siddhas

Wednesday, 15 April 2015

எலும்பு தேய்மானம். [Arthritis] க்கு தீர்வு.


இன்றைய பெண்மணிகள் 30, 35 வயதை தாண்டினாலே.  எலும்புகள் தேய ஆரம்பித்து விடுகிறது. எலும்பு தேய்மானம் இப்பொழுது ஆண்களிடையேயும் அதிகரித்து வருகிறது.   இன்றைய உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவையே அதற்க்கு   காரணம்.  கால்சியம் சக்துக்கள்  எந்த, எந்த உணவுகளில் அதிகம் இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். கீரை வகைகள், பால், கம்பு, சோளம் போன்ற தானிய வகைகள்,பப்பாளி  பழம், முள்ளங்கி போன்றவை  அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். தினமும் வெள்ளை மலை பூண்டை. ஒரு 30 இல் இருந்து 50 கிராம். பாலில் போட்டு. சுண்ட காய்த்து  குடித்தால். எலும்புகள் எந்த வயதிலும். அதன்  வலிமையை இழக்காது.  கண் கெட்டபின்  சூரிய நமஸ்காரம் என்பது போல் அல்லாமல். இதை  இன்றிலிருந்தே செய்யுங்கள். எலும்பு தேய்மானம் அடைந்தாலும். நீங்கள். அதற்கு  தகுந்த உணவுகளை எடுத்து கொண்டு. தேய்ந்த  எலும்புகளை  Replace  செய்வதற்கு  என்றே பிரத்யேகமாக சில யோகாசனங்கள் இருக்கிறது. ஒரு நல்ல யோகா  ஆசிரியரிடம். அவற்றை கற்று கொண்டால். பிரச்சனை  இல்லை.

 ஒரு நல்ல பைக், கார்  நாம் வாங்கி. அதை  உபயோகப்படுத்தாமலேயே  இருந்தால் என்ன ஆகும். மனித உடலும் ஒரு வண்டி  தான். தனக்கு தானே பெட்ரோல், டிசல் போட்டு. தன்னை தானே சர்வீஸ் செய்து கொள்ளும் எந்திரம்  மனித எந்திரம். வண்டியை நாம் ஓட்டும் பொழுது மட்டும் தான். நாம் அதற்கு பெட்ரோல், டிசல் அல்லது எரிவாயு என்று ஏதேனும் ஒரு தீனி கொடுப்போம். ஆனால்? மனித எந்திரம். வேலை செய்தாலும், எந்த வேலையும் செய்யாமல் புடிச்சி வெய்த்த  பிள்ளையார் மாதிரி 24 மணி நேரமும் ஒரே இடத்தில உட்கார்ந்து இருந்தாலும்.சாம்பார், ரசம், தயிர் என்று முன்று ரவுண்டு  புல் மீல்ஸ் சாபிட்டால் ஆரோக்கியம் என்ன ஆகும். நிங்கள் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால்  அதற்க்கு  தகுந்த வேலையை உடலுக்கு  கொடுக்காமல் விட்டால். அந்த உணவுகள் செரிக்கப்படாமல் கெட்ட  கொழுப்பாக மாறும். அதன்  மூலம். நமது உடலில் உள்ள திசுக்களும், எலும்புகளும் பலவீனமாக ஆகும். தினமும் யோகா அல்லது உடற் பயிற்ச்சி . முடிந்தால் இரண்டையுமே செய்யுங்கள். ஆரோக்யமாக வாழுங்கள்.  

 ஊனினை  உருக்கி உள்  ஒளி  பெருக்கி.

  மாணிக்க வாசகர்.

  இன்று நாம் உண்ணும் உணவு அனைத்துமே ரசாயனங்களின் கலவை. ஒரு சதவீதம் கூட  ரசாயன கலவை கலக்காத சக்த்தான  உணவு இருக்கிறதா. இருக்கிறது. அதை  நாம் நாளை பார்ப்போம் .

Monday, 13 April 2015

இனிப்பான மருந்து. நீர் கடுப்பு நோய்யை குணப்படுத்தும். சக்கரைக்கு மாற்று.


சக்கரைக்கு மாற்றாக. வெறும் சுவை மட்டும் அல்லாது. ஆரோக்கியத்தையும் தரும் ஒன்று.      நீர் கடுப்பு நோய்க்கு சிறந்த மருந்தாகும் ஒன்று. இவ்வளவு மருத்துவ குணங்கள் இருந்தும். தித்திக்கும் சுவையோடு உள்ள மருந்து. இந்த ஒன்றே ஒன்று தான். அது என்ன?. அது தான் பனங்கர்கண்டு. இதில் அடங்கியுள்ள சக்த்து பட்டியலை பார்ப்போம். 







Nitrogen (N)
202
NA
NA
NA
10
0
Phosphorus (P)
79
7
4
2
3
0
Potassium  (K)
1,030
1
52
234
65
2.5
Calcium (Ca)
8
1.5
6
67
24
6
Magnesium (Mg)
29
1
2
14
7
1
Sodium (Na)
45
1
4
9
2
1
Chloride (Cl)
470
NA
NA
NA
16
10
Sulfur (S)
26
NA
NA
NA
13
2
Boron (B)
0.6
NA
NA
NA
0
Zinc (Zn)
2
0.2
0.2
4.2
.2
0.1
Manganese (Mn)
0.1
0.1
0.1
3.3
.2
0
Iron (Fe)
2
1
0.4
1.2
1.26
0.1
Copper (Cu)
0.23
0.1
0
0.1
0
0
Thiamine
0.41
0
0
0
0
0
Vitamin C
23.4
0.5
0.5
0
0
0




 பனங்கர்கண்டு.  உங்கள் வீட்டில் சளிக்காக  கஷாயம் போடும் பொழுது.  வால் மிளகு, கண்டம் திப்பிலி, அதி மதுரம், சித்ரத்தை போன்ற மூலிகை பொருட்களோடு. பனங்கர்கண்டையும் போடுவார்கள். இது பனை மரத்திலிருந்து கிடைப்பதாலும். கர்க்கண்டை போன்ற தோற்றம் மற்றும் சுவையில் இருப்பதாலும். இதற்க்கு பனங்கர்கண்டு என்று பெயர் வந்தது. இந்த பனங்கர்கன்டை மிக்ஸீயில் பொடித்து சக்கரைக்கு மாற்றாக பயன் படுத்தலாம். ஒரு கிலோ சக்கரையின் விலை 36 என்றால். இது ஒரு கிலோ 80 முதல்   400 ரூபாய் வரை.  ஆனால்? 100 கிராம் சுகர் ஃப்ரீ 90 ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு. இதை ஒரு கிலோ 80 ரூபாய் கொடுத்து வாங்குவது எவ்வளவோ மேல். 2 ஸ்பூந் சக்கரையில் கிடைக்கும் இனிப்பு. ஒரு ஸ்பூந் பனங்கர்க்கன்டில் கிடைக்கும்.  மேலும் இதில் Rich Iron, Cacium சக்த்துக்கள் அடங்கி உள்ளது. 

நீர் கடுப்பு. [ Urinary Infection]  நோய்க்கு சிறந்த மருந்து. 


 இதை சக்கரை வியாதி உள்ளவர்கள் தான் பயன் படுத்த வேண்டுமா.

 இல்லை. சக்கரைக்கு மாற்று தான் இது. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உடலில் கெட்ட சக்கரையின் அளவு ஏறவே ஏறாது. எங்கள் வீட்டில். நாங்கள் அனைவருமே பனங்கர்கண்டிர்க்கு மாறிட்டோம். 

 நாளை தமிழ் புத்தாண்டிற்க்கு வாங்க வேண்டிய ஐட்டங்களில் பனங்கர்கண்டும் இருக்கும் என்று நினைக்கிறேன். 

 அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 

 நாளைய பதிவு-  பொதுவாக இன்று பல பெண்மணிகளுக்கு 30 வயதை தாண்டினால் மூட்டு வலி வருகிறது. அதற்க்கான தீர்வு. 


Sunday, 12 April 2015

தைராய்ட் நோய் போக்கும் இயற்க்கை மருத்துவம்


தைராய்ட்  என்பது நாம் அனைவரும் பயப்படும் அளவு ஒரு பெரிய வியாதி அல்ல. தைராய்ட். நமது முன் கழுத்தில் சுரக்கும் ஒரு சுரப்பி. அந்த சுரப்பி அதிகரித்தாலோ,  அல்லது குறைந்தாலோ அது நோய். உலகம் முழுவதும் 200 மில்லியன். அதாவது. 20 கோடி மக்கள். இந்த தைராய்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆண்களை விட பெண்களே இந்த நோய்யால் அதிகம் பாதிக்க்படுகின்றனர்.  இதற்க்கு ஆயுர் வேதம், மற்றும் சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கிறதா. இருக்கிறது. 

 புதிது, புதிதாக வரும் பல வியாதிகளுக்கு. இன்றைய ஆங்கில மருத்துவ உலகம். புதிது, புதிதாக மருந்துகள் கண்டு பிடித்து கொண்டு இருக்கிறது. ஆனால். சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இயற்க்கை மருத்துவ முறைகளில் இதுவரை வந்த நோய்கள் வர போகின்ற நோய்கள் அனைத்திற்குமே தீர்வு இருக்கிறது. 


 தைராய்ட் மூலம். உடல் எடை அதிகரித்தல், குறைதல், ரத்த போக்கு,  உடல் வலி. மற்றும் மன சிக்கல் முதல் மல சிக்கல் வரை பல வியாதிகள் வரும். 

தைராய்ட் நோய்க்கு தீர்வாக. தைராக்சின், எல்ட்டிராக்சின்,நார்ம், நியோ மர்கசொல்  போன்ற மருந்துகளை ஆங்கில மருத்துவம் சிபாரிசு செய்கிறது. ஆனால் இவையாவும் அந்த நோய்களுக்கான சப்ளிமன்ட்டாக இருக்கிறதே ஒழிய. தீர்வாக இல்லை. ஆங்கில மருந்துகளால். தைராய்ட் சுரப்பிகளில் உள்ள குறைபாடுகளை ஸீர் செய்ய முடியாது. ஆனால் இயற்க்கை மருத்துவத்தால் முடியும் என்று சொல்கிறார்கள். சித்த வைத்தியர் ஸீ சுப்ரமணியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவர். மொஹமத் சலீம் போன்றவர்கள். 

 ஆயுர்வேத மருத்துவத்திற்கும், சித்த மருத்துவத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?. தண்ணீர்க்கும், நீர்க்கும் உள்ள வேறுபாடு. புரியலை?. ஒரே பொருள். இரண்டு வார்த்தைகள். மஞ்சள், வேப்பிலை, துளசி, வில்வம். போன்ற பல. சித்த மற்றும் ஆயுர்வேதம் இரண்டிலுமே இருக்கிறது. இரண்டிற்க்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடுகள் இல்லை. 

 தைராய்ட் நோய்க்கு இயற்க்கை வைத்தியம் சொல்லும் தீர்வுகள்.

 துதுவளை சாரை தினமும் காலையில் குடிப்பதும், மந்தாரை மலர் மொட்டும். சிறந்த தீர்வு. 


மந்தாரை என்றால் என்ன. வாழை இலைக்கு மாற்றாக. தையல் இலை என்று ஒன்று வெய்ப்பார்களே. அதுவா. என்று நீங்கள் ஷாக் ஆக வேண்டாம். ஈக்குளலால் தெய்த்த மந்தாரை இலையை தான் சாப்பிட முடியாது. 

 மந்தாரை இலையில். குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள், ஆல்கலாய்டுகள், ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின் போன்ற உடலுக்கு நன்மை விளைவிக்கும் பல வேதி பொருட்கள் உள்ளன. இதன் வேர் முதல் மலர், இலை, பட்டை என ஒவ்வொன்றும் பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும். 

இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொட்டுகளை  சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால். தைராய்ட் மட்டும் அல்லாமல் அல்சர்,  ரத்த போக்கு போன்ற பல நோய்களை குணப்படுத்தும். 


 நாளை. சக்கரைக்கு மாற்று என்ன. கண்டிப்பா சுகர் ஃப்ரீ கிடையாது. அது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல். நாட்டு சக்கரை. அதுல சக்கரையில் கிடைக்கும் இனிப்பு கிடைக்காது. 

 நாவிற்க்கு மட்டும் இல்லாமல். உடல் ஆரோக்கியத்திற்கும் இனிப்பாக இருக்கும் ஒன்று.  சக்கரையை விட அதிக இனிப்பை மட்டும் இல்லாது. அதிக சக்த்துக்களையும் உடையது. அது என்ன? 

 நாளை பார்ப்போம். 



Saturday, 11 April 2015

அனைத்து வித தலை வலிகளையும் போக்க வழிகள் மற்றும் யோகா.




ஒருமுறை அக்பர் பீர்பாலிடம் கேட்டாராம். நமது நாட்டில் எந்த தொழில் செய்கிறவர்கள் அதிகம் என்று. பீர்பால் சற்றும் யோசிக்காமல். நமது நாட்டில் மருத்துவர்களே அதிகம் என்று சொன்னார். இந்த பதிலை அக்பர் எதிர்பார்க்கவில்லை. அக்பர் சற்று குரலை உயர்த்தி. பீர் பாலிடம். மருத்துவர் ஆவது என்ன சாதாரண விசயமா. நமது நாட்டில் விவசாயிகள் தான் அதிகம் என்பது எனக்கும் தெரியும். தெரிந்தால் பதில் சொல்லவும். இல்லையேல் பேசாமல் இருக்கவும். பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் ஒய் என்று அக்பர் பீர்பாலிடம் சொன்னார். பீர்பால். எனக்கு கொஞ்சும் அவகாசம் கொடுங்கள். நான் இதை புள்ளி விவரத்தோடு நிரூபித்து காட்டுகிறேன் என்றார். அக்பரும் அதை ஏற்று கொண்டார். சிறிது நாட்களில் அக்பரே அதை மறந்து விட்டார். 

ஒரு நாள். பீர்பால் கடும் வெய்யில் காலத்தில். உடலில் தடியான ஒரு போர்வையை போர்த்தி கொண்டு. குளிரில் நடுங்கியவாறே அரண்மனைக்கு வந்தார். இந்த வெய்யிலிலும் இவருக்கு உடல் இவ்வாறு குளிர்கிறது என்றால். அப்பொழுது உடல்நிலை எவ்வளவு மோசமாக இருக்க வேண்டும் என்று அக்பர் கவலைப்பட. அப்பொழுது. அவருக்கு எதனால் உடல்நிலை சரியில்லை என்பதை அறியாமலேயே பிரதான மந்திரி முதல், காவலாளி, அங்கே கூட்டி பெருக்கும் ஆள் வரை. அவர் உடல் நலமடைய ஆளுக்கு ஒரு யோசனை கூறினார்கள். இறுதியாக அக்பரும் அவர் தனக்கு தெரிந்த ஒரு கை வைத்தியத்தை சொல்ல. பீர்பால் சிரித்தவாறே. இந்த அரண்மனையில் மட்டும். உங்களையும் சேர்த்து. 149 வது மருத்துவர் என்று சொல்லியவாறே தனது போர்வையை விலக்கி சிரித்தார். அக்பரும். இவர் எதனால் இந்த நாடகம் ஆடினார் என்பதை புரிந்து ஒரு சிரிப்பு சிரித்தார். 

 பீர்பால், தெனாலி ராமன், மரியாதை ராமன், அப்பாஜி, முல்லா, ஈஸாப் கதைகள் என அனைத்திலுமே உண்மையோடு கற்பனையும் நிறைய கலந்து விட்டது. இது உண்மையிலேயே நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால். இந்த கதையில்  பீர்பால் கூறும் கருத்தை நாம் இன்னொரு கோணத்திலும் சிந்தித்து பார்க்கலாம். அன்று உணவே மருந்து, மருந்தே உணவு என்று இருந்தது. எந்த, எந்த வியாதிக்கு. எந்த, எந்த உணவு மருந்து என்பதை அறிந்த மருத்துவர்களாகவும் அன்று விவசாயிகள் இருந்தனர். அனைத்து மூலிகைகளையும் பயிரிடுவதும் விவசாயிகள் தானே. உலகின் முதல் மருத்துவர்கள் விவசாயிகள். 

 ஒற்றை தலைவலிக்கு bp, சுகர் போல் எளிதாக மருந்து சொல்லி விட முடியாது. ஒற்றை தலைவலி என்று இல்லை. தலை வலி வர பல காரணங்கள் இருக்கிறது. 

 தலை வலி என்பதே ஒரு பெரும் அவஸ்த்தை தான். தலை வலியும், திருகு வலியும் அவர், அவர்க்கு வந்தால் தான் தெரியும் என்று சொல்வார்கள். அதிலும் இந்த ஒற்றை தலை வலி இருக்கிறதே. மிக கொடிது

 நீங்கள் தலைவலிக்கு அமிர்தாஞ்சன் போன்ற ஆயுர் வேத மூலிகைகளால் செய்யப்படும் பாம் உபயோகித்தால் கூட பிரச்சனை இல்லை. உங்களுக்கு தலை வலி எதனால் வருகிறது. கவலையாலா, சைனஸ் போன்ற நோய்களாலா, அதிக சத்தத்தினாலா. மண்டை நிரம்புகளில் ஏதேனும் பிரச்சனையாலா. அடிக்கடி தலைவலியால் அவதிப்டுபவர்கள் எதனால் தலைவலி வருகிறது என்று தெரியாமலேயே. அதை நீங்கள் பரிசோதிக்காமலேயே மெடிக்கல் ஷாப்பில் தலை வலி போக ஏதாவது ஒரு மாத்திரை, ஆயுர்வேத, சித்த மருத்துவ தைலமாகவே இருக்கட்டும். உங்கள் தலை வலிக்கான காரணத்தை கண்டு பிடிக்காமல். நீங்கள் அதற்க்கு என்று பொத்தம் பொதுவாக ஒரு மருந்தை வாங்கி உபயோகித்தால். பின்னால அதுவே உங்களுக்கு பெரிய தலை வலியா பெய்டும். காரணம். தலை வலியில் பல வகைகள் இருக்கிறது. 

 அதனால். அடிக்கடி உங்களுக்கு தலை வலி வந்தால். ஒரு மாஸ்டர் செக் அப் செய்து கொண்டு. எதனால் தலைவலி வருகிறது என்பதற்கான காரணத்தை கண்டறிந்து. பின்னர் அதற்க்கு என்று பிரத்யேக சிகிச்சை எடுத்து கொள்வது நலம். 

 உங்களுக்கு அதிக கவலையால் தலை வலியோ, ஒற்றை தலை வலியோ வந்தால். அது குணம் அடைவது உங்கள் கையில் தான் இருக்கிறது. உங்களுக்கு எந்த இசையை, யாருடைய இசையை பிடிக்குமோ அவர்களுடைய இசையை யூ ட்யூப்பில் கேட்கலாம். நீங்கள் ப்ரௌஸிங்க் ஸென்டர் போய் கேட்பதாக இருந்தாலும். ஒரு மணி நேரத்திற்கு 15 இல் இருந்து 20 ரூபாய் தான் ஆகும். அதை தவிர இசைக்கு என்றே தமிழில் மட்டும் ஏழு, எட்டு தொலை காட்சிகள். 24 மணி நேரமும் சிரிக்க வெய்க்க என்று இரண்டு தொலை காட்சிகள். so dont worry. be happy. 

 இஞ்சி சாரில் தேன் கலந்து சாப்பிடுதல், சுக்கு காஃபீ மற்றும் கஷாயம். எலுமிச்சை பழத்தை இரு துண்டுகளாக வெட்டி. அதை அப்ப, அப்ப முகர்ந்து பார்த்தல். அனைத்து வகை தலை வலிகளுக்கும் நிவாரணம் பெற சிறந்த வழி. மூளைக்கும் அதில் உள்ள நிரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும். அதனால் தலைவலியால் அதிகம் அவதிப்டுபவர்கள் ரூம் ஸ்ப்ரே கூட லெமன் ரூம் ஸ்ப்ரே அடிப்பது நல்லது. 



 ஹலாசனம் என்கிற ஒருவகை யோகா.அது மூளை, மூளை நிரம்புகள், பலவித மன பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் ஒரு அற்புதமான யோகா. அனைத்து தலை வலிகளுக்கும் இது சிறந்தது. மூளைக்கு நல்ல fresh blood இதன் மூலம் கிடைக்கும். நினைவாற்றலை பண் மடங்கு அதிகரிக்கும். மூளையில் உள்ள பிட்யூட்ரி சுரப்பியை தூண்டி விடும் யோகா இது. திக்கு வாய் உள்ள சிலர் கூட இந்த யோகா செய்து. அதனால் பலன் பெற்றுள்ளனர். ஏதேனும் ஒரு நல்ல யோகா ஆசிரியரிடம் முறையான பயிற்ச்சி பெற்றே இதை செய்ய வேண்டும். 

 நாளை. தைராய்ட் வியாதியும் அதற்கான நிவாரணமும் பார்ப்போம். 

சாதனை தமிழன் தங்க மகன்



17/11/2013 அன்று இவர் செய்த சாதனை. இந்திய வரலாற்றில். பொன் எழுத்துக்களாலோ, வைர எழுத்துக்களாலோ பொறிக்க பட வேண்டியது அல்ல. உலகில் உள்ள ரத்தினங்களிலேயே விலை உயர்ந்த மாணிக்கம். ம்ஹ்ம். அதுக்கும் மேல. ஏதாவது உயர்ந்த ரத்தினம் உலகில் இருந்தால் கூட. அது. இவர் செய்த சாதனைக்கு ஈடு ஆக முடியாது. இவர் யார்? இவர் செய்த சாதனை தான் என்ன? 

தமிழகத்தை ஒப்பிடும் பொழுது. ஹரியானா, பஞ்சாப், ஜார்க்கன்ட் போன்ற மாநிலங்களில். இயற்கையாகவே கட்டான உடல் அமைப்புடன் இருப்பவர்கள் அதிகம். அவ்வாறு இருக்க. தமிழை தாய் மொழியாக கொண்ட. சென்னை தாம்பரத்தை பூர்விகமாக கொண்ட ராஜேந்திரன் மணி அவர்கள். 17/11/2013 அன்று.  ஹங்கேரி மண்ணில் உலக ஆண் அழகன் பட்டம் பெற்றார். 



 ஐஸ்வர்யா ராய்.  உலக அழகி. அது எல்லாருக்கும் தெரியும். ஆனால்? இவர். இந்தியாவை சேர்ந்த முதல் ஆண் அழகன். [Mister Universe] இது எவ்வளவு? தமிழர்களுக்கு தெரியும். 

 அபினவ் பிந்த்ரா. 2008 இல் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று. தனி நபர் பிரிவில். இந்தியாவிற்கு முதல் உலக கோப்பை தங்கம் வாங்கி கொடுத்தாரே. அதை விட பெரிய சாதனை ராஜேந்திரன் அவர்கள் செய்தது. குடும்ப பின்னணி இல்லை, செல்வ வளம் இல்லை, அரசாங்கத்தின் சப்போர்ட் இல்லை, நல்ல ஸ்பான்சர் இல்லை. இவ்வளவு இல்லைகள், தொல்லைகள் இருந்தும். எல்லையில்லா இவரது உடல் ஆற்றலோடு மன ஆற்றலும் சேர்ந்து. அதன் பயனாக இவருக்கு கிடைத்த மணி மகுடமே. உலக ஆண் அழகன் பட்டம். 

 2008இல் ஒலிம்பிக் தங்கம் வென்ற அபினவ்வால். 2012இல் வெண்கலம் கூட வாங்க முடியவில்லை. காரணம். 2012இல் அபினவ்வை விட திறமையான பலர் களத்தில் இறங்கினர். 

 குறவர் இன மக்களுக்கு குறி பார்த்து தாக்குதல் என்பது அவர்கள் மரபணுவிலேயே ஊரி போன விசயம். இந்திய அளவில் உள்ள குறவர் இன மக்களை ஒன்று திரட்டி. அவர்களுக்கு என்றே. துப்பாக்கி சுடும் போட்டியை நடத்தி. அதில் முதல் இடம் வரும் ஆண் மற்றும் பெண்ணை உலக கோப்பை போட்டிக்கு. நமது அரசாங்கம். நாம் குடியரசு நாடாக ஆன 1950இல் இருந்து. இன்று வரை தொடர்ந்து தேர்வு செய்து இருந்தால். சுடுதலில் மட்டும் இந்தியா குறைந்த பக்சம் ஒரு 30 தங்கங்கள் ஒலிம்பிக்கில் வென்று இருக்கும். எனக்கு 12 வருடங்களுக்கு முன். 14 வயதில் வந்த சிந்தனை. ஏன்? நமது நாட்டில் எந்த அரசியல் வாதிக்கும், விளையாட்டு துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கும் வந்து தொலைக்கவில்லை.

 குற்றாலீஸ்வரன் முதல் சாந்தி வரை பல திறமையான வீர, வீராங்கனைகளின் திறமைகள் அங்கீகரிக்கப்படாததால். பல வெள்ளிகளை, தங்கங்களை  நமது நாடு உலக கோப்பையில் இழந்து உள்ளது. இவர்கள். பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை, ஆதிக்க ஜாதியில் பிறக்கவில்லை. அதை தவிர இவர்கள் வேறு என்ன? தவறு செய்தார்கள். 

  ப்ரூஸ்லீ வாழ்ந்த பொழுது. அவரை விட சிறந்த வீரர்கள் கூட இருந்தார்களாம். ஆனால் ப்ரூஸ்லீ என்னும் பெயர் மட்டும். இன்றும் உலக வரலாற்றில் நிலைத்து இருக்க ஒரே காரணம். அவர் ஸிநிமாவில் நடித்ததால் தான். ராஜேந்திரன் மணி உலக ஆண் அழகன் பட்டம் பெற்றதை பற்றி. பிரபல தமிழ், ஆங்கில, ஹிந்தி பத்திரிகைகளில் செய்திகள் வந்தும். ND டீவீ போன்ற பிரபல செய்தி தொலைக்காட்சிகள். இவரது இந்த சாதனையை ஒளி பரப்பியும். அதை படித்த, பார்த்த பலருக்கு அது மறந்து விட்டது. VPM [Very Poor Memory] எனப்படும் வியாதி இந்தியர்களின். குறிப்பாக தமிழர்களின் தேசிய வியாதி. விக்ரம் நடிக்க வராமல். உண்மையிலேயே ஆண் அழகன் பட்டம் வென்று இருந்தால்?


Friday, 10 April 2015

அன்னியர் நமது மனங்களில் விதைத்த நச்சு விதை. அல்சர் நோய்க்கு தீர்வு



அல்சர். [குடர் புண்] வர காரணம். நமது பாரம்பரிய Cultural ஃபுட்டை மறந்து. கண்டதை தின்பதாலேயே வருகிறது. நேரம் கெட்ட நேரத்திற்கு சாப்பிடுதல். சாப்பிடாமலேயே இருத்தல். என்று பல காரணங்கள். 

 இன்று ஒரு முட்டாள் கூட்டம். எது, எதில் எல்லாம் caarbohydrate சக்த்துக்கள் இருக்கிறதோ. அந்த உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி. தனது ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வது மட்டும் அல்லாமல். அதை ஊர் முழுக்க தன்டோரா போட்டு. பிறரையும் சோனாங்கிகள் ஆக்குகிறார்கள் இந்த கோணாங்கிகள். Carbohydrate  உணவுகள் எதுவுமே வேண்டாம்னா. பின்னர் எவ்வாறு  Energy கிடைக்கும். 



 மஞ்சள், வேப்பிலையே விளையாத அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் அதை விற்பதற்கு காப்புரிமை வாங்கி விட்டனர். பசு மாட்டின் மூத்திரத்தை கூட அவர்கள் விட்டு வெய்க்கவில்லை. மேலும் வெள்ளையர்கள். அவர்கள் நாட்டு பொருட்களை இங்கு சந்தை படுத்த என்னவெல்லாம் தகடு, தத்தம் செய்ய முடியுமோ செய்கிறார்கள். அத்தகைய தகடு, தத்தங்களில் ஒன்று தான். நமது நாட்டு சக்த்தான உணவுகள் மீது தவறான நச்சு எண்ணங்களை. நமது நாட்டை சேர்ந்தவர்களை கொண்டே நமது மனங்களில்  விதைக்கிறார்கள். 

 வெள்ளையன். அவன் நாட்டு சாதாரண மர என்னையான   ஆலிவ் ஆயிலை இங்கு அமோகமாக விற்ப்பனை செய்ய வேண்டும் என்னும் திட்டத்தில் போட்ட ஸ்கெச் தான். வேர்கடலை. அதன் மூலம் கிடைக்கும் கடல் எண்னை. தேங்காய். அவற்றின் மூலம் கிடைக்கும் தேங்காய் எண்னை. இவற்றின் மீது நமக்கு ஒரு தவறான பார்வையை ஏற்படுத்தியது. 



 வேர்கடலையில் என்ன, என்னவெல்லாம் சக்த்துக்கள் அடங்கி இருக்கிறது. என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால். வேர்கடலை என்று google ளில் டைப் செய்து பாருங்கள். பலர். அது பற்றி. Blog களில் அருமையான தகவல்களை கொடுத்து இருக்கிறார்கள். பாதாம், பிஸ்த்தாவை விட அதிக சக்த்துக்கள். கடலையில் இருக்கிறது. 

 பெயரில் மட்டும் ஆரோக்கியம் உடைய. ஆரோக்கிய சிந்தனை அறவே அற்ற. சொன்னாலும் புரியாத, சுயமாலும் தெரியாத ஆட்டு மந்தையை விட கேவலமான அறிவை உடைய. ஒரு முட்டாள் க்ரூப்பில் இந்த கடலை சம்பந்தமா விவாதம் செய்தேன். 

 கடலை எதனால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்று கேள்வி கேட்டால். அதற்க்கு ஒருவன் செய்யும் comment. லூஸாப்பா நீ. அசைவ உணவுகளில் இல்லாத கொழுப்பா. தயிரிலும், நெய்யிலும் இருக்கிறது. எதையுமே அளவோடு சாப்பிட்டால் என்ன? தவறு என்று கேட்டால். மீண்டும். லூஸாப்பா நீ. இது போன்ற லூசுகளோடு வாதம் செய்தால். நாமும் லூசு தான். 

 தினமும் ஒரு வாழை பழம், தயிர், நெய். இவற்றை தவறாது உண்பவர்களுக்கு அல்சர் வராது. 



 காலையில்  முட்டைகோசை நீரில் வேக வெய்த்து அதன் நீரை. வெறும் வயிற்றில்  குடிப்பது அல்சர் நோய்க்கு சிறந்த மருந்து. பலர் சமைக்கும் பொழுது செய்யும் தவறு என்னவென்றால் காயை நீரில் வேக வெய்த்து. வேக வெய்த்த அந்த நீரை கொட்டி. வெறும் சக்கையை மட்டும் சமைக்கின்றனர். காயின் சக்த்துக்கள் அனைத்தும் நாம் கொட்டும் நீரில் கலந்து வீனாய் போகும். காய்களை கழுவி தான் சமைக்க வேண்டும். அதை நீரில் வேக வெய்க்க கூடாது. அவ்வாறு வேக வெய்த்தால் அதன் நீரை குடிக்க வேண்டும். கோஸ் போன்ற பல காய்களை நீரில் வேக வெய்த்து அந்த நீரை குடிக்கலாம். ஆனால் சில காய்களை நீரில் வேக வெய்த்து அதை குடிக்க முடியாது. அது போன்ற காய்களை நீரில் வேக வெய்க்காமல் நீரில் அலம்ப மட்டும் செய்து. அதை சமைத்தால் தான். உடலுக்கு சக்த்து கிடைக்கும். 

 நாளை நாம் ஒற்றை தலைவலி எனப்படும் Migraine க்கு உரிய தீர்வுகளை பார்ப்போம். 

Thursday, 9 April 2015

ரத்த அழுத்தம் போக்கும் மூலிகையும், தியானமும். அனைவருக்கும் ஏற்றது.



இதற்க்கு முன் ஆரோக்யம் சம்பந்தமாக நீயா, நானாவில் விவாதம் நடந்த பொழுது. ஒரு பெண்மணி பேசினார். என் வீட்டு காரருக்கு சுகர் இருக்கு. ஆனால் அவர் சந்தோசமா ஒரு கிலோ பாதாம் அல்வாவ சாப்ட்டால் கூட அவரை அது ஒன்னும் பண்ணாது. [இது சிரிக்க மட்டும்] விஷம் என்று தெரிந்தே ஒருவன் பயப்படமால் சிரித்து கொண்டே சாப்பிட்டால். அவன் சாகாமல் இருப்பானா. bp என்பது சக்கரை வியாதி போல் அல்ல. தினமும் கோங்ரா சட்னியை ஆந்திரா ஸ்டைல்லில் சாப்பிட்ட பலர் bp இல்லாமலே பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார்கள். bp க்கு 90 சதவீத காரணம். நமது மனக்கவலையும், கோபமுமே. உப்பும், காரமும் 10 சதவீதமே. ஆனாலும். உணவில். அளவோடு உப்பு, காரம் சேர்த்து கொள்வது நல்லது. 

பூமராங் என்று அக்கலாதில் ஒரு வகை ஆயுதம் இருந்ததாம். அதை கொண்டு நாம் எதிரியை தாக்கினால். அது எதிரியை தாக்கி விட்டு. நமது கைக்கே மீண்டும் வரும். அதே போல். ஜெட்டி, பனியனில் ஆரம்பித்து. மூலிகை மருந்துகள் வரை. அனைத்தும் இங்கிருந்து வெளி நாடு போய். மீண்டும் நமக்கே திரும்ப வருகிறது. 

 ரத்த அழுத்தத்திற்கு நாம் அன்றாடம் உணவும்  முக்கிய உணவுகளே மருந்தாக இருக்கிறது. தினமும் வெள்ளை பூண்டும், வெள்ளை வெங்காயமும் சேர்த்து கொள்பவர்களுக்கு. bp வருவதற்கான வாய்ப்பு குறைவு. அவ்வாறு சேர்த்தும் bp வந்தால். அதற்க்கு காரணம் மன கவலை. 

  இது வெய்யில் காலம் வேறு. தினமும் வெள்ளை வெங்காயத்தை துண்டு, துண்டாக நறுக்கி. அதை கெட்டி தயிரில் போட்டு. தயிர் பச்சடி செய்து சாப்பிடுங்கள். உடல் சூடு, ரத்த அழுத்தம் இரண்டையும் குறைக்கும். வெள்ளை பூண்டை பச்சையாகவும் சாப்பிடலாம். அதை பசும் பாலில் போட்டு. சுண்ட காய்ச்சியும் சாப்பிடலாம். அதுவும் உடற் பயிற்ச்சி செய்பவர்களுக்கு. பூண்டு பால். ஒரு மிக சிறந்த ஊட்ட சக்த்து பானம். வாழை தண்டு, முள்ளங்கி ஆகியவையும் ரத்த அழுத்த்தை கட்டுப்படுத்த உதவும். நெல்லிக்காய் ரத்த அழுத்தத்திற்கு மிக, மிக சிறந்த மருந்து. இதை காலையில் மட்டும் தான் உண்ணவேண்டும். காலையில் நெல்லிக்கனி அமிர்தம். இரவில் நஞ்சு. 


 கற்பூறவல்லி என்னும் மூலிகை. நமது ரத்த அழுத்தத்தை சீராக வெய்க்கும். கற்பூறவல்லியை அப்படியே சாப்பிடலாம். தேனில் ஊர வெய்த்தும் சாப்பிடலாம். அடிக்கடி சளி தொல்லையால் அவதிப்டுபவர்களுக்கு கற்பூறவல்லி மிக சிறந்த நிவாரணி. ஒரு ஐந்து இலைகளை சாப்பிட்டால் போதும். பீட்ரூட்டும் ரத்த அழுத்தத்திற்க்கு நல்லது. ஆனால் பலருக்கு சக்கரை வியாதி வந்து. அதன் இலவச இணைப்பாக Bp வருவதால். பீட்ரூட் சரிப்பட்டு வராது. 

 மன அழுத்தத்தின் மறு வெளிப்பாடே ரத்த அழுத்தம். அதுவும். Bp அதிகம் உடையவர்களுக்கு படுத்தவுடன் தூக்கம் வராது. அதற்கான காரணம் என்ன தெரியுமா. 

 நீங்கள் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறீர்கள். மெயின் ரோட். வண்டி இறைச்சலுக்கு நடுவில் காதை கிழிக்கும் அளவு லௌட் ஸ்பீக்கர் இரைச்சல் வேறு. அந்த இடத்திலிருந்து உங்கள் வீட்டிற்கான தூரம். ஒரு மைல் என்று வெய்த்து கொள்வோம். நீங்கள் மூன்று நிமிடங்களில் அந்த இடத்திலிருந்து உங்கள் வீட்டிற்க்கு வந்து விடுகிறீர்கள். வீட்டிற்க்கு வந்தவுடன் எவ்ளவு அமைதியாக உணர்வீர்கள். நமது மனத்தை மூன்று பகுதிகளாக மனோ தத்துவ வல்லுநர்கள் பிரித்து உள்ளனர். 

 உள் மனம், வெளி மனம், ஆழ் மனம். வெளி மனம் என்பது கடல் அலை போல் ஒரே இரைச்சல். அதை குறிக்கும் விதமாக தான் அலைபாயும் மனம் என்றார்கள். உள் மனம் என்பது நடு கடல் போன்ற அமைதி. ஆழ் மனம். ஆழ் கடல் போன்றதொரு அமைதி. 

ஆழ் மன தியானத்தை நீங்கள் உறங்க போகும் முன் செய்தால். உங்களுக்கு தூக்கம் சீக்கிரம் வரும். ரத்த அழுத்த அளவை வெகு விரைவில் கட்டுக்கு கொண்டு வரும். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். சிறுவர் முதல் பெரியவர் வரை. இது வெறும் ஆழ் மனத்தை நீங்கள் நினைத்து செய்யும் தியானம் மட்டும் அல்ல. ஆழ் மன பயணம் என்றும் சொல்லலாம். 

 நீங்கள் உறங்கும் முன். உங்களது ஆழ் மனத்தை கற்ப்பனை செய்து கொள்ளுங்கள். முடிந்தால். அதனுள் நீங்கள் பயணம் செய்வதை போல் உணருங்கள். எவ்வளவு? நேரம் இந்த தியானம் செய்ய வேண்டும் நீங்கள் தியானம் செய்கிறீர்கள் என்பதையே மறந்து தூங்கும் வரை. படுத்தவுடன் தூக்கம் வர மூன்று, நான்கு மணி நேரம் மேல் ஆகிறவர்களுக்கு. இதை செய்தால். படுத்த அரை மணி, ஒரு மணியில் தூக்கம் வரும்.  ஒரு மணி நேரம் ஆகிறது என்றால். ஐந்து, பத்து நிமிடங்கள். படுத்த அடுத்த நிமிடமே தூங்கும் அளவு மன நலன் நன்றாக இருப்பவர்கள் இதை செய்தால். அவர்கள் உடலில், மனத்தில் உள்ள புத்துணர்ச்சி இன்னும் அதிகரிக்கவே செய்யும். கடிமான உடற் பயிற்சியின் மூலம். பலவீனமாக உள்ள ஒருவன் கூட பயில்வான் ஆவான் என்றால். இயற்கையாகவே பயில்வான் போன்ற உடல் அமைப்பு உள்ளவன் உடற் பயிற்ச்சி செய்தால். இந்த தியானமும் அதே போல் தான். சரி. ஆழ் நிலை தியானத்தை எவ்வாறு செய்வது. 

கீழே   உள்ள இந்த படத்தை பாருங்கள். 



 இது தான் உங்கள் ஆழ் மனத்தின் புகைப்படம். இதை மட்டுமே நீங்கள் கண்ணை மூடி கொண்டு நினைக்க வேண்டும் நிமிர்ந்து படுக்க வேண்டும். மூச்சை மென்மையாக இழுத்து மென்மையாக விட வேண்டும். 

 நாளை அல்சர் நோய்க்கு உரிய மூலிகைகளை பார்ப்போம்.