெந்நீர் உபயோகிக்க கூடாது.



100 கிராம் ஆமணக்குப் பருப்பை வெண்ணெய் போலரைத்துச் சிறிது, சிறிதாக 100 கிராம் நெய் விட்டுச் சிவக்க வதக்கி அதில் 600 மில்லி பால்விட்டுக் காய்ச்சி குழம்பு பதமானதும் 100 கிராம் சுக்குத் தூளைப் பொடித்துத் தூவிக் கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 5 கிராம் அளவு காலை, மாலை உண்டு வர முடக்கு வாதம், அதனால் ஏற்பட்ட இடுப்பு பிடிப்பு வலி  குணமாகும்.

பரங்கிப்பட்டை, கொடி வேலி வேர்ப்பட்டை சங்கன் வேர்ப்பட்டை, அமுக்கிலான் கிழங்கு ஆகிய நான்கிலும் வகைக்கு 100 கிராம் எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் இவைகள் வகைக்கு 15 கிராம் வீதம் சேர்த்துச் சூரணித்து வைத்துக்கொள்ளவும்.   கடுமையான முடக்கு வாதமாக இருந்தால் மகாவில் வாதி லேகியத்தை முறைப்படி உண்ண நோய் விலகும்.


 பக்கவாத நோய்க்கு தீர்வு

பொதுவாக பக்கவாத நோய் 40 முதல் 60 வயதுள்ளவர்களைத் தாக்குகிறது. அதிகமாக ஆண்களுக்கே இந்நோய் ஏற்படுகிறது எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பக்கவாத நோய் ஆணுக்கு வலதுபுறமும், பெண்ணுக்கு இடது புறமும் தாக்கினால் எளிதில் தீராது. அதோடு நாக்கும் பாதிக்கப்பட்டால் மருந்துக்கு வசப்படுவதில்லை. கால தாமதம் ஆகலாம். பக்க வாத நோய் தாக்கி நீண்ட நாளாகுதல், உடல் மெலிதல், நோய் தாக்கிய பகுதி சூம்பிப் போதல், உடல் வீங்குதல், நடுக்கம் ஏற்படல் ஆகிய இவை மருத்துவத்திற்குக் கட்டுப்படுவது கடினம். நீண்ட நாள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கலாம்.



பக்கவாத நோய் வாதமிகுதியால் வரும் நோய் எனவே வாதத்தை தன்நிலைப்படுத்த வேண்டும்.
பக்கவாத நோயாளிக்குத் தாக்கப்பட்ட உறுப்புகள் பயனற்றுப் போவதால் முதலில் தேங்கியுள்ள மலத்தைக் கழிச்சல் மருந்துகளைக் கொடுத்து மலச்சிக்கலைப் போக்கவேண்டும்.

அதற்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய் மூன்றையும், கொட்டைகளை நீக்கிச் சமமாக எடுத்து உலர வைத்து சூரணமாக எடுத்து சலித்து வைத்துக்கொண்டு பக்கவாத நோயாளிக்கு 1 முதல் 2  ஸ்பூன்  வரை இரவு சாப்பிடச் சொல்லலாம். இதையே திரிபலா சூரணம் என்பர். இதைப்போலவே நிலாவரைச் சூரணத்தையும் உபயோகிக்கலாம். இவை இரண்டும் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்.


முள் சங்கின் இலை, அதன் விதை, அதன் பட்டை இம்மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு காலை, மாலை, சாப்பிட்டு, சுடுநீர் அருந்தி வர, பாரிசவாதம் அதனால் கை கால்கள் உணர்வற்றுப்போன நிலை மாறும்.

மேலும் சித்திர மூலப்பட்டை, மாவிலிங்கப் பட்டை, கொன்றைப் பட்டை, முருங்கைப்பட்டை., சங்கன்பட்டை, வேப்பம் பட்டை, வெள்ளறுக்கு, சுக்கு, மிளகு,  பஞ்சலவணம் என்று சொல்லப் படுகின்ற இந்துப்பு, வளையலுப்பு, சோற்றுப்பு, கல்லுப்பு, கரியுப்பு முதலியவைகளைச் சமமாக எடுத்து இடித்துச் சூரணமாகச் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்தச் சூரணத்தில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் முதல் 2 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர, பக்கவாதம் குணமடையும்.


இவையன்றிப் பக்கவாத நோய்க்குச் சண்ட மாருத செந்தூரம், ஆறுமுகச் செந்தூரம், அயவீரச் செந்தூரம், கெந்தி மெழுகு, நந்தி மெழுகு, மகாவீர மெழுகு, வாதராட்சதன் போன்ற உயரிய மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஆனால் இவைகளைக் கை தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உண்ண வேண்டும். பக்கவாத நோயில் உள் மருந்துகளுடன் வெளிப்பூச்சுத் தைலங்களும், மற்றும் ஒத்தடம் போடுதல் போன்ற சிகிச்சைகளும் மிகவும் அவசியம். காரணம் உணர்விழந்த பகுதிகளைத் தேய்த்துச் சூடு உண்டாக்குவதன் மூலம் ரத்த ஓட்டம் உண்டாகி உணர்வு திரும்ப வாய்ப்புள்ளது.


அவ்வகையில் பச்சைச் சித்திர மூலவேர் 150 கிராம், ஊமத்தன் இலைச்சாறு 1 லிட்டர், ஓமம் 50 கிராம், நல்லெண்ணெய் ஒரு லிட்டர், கற்பூரம் 25 கிராம் இவைகளில் முதல் சொன்ன சித்திர நூல் வேலை சோற்றுக் கற்றாழையின் சாறு விட்டு நன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு மீதமுள்ள ஊமத்தை இலைச்சாறு, நல்லெண்ணெய் இவைகளை நன்றாகக் கலந்து வண்டல் மெழுகு பதமாகத் தங்கும்போது தேக்கி வைத்துக் கொண்டு பக்கவாத நோயில் பாதிக்கப்பட்ட இடத்தின்மீது தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். காலை, மாலை இப்படிச் செய்தால் போதும்.


இது தவிர பிண்டத் தைலம், வாத கேசரித் தைலம், மையத் தைலம் விஷமுஷ்டித் தைலம் உளுந்துத் தைலம் போன்ற தைலங்கள் கடையில் கிடைக்கின்றன. இவையும் பக்கவாத நோய்களுக்குப் பயன்படுத்தலாம்.
பக்கவாத நோயினால் சில நேரம் நாக்கு பாதிக்கப்பட்டுத் துவண்டுவிடும். அதற்கு அண்டத் தைலம் எனும் மருந்து அற்புதமாகப் பயன் தருகிறது.


மேற்பூச்சித் தைலங்களைப் பூசி மசாஜ் செய்த பின் கழற்சிக் கொழுந்து, வாதநாராயணன் உத்தாமணி இலை, முடக்கற்றான் இலை, நொச்சி இலை, தழுதாலை இலை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துப் பொடியாக நறுக்கி ஆமணக்கு எண்ணெயில் போட்டுச் சிறு மூட்டைகளாகக் கட்டிப் பாதிக்கப்பட்ட  இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.


பக்கவாதத்தால் செயலிழந்த உறுப்புகளுக்குச் சிகிச்சை முறைகளுடன் லேசான பயிற்சியும் அவசியம். பக்கவாத நோயாளிகளுக்கு இதய நோய், நீரிழிவு மற்றும் பால்வினை நோயிருந்தால் அதற்கான மருந்துகளையும் கொடுத்து நோயைக் குணப்படுத்த வேண்டும். பக்கவாத நோயாளிகளுக்கு அக, புற சிகிச்சைகளோடு உணவு முறைகளிலும் கவனம் செலுத்தினால் துரிதமாகக் குணமடைய வாய்ப்புள்ளது.
பொதுவாக வாதரோகம் அனைத்திற்குமே உள் மருந்துகளுடன் மேற்பூச்சு தைலங்களும் ஒத்தட முறைகளும் மேற்கொள்வது அவசியம். அவற்றோடு பத்தியமும்   மிக முக்கியம். மலச்சிக்கலை உண்டாக்காத உணவு முறை முக்கியம். சைவ உணவே சாலச் சிறந்தது.


வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவைகளைக் கலந்து பச்சடி செய்து உண்ணவேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும். அரிசி உணவைக் குறைத்து கோதுமை உட்கொள்ளலாம். புளிளை அறவே நீக்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார் வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.

 காலையில் 1 டம்ளர் பார்லித் தண்ணீர் குடிக்கலாம். இரவில் 2 பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய பாலையும், பூண்டையும் தேன் கலந்து சாப்பிடலாம். முடக்கு வாதத்திற்கென்றே இறைவன் படைத்த மூலிகை முடக்கற்றான். இதனை சூப்பாக செய்து வாரம் ஒரு முறை அருந்தி வரலாம்.


முன் சொன்னவாறு பொதுவாக வாதநோய்க்குப் புறமருந்து, அகமருந்து, உணவுப் பத்தியம் இவைகளுடன் உடற்பயிற்சியும் அவசியம். ஆதலால் கால்களுக்குப் பயிற்சி தரும் விதத்தில் மடக்கி நீட்ட முயலவேண்டும். ஆசனத்தில் திரிகோணாசனம் (முக்கோணநிலை) மிகவும் பயன்தரவல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியால் உயிர்காற்று உடலுக்கு அதிகம் கிடைப்பதால் நோய் விரைவில் குணமாகும்.



நோயாளிகளுக்குச் சிறுநீரகக் கோளாறு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உள்ளனவா எனப் பரிசோதித்து அதற்குத் தகுந்த வண்ணம் மருந்துகளைப் பிரயோகிக்க வேண்டும். மருந்துகளுடன் உடல் தேற்றி மருந்துகளையும் இணைத்தே மருத்துவம் மேற்கொள்ளவேண்டும். முடக்கு வாதத்திற்கு முதல் தரமான சிகிச்சை சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.

 இதன் தொடர்ச்சியை நாம் நாளை பாப்போம்.




Tuesday, 28 April 2015

நரம்பு தளர்ச்சிக்கு உணவு. காலை. கால் டாக்சி ஆக்குங்கள்.



தினமும் ஒரு கால் மணி நேரமாது உடற் பயிற்ச்சி  செய்ய வேண்டும். அரை மணி நேர நடை பயிற்ச்சி. மாலை வேளை. 1,2 கிலோ மீட்டர்  துரம் என்றால். காலை கால் டாக்சியாக உபயோகப்படுத்துங்கள். ஆணோ, பெண்ணோ. நடக்கும் பொழுது. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையோடு நடக்க வேண்டும். நெஞ்சை  நிமிர்த்தி எந்த அளவு நீங்கள் வேகமாக நடக்கிரீர்களோ. அந்த அளவு. உங்கள் உடலில் ரத்த  ஓட்டம் சீராகும். நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவதோடு வலு பெறும்.  Treadmill லில் நடு  ஹாலில் நடப்பவர்கள். அருகில் உள்ள கடைகள், நண்பர்கள், உறவினர்களை பார்பதற்க்கு. 2 வீலர், 4 வீலர் உபயோகிக்காமல்.   வேகமாக நடந்து செல்லலாம். அதற்காக Treadmill  தேவையே இல்லை. என்று நான் சொல்லவரவில்லை. நமது நடையின் வேகத்தை. Treadmill  பயிற்ச்சி  அதிகரிக்கும் இது நான் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை. முடிந்த அளவு நாம். வாகனத்தை பயன்படுத்துவதை குறைத்து காலை பயன்படுத்துவதை அதிகரித்தால். நமது உடல் நலன் மேம்படும். நரம்புகள் வலிமை  இழக்க. நமது மன நிலையும் ஒரு காரணம்.

 அதனால். வாரத்தில் ஒரு நாள் உங்களுக்கு பிடித்த இடத்திற்க்கு தனியாக சென்று. தனிமையிலே இனிமை காணலாம். இல்லை. பிடித்த நபர்களோடு. பிடித்த இடம் சென்றும் நீங்கள் இனிமை காணலாம்.  நகைச்சுவை, இசை. இந்த இரண்டும். ஒருவர் வாழ்வில் இல்லையென்றால். அந்த வாழ்வு நரகம்.  வாழ்க்கை என்னும் ரயில். அந்த இரண்டு தண்டவாளங்களின் மீது தான். பல கவலைகளை மறந்து, தடைகளை வென்று பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று. நகைச்சுவைக்கு என்றே. இரண்டு தொலைகாட்சிகள் தமிழில் உள்ளது. இசைக்கு என்று.  ஒரு 7,8 தொலைகாட்சிகள் இருக்கிறது. அதை தவிர. நாம் எந்த குறிப்பிட்ட பாடல், நகைச்சுவை காட்சியை பார்க்க விரும்புகிறோமோ. அதை யூ  ட்யூப்பில்  பார்க்கலாம். உங்கள் மனம். எப்பொழுது எல்லாம். கவலையில் இருக்கிறதோ. அப்பொழுது. உங்கள் மனதிற்க்கு. இசை, நகைச்சுவை என்னும் இரண்டு மருந்துகளை மறக்காமல் கொடுங்கள்.

  நரம்பு தளர்ச்சியை சரி செய்யும் உணவுகள்.


  சௌ சௌ, ஜூஸ்க்கு உபயோகபடுத்தபடும் கேரட், பீட் ரூட், ஜாதிக்காய், வாழை பூ, வாழை தண்டு,   பழங்களில்.  மாதுளை, மாம்பழம், பப்பாளி.


  மாதுளம் பழத்தின்  பூவை 300 கிராம் எடுத்து. அதை கையாலோ, மிக்சி மூலமாகவோ. சாறாக்கி. அதோடு 200 கிராம். நெய் கலந்து. அதை. தினமும் ஒரு ஸ்பூன்  சாப்பிட வேண்டும். இவ்வாறு ஒரு 48 நாட்கள் சாபிட்டு வந்தால், நரம்பு நன்கு வலுபெறும். 48 நாட்களுக்கு மேலும் சாப்பிடலாம். தப்பில்லை.

   நாளை. வாத நோய்களுக்கு உண்டான மருந்தை பாப்போம்.

Monday, 27 April 2015

நரம்பு தளர்ச்சி வர காரணம் மன தளர்ச்சியே. நரம்பு தளர்ச்சி தீர ஓஷோ சொன்ன வைத்தியம்.


இன்று நரம்பு  தளர்ச்சிக்கான  தீர்வை பார்க்க போகிறோம். முதலில் நரம்பு  தளர்ச்சி வருவதற்கான காரணங்கள்.

பல மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள்.  சரியான உடற் பயிர்ச்சி  செய்யாமல் இருந்தால். நரம்பு   தளர்ச்சி வரும். முக்கியமாக. . நாம் மனதில் சேர்த்து வெய்க்கும் கவலைகள். நம்முடைய நாடி, நரம்பு , சதை, எலும்பு, ரத்தம், புத்தி அனைத்தையும் பாதிக்கும்.

 எனது பள்ளி நண்பன் ஒருவன். நல்ல வசதியான குடும்பம். ஆனாலும். அவன் தன்னை விட உயர்ந்த இடத்தில இருப்பவர்களோடு. தன்னை ஒப்பிட்டு கொண்டே இருப்பான். அதனாலேயே. அவன் ஒருநாளும் நிம்மதியாக இருந்தது இல்லை. அவனை மாற்ற. இரண்டு, மூன்று  முறை  முயற்ச்சி  செய்து.  ம்ஹ்ம். இது தேறாது என்று தண்ணீ தெளித்து விட்டு விட்டேன். ஒருநாள் நானும் எனது நண்பர்களும் மாயாஜாலில் ஜாலியாக படம் பார்த்து விட்டு மகாபலிபுரம் வந்தோம். அங்கும் அவன் புலம்பலை ஆரம்பித்து விட்டான். என்னுடைய நண்பர்கள். ஏண்டாப்பா. இவனை நம்ப செட்ல சேர்த்து கொண்டோம் என்பதை போல். ஒருவருக்கொருவர் பார்வையாலேயே பேசி கொண்டனர்.

நான் உடனே. கார்த்திக்கை யாருன்னு நினைத்தீர்கள். [ [பெயர் மாற்றப்பட்டுள்ளது ]  சராசரி மனிசனால இந்த அளவு கவலைப்படவே முடியாது. நாடி, நரம்பு,  சதை, எலும்பு, ரத்தம், புத்தி. எல்லாத்துலையும். பண வெறி ஊறி போன ஒருத்தனால தான் இப்டி கவலைப்பட முடியும். என்று சொன்னவுடன்.  என் உடன் இருந்த 12 நண்பர்களும் கோரசாக சிரித்தார்கள். என் நண்பர்களில் ஒருவன். கார்த்திக்.  எனக்கு இப்பவே தெரிஞ்சி ஆகணும். உண்மையை சொல்லு. நீ நாலு வருசத்துக்கு மின்னாடி பாம்பேல என்ன பண்ணிண்டு இருந்த. என்று கேட்டான். ம். பாணி பூரி வித்துண்டு இருந்தான் என்று இன்னொருவன் சொன்னான். டேய். இப்ப தான். எந்திரன்  பார்த்துட்டு வரோம். இங்க என்னடா. நீங்க எல்லாரும் சேர்ந்து பாட்ஷா பார்ட் 2 எடுத்துண்டு இருக்கீங்க .

  இந்த சம்பவதிர்ற்கு பின் அவன். பிறர் முன்.  புலம்புவதை நிறுத்தி விட்டான். கொஞ்சமா? அவனை நாங்க ஒட்டினோம்.

 தனக்கு மேல் உள்ளவர்களை பார்த்து பொறாமை கொள்வது. தனக்கு கீழ் உள்ளவர்களை பார்த்து மகிழ்ச்சி கொள்வது. இரண்டுமே தவறு தான். இதை பற்றி ஓஷோ கூறுவதை கேளுங்கள்.

ஒப்பிடுதல்:

மக்கள் எப்போதும் தம்மைப் பிறருடன் ஒப்பிடுவது வழக்கம். இந்த ஒப்பீடுகளால்தான் அவர்கள் மகழ்ச்சியாகவோ, துக்கமாகவோ இருக்கிறார்கள். புகழ் பெற்ற  மகான் ஒருவரை நான் சந்தித்தேன். எனக்கும் அவருக்கும் இடையில் என்ன வேறுபாடு என்பதை அவர் சொன்னார். "துக்கப்படுகிறவர்களைப் பார்ப்பதில்தான் மகிழ்ச்சியின் மர்மமே இருக்கிறது. ஊனமானவனைப் பார்க்கும்போது, நீ ஊனமில்லாமல் இருப்பதற்காக மகிழ்வு தோன்றும். கண்ணற்றவனைப் பார்க்கும்போது, நீ அப்படி இல்லை என்பதில் மகிழ்ச்சி பிறக்கும். ஏழையைப் பார்த்தால் நாம் ஏழை இல்லை என்பதில் ஆனந்தம் தோன்றும்", என்றார் அவர்.

 மேலே உளறாமல் இருக்க, நான் அவரைக் குறுக்கிட்டுத் தடுக்க வேண்டி வந்தது.


"உங்களுக்கு ஒரு சிறிய விஷயம் புரியவில்லை. ஒப்பிட ஆரம்பித்தால் அதற்க்கு முடிவே இல்லை. பரிதாபத்திற்குரியவர்களோடு மட்டுமே ஒருவன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ள மாட்டான். தன்னை விட வலிமை படைத்தவனோடும், மதிப்பு மரியாதை கொண்டவனோடும் ஒப்பிட ஆரம்பிப்பான். அதனால், துக்கமே உண்டாகும். நீங்கள் ஆனந்த இரகசியத்தைச் சொல்லவில்லை. துக்கத்தின் இரகசியத்தையே சொல்கிறீர்கள்!" என்றேன்.


ஆனால், இப்படித்தான் காலம் காலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், வெவ்வேறு வார்த்தைகளில். ஆனால், அடிப்படை என்னவோ ஒன்றுதான். பல மத நுல்களும்  இதைத்தான் சொல்கின்றன. மக்கள் துக்கப்படுகிறவர்களைப் பார்த்து நிறைவடைகிறார்கள். தாம் அப்படித் துன்பப் படவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். இது ஒரு பக்கச் சார்புடையதாகத் தொடர்ந்து இருந்து வரக் கூடாது. பிறரோடு உங்களை ஒப்பிட ஆரம்பிக்கும்போது உங்களை விடத் தாழ்ந்தவர்களோடு மட்டுமல்லாமல்,உயர்ந்தவர்களோடும் ஒப்பிடவே தோன்றும். மிஞ்சுவது நீங்காத கவலைதான்.  ஒப்பிடுதலே சரியில்லை. நீங்கள் நீங்களேதான். வேறு யாரும் அல்ல. ஒப்பற்றவர் நீங்கள். மற்றவரும் அப்படியே. அதனால்தான், ஒப்பிடாதீர்கள்.ஒப்பிடுவது உலகத்தோடு உங்களை விலங்கு மாட்டி விடுவது. அது போட்டி பொறாமைகளை ஏற்படுத்திவிடுகிறது. அது தனியாக வருவதில்லை. துணையுடனே வருகிறது.ஒப்பிடுவதற்கு முடிவே இல்லை.ஆனால், நீங்கள் முடிந்துவிடுவீர்கள்!அதை ஏற்றுக் கொள்வது, வாழ்வின் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதாகும்.

   ஓஷோ சொன்ன இந்த ஆனந்த ரகசியத்தை நாம் வாழ்வில் பின்பற்ற ஆரம்பித்தால். நமக்கு  நரம்பு  தளர்ச்சியோ, Bp யோ வருமா.

  நமது கவலைக்கு இன்னொரு காரணம். மத்தவங்க  நம்பளை  பத்தி என்ன?நினைபாங்களோ  என்று. நமக்கு பிடித்த. சின்ன, சின்ன விசயங்களை கூட இன்பமயமாக அனுபவிக்காமல். அவற்றை. மனதிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்து விடுவது. இந்த உலகில் பலர். ஊர் என்ன சொல்லுமோ, உலகம் என்ன சொல்லுமோ என்று பயந்து, பயந்து தனக்கு பிடித்த மாதிரி வாழாமல். அடுத்தவர்களிடம் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்பதற்காக. போலி தனமாக வாழ்கிறார்கள்.



 இந்த உலகம் ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் அதில் நடிகர்கள் என்றார் ஷேக்ஸ்பியர். அவர் ஏதோ ஒரு Flow  ல  சொல்லிட்டார். அதை அப்படியே நம்ப பாலோ பண்ணனுமா என்ன.

 கையை வீசி நெஞ்சை நிமிர்த்தி. எந்த அளவு நாம் வேகமாக நடக்கிறோமோ. அந்த அளவு. உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. ஒருமுறை. எனக்கு தெரிந்த ஒருவர்.  நீ இவ்வளவு வேகமாக நடந்து வருவதை பார்த்தால். யாரோ ஒரு பத்து பேரை அடிக்க வருவதை போல் இருக்கிறது. கொஞ்சும் Casual லா நடையேன். எதற்க்கு இந்த 8,9 கிலோ மீட்டர் வேக நடை. இவ்வாறு நீ நடப்பது நன்றாக இல்லை. நான் அவரிடம் பொறுமையாக. உங்களுக்கு பிடித்த மாதிரி நடந்தால். அதனால் எனக்கு ஏதேனும் பரிசு கிடைக்க போவதில்லை. எந்த மாதிரி நான் நடந்தால் எனக்கு பிடிக்குமோ, அந்த மாதிரி தான். தெருவிலும் சரி. என் வாழ்விலும் சரி. நடப்பேன். எனது வாழ்க்கை. எனக்கு பிடித்த மாதிரி நான் வாழ வேண்டும். ஊர் உலகம் என்ன சொல்கிறது என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.

உங்களது உடல் ஆரோக்யத்தை, பிறரது உடலை,  மனத்தை காயபடுத்தாத   எந்த ஒரு விசயமும் தவறே இல்லை.


என்னுடைய நண்பன் ஒருவன். ஒருநாள். நான் அவன் வீட்டிற்க்கு எனது நண்பர்களோடு சென்று இருந்தேன். அன்று ஞாயிற்று கிழமை.  நாங்கள் அவனது ரூமிற்க்கு செல்லும் வரை. அவன் டிவியில் சோட்டா பீம். டோரீமான் என்று இரண்டு கார்ட்டூன்கள் மாறி, மாறி பார்த்து விடுமுறையை மகிழ்வாக கழித்து கொண்டிருந்தான். நாங்கள் அவனோடு பேசி கொண்டிருக்கும் பொழுது. அவனோட அம்மா. அவன் அறைக்குள் வந்தார். ஏழு கழுதை வயது ஆய்டுத்து. இன்னும் இவன் உட்கார்ந்து. ஒன்னாம் கிளாஸ்ல பார்த்துண்டு இருந்த. கார்ட்டூன்களை பார்த்துண்டு இருக்கான். நீங்க யாராவது. இன்னுமும் பொம்மை படம் பார்த்துண்டு இருக்கீங்களா என்று கேட்டார். நானும் நேரம் கிடைக்கும் பொழுது கார்ட்டூன் பாக்கற டம்மி பீசு தான் என்று மைண்ட் வாய்ஸ்ல நினைச்சேன். ஆனால் வாயை திறந்து சொல்லலை. எனது நண்பனோ. பொறுமையாக. நீ தினமும் மெகா சீரியல் பார்த்து அழுவதற்க்கு. நான் . கார்ட்டூன் பார்த்து சிரிப்பது ஒன்றும் தவறு இல்லை என்று. தன்னுடைய அம்மாவிற்க்கு. மென்மையான குரலில், மேன்மையாக பதில் சொல்ல. அவனது தாயார். மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

கார்டூனில் ஆரம்பித்து. பார்க்கில் ஊஞ்சல் ஆட வெக்கபடுவது வரை. பல பெரியவர்கள். ஊர், உலகத்திற்காக. தனக்குள் உள்ள அணைத்து ஆசைகளையும் குழி தோண்டி புதைக்கிறார்கள். குழந்தை தனத்தை கொல்கிறார்கள்.   நாம் வேலை செய்யும் அலுவலகத்தில். மாணவர்கள் என்றால். பள்ளி, கல்லூரியில். அங்கே உள்ள சட்ட, திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். அது தவறில்லை. ஆனால். உங்களுக்கு கிடைக்கும் ப்ரீ டைம்மில். உங்களுக்கு பிடித்த மாதிரி நீங்கள் வாழ்வதில் என்ன? தயக்கம். சில நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றால். காதல் காட்சிகள் உட்பட. அணைத்து காட்சிகளிலும்  விறைப்பாகவே இருப்பார்கள்.அதே போல் தான் சிலர். மனதை எப்போதும் விறைப்பாக, விழிகளை முறைப்பாக வெய்த்து உள்ளனர்.

 நீ யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ள நினைக்காதே. அவ்வாறு மாற்றி கொள்ள நினைத்தால். ஒவ்வொருவருக்காகவும். உன்னை நீ மாற்றி கொள்ள வேண்டியதாக இருக்கும்.



   கண்ணதாசன்.

எதையும்  டேக் இட் ஈசியாக எடுத்து கொள்ள பழகுங்கள். நாம் கவலைபடுவதால் நமது பிரச்சனைகள்  தீரும் என்றால் கவலைபடலாம். கவலைபடுவதால் நமது பிரச்சனைகள் தீர போவதில்லை. பின்னர் ஏன்? கவலைப்பட வேண்டும். குழப்பம், கவலை, கோபம் இந்த மூன்றும்  இல்லாத நேரங்களில் தான். நமது மனம் தெளிவாக இருக்கும். தெளிவாக இருக்கும் மனம் தான் சரியான முடிவை எடுக்கும். அதனால். முதலில் கவலையை தூர எறியுங்கள்.


 இதன் தொடர்ச்சியை நாம் நாளை பாப்போம்.










 








Sunday, 26 April 2015

கல்லீரல் [Liver] பாதிப்பு தீர இயற்க்கை மருத்துவம். அரசாங்க மருத்துவமனையின் சாதனை




 கல்லீரல் நோய் தீர இயற்க்கை மருத்துவம் பாப்போம். அதர்க்கு  முன். கல்லீரல் சுத்தமாக செயல் இழந்த. உயிர் போகும் நிலையில் இருந்த ஒரு கல்லுரி மாணவரை. ஸ்டான்லி அரசு  மருத்துவர்கள். அறுவை சிகிச்சை இல்லாமல் பிழைக்க வெய்த்து சென்ற வருடம் மார்ச் மாதம் மருத்துவ உலகில் பெரிய சாதனை படைத்து  உள்ளனர்.

  அதை  பற்றி முதலில் பாப்போம்.

  மோகன பிரசன்னா பொறியியல் கல்லூரி  மாணவர். அவருக்கு மிக இளம் வயதிலேயே. கல்லீரலில் பெரிய பிரச்சனை  வந்தது. முதலில் அவரை ஒரு பெரிய தனியார் ஹாச்பித்தரியில் சேர்த்தனர். அந்த மருத்துவமனை.  அறுவை சிகிச்சை மூலமே. இவர் பிரச்சனையை சரி செய்ய முடியும் என்றும். அதற்க்கு. அதிக பக்ஷம் வெறும் 70 லக்சம் மட்டுமே ஆகும் என்று கூறினர். ரொம்ப கம்மி இல்ல. நடுத்தர குடும்பத்து பெற்றோர்கள் என்ன? செய்வார்கள். பிரசன்னாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  அங்கே உள்ள மருத்துவர்களான  சுந்தர மூர்த்தி அய்யா, வெங்கடேஸ்வரன் அய்யா ஆகியோர். அந்த மாணவரை பரி சோதித்து  விட்டு. இவரை குனப்படுத்த அறுவை சிகிச்சையே தேவையில்லை என்று கூறினர். அதற்க்கு  பதிலாக என்ன? சிகிச்சை செய்தார்கள் தெரியுமா.

 ரத்தம்  உறைய. அதிக பக்ஷம் 13 வினாடிகள் ஆகும். பிரசன்னாவிற்கு லிவர். மிகவும் மோசமான அளவு பாதிக்கபட்டு இருப்பதால். ரத்தம்  உறைய 114 வினாடிகள் ஆனது.  ரத்தம்  உறைவதர்க்கு  தேவைப்படும் மூலபொருட்கள்  பிரசன்னாவின் உடலில் செலுத்தப்பட்டது. அதன்மூலம். அவரின் லிவர் பிரச்னையும் சரி செய்யப்பட்டது. தமிழகத்தில் முதன்  முதலில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை. மலர் மருத்துவமனையோ,  விஜயா மருத்துவமனையோ, அப்போலோவோ அல்ல. அரசாங்க மருத்துவமனை. அதை செய்தது 2009இல். 2014லிலோ. அறுவை சிகிச்சை இன்றியே. நவீன யுக்தியை பயன்படுத்தி.  உயிர் போகும் நிலையில் இருந்த ஒரு மனித உயிரை காத்து உள்ளனர்.

 பெரிய மருத்துவமனை என்றால். அதன்  தகுதி என்ன?.  எந்த மருத்துவமனை அதிகம் காசு வாங்குகிறதோ. அது பெரிய மருத்துவமனை. பெரிய ஸ்கூல் என்றால்  அதன் தகுதி. நிறைய பீஸ் வாங்கினால் அது பெரிய ஸ்கூல். மாநில அளவில், தேசிய அளவில் சாதனை படைக்கும் மாணவ, மாணவிகளை அத்தகைய பெரிய ச்கூல்கள் உருவாக்குவதில்லை. ஒவ்வொரு வருடமும் 10, 12ம்  வகுப்பில். மாநில அளவில்.   முதல் இடத்தில் வரும் மாணவ மாணவிகளில்  எவ்வளவு? பேர் அத்தகைய பெரிய ச்கூல்களில் படிக்கிறார்கள். அடிக்கடி  நியூஸ் பேப்பர் படிப்பவர்களுக்கு இது புரியும். வரும் மே  மாதம் மறக்காமல் பார்த்து சொல்லுங்கள்.

  ஒரு கடைநிலைஅரசாங்கஊழியர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் கூட கைது செய்யும் சட்டம். சில  தனியார் பள்ளிகள். LKG  அட்மிசன்க்கே  வாய் கூசாம. 2 லக்சம் donation  என்னும் பெயரில் வாங்குகிறார்களே. அவர்களை ஏன்? நமது சட்டம் கைது செய்வதில்லை. நியாயமா. அவ்ளோ பணம் வாங்கும் பள்ளி நிர்வாகிகள், கொடுக்கும் பெற்றோர்கள் ரெண்டு போரையும் தூக்கி உள்ள போடணும். எனது குடும்ப நண்பர் ஒருவர். அத்தகைய பள்ளியில் தனது மகனை சேர்த்து அதனால் படாத  பாடு பட்டார். அவரது மகன். அளவுக்கு மீறிய. அந்த பள்ளியின் கண்டிப்பால். அதிக மன அழுத்தத்திற்கு  உள்ளானான். அத்தகைய பள்ளிகளில் என்ன, என்ன மாதிரியெல்லாம். மாணவர்களை மட்டும் இல்லாமல். பெற்றோர்களையும் சேர்த்து கொடுமைபடுத்துவார்கள் என்பதற்க்கு  எனது குடும்ப நண்பர் பல விசயங்களை சொன்னார். அதில் ஒன்று. அத்தகைய பள்ளிகளின் வாட்ச் மேன். நாயை விரட்டுவதை போல். பெற்றோர்களை விரட்டுவான். நீங்க பாடம் எடுக்கற லக்சனதுக்கு லக்ச கணக்குல பணத்தை தூக்கி  கொடுக்கும் இளிச்ச வாய்களுக்கு நியாயமா கோவில் கட்டி கும்பிடனும்டா. கொக்கா மக்காஸ்.

  டாப்பிக் வேற எங்கயோ பெய்டுத்து. சரி.. இப்போ மீண்டும் கல்லீரல் சமாச்சரதிர்க்கே வருவோம்.



கரிசலாங்கண்ணி கீரை. கல்லீரல் பிரச்சனைக்கு மிக சிறந்த நிவாரணி . கல்லீரல் பிரச்சனை  உள்ளவர்கள் தினமுமே இதை உண்ணலாம்.

 இதை தவிர்த்து நன்னாரி கிழங்கும்  கல்லீரல் பிரச்சனைக்கு நல்லது. நன்னாரியை அப்டியே பழமாக, சர்பத்தாக , ஊருகாயாக. உணவில் எவ்ளவு சேர்த்து கொள்ள முடியுமோ சேர்த்து கொள்ளுங்கள்.

 மற்றும் ஆப்பிள், வால்நட்ஸ், எலுமிச்சை, மஞ்சள்,  பூண்டு போன்ற பல உணவுகள் லிவரை சுத்தபடுத்தும். அனால். முழுமையாக லிவரை க்யூர் செய்வது. கரிசலாங்கண்ணி கீரை தான். அதை போல் வேறு எதுவும் இல்லை. இதை ஆங்கில மருத்துவம் உட்பட அணைத்து மருத்துவ முறையும் ஒப்பு கொண்ட விஷயம். அதற்க்கு  அடுத்த இடத்தில இருப்பது  நன்னாரி பழம்.

  நாளை. நிரம்பு தளர்ச்சிக்கான தீர்வை பாப்போம்.









Friday, 24 April 2015

மண்ணீரல்[Spleen] னில் ஏற்படும் பாதிப்புகளுக்கு. நிரந்தர தீர்வு.



மனித உடலினுள்ளே பல உள் உறுப்புகள்  உண்டு. அவற்றில் மண்ணீரலுக்கே அதிக பொறுப்புகள் உண்டு. மன்னீரல்  நமது உடலில் காத்தல், படைத்தல், அழித்தல்  என்னும் முத்தொழிலையும் செய்கிறது.

 மூளையின்  செயல்பாடுகளை  சீராக்கி. புதிய எண்ணங்களை படைக்கிறது. ரத்தம் வழியாக பரவும் நோய்களுக்கு எதிராக. தடுப்பு சுவர் போல் இருந்து  காத்தல்  தொழிலை செய்கிறது. ரத்தத்தில் உள்ள நுண் கிருமிகளை அழிக்கிறது.  இத்தகைய மண்ணீரல் பாதிக்கப்பட்டால். நமது உடல் ஆரோக்கியம் என்ன? ஆகும்.

கால்,  வயிறு வலியில்  ஆரம்பித்து. ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை வரை. பல நோய்கள் வரும்.  மண்ணீரல் பாதிக்கபட்டவர்கள். உற்சாகம் இன்றி. சோகமாக கானபடுவார்கள்.

  ஒரு ஆன்.  அவருக்கு. இடுப்பில் பெண்களை போல் அதிக சதை இருந்தால் அதற்க்கு  உடல் கொழுப்பு மட்டும் காரணமாக இருக்காது. மண்ணீரல் பாதிப்பும் ஒரு காரணம்.

பல காரணங்கள் மண்ணீரல் பாதிக்க இருந்தாலும். மனமே முதல் காரணம்.  அதை தவிர்த்து. மது, புகை போன்ற தீய பழக்க வழக்கங்கள். ரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பு  போன்ற காரணங்களாலும் மண்ணீரல் பாதிக்கப்படும். இதற்க்கு  தீர்வு.

 சென்ற 16 அன்று. மற்ற எந்த உணவுகளிலும் இல்லாத பல சிறப்புக்கள். கேழ்வரகில் என்ன, என்னவெல்லாம் இருக்கிறது என்பதை பற்றி பார்த்தோம் அல்லவா. மண்ணீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு. கேழ்வரகு உணவு சிறந்த மருந்து. காரணம். காரணம். Methionine Acid   ரத்த  சிகபனுக்களின் உற்பத்தி, பித்த நீர் சுத்தி. இரண்டையும் செய்கிறது.  கேழ்வரகில் உள்ள அளவு Methionine  உலகில் வேறு எந்த தானியத்திலும் இல்லை. நமது உடலில் காத்தல், படைத்தல், அழித்தல்  என்னும் முத்தொழிலையும் செய்யும் மன்னீரலை. Methionine  காக்கும். அதை அதிகம் தருவது கேழ்வரகு. அதை தவிர்த்து.

 பழங்களில்- ஸ்ட்ராபரி, பப்பாளி, மாதுளை, பிளம்ஸ், அன்னாசி, ஆரஞ்ச், திராட்சை.

காய்களில்-  முளைத்த  பயிறு, புதினா, பூண்டு, வெள்ளரி, சின்ன வெங்காயம், முளை விட்ட பயிர்,  பீட்ரூட், கேரட், கீரை வகைகள். மற்றும் தேங்காய்.

 பழங்களில்  பப்பாளி, கொய்யா இரண்டும். மண்ணீரல் பிரச்சனைக்கு மிக விரைவான தீர்வு தரும்  என்பதால். மண்ணீரல் பிரச்சனை  உள்ளவர்கள். இந்த இரண்டு  பழங்களையுமே. தினமும் சேர்த்து கொள்ளுங்கள்.

  நாளை கல்லீரல் பிரச்சனைக்கு  உரிய தீர்வை பாப்போம்.


Endometriosis. உலகில் ஆறில் ஒரு பெண்ணிற்கு வரும் நோய். இதை தடுக்க தீர்க்க வழிகள்.




 Endometriosis. இதற்க்கு  எவ்வளவு பேருக்கு அர்த்தம் தெரியும். இதை தமிழில். இடமகல் கருப்பை அகப்படலம் என்று சொல்வார்கள். கருப்பை என்னும் வார்த்தை மட்டும் புரியர்து. மத்தது புரியலை என்று சொல்கிறிர்களா. இந்த பெயர் வேண்டுமானால் உங்களில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால். உலகில் ஆறு பெண்களில் ஒருவருக்கு இந்த பிரச்சனை  இருக்கிறது.  நீங்களும் அந்த ஆறில் ஒருவராக இருந்தால்? Endometriosis  பிரச்சனைக்கான அறிகுறிகள், தீர்வுகளை பாப்போம்.

 Endometriosis என்றால் என்ன? அதன்  அறிகுறிகள்.

  பெண்மணிகளுக்கு கருப்பையின் வெளியே இருக்கும் ஒரு Tissue  தான் Endometriosis. அது சற்று அப் நார்மல்லாக அதிகம் ஆகுதல், குறைதல். கருப்பையின் வெளியே உள்ள அது. உள்ளே வருதல் போன்றவைகள் நிகழ்ந்தால். அதன் அறிகுறியாக முதலில் உயிர் போகும் அளவு  இடுப்பு வலி வரும். பின்னர் வயிற்று  வலி.

 யூட்ரச்  பிரச்சனை  என்று முதலிலேயே சொல்லியிருக்கலாமே. எதற்க்கு  சுத்தி வளைச்சி. Endometriosis, இடமகல்னுலாம் சொல்லி குழப்பனும் என்று நீங்கள் நினைக்கலாம். Endometriosis  என்பது. யூட்ரச்சில் உள்ள.  Fallopian Tube, Cervix, Vaginia, Ovary போல். Endometriosis சும்  ஒரு பகுதி. அவ்வளவே.






ஆனால்?  யூட்ரஸ்சில் ஏற்ப்படும் பிரச்சனைகளுக்கு இந்த Endometriosis  தான் முக்கிய மூல  காரணம். இந்த பிரச்சனை  உள்ள ஒரு   பெண். மருத்துவரிடம் சென்று சோதனை   செய்தால். அவர். உங்களுக்கு யூட்ரஸ்சில் பிரச்சனை  என்று தான் சொல்லுவாரே ஒழிய. Endometriosis  என்று சொல்ல மாட்டார். காரணம். அவ்வாறு மருத்துவர்.   Endometriosis என்று சொன்னால். அதை கேட்கும் பெண். நமக்கு ஏதோ? புது வித நோய் வந்து இருக்கிறதோ என்று குழம்புவார். Endometriosis னா  என்னனு. டாக்டர்ரிடம். சம்பந்தபட்ட பெண் கேள்வி கேட்பார். அவர் விளாவரியாக. அந்த பெண்ணிற்க்கு  புரியும்படி விளக்க வேண்டியதாக இருக்கும். அதனால். வெறும்ன  உங்களுக்கு யூட்ரச்  பிரச்சனை  என்று மருத்துவர்   சொல்லி விடுவார்.

  உங்களுக்கு அடிக்கடி. முதலில் இடுப்பு வலி வந்து. அடுத்து வயிறு  வலி  வந்தால். உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்து. உங்களுக்கு வெறும் சாதாரண வலி தான் என்று மருத்துவர் சொன்னால் சந்தோசம். அவ்வாறு இல்லாமல். உங்களுக்கு யூட்ரச்  பிரச்சனை  என்று மருத்துவர் சொன்னால். Endometrirosis மூலம்  வரும் பிரச்சனையா என்று மருத்துவரிடம் கேளுங்கள். அவர் சில நொடிகள் உங்களை ஆச்சர்யமாக பார்ப்பார்.

  இதை முற்ற விட்டால்.  மிக ஆபத்து. காரணம். முற்ற விட்டால். புற்று நோய் வரும்.

   So. Prevention Is Better Than  Cure. வரும் முன்னே காப்பது சிறந்து.


 எனக்கு தெரிந்து. இந்த பிரச்சனை ஆங்கில மருத்துவத்தின் மூலம்   முழுமையாக தீர்க்க முடியாது.

 இதற்க்கு  என்றே உள்ள சில பெயின்  கில்லர் மாத்திரைகள் வலியை  கட்டுபடுத்தும். அனால் Endometriosis  பிரச்சனைக்கு ஒரு எண்டு. அதன்மூலம்  கிடைக்காது. இதர்க்கு ஆங்கில மருத்துவம் தரும் ஒரே ஒரு தீர்வு. யூட்ரஸ்  உறுப்பையே  அறுவை சிகிச்சை செய்து வெட்டி விடுவது தான்.

  எனக்கு தெரிந்த ஒரு  அம்மையார். மிகவும் முத்திய  நிலையில் மருத்துவரிடம் பரிசோதனை செய்தார். அந்த அம்மாவிற்க்கு  Endometriosis  இருப்பது  உறுதி செய்யப்பட்டது. நல்லவேளை. அவருக்கு cancer  இல்லை. ஆனால். அந்த அம்மாவின் உயிரை காப்பாற்ற. கருப்பை. அறுவை சிகிச்சையின் மூலம்  வெட்டி அகற்றப்பட்டது.  அதன் மூலம். 35 வயதிலேயே 75 வயது போல் அவரின் உடல் பலவீனம் அடைந்தது.

  இந்த Endometriosis நோய்க்கான இயற்க்கை நிவாரணங்களை பாப்போம்.

   Folic  Acid அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். பச்சை காய் கறிகளில் இந்த போலிக் ஆசிட் இருக்கும். குறிப்பாக கீரையில் அதிக அளவில்.


விட்டமின்  C, D அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

 தேனில் ஊற  வெய்த்த. நெல்லிக்கனி ஒன்று, இரண்டு காலையில்  வெறும் வயிற்றில் சாப்பிடுவது. இதற்க்கு மிக சிறந்த மருத்துவம் ஆகும். தேனில் இன்று நிறைய கலப்பட வகைகள் இருப்பது  வேதனையான விஷயம். காதி என்றால் நம்பி வாங்கலாம். அணைத்து காதி கிளைகளிலும்   தேனில் ஊர வெய்த்த நெல்லிக்கனியை கண்ணாடி குடுவைகளில் போட்டு விற்ப்பார்கள்.

 முள்ளங்கியை வேக வெய்த்து அதன்  நீரை தினமும் அருந்தி வந்தால். Endometriosis சில் உள்ள அணைத்து குறைபாடுகளையும் இது சரி செய்து விடும். கருப்பை பிரச்சனைக்கு. நமது நாட்டு சித்தர்கள் பரிந்துரைத்த மிக சிறந்த தீர்வு. சீனாவில் பெண்கள். [அந்த அரசின் லூசு தனமான சட்டங்களால் இன்று பெண்களே அந்த நாட்டில் ஒரு அறிய வகை உயிரினம்] ஆனால் காலம் காலமாக. அங்கு பெண்மணிகள் Endometriosis  மூலம்  வரும் பிரச்சனைகளுக்கு முள்ளங்கி மூலம்  தீர்வை கண்டனர். சீனர்களின் பிரதான உணவுகளில் முள்ளங்கியும் ஒன்று.

 Endometriosis  பிரச்சனை  வந்தால் தான். தேனில் ஊர வெய்த்த நெல்லிகாயும், முள்ளங்கியும் உன்ன வேண்டும் என்று இல்லை. பல மருத்துவ, மகத்துவ குணங்கள். தேன், நெல்லிக்காய், முள்ளங்கியில் அடங்கியுள்ளது. இதை தினமும் உண்டால்.  Endometriosis  பிரச்சனை வரவே வராது.  தினமும் இவற்றை உண்ணுங்கள் ஆரோக்யமாக வாழுங்கள்.  Endometriosis  பிரச்சனையை. ரொம்ப முத்த விட்டால். கருப்பையை அறுப்பதை  தவிர வேறு வழி  இல்லை.

 நாளை. உங்கள் அனைவர் வீட்டிலும் என்ன? சமையல். முள்ளங்கி சாம்பாரா.

  நாளை மண்ணீரல் பிரச்சனைக்கு உரிய தீர்வை பாப்போம்.